வஹாபிய இஸ்லாம் உலகைப் பலவிதங்களில் பிரித்து வைத்துள்ளது என்று பார்த்தோம். அவை என்னென்ன?
தார் அல் இஸ்லாம்:
தார் அல் இஸ்லாம் (இஸ்லாமிய தேசம்), தார் அஸ் ஸலாம் (அமைதியின் தேசம்), தார் அல் தவ்ஹீத் (ஏக இறை வழிபடுவோர் தேசம்) என்று பலவாறாக அறியப்படும் இந்தப் பிரிவு இஸ்லாமிய நாடுகளைக் குறிக்கும். அதாவது முஸ்லிம்கள் இஸ்லாம் மதத்தை எந்த இடையூறுகளும் இல்லாமல் பின்பற்ற ஏதுவான நாடுகள், இஸ்லாமிய சட்டப்படி ஆளப்படும் நாடுகள் தார் அல் இஸ்லாம் என்று அறியப்படுகின்றன.
தார் அல் இஸ்லாம் என்பதன் வரையறைகள்:
- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்,
- அரசாங்கம் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கும் பரிபூரண மதசுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளித்துள்ள நாடுகள்.
- சுற்றிலும் இஸ்லாமிய தேசங்களால் சூழப்பட்டு சமுதாயப் பாதுகாப்பும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் நாடுகள்
இஸ்லாமிய தேசங்கள் அல்லாது போனாலும் மத நம்பிக்கை ஏதுமற்ற அரசுகள் இருக்கும் நாடுகளிலும் முஸ்லிம்கள் தங்கள் மதத்தை முழுமையாகப் பின்பற்ற ஏதுவாக இருந்தால் அத்தகைய நாடுகளை தார் அல் இஸ்லாமாகக் கருதலாம் என்று ஒரு பிரிவினர் சொல்கின்றனர். ஆனால் பெரும்பான்மை வஹாபி/சலாஃபி இஸ்லாமிய முல்லாக்கள் இதை ஏற்கவில்லை.
அபு ஹனிஃபா என்கிற இஸ்லாமிய அறிஞரின் கருத்துப்படி:
முஸ்லிம்கள் அமைதியையும் பாதுகாப்பையும் எந்த தேசத்தில் உணர்கிறார்களோ அது அத்தகைய தேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ள மற்ற இஸ்லாமிய தேசங்கள். இவையே தார் அல் இஸ்லாம். இதற்கு தார் அஸ் ஸலாம் என்ற பெயரும் உண்டு. அமைதியான இடம் என்று பொருள் அந்தப் பெயர் குரானில் சுவனம் என்பதைக் குறிக்கும் சொல்லாக அறியப்படுகிறது என்று The Encyclopaedia of Islam. New Edition. Brill, Leiden. Vol. 2, p. 128ல் சொல்லப்பட்டுள்ளது.
http://www.islam-online.net/English/contemporary/sociology-1/sociol1.shtml
http://www.academia.edu/427560/_This_day_have_I_perfected_your_religion_for_you._A_Zahiri_conception_of_religious_authority by Camilla Adang,
http://www.mideastweb.org/Middle-East-Encyclopedia/dar-al-islam.htm
"Ahmed Khalil: "Dar Al-Islam And Dar Al-Harb: Its Definition and Significance"". (http://english.islamway.com/bindex.php?section=article&id=211) Retrieved 2011-03-13.
Fatwa by Sheikh `Atiya Saqr, former head of Al-Azhar Fatwa Committee, about the concept of Dar al-Harb and Dar al-Islam (http://www.islamonline.net/servlet/Satellite?pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaE&cid=1119503544498)
தார் அல் ஹரப்
தார் அல் ஹரப் என்பது போர்க்களம் என்று பொருள்படும். அதாவது முஸ்லிம்கள் போர்புரிந்து தங்களின் மார்க்கத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய இடம் என்று பொருள். ஓட்டாமன் துருக்கியர் காலத்தில் மேற்கின் இடம் என்ற பொருளில் தார் அல் கரப் என்றும் வழங்கப்பட்டது. ஓட்டாமன் துருக்கிய மன்னர்கள் ஷரியா விதிகளைக் காலத்துக்கு ஏற்ப சற்றே தளர்த்திக் கொண்டனர். அதற்கு அவர்களுக்கு உரிமையோ தகுதியோ இல்லை என்று கூறி வஹாபியர்கள் போராடினர்.
ஆனால் ஓட்டாமன் பேரரசு வீழ்ந்து கெமால் அதாதுருக் ஆட்சிக்கு வரும் வரை இஸ்லாமின் தலைமைப் பீடம் என்ற நிலையில் இருந்து துருக்கியை இறக்க சலாஃபி/வஹாபிக்காரர்களால் முடியவில்லை. இத்தகைய நாடுகள் தார் அல் குஃபர் என்றும் வழங்கப்படுகிறது. காஃபிர்களின் தேசம் என்று பொருள்படும்.
நன்றி கெட்டவர்களின் நாடு என்றும் இதற்குப் பொருள். (குஃப்ரன் எ நேமத் என்றால் இறையருளுக்கு நன்றியின்மை என்று பொருள்) இஸ்லாமிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மத நெறிமுறைகளைப் பின்பற்றி வாழாதவர்கள் ஆளும் இடங்கள் இத்தகைய வரையறைக்குள் அடங்கும்.
இந்த தார் அல் ஹரப் பகுதிகள்:
- இஸ்லாமியர் பெரும்பான்மை அல்லாத இடங்கள்
- இஸ்லாமிய ஷரியா சட்டம் ஆட்சியில் இல்லாத நாடுகள்
- இஸ்லாமியர் அல்லாதார் ஆளும் நாடுகள்
இத்தகைய இடங்களில் முஸ்லிம்கள் வழிபாடும் இஸ்லாமிய மார்க்க வழிமுறைகளைப் பின்பற்ற இயலாத நிலையும் இருக்கும். இத்தகைய தார் அல் ஹரப் நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கலாமா என்று மௌல்விகள் விவாதித்த போது இமாம் அபு ஹனிஃபா அதைத் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டார். முஸ்லிம்கள் இஸ்லாமிய தேசத்துக்கு இடம் பெயரவேண்டும் அல்லது தார் அல் குஃபர் பகுதிகளில் போரிட்டு தார் அல் இஸ்லாம் பகுதிகளாக ஆக்க வேண்டும் என்று கூறினார். மார்க்க அறிஞர்கள் சிலர் இவரை எதிர்த்தனர்.
குறிப்பாக ஜாஹிரி அறிஞர் இப்ன் ஹாசம் கூறுகையில் “மனிதர்களின் அமைதியான வாழ்வு இமாம் அபு ஹனிஃபா கொண்டு வந்த சட்ட மாற்றங்களால் நிலைகுலைந்தது” என்று குற்றம் சாட்டினார். இஸ்லாமியர்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாத நாடு என்ற போதும் இஸ்லாமிய சட்ட விதிகளின்படி ஆளப்படாத நாடு தார் அல் ஹரப் என்று அபு ஹனிஃபா வாதிட்டார். பெரியமனிதர் போர்வையில் வரும் கொள்ளைக்காரர் போன்றவர் அபு ஹனிஃபா என்று கடுமையாக விமர்சித்தனர் ஜாஹிரி மார்க்கத்தின் மூத்த அறிஞர்கள். ஆனால் சலாஃபி மார்க்கத்தினர் ஜாஹிரி அறிஞர்களை வன்முறையால் அடக்கினர். சலாஃபிய மார்க்க முறை இஸ்லாமிய உலகமயமாக்கத்தை லட்சியமாகக் கொண்டது.
http://www.islam-online.net/English/contemporary/sociology-1/sociol1.shtml
http://www.qaradawi.net/ (Arabic website)
http://en.islamway.net/article/8211
http://www.al-islam.com/articles/articles-e.asp?fname=mwdudi
http://www.islam101.com/selections/GLOSSARY0.html
Samuel Huntington, The Clash of Civilizations and the Remaking of World Order, New York: Simon & Schuster, 1996.
மேலும் உள்ள தார் பிரிவுகளையும் அவற்றை எப்படி வஹாபிய இஸ்லாம் அணுகுகிறது என்பதையும் பார்ப்போம்.