×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 5

Friday, 17 January 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தார் அல் தாவா 
தாவா என்றால் அராபிய மொழியில் அழைப்பு என்று பொருள். அதாவது தார் அல் தாவா என்று அறியப்படும் பகுதிகள் இஸ்லாம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளவை ஆகும். இங்கே மக்களுக்கு இஸ்லாம் பற்றி ஏதும் தெரியாது. தமது பழைய பழக்கவழக்கங்களில் இருக்கும் மக்களை இஸ்லாமிய வழிக்கு மாற்றி ’நெறிப்படுத்தும்’ வேலைகள் நடக்கும் பகுதி தார் அல் தாவா.

 

இது முழுதும் இஸ்லாமியமயம் ஆகவில்லை என்பதால் இது தார் அல் இஸ்லாமும் இல்லை. அறியாமையின் பகுதி என்றும் இது அறியப்படும். முகமது தன் ஆட்சியை நிறுவதற்கு முன்னால் இருந்த அரேபியப் பகுதி முதன் முதலாக தார் அல் தாவா என்று அழைக்கப்பட்டது. ஜஹிலிய்யா காலம் என்ற இக்காலம் அறியாமை, இறை வழிகாட்டல் ஆகியன இல்லாத காலம் என்று அறியப்பட்டது.

 

இந்த தார் அல் தாவா தற்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் நிறுவப்படுகிறது. எடுத்துக்காட்டாக நியூயார்க் நகரில் உள்ள தார் அல் தாவா மசூதியைச் சொல்லலாம். இது ஒரு கொரிய கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது. பின்னர் சில முஸ்லிம்களால் வாங்கப்பட்டு மசூதியாகக் கட்டப்பட்டது. இங்கே மதரசா உள்ளிட்ட பல அமைப்புகள் உள்ளன.

 

http://www.salatomatic.com/d/Astoria+12343+Masjid-Dar-Al-Dawa

 

ஜஹிலிய்யா காலம் என்பதைச் சற்றே பார்க்கலாம். அது குறித்துக் குரானில் பல இடங்களில் சொல்லபட்டுள்ளது.

  • விக்கிரக வழிபாட்டுக் காலத்துக்கேற்ற சிந்தனைகளையும் இறைவன் பற்றிய தவறான புரிதல்களயும் கொண்டிருக்கும் மக்கள் ஒரு புறம் இருக்க, துன்பத்தை அனுபவித்த உங்களில் ஒருவருக்கு இறைவன் பாதுகாப்பு உணர்வை அளித்து விழிப்படையச் செய்தான். http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/003-qmt.php#003.154
  • மக்கள் உண்மையிலேயே பாகன்களின் சட்டதிட்டங்களை விரும்புகிறார்களா? நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் மக்களைப் பற்றி மதிப்பீடு செய்ய இறைவனன்றி யாரால் முடியும்? http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/005-qmt.php#005.050 
  • உங்கள் வீடுகளுக்குள் இருங்கள். காட்டுமிராண்டிகளின் காலத்தில் இருந்ததே போல உங்கள் அலங்காரங்களை வெளியில் காட்டாதீர்கள். http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/033-qmt.php#033.033
  • காஃபிர்கள் தங்களின் வெறித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெறித்தனமான ஒழுங்கின்மையைக் காட்டுகிறார்கள். http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/048-qmt.php#048.026

 

சய்யித் குதுப் என்கிற எகிப்திய மார்க்க அறிஞர் (இருபதாம் நூற்றண்டைச் சேர்ந்தவர்) கூறுகையில் ”இஸ்லாமைத் தழுவும் எவரும் இறைவனின் வழிமுறையை அறியாத தங்களின் கடந்த காலத்தில் இருந்து தங்களை முழுமையாக விடுவித்துக் கொண்டு முற்றிலும் புதிதான ஒரு வாழ்க்கையைத் தொடங்குவார்கள். தங்களின் கடந்தகால இறைவனை அறியாத வாழ்க்கையின் செயல்பாடுகளை நம்பிக்கையின்மையோடும், அச்சத்தோடும் நோக்குவார்கள். அவை அசுத்தமானவை, இஸ்லாம் ஏற்காதவை என்று புரிந்து கொள்வார்கள். எப்போதாவது பழைய பழக்கவழக்கங்களின் தாக்கம் வந்துவிட்டாலோ அல்லது உணர்ச்சிகள் மேலீட்டால் பழைய வாழ்வு குறித்து எண்ணினாலோ இஸ்லாமிய மார்க்க அறிவுறுத்தல்களை மீறிவிட்டது குறித்து அமைதியிழந்து தவிப்பார்கள். தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள விழைந்து குரானைப் படித்துத் தெளிவு பெறுவார்கள்.”மாலிம் ஃபி இ தாரிக்.

 

மதசார்பின்மை அல்லது சகிப்புத்தன்மை என்பது குறித்து இவர் கூறுகையில் இஸ்லாம் அல்லாத எதுவும் தீவினையே. அவை பிழையானவை என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஷரியா என்பதே தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அமைதியைத் தரும் என்று தம் நூலான மாலிம் ஃபி இ தாரிக்கில் கூறுகிறார் குதுப். ஜனநாயகம் ஹராம் என்று உறுதிபடகூறிய இவர் ஷூரா என்ற இஸ்லாமிய வழிமுறை ஆள்பவன் ஆளப்படுவோரில் சிலரைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்பதே ஷூரா என்றும் பாராளுமன்ற ஜனநாயகம் இஸ்லாமிய முறையானது அல்ல என்றும் அறிவித்தார்.

 

மேலும் இவர் ஜிஹாத் என்பது விவாதமாகவோ பேச்சுவார்த்தையாகவோ இருக்கக்கூடாது என்றும் இஸ்லாம் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் ஆயுதம் ஏந்திய போராட்டமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். இஸ்லாம் ஏற்காத எதையும் ஏற்பது அல்லாஹ்வுக்குச் செய்யும் துரோகம் என்றார் இவர்.

 

முகமது இஸ்லாமை நிறுவிய காலத்துக்கு முந்தைய காலத்து இலக்கியங்கள், பாடல்கள் எல்லாமே அறியாமையின் சின்னங்கள் என்று இஸ்லாமால் மறுக்கப்பட்டது. ஆனால் சில இலக்கியவாதிகளின் கூற்றுப்படி ஜஹிலி பாடல்களே இன்று வரையில் மிகச் சிறந்த அரேபிய மொழிக் கவிதைகளைக் கொண்டவை. http://en.wikipedia.org/wiki/Arabic_poetry#Pre-Islamic_poetry

 

அபு அலா மௌதுதி எனும் இஸ்லாமிய அறிஞர் முஸ்லிம் நாடு என்பதும் இஸ்லாமிய நாடு என்பதும் வேறு வேறு என்று கூறினார். இவர் ஐதராபாத்தில் பிறந்து பாரதத்தை தார் அல் இஸ்லாம் ஆக்க விழைந்து இயலாத நிலையில் பாகிஸ்தான் கோரிக்கைக்கு தீவிர ஆதரவு கொடுத்தவர். ஆனால் பாகிஸ்தான் குரான் மற்றும் சுன்னாக்களின் அடிப்படையில் இஸ்லாமிய தேசமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஜமாத் ஏ இஸ்லாமி என்ற அமைப்பைத் துவக்கியவர். http://www.globalsecurity.org/military/world/pakistan/ji.htm

 

முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அமைப்பைத் தொடங்கிய ஹசன் அல் பன்னா என்பவர் எகிப்தில் இஸ்மாயிலியா என்ற ஊரில் தார் அல் உலூம் ஒன்றில் ஆசிரியராக இருந்தபோது ஆங்கிலேயர்களின் பாணியில் காப்பிக்கடைகள் இருப்பதைக் கண்டு அவை ஒழுக்கக்கேடான இடங்கள் என்று விமர்சித்தார். சூயஸ்கால்வாயில் அந்நியர் ஆதிக்கம் கண்டு பொங்கி மேற்கத்திய ஆக்கிரமிப்பை அகற்றப் பாடுபட்டார். அரபு தேசியம் என்ற கொள்கையை இஸ்லாமின் அடிப்படையில் முன்மொழிந்தார்.

 

பாலஸ்தீனம், இஸ்ரேல், சமூக ஒற்றுமை, சமத்துவ இஸ்லாமிய சமுதாயம், பொது நிர்வாகம் (ஷரியா அடிப்படையில்), கல்வி (மதரசாக்கள், தார் அல் உலூம் மூலமாக), பொது சுகாதாரம் (குரானில் சொன்னபடி), இயற்கை வள மேலாண்மை (ஷரியா அடிப்படையில்) என்று இவரது கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்றன.

 

இவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் எகிப்திய அரசுக்கு எதிராகப் போராடியதில் அந்நாட்டின் பிரதமர் பாஷா கொல்லப்பட்டார். கொலையைக் கண்டித்துப் பேசிவிட்டு அரசிடம் சமாதானம் பேசப் போன ஹசன் அல் பன்னா மர்ம நபர்களால் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இவரது கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

அதோடு தார் அல் உலூம் என்பது குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

Read 1099 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 10:09

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment