×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்
வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 16

போரில் வென்ற கோரி முகமது ஹிந்துஸ்தானத்தில் தங்கி ஆட்சி செலுத்த இயலவில்லை. குஸ் மற்றும் க்வாராசிம் துருக்கியர்கள் அவனது தலைநகரைத் தாக்கிக் கொள்ளையிட்டனர். ஹிந்துஸ்தானத்தில் கொள்ளையிட்ட செல்வத்தைக் காப்பாற்ற அவன் அவ்வப்போது தன் தலைநகரத்துக்குச் சென்று தன் அண்ணனுக்குத் துணையாக எல்லைப் போரில் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது. 

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15

1192ல் மீண்டும் படையெடுத்து வந்த கோரி முகமது பிருதிவிராஜனை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் சொல்லியும் தன்னிடம் சரணடையும்படியும் ஆள் அனுப்பினான்.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 14

1179ல் பிருதிவிராஜனின் தாய் ஒரு கனவு கண்டாள். அது ஒரு முஸ்லிம் ஃபகிர் அஜ்மீர் பாலைவனத்துக்கு வருகை தந்து தன் மகனைக் கொல்வதாக அமைந்திருந்தது. இதனைச் சொன்னபோது பிருதிவிராஜன் அலட்சியப்படுத்தினான். பின்னர் கோரியின் படையை 1191ல் தோற்கடித்துவிட்டு வந்து தன் தாயின் கனவு கனவாகவே போனது என்று இறுமாந்து கூறினான்..

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 13

கஜினி வம்சத்தின் ஆட்சியில் கோரி எனும் மலைவம்சப் போர்வீரர்கள் பலர் கஜினி சுல்தான்களின் வீண் அச்சத்தால் கொல்லப்பட்டனர். அவர்களின் கொலைக்குப் பழிவாங்க பல முறைகள் கஜினி நகரையும் அந்த ராஜ்ஜியத்தையும் கோரி வம்சத்தினர் சூறையாடினர். ஆனால் தம்மை ஒரு ராஜ வம்சமாக நிறுவிக் கொண்டது 12ஆம் நூற்றாண்டில் தான். 1152ல் அலா அல்தின் முகமது என்பவன் கப்பம் கட்ட மறுத்து செல்ஜுக் அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தான். அவன் தோற்றுப் பிடிபட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தான். பின் பெரும் செல்வத்தைக் கொடுத்து மீட்கப்பட்டான். இவன் சிலகாலம் ஆண்டபின் 1161ல் மாண்டான். இவனது மகன் சைஃப் அல்தின் முகமது பட்டத்துக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ஒரு போரில் இறந்தான்.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 12

கொடூரன் கஜினி மகமுதுவின் வம்சம் 150 ஆண்டுகளுக்குக் கோலோச்சியது. ஆனால் அவனது மகன்களுக்கு இடையேயான சண்டையாலும் திறமையின்மையினாலும் மகமுது அமைத்த சாம்ராஜ்ஜியம் சரிந்து கொண்டே வந்தது. மகமுதுவுக்குப் பிறகு அவனது மகன் மொகம்மது அரசனாக முடிசூட்டப்பட்டான். ஆனால் மற்றொரு மகன் மசூத் அவனைப் போரிட்டு வென்று குருடாக்கிக் கொன்றான். மசூதின் காலத்திலேயே காஸ்னவி வம்சத்தின் சரிவு தொடங்கிவிட்டது. துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த செல்ஜுக் வம்சத்தினால் காஸ்னவி வம்சம் விரட்டியடிக்கப்பட்டது.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 11

 சோமநாதர் ஆலயக் கொள்ளை கஜினி மகமுதுவை இஸ்லாமியர்களிடையே ஒரு வெற்றி வீரனாக ஆக்கியது. 10 நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் கஜினி மகமுது இஸ்லாமிய உலகில் ஒரு மாபெரும் சாதனையாளனாகப் பார்க்கப்படுகிறான். கஜினி மகமுது ஹிந்துஸ்தானத்தை ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை. அவன் படையெடுப்புகள் அனைத்தும் ஹிந்துஸ்தானத்துச் செல்வங்களைக் கொள்ளையிட்டுக் கொண்டு தனது மலை நகரமான காஜ்னிக்குச் செல்லவேண்டும் என்பதே. மார்க்கக் கடமையாக சிலை வழிபாட்டுத் தலங்களை இடிக்க எண்ணினான். அதைச் செய்தான்.
John Keay, "A History of India", Harper Collins, New Ed edition, 2001, (ISBN 978-0006387848)

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 10

சோம்நாத் ஆலயம் குஜராத்தின் கத்தியவார் பகுதியில் 12 ஜோதிர் லிங்க ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஜோதிர் லிங்கம் என்பது இறைவனின் ஒளிவடிவம். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது சோம்நாத். முதன்முதலாக இந்தக் கோவில் கட்டப்பட்ட காலம் குறித்து சரியான கணிப்புகள் இல்லை. மஹாபாரத காலத்துக்கு முந்தையது என்பது செய்தி. இரண்டாவது கோவில் முதல் கோவிலைப் புதுப்பித்து அதே இடத்தில் கட்டப்பட்டது. பொது ஆண்டு 649ல் வல்லபி பகுதியைச் சேர்ந்த யாதவ அரசர்களால் கட்டப்பட்டது.

 

725ல் சிந்துப் பகுதியின் அரபு ஆளுநர் ஜுனாயத் இந்தக் கோவிலை இடித்துக் கொள்ளையடிக்கப் பெரும்படை ஒன்றை அனுப்பினான். கொள்ளைக்குப் பிறகு கோவில் இடிக்கப்பட்டது. இதை மீண்டும் 815ல் பிரதிஹார மன்னன் இரண்டாம் நாகபட்டன் பெரிதாகக் கட்டினான். பெரிய கற்கோவிலாகக் கட்டப்பட்டு மீண்டும் பல நிவந்தங்கள் அளிக்கப்பட்டு இந்தக் கோவில் மீண்டும் பொலிவு பெற்றது. நிவந்தங்கள் சேர்ந்து கோவிலில் செல்வம் கொழிக்கிறது என்றதுமே இது அரபியர்களின் கண்களை உறுத்தியது.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 9

அபு மன்சூர் சபுக்தகின் என்பவன் கஸ்னாவி அரசை ஸ்தாபித்தவன். நசீருதீன் சபுக்தகின் என்றும் அறியப்படுவான். இவன் அடிமையாக இருந்து ஆஃப்கனிஸ்தானத்து கஜ்னா பகுதியைப் பிடித்துக் கொண்ட அல்ப்தகின் என்ற போர்த் தலைவனின் மகளை மணந்து கொண்டான். உஸ்பெகிஸ்தானில் இருந்து ஆட்சி செய்த சாமானீத் வம்சத்தில் ஏற்பட்ட சண்டையில் ஆஃப்கனில் உள்ள காஜ்னி பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன்னை அமீர் என்று அறிவித்துக்கொண்டான் அல்ப்தகின். அவனது மறைவுக்குப் பிறகு அரசனாக வந்தான் சபுக்தகின்.

 

சபுக்தகின் முடிசூடிக் கொண்டதும் ஜெயபாலன் என்கிற ஷாஹி வம்சத்து மன்னன் (காபூலில் இருந்து சிந்து வரை, மூலஸ்தானத்தில் இருந்து காஷ்மீரம் வரை ஆண்ட ஹிந்து மன்னன்) இவர்களது அபாயத்தை உணர்ந்து படையெடுத்தான். ஆனால் சபுக்தகினிடம் தோற்று கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான். கப்பம் செலுத்தாமல் மீண்டும் ஜெயபாலன் போர் புரிந்தான். ஆனால் போரின் போது உடன்படிக்கை செய்துகொண்டு ராஜ்ஜியத்தின் பகுதிகளான காபூலையும் சிந்துவையும் இழந்தான்.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 8

இந்த வரலாறு குறித்துப் பார்க்கையில் வேறு இரு பதங்களுக்குப் பொருள் தேடி அறியவேண்டியது அவசியமாகிறது. ஹர்பிக்கள் மற்றும் திம்மிகள். ஏனெனில் இந்த இஸ்லாமியப் படையெடுப்பாளர்களின் அடிப்படைக் கொள்கை கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
 
 
"ஹர்பிக்களைக் கொல்லுங்கள். அவர்களது பெண்டு பிள்ளைகளை அடிமைகளாகப் பிடித்துவாருங்கள். நம்மிடத்தே அவர்களைச் சிறைவையுங்கள். எதிர்க்காதவர்களை கொல்லாதீர்கள். அவர்களுக்கு அடைக்கலம் அளியுங்கள். அவர்களை திம்மிகள் என்று அறிவித்து ஜிஸியா அல்லது கராஜ் வரி விதித்துப் பாதுகாத்து வாருங்கள். அவர்கள் இஸ்லாமை ஏற்காவிடினும் இஸ்லாமிய ஆட்சியையும் சட்டத்தையும் மதித்து ஏற்று நடத்தல் அவசியம்."
 The Chach-Nama. English translation by Mirza Kalichbeg Fredunbeg. Delhi Reprint, 1979 Online version, last accessed 30 September 2006

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 7

பாரதத்தில் வஹாபியம் கோலோச்சிய வரலாறு இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தொடங்குகிறது. வஹாபியம் என்ற பெயர் இல்லாத போதும் பிற மதத்தினரைச் சகித்துக் கொள்ளக்கூட மறுத்த இஸ்லாமிய அடிப்படைவாத வெறிபிடித்த கும்பல் ஹிந்துஸ்தானம் என்றும் அறியப்படும் பாரதத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. பாலைவனத்தின் வறட்சியில் தவித்தவர்களுக்கு வளமிக்க சிந்துப் பிரதேசத்தின் மீதும் அதைத் தாண்டிய வளம் கொழிக்கும் ஹிந்துஸ்தானத்து பூமி மீதும் பெரும் ஆசை இருந்து வந்தது.

காலிஃபாக்கள் பலரும் எகிப்து பாரசீகம் என்று வென்று கொண்டிருந்தபோதும் ஹிந்துஸ்தானத்தை வெல்லவேண்டும் என்ற தீராத வெறி கொண்டிருந்தனர். இந்த பூமியின் வளமும், மக்களின் செல்வச் செழிப்பான வாழ்வும் அவர்களின் கண்களை உறுத்தியப்படியே இருந்ததாலும், உலகெங்கிலும் இஸ்லாம் என்ற மார்க்கக் கடமை காரணமாகவும் படையெடுப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஹிந்துஸ்தானத்தின் மீதான பெரிய அளவிலான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு பொது ஆண்டு 664ல் உமையத் வம்சாவழியின் காலிஃபாக்களின் காலத்தில் நிகழ்ந்தது. தென் பஞ்சாபின் மூல்தான்  பகுதியை அபு சையத் என்று அழைக்கப்பட்ட அல் முஹல்லப் இப்ன் அபி சுஃப்ராஹ் என்ற இராணுவத் தளபதியின் தலைமையில் நடந்தது. இந்தப் படையெடுப்பின் நோக்கம் நாடுபிடிப்பதல்ல.  செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், மனிதர்களை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதுமே நோக்கமாக நடந்த இந்தப் படையெடுப்பு பெருஞ்செல்வத்தைப் பறிகொடுத்தும், பல்லாயிரம் ஆண்கள் கொல்லப்பட்டும், அவர்களது மனைவி மக்கள் அடிமைப்பட்டும் சென்ற சோக வரலாற்றைக் கொண்டது.