×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 4

Friday, 10 January 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தார் அல் அமன்
இது பாதுகாப்பான இடம் என்று பொருள்படக்கூடியது. இது மேற்கத்திய நாடுகளிலோ அல்லது இஸ்லாமிய தேசமல்லாத பகுதிகளையோ குறிக்கும். இங்கே:

  • முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பார்கள்
  • தம் மதத்தை எந்த இடையூறும் இன்றி பின்பற்றும் சுதந்திரம் உண்டு
  • இது காஃபிர்களின் தேசம் என்றாலும் முஸ்லிம்களுக்கு முழு உரிமைகள் உண்டு

இந்த அடிப்படையில் தார் அல் அமன் என்ற பாதுகாப்பான பிரதேசம் வரையறுக்கப்படுகிறது.

 


தார் அல் ஹட்னா
இது சமாதான உடன்படிக்கை அமலில் இருக்கும் பிரதேசம். முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சமாதான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாழும் பகுதிகளுக்கு இந்தப் பெயர். முஸ்லிம்கள் தங்கள் இலட்சியமான தார் அல் இஸ்லாமை நோக்கிய போரில் காஃபிர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு 10 ஆண்டுகள் அல்லது காஃபிர்கள்/ஹரபிக்கள் உடன்படிக்கையை மீறும் காலம் வரை அமைதியாக இருக்கும் இடங்கள் தார் அல் ஹட்னா. இதில்:

  • முஸ்லிம்களின் கை தாழ்ந்திருக்கும்.
  • முஸ்லிம்களோ பிற மதத்தினரோ ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க மாட்டார்கள்.

 

ஹட்னாவுக்கான எடுத்துக்காட்டுகள்
மதீனாவில் இருந்த முகமது நபிக்கும் மெக்காவை ஆண்ட குரைஷ் இனத்தவருக்கும் ஏற்பட்ட ஹுடைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் அந்தப் பகுதி தார் அல் ஹட்னா என்று அழைக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது முகமதுவை இறைத்தூதர் என்று குறிப்பிட்டதை குரைஷித் தூதுவர் ஏற்க மறுத்தார். முகமது அந்தப் பட்டத்தை நீக்கும்படி அலிக்கு உரைத்தார். அலி மறுத்துவிடவே முகமதுவே தம் இறைத்தூதர் பட்டத்தை நீக்கி உடன்படிக்கைக்கு குரைஷி இனத்தவரை ஒப்புக் கொள்ளச் செய்தார். (ஸஹிஹ் அல் புகாரி 3:49:862)

இந்த உடன்படிக்கை முதல் ஹஜ் யாத்திரைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. பானு பக்ஹர் என்ற இனத்து மக்கள் கூஸா என்ற முகமதுவின் கூட்டாளிகளைத் தாக்கினர். யாருடைய கூட்டாளிகளையாவது இரு தரப்பினரில் யாரும் தாக்கினால் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று சொல்லி முகமது குரைஷிகளுக்கு மூன்று மாற்று வழிகளைச் சொன்னார்.

  • பானு பக்ஹர் இனத்தவருடன் உறவை முறித்துக் கொள்வது
  • நஷ்ட ஈடாகப் பணம் கொடுப்பது
  • ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு போர் செய்வது.

குரைஷிகள் போரைத் தேர்ந்தெடுத்தனர். முகமது 10000 பேர் கொண்ட படையுடன் சென்று மெக்காவைக் கைப்பற்றிக் கொண்டார்.

 

http://www.timelessfaith.org/tolerance/hudybiah_treaty.htm

 

தார் அல் ஹட்னாவின் சமீபத்திய உதாரணம் இஸ்ரேல் பாலஸ்தீனிய அமைதி ஒப்பந்தம். 2003ல் ஹமாஸும் அதன் கூட்டாளி அமைப்பான இஸ்லாமிக் ஜிஹாதும் 45 நாட்களுக்கு இஸ்ரேலைத் தாக்குவது இல்லை என்று ஒருதலைப் பட்சமாக அறிவித்தனர். ஆனால் மிகக்குறுகிய கால ஆயுளே கொண்டது இந்த ஒப்பந்தம். ஹமாஸ் முதலில் தாக்கியது என்று இஸ்ரேலும், இஸ்ரேல் அமைதி உடன்படிக்கையை மீறியது என்று ஹமாசும் சொல்லி மீண்டும் தாக்குதல் தொடர்கிறது.

 

2004ல் ஹமாஸ் 10 வருட ஹட்னாவை முன்மொழிந்தது. ஆனால் முன் நிபந்தனைகளாக:

  • இஸ்ரேல் 6 நாள் போரில் கைப்பற்றிய பகுதிகளைத் திருப்பித் தரவேண்டும்,
  • பாலஸ்தீன நாட்டை மேற்குக் கரையிலும் காஸாவிலும் அமைக்க வேண்டும்,
  • பாலஸ்தீனியர்கள் சுதந்திரமாக இஸ்ரேலில் குடியேற வேண்டும்
  • இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க முடியாது.
  • என்ற நிபந்தனைகளை விதித்தது.

ஆனால் இஸ்ரேல் இதைக் கண்டு கொள்ளவில்லை, எனவே இஸ்ரேலை ஒழித்து ஒரே பாலஸ்தீன தேசம் அமைப்பதே நோக்கம் என்று சொல்லி இந்த சமாதான முன்மொழிவைத் திரும்பப் பெற்றது ஹமாஸ்.


http://web.archive.org/web/20040306192510/http://home.eircom.net/content/reuters/worldnews/2416620?view=Eircomnet


தார் அல் அஹத்
இது இஸ்லாமிய அரசுக்கு பிற அரசுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நிலவும் பகுதி, இந்த உடன்படிக்கை அரசுகளுக்கு இடையிலானது. இங்கே:

  • முஸ்லிம்கள் கை ஓங்கியிருக்கும்
  • பிற மத அரசுகள் முஸ்லிம் அரசுக்கு ஜிஸியா என்ற கப்பம் கட்டி சிற்றரசாக இருக்கவேண்டும்.


ஜிஸியா கப்பம் என்பது இஸ்லாம் அல்லாத நாடுகளில் போரிடத் தகுதி வாய்ந்த மக்களின் எண்ணிகையிலும், நிலக்கிழார்கள், வியாபாரிகள் ஆகியோரின் சொத்துக்களின் அடிப்படையிலும் கணக்கிட்டு வசூலிக்கப்படும். தலைவரி என்றும் அழைக்கப்படும் இந்த வரி ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு வரி என்றும், வரி செலுத்தும் ஆணைச் சார்ந்திருப்போர், அடிமைகள், சொத்து ஆகியவற்றின் அடிப்படையிலும் வசூலிக்கப்படும்.

 

இந்த அஹத் பகுதிகளின் மீது இஸ்லாமியப் பேரரசு தாக்குதல் நிகழ்த்தாது. ஆனால் நிர்வாகம் இஸ்லாமியப் பேரரசின் ஆணைப்படி நடைபெறும். உள்நாட்டு விவகாரங்களில் முஸ்லிம்கள் சம்பந்தப்படாத வரையில் இஸ்லாமியப் பேரரசு தலையிடாது. இந்த வகையான ஒப்பந்தங்கள் ஒட்டாமன் துருக்கியப் பேரரசால் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டது. ஒட்டாமன் துருக்கியப் பேரரசு தம்மைத் தாக்காதிருக்கவும், பாதுகாப்புத் தரவும் ஒப்புக் கொண்டதற்காக சிற்றரசுகள் துருக்கிய மன்னர்களுக்குக் கப்பம் கட்டின.


உம்தத் அஸ் ஸலிக் வா உத்தத் அல் நசிக் என்பது பயணிகளுக்கான வழிகாட்டியும் வழிபாட்டு முறைமைகளும் என்று பொருள்படக்கூடிய புத்தகம். பயண வழிகாட்டி என்று பொதுவாக அறியப்படுகிறது.


முஸ்லிம்கள் செய்யத் தக்கவை, செய்யத்தகாதவை குறித்து விரிவாக விளக்கும் இந்தப் புத்தகம் நெடும் பயணங்களில் பல்வேறு விதமான (தேசம்) தார்களைக் கடக்கும் போது முஸ்லிம்கள் ஆற்றவேண்டிய கடமைகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்குகிறது. வழிபாடு, விரதம், திருமணம் விவாகரத்து, சொத்துரிமை, நீதி, வணிகம் ஆகியவை உள்ளிட்ட பலவிஷயங்கள் இப்புத்தகத்தில் பேசப்படுகின்றன. நு ஹா மிம் கெல்லர் என்ற அமெரிக்கர் இதை 1991ல் மொழிபெயர்த்துள்ளார். எகிப்தின் அல் அசார் பல்கலைக்கழகம் இந்த மொழி பெயர்ப்பை அங்கீகரித்துச் சான்றளித்துள்ளது. ISBN 978-0-915957-72-9

Read 1119 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 06 August 2014 10:08

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment