×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஈவேரா கொள்கை செல்லாக் காசு - வின் டிவி விவாதத்தில் கதறி ஒடியது கருப்புச்சட்டை

Thursday, 18 September 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

ஈவேரா கொள்கைகள் காலத்திற்க்குப் பொறுத்தமானதா? என்ற வின் டிவி விவாதத்தில் ஈவேரா ஒரு முரண்பாடுடைய பிழைப்பு நடத்தும் அரசியல்வாதி என்பதை ஆதாரத்துடன் நிறுவி கருப்புச்சட்டையை கந்தலாக்கிய வின் டிவி விவாதம். வாகன நெரிசல் காரணமாக தாமதமாக விவாதத்தில் கலந்து கொண்டமைக்கு திரு. நிஜந்தன் அவர்களிடமும், நேயர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம். முதல் இருவது நிமிடங்கள் விவாதத்தில் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியவில்லை. அதனால் விவாதத்தின் சுவராசியம் குறைந்து இருக்கும் என்பதும் உண்மை.

 

 

Read 9701 times
Rate this item
(12 votes)
Last modified on Wednesday, 08 October 2014 07:15

6 comments

 • Comment Link sridharan Friday, 19 December 2014 03:48 posted by sridharan

  நம்மில் கீழானவர்கள் தமக்கு எதிரி என்று சொன்னால் அதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா?

 • Comment Link Narration Tuesday, 23 September 2014 04:51 posted by Narration

  @Legend:
  "The grave of a two-and-a-half-year-old girl whose parents claimed she was a “goddess” drew large crowds on Thursday amid conflicting versions about the manner of the child’s death and the suspicion that she had been buried alive. "
  ராமசாமி நாயக்கர் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்ன தமிழில் வந்த தினத்தந்தி செய்தியை விட அன்னார் விதந்தோதிய ஆங்கிலத்தில் வந்த செய்தி அவரது கொள்கை வரையில் விசேஷமானதல்லவா? ஆங்கிலப் பத்திரிகைகள் அனைத்தும் குழந்தை வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்தது என்றும் உயிருடன் புதைக்கப்பட்டதா என்ற சந்தேகம் இருப்பதாகவுமே எழுதியிருக்கின்றன. ஆனால் நீங்கள் ஈவேரா கொள்கைப்படி சந்தேகத்தை எந்தவிதமான ஆதாரமும் காட்டாமல் உண்மை என்று முடிவு செய்துவிட்டீர்கள். அதை திக வழமைப்படி பொதுவில் சொல்லி நாணமின்றிப் பேசவும் செய்கிறீர்கள். இந்தச் செய்திக்கும் ராமசாமி நாயக்கர் கொள்கைக்கும் என்ன சம்பந்தம்? அன்னாரது கொள்கை குறித்து வாதாடும் போது சாட்சிக்குக் கூட சந்தேகத்துக்கிடமான செய்திதான் கிடைக்குமா? அவரது கொள்கைகளின் நம்பகத்தன்மை போல!!

  கட்டிய மனைவியை ஊருக்குப் புதிதாக வந்த தேவடியாள் என்று நண்பர்களிடம் சொல்லி வம்பிழுக்கச் சொன்ன செயல் பகுத்தறிவா?

  கள்ளுக்கடை மறியல் என்ற போது காங்கிரசுக்காரர்களை அழைத்து வந்து தன் தென்னந்தோப்பில் இருந்த தென்னைகளை ஓசியில் வெட்டித் தள்ளிவிட்டு நிலத்தை விலைக்கு விற்ற நரியையும் மிஞ்சிவிட்ட தந்திரம் தான் பகுத்தறிவோ?

  கண்ணிமையைத் திறக்கவே மிகுந்த சிரமப்படும் வயதில் 26 வயதுப் பெண்ணை மணந்து கொண்டது என்ன அறிவு?

  ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யாதே விரும்பியவனோடு போ என்று ஹிப்பித்தனமான அறிவுரை சொல்லிவிட்டு தான் மட்டும் கல்யாணம் செய்து கொண்டது ஏன்? சொல்வது ஒன்று செய்வது வேறொன்று.

  ஈவேரா எதிர்த்தது பார்ப்பனர்களையும் கொஞ்சம் அறிவுடன் சிந்திக்கும் யாரையும். அவரது முட்டாள்தனமான உளறல்களை அப்படியே ஏற்றவர்களே திக, திமுக என்று ஊரைக் கொள்ளையிடுகிறவர். மக்களின் நலனுக்குப் பாடுபடுகிறேன் என்று சொன்னவர் அந்த மக்களிடம் காசு வாங்கிச் சேர்த்துக் கொண்டாரே அன்றி நலன் என்று ஒன்றும் கிட்டவில்லை. காலப்போக்கில் வந்த மாற்றங்களை ஈவேராவே செய்தவர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யாதீர்கள் ஈழத்தைக் காட்டி வயிறு வளர்த்துவிட்டு ஈழத்தவர் தொப்புள் கொடி உறவு என்று சொல்வது போல. இவர்களைப் பொறுத்தவரை காசு ஈட்டவேணும். அதற்காக எதுவும் சொல்வர், செய்வர். முழுப் பொய்யின் மொத்த வடிவங்களே ராமசாமி நாயக்கரின் வழி வந்த பகுத்தறிவுவாதிகள்.

  சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தியைக் காட்டி ராமசாமி நாயக்கரின் கொள்கை தேவை என்று வாதாடும் நீங்கள் ஏன் ஒரு அகோரியை அழைத்து பில்லி சூனியம் வைக்கச் சொல்லி முத்திரைத்தாளில் ஒப்பந்தம் போட்டுவிட்டுத் தற்போது தலைமறைவாக ஜைனுலாப்தீன் குறித்துப் பேசவே இல்லை? அது சந்தேகமே இல்லாமல் மூடநம்பிக்கை தானே! இப்படிச் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஜைனுலாப்தீனின் இணைய தளத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன. ஓ! ஓசி பிரியாணி கொடுப்பவர்களைப் பகைத்துக் கொள்வது ராமசாமி நாயக்கர் கொள்கை கிடையாதோ??

 • Comment Link legend Sunday, 21 September 2014 16:34 posted by legend

  இந்த காலகட்டத்திற்கு பெரியார் கொள்கை பொருந்துமான்னு ஒரு கேள்வி ? இந்த முற்போக்கான காலகட்டத்தை கொண்டுவந்ததே பெரியார் கொள்கைகள்தான்றதை கீழ்கானும் சம்பவம் உணர்த்தும்.
  [தினத்தந்தி 19-09-2014] ராஜஸ்தானில் குழந்தையை உயிருடன் புதைத்து வழிபாடு.
  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2 1/2 வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து குஷ்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சிறுமியை டாக்டர் மற்றும் மாந்தீரிகரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருந்தும் உடல் நலம் சரியாகவில்லை.
  தங்களது மகளுக்கு தெய்வ அருள் இருப்பதாக வும், உயிருடன் புதைத்தால் சரியாகிவிடும் என்று அவர்கள் கருதினர். இதை தொடர்ந்து சிறுமி குஷ்புவை உயிரோடு புதைத்தனர். அதோடு அவர் புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர்.
  அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் அங்கு குவிந்து சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர். அவர்கள் பழங்கள், பூக்கள், பணங்களை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதனால் அந்த கிராமம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

 • Comment Link ஆர்யத்தமிழன் Saturday, 20 September 2014 14:59 posted by ஆர்யத்தமிழன்

  துணி விலை ஏறிவிட்டதற்க்கு காரணம் பறை ... களெல்லாம் ரவிக்கை போட்டது தான் என வேலையில்லா திண்டாட்டம் வார காரணம் பறை ... கள் படித்துவிட்டது தான் என ஈவேரா என அம்பேத்கார் மாத இதழ் நவம்பர் டிசம்பர் 1963 இல் சென்னையில் அம்பேத்கார் வாதிகளால் நடத்திய பத்திரிகையில் உள்ளது . ஆதாரம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ம.வெங்கடேசனின் நூல் பக்கம் 145

 • Comment Link ஜெகதீஸ் Friday, 19 September 2014 07:00 posted by ஜெகதீஸ்

  ராமாசாமி நாயக்கர் கேடுகெட்ட ஜன்மம் என்பதை தெளிவுபடுத்திய வின் டிவி நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்...

 • Comment Link Veeraputhiran G Friday, 19 September 2014 06:23 posted by Veeraputhiran G

  சகோதரர் பால கொளதமின் பணிகள் தொடர வாழ்த்துக்கள் ............. சிறு வயதாக இருக்கும் போதே சகோதரர் பால கொளதமும் நானும் நாகர்கோவில் வீரவாஞ்சி நாதன் சாகா மற்றும் வீர வாஞ்சி சாகாவிலும் பாலஸ் சாக ஒன்றாக பழகியவர்கள் அப்போதே அவருடைய தேச பற்று எங்களை ரொம்ப ஆச்சரியமடைய செய்யும். தொடரட்டும் உங்கள் தேச பணி ............. என்றும் நலமாக இருந்து உங்கள் தேச பணியினை தொடர எல்லாம் வள்ள இறைவனிடம் வேண்டுகிறேன்.
  வீரபுத்திரன்
  நாகர்கோவில்

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.