×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 2

Friday, 27 December 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

அரேபியாவிலும் ஹிந்துஸ்தானத்திலும் சில செவிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் திறந்திருந்தன. ஏன் என்று ஆராயப் போந்தால் ஹிந்துக்களும் இதில் மிக முக்கியக் காரணம் ஆகின்றனர். எப்படி?

 

துருக்கிய ஓட்டாமன் சாம்ராஜ்ஜியம் வீழத் துவங்கிய பிறகு மேற்கத்திய கிறிஸ்தவ ஆதிக்கம் இஸ்லாமியப் பகுதிகளில், குறிப்பாக அரேபியாவில், அதிகரித்தது. இஸ்லாமின் ஆதிகாலத்துக் கோட்பாடுகள் நலியத் துவங்கின. அந்தக் காலகட்டத்தில் சவூதி அரேபியாவின் நஜத் பகுதியில் பிறந்த முகமது இப்ன் அப்துல்வஹாப் என்பவர் துவக்கி வைத்த இஸ்லாமின் பழமைக்குப் புத்துயிரூட்டும் கோட்பாடு இது. வஹாப் தனது முடிவுகள் கருத்துக்கள் குறித்து பல்வேறு தரப்பினருடன் அமைதியாக விவாதித்துப் பார்த்தார். இறுதியில் உள்ளூர் மன்னர் உத்மன் இப்ன் முஅம்மார் என்பவரது உதவியுடன் தமது கருத்துக்களை நிறுவினார். இவர் முஸ்லிம்களின் பரவலான பழக்க வழக்கங்களை இஸ்லாமுக்கு எதிரானது புதிய கண்டுபிடிப்புகள் என்ற அடிப்படையில் அகற்றும்படி சொன்னார். வஹாபின் கருத்துக்கள் இஸ்லாமின் ஆதிக்கமிக்க கருத்துக்களாக சவூதி அரேபியாவில் திகழ்ந்தன. இந்த வஹாபிய முறை தவ்ஹீத் எனப்படும் சரியான இஸ்லாமிய மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதாக அறிவித்துக் கொண்டது. அல் தய்யிமியாவின் சிந்தனைகள் வஹாபை மிகவும் பாதித்தன. ஹதிஸ் மற்றும் குரான் தவிர பிற சட்டதிட்டங்களையும் பிற்கால மனிதர்களின் கருத்துருவாக்கத்தையும் இவர் நிராகரித்தார். தனித்தன்மை கொண்ட ஏக இறைவன் என்ற கோட்பாட்டை இவர் பின்பற்றினார். அதையே கற்பித்தார்.

 


உருவ வழிபாடு, மஹான்கள் வழிமுறை, தர்ஹா வழிபாடு, பிற மத வழக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் செயல்முறைகள் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தார் வஹாப். இவை அறக்குறைபாடுள்ள வழக்கங்கள் என்றும் அரசியல் வலுவின்மை என்றும் இவர் கண்டித்தார்.


"History of Islam – Sheikh Ibn Abdul Wahab of Najd – by Prof. Dr. Nazeer Ahmed, PhD". historyofislam.com.

"Wahhabi". GlobalSecurity.org. 2005-04-27. Archived from the original on 2005-05-07. Retrieved 2008-05-10.

PBS Frontline. "Analyses – Wahhabism". Retrieved 27 January 2012. "For more than two centuries, Wahhabism has been Saudi Arabia's dominant faith."

Esposito, John (2003). The Oxford Dictionary of Islam. Oxford: Oxford University Press. ISBN 0-19-512558-4.


சரி, பாரதத்தில் இதன் செயல்பாடுள் எப்படித் துவங்கி எப்படி வளந்தன? பொது ஆண்டு 1707ல் மொலாயக் கொடுங்கோல் அரசர் ஔரங்சீப் மறைந்தார். பாரதத்தில் இருந்து ஹிந்துக்கள் இதற்காக பல காலம் காத்திருந்தனர். 180 ஆண்டுகால காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு இது முடிவுரையாக அமைந்தது. மதவெறி என்பதன் கொடூரத்தின் உச்சத்தை அனுபவித்து நொந்து போயிருந்த மக்களுக்கு ஔரகசீப்பின் மரணமும் அவனுக்குப் பிறகு சரியான வாரிசு இல்லாதுபோனதும் பெரும் பேறாக இருந்தது. ஔரங்கசீப் மாண்டு 12 ஆண்டுகளில் ஹிந்து தேசியப் படைகள் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் என்பவரின் தலையில் தில்லியைப் பிடித்தன. தில்லியில் இந்தப் படை நடத்திய அணிவகுப்பு மொகலாயர்கள் வெல்ல முயலாதவர்கள் என்ற அச்சத்தைத்  துடைத்தது. 1727ல் மால்வா, குஜராத், பண்டில்கண்டு ஆகிய பகுதிகளும், 1749ல் ஆற்காடும், 1745ல் ஒரிசாவும், 1752ல் ரோஹில்கண்டும், 1758ல் பஞ்சாபும், 1760ல் ஐதராபாத் நிஜாமும் மொகலாயர்களை விட்டு விடுதலை அறிவித்துத் தனி நாடுகளாயின. 1760ல் ஹிந்து ஆதிக்கம் மொகலாயப் பேரரசு என்று அறியப்பட்ட நிலப்பரப்பின் பெரும்பகுதிகளில் நிலை கொண்டது.

 

ஷா வலியுல்லா என்பவர் ஔரங்கசீப் அரசவையில் எழுத்தராக இருந்தவரின் மகன். இவர் தான் வஹாபி சித்தாந்தத்தை பாரதத்தில் அறிமுகப்படுத்தினார். முகமது நபியின் காலகட்டத்துக்குத் திரும்பி இஸ்லாமின் வழி வாழ இவர் முஸ்லிம்களை வலியுறுத்தினார். ஆனால் ஔரங்கசீப்பின் மறைவும் ஹிந்துக்களின் எழுச்சியும் இவரை வேதனை கொள்ளச் செய்தன. தாருல் இஸ்லாமாக இருந்த ஹிந்துஸ்தானம் தாருல் ஹரப் ஆவதை இவர் வெறுத்தார். 1739ல் பாரசீக மன்னன் நாதிர்ஷா படையெடுத்துவந்து தில்லியில் கொடூரக் கொலைகளைச் செய்து பெருங்கொள்ளை அடித்துச் சென்றதை இவர் வரவேற்றார். ஹிந்துக்களின் ஆட்சியில் இருப்பதைவிட இஸ்லாமிய மன்னன் ஷியா பிரிவைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை ஆதரிப்பது நன்மை என்றார்.

 


இவர் அஹமது ஷா அப்தாலி என்ற ஆஃப்கனிஸ்தானத்து மன்னனுக்கு ஹிந்துஸ்தானத்தின் மீது படையெடுத்து வரும்படி ஓலை அனுப்பினார். அதில் சொல்லப்பட்டிருந்தது “ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அரசு அதிகாரம் முழுதும் ஹிந்துக்களின் கைகளில் உள்ளது. அவர்கள் அதிகாரம் செலுத்தி வணிகத்திலும் கொழிக்கிறார்கள். செல்வம் ஹிந்துக்களிடம் சேர்கிறது. ஏனென்றால் அவர்கள் நன்கு உழைக்கிறார்கள், நல்ல வியாபாரம் நடக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு ஏழ்மையும் துன்பமும் தவிர ஏதுமில்லை. தங்களைப் போன்ற தொலைநோக்கும், பலமும் கொண்ட பேரரசர் ஹிந்துஸ்தானத்தில் மராட்டியர்களையும் ஏனைய ஹிந்துக்களையும் வென்று ஒழித்தால் மட்டுமே இஸ்லாம் இங்கே தழைக்கும். காஃபிர்களின் ஆட்சி தொடர்ந்தால் முஸ்லிம்கள் இங்கே வாழமுடியாது. இஸ்லாம் மார்க்கத்தை விட்டு விலகிச் சென்று விடுவார்கள் அல்லது வேறிடம் நோக்கி நகரவேண்டும். முஹ்மின்களையும் காஃபிர்களையும் வேறுபடுத்திப் பார்க்க ஏதுமில்லாது போகும். ஆகவே தாங்கள் படையெடுத்துவந்து ஹிந்துஸ்தானத்தின் வயதான, பலவீனமான முஸ்லிம்களைக் காக்கவேண்டும்.” இவ்வாறு வலியுல்லா கடிதம் எழுதி அப்தாலியை வரவழைத்தார்.

 


1756ல் கைபர் கணவாய் வழியாகப் படையெடுத்து வந்த அஹமது ஷா அப்தாலிக்கு ஆதரவாக அனைத்து முஸ்லிம் அரசர்களுக்கும் வலியுல்லா ஓலை அனுப்பினார். ஷியா, சுன்னி வேறுபாடுகளை விடுத்து வருகிற இஸ்லாமிய மன்னனை ஆதரித்துப் படை நடத்த ரோஹில்கண்டும் அவத் சமஸ்தானமும் முடிவெடுத்தன. தில்லியையும் சுற்று வட்டாரங்களையும் சுலபத்தில் கைப்பற்றிய அப்தாலி நிதானமாகக் கொள்ளையடித்து 1761ல் பானிபட் போரில் மராட்டியர்களைத் தோற்கடித்தார்.

 


முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுமிராண்டித்தனமாக தில்லியும் சுற்றுவட்டார ஹிந்துப் பகுதிகளும் கொலை, கொள்ளை இன்னபிற கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டன. ஆனால் வலியுல்லாவின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தாருல் இஸ்லாமை மீண்டும் நிறுவும் அவரது ஆசையில் மண் போட்டுவிட்டு அப்தாலி 1762ல் காபூல் திரும்பினார். மனமுடைந்த வலியுல்லா 1763ல் இறந்தார். ஆனால் அதற்குள் ஒரு வலுவான வஹாபிய சிந்தனைக் களத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். ஹிந்து – முஸ்லிம் பிரிவினை மற்றும் முஸ்லிம் ஆதிக்கம் குறித்த இவரது சிந்தனையின் தாக்கம் பாரதத்தை இன்னமும் வாட்டி வதைக்கிறது.

 


அதென்ன தாருல் இஸ்லாம்?

 

இஸ்லாம் உலகை இது போன்ற பல தார்களாகப் (தார் என்றால் இடம், நாடு, வீடு என்று பொருள்) பிரித்துள்ளது. அது குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.


Khalid Bin Sayeed, Pakistan – The Formative State, Oxford, 1968.

Ainslee T.Embree and Stefen Hay, Sources of Indian Tradition, Viking 1991.

S.V Seshagiri Rao, Political Islam in India, Origins, Strategy and Mobilization, MMRI Publication.

Read 1708 times
Rate this item
(2 votes)
Last modified on Wednesday, 06 August 2014 10:07

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

2 comments

  • Comment Link Rajagopalan Friday, 03 January 2014 08:03 posted by Rajagopalan

    இதே பின்னூட்டத்தை வேறொரு கட்டுரைக்கும் பார்த்தேன். அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். இன்னும் எத்தனை இடங்களில் செய்வாரோ. நின்றசீர் நெடுமாறன் போட்ட பதிலை இங்கேயும் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டுகிறேன்.

  • Comment Link unnik Tuesday, 31 December 2013 20:48 posted by unnik

    திருக்குர்ஆனும், நபிவழியும் பின்பற்றக்கூடிய, சுயநலமற்று, மற்றவர்களுக்காக வாழக்கூடிய பரோபகாரம் கொண்ட ஒரு இஸ்லாமிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் முஸ்லிம்கள் எழுந்து நிற்கமுடியும்.இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும், முஸ்லிம் மக்களை ஒற்றுமை சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது இஸ்லாமிய உலகை வழி நடத்தும். தலைவர்களை மாற்றுவதாலோ, கோஷத்தை மாற்றுவதாலோ, சட்டத்தை மாற்றுவதாலோ இந்த நாடு எழுந்து நிற்காது. முழு முஸ்லிம் சமுதாயத்தையும் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும். முஸ்லிம் சமுதாய எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய அன்பு, பற்று, பாசம், உண்மை. அரசாங்கத்தின் எந்த விதமான நிதியுதவியையும் பெறாமல் நாம் நமது வாழ்க்கையில் சம்பாதிக்கும் பொருள், நமது நேரம் இவற்றினை முஸ்லிம் சமுதாயத்திற்குக் கொடுக்கக்கூடிய அந்த மனப்பான்மையை உருவாக்க முடியும் ,அவர்களுக்காக உழைக்க வேண்டும் எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குகிறது முஸ்லிம்கள் எல்லா விதமான வேலை முறைகளிலும், எல்லாத் துறைகளிலும் முன்வரிசையில் தேசத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நின்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும்,உலகை வழி நடத்த முடியும் முஸ்லிம்கள் எழுந்து நின்றால்தான் இன்றைய உலகமே வாழ முடியும் என்ற ஒரு நிலைமைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லும் தீர்வு கூடிய நிலையில் ஒரு பண்பாக இருப்பதால், பொறுப்பானது முஸ்லிம்கள் நமக்கு இருக்கிறது. முஸ்லிம் மக்களின் மனதில் இருக்கக்கூடிய பலவீனத்தினைப் போக்கக்கூடிய மாற்றத்தினை உருவாக்க வேண்டும். நான் பலவீனமானவன் என்றுச் நினைத்துக் கொண்டால் இந்த தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.இஸ்லாமிய சமுதாயத்தை எழுந்து நிற்க செய்ய முஸ்லிம்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆகவேண்டும் நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கைதான் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக அமைய முடியும். நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுயநலமற்ற தன்மையோடு, மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு இடத்திலும் நாம் உருவாக்க வேண்டும்.

Leave a comment