×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 9

Saturday, 22 February 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

அபு மன்சூர் சபுக்தகின் என்பவன் கஸ்னாவி அரசை ஸ்தாபித்தவன். நசீருதீன் சபுக்தகின் என்றும் அறியப்படுவான். இவன் அடிமையாக இருந்து ஆஃப்கனிஸ்தானத்து கஜ்னா பகுதியைப் பிடித்துக் கொண்ட அல்ப்தகின் என்ற போர்த் தலைவனின் மகளை மணந்து கொண்டான். உஸ்பெகிஸ்தானில் இருந்து ஆட்சி செய்த சாமானீத் வம்சத்தில் ஏற்பட்ட சண்டையில் ஆஃப்கனில் உள்ள காஜ்னி பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன்னை அமீர் என்று அறிவித்துக்கொண்டான் அல்ப்தகின். அவனது மறைவுக்குப் பிறகு அரசனாக வந்தான் சபுக்தகின்.

 

சபுக்தகின் முடிசூடிக் கொண்டதும் ஜெயபாலன் என்கிற ஷாஹி வம்சத்து மன்னன் (காபூலில் இருந்து சிந்து வரை, மூலஸ்தானத்தில் இருந்து காஷ்மீரம் வரை ஆண்ட ஹிந்து மன்னன்) இவர்களது அபாயத்தை உணர்ந்து படையெடுத்தான். ஆனால் சபுக்தகினிடம் தோற்று கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான். கப்பம் செலுத்தாமல் மீண்டும் ஜெயபாலன் போர் புரிந்தான். ஆனால் போரின் போது உடன்படிக்கை செய்துகொண்டு ராஜ்ஜியத்தின் பகுதிகளான காபூலையும் சிந்துவையும் இழந்தான்.

 

போரில் சபுக்தகின் தன் படைகள் அளவில் சிறியனவாக இருந்த போதும் 500 பேர் கொண்ட சிறு சிறு படைகளாகப் பிரித்து ஜெயபாலனின் கடல் போன்ற பெரிய படையை ஆங்காங்கே தாக்கி நிலைகுலையச் செய்தான். எதிரில் வந்து தாக்கி யுத்த தர்மப்படி போர் புரிந்து பழக்கப்பட்ட ஜெயபாலனின் படைகள் இந்த முறையற்ற தாக்குதலில் திணறித் தோற்றன என்று ஃபெரிஷ்டா என்கிற பாரசீக வரலாற்றாளர் எழுதியிருக்கிறார். இவன் சுன்னி முறைசார்ந்த இஸ்லாமிய சட்டதிட்டங்களை மிகச்சரியாக நடைமுறைப்படுத்தியவன் என்று வஹாபியத்தை உலகுக்களித்த இப்ன் தய்யிமியாஹ் பாராட்டியிருக்கிறார்.
The Ash'aris: in the Scales of Ahlus Sunnah, Shaykh al-Jasim,

 

இந்தப் போர்களில் சபுக்தகினுக்கு ஆஃப்கன் மற்றும் கில்ஜி மலைப்பகுதி மக்கள் அல்லாவின் பெயரால் துணை நின்றனர். தன் படையினருக்கு வென்றாலும் தோற்றாலும் அல்லாவின் அருள் கிடைக்கும் என்றும் வென்றால் இம்மையில் சுகவாழ்வு தோற்று இறந்துபோனால் மறுமையில் சுகவாழ்வு என்று மௌல்விகளைப் பேசசொல்லி வெறியேற்றி வைத்திருந்தான். சபுக்தகின் காந்தாரம், பெஷாவர் உள்ளிட்ட பஞ்சாபின் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். இவனது கட்டுப்பாட்டில் ஹிந்து அரசன் ஜெயபாலன் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டதற்காக இவன் காலிஃபாவால் பாராட்டப்பட்டான்.

 

1001ல் மீண்டும் ஜெயபாலன் காஜ்னி மீது படையெடுத்தான். அப்போது சபுக்தகின் இறந்து போய் அவனது மகன் இஸ்மாயிலைக் கொன்றுவிட்டு அடுத்த மகன் முகமது பட்டம் ஏற்றிருந்தான். ஆனால் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான ஜெயபாலனின் படை தோற்றது. எதிரியின் போர்த்தந்திரங்களை முறியடிக்கத் தவறி தோற்றுப் போய் ராஜ தர்மத்திலிருந்து வழுவினான் என்று தூற்றப்பட்ட ஜெயபாலன் தற்கொலை செய்துகொண்டான். அவனது மகன் ஆனந்தபாலன் பட்டத்துக்கு வந்து மீண்டும் காஜ்னி மீது படையெடுத்தான். ஷாஹியா வம்சத்தின் பெருமையை மீட்க பல போர்களைப் புரிந்தும் பயனின்றி காந்தாரப் பகுதியைக் கைவிட்டு காஷ்மீரத்து ஷிவாலிக் மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்து போனான்.
"AMEER NASIR-OOD-DEEN SUBOOKTUGEEN". Ferishta, History of the Rise of Mohammedan Power in India, Volume 1: Section 15. Packard Humanities Institute. Retrieved 2012-12-30.
P. M. Holt, Ann K. S. Lambton, Bernard Lewis, ed. (1977), The Cambridge history of Islam, Cambridge University Press, p. 3, ISBN 0-521-29137-2,
The Ghaznavids, C.E. Bosworth, Age of Achievement: A.D. 750 to the End of the Fifteenth Century, Vol. 4, ed. M. S. Asimov, C. E. Bosworth, (UNESCO, 1998), 98.

 

இந்தத் தாக்குதல் குறித்த குறிப்புகளைப் பார்க்கிற போது நமது மன்னர்கள் யுத்த தர்மம் என்று தமக்குக் கற்பிக்கப்பட்டவை எதிரியாலும் கடைப்பிடிக்கப்படும் என்று எதிர்பார்த்து பல இடங்களில் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு ஆளாகினர். ஆனாலும் தங்கள் யுத்த முறையை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் இஸ்லாமியர்களின் முறையற்ற யுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் திணறினர். தர்மம் காப்பது என்பதை சில தவறான விளக்கங்கள் காரணமாகச் சரியாகப் புரிந்து கொள்ளாது தோற்றனர் என்பது தர்மம் அறிந்த பலரது விளக்கம். எதிரி முறையற்ற தாக்குதல் நடத்தினாலும் நான் திருப்பி முறையற்றுத் தாக்கமாட்டேன் என்பதும், யுத்தத்தில் புறமுதுகிட்டவனைத் தாக்கமாட்டேன் என்பதும் எதிரிகளின் யுத்த முறைமைகள் அல்ல. அவர்களை அவர்களது யுத்தப்பாணியிலேயே போரிட்டிருந்தால் விரட்டியிருக்கலாம்.

சபுக்தகின் மறைவுக்குப் பிறகு அவனது மூத்த மகன் இஸ்மாயில் பட்டத்துக்கு வந்தான். ஆனால் இரண்டாவது மகன் மகமுது, காஜ்னி பகுதியின் மீது படையெடுத்து இஸ்மாயிலைக் கொன்று 998ல் ஆட்சியைப் பிடித்துக் கொண்டான்.


1001ல் ஜெயபாலனைத் தோற்கடித்த பிறகு அவனைத் தனக்கு அடங்கிய சிற்றரசனாக ஆக்கிவைத்தான் கஜினி மகமுது (கஜினி முகமது).
1005 மற்றும் 1006ல் மூல்தான், பஞ்சாபின் பிற பகுதிகளின் மீது படையெடுத்தான். ஜெயபாலனின் மகன் ஆனந்தபாலனை மூல்தான் போரில் தோற்கடித்தான்.

 

1005ல் நடந்த போருக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஹிந்துஸ்தானத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடிக்கவும் பெருஞ்செல்வத்தைத் தன் நாட்டிற்குக் கொண்டுசெல்லவும் முடிவு செய்தான்.

 

1005ஆம் ஆண்டு போரில் ஷாஹியா வம்ச மன்னன் ஆனந்த பாலனை எதிர்த்து கஜினி மகமுதுவை  ஆதரித்த  சுகபாலனைக் 1008ம் ஆண்டு போரில்  கொன்றான் கஜினி மகமுது. இந்தப் படையெடுப்பிலும் பெருஞ்செல்வத்தைக் கொள்ளையிட்டுச் சென்றான்.

 

1013ல் ஹிந்துஸ்தானத்தின் மீதான தனது எட்டாவது படையெடுப்பின் போது ஷாஹியா வம்சத்தின் அரசனும் ஆனந்தபாலனின் மகனுமான திரிலோசனபாலனைத் தோற்கடித்தான். இதன் மூலம் சிந்துவுக்கு அப்பால் இருந்த ஒரு ஹிந்து ராஜ வம்சம் முடிவுக்கு வந்தது. 

 

  • 1014ல் தானேஸ்வரத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்தான்.
  • 1015ல் காஷ்மீரத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்தான்.
  • 1015ல் ஆஃப்கனிஸ்தானத்தில் தற்காலத்திய நூரிஸ்தான் பகுதி காஃபிரிஸ்தான் என்று அறியப்பட்டது. புத்த மன்னர்கள் ஆண்ட அந்தப் பகுதியைக் கொள்ளையிட்டான் மகமுது.
  • 1017ல் கன்னோஜி, மீரட் ஆகிய ராஜ்ஜியங்களின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்தான்.
  • 1018முதல் 1020 வரை மதுராவின் மீது ஆண்டுதோறும் படையெடுத்துக் கொள்ளையடித்தான். 1020ல் சந்திரபாலன் என்ற மன்னனை வென்று அந்த ராஜ்ஜியத்தை முழுதும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கொள்ளையடித்தான்.
  • 1021ல் பண்டில்கண்ட் பகுதியில் இருந்த கலிஞ்சர் கோட்டையில் இருந்து கோலோச்சிய மன்னன் கன்னோஜி மீது படையெடுத்தான். கன்னோஜிக்கு ஆதரவாகக் களமிறங்கினான் மகமுது. ஆனால் அவன் படை தோற்றது. இருந்தும் கன்னோஜி மன்னனிடமும் பிற மன்னர்களிடமும் கொள்ளையிட்டு தன் ராஜ்ஜியத்துக்குப் பெரும் செல்வத்துடன் திரும்பிச் சென்றான். லாகூரில் திரிலோசனபாலனோடு போரிட்டு லாகூரைப் பிடித்து அங்கே முதல் முஸ்லிம் ஆளுநரை நியமித்தான்.
  • 1022ல் சிந்துவுக்கு மேற்கே கொள்ளையை முடித்துக் கொண்டான்.
  • 1023ல் கலிஞ்சர், குவாலியர் கோட்டைகளை முற்றுகையிட்டும் பிடிக்க முடியாமல் தோற்றுத் திரும்பினாலும் வழியில் பல கோவில்களைக் கொள்ளையிட்டான். பஞ்சாப் பகுதி மன்னன் திரிலோசனபாலனை அவன் படையில் சிலரைக் கொண்டு நயவஞ்சகமாகக் கொன்று அவன் தன் மீது மீண்டும் படையெடுக்காது பார்த்துக் கொண்டான்.
  • 1024ல் சோம்நாத் கோவிலைக் கொள்ளையிட படையெடுத்தான். வழியில் அஜ்மீர், நெஹர்வால், கத்தியவார் ராஜ்ஜியங்களைக் கொள்ளையடித்தான். சோம்நாத் மீதான முந்தைய பல படையெடுப்புகள் முறியடிக்கப்பட்ட நிலையில் இப்போது மகமுதுவும் தோற்றான். ஆனால் சோம்நாத் பகுதியில் பல ஊர்களைக் கொள்ளையிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றான்.
  • 1025ல் சோம்நாத் மீது மீண்டும் படையெடுத்தான். மன்னன் பீமதேவனைக் கொன்றான். 1024ல் தனக்கு எதிராக போரிட்ட ஜாட் மக்கள் மீது கொடும் தாக்குதல் நடத்திப் பல ஆயிரம் பேரைக் கொன்றான்.

 

சோம்நாத் கோவில்கள் மீது மகமுது நடத்திய அராஜகத் தாக்குதல் குறித்தும் அவன் இஸ்லாமை ஹிந்துஸ்தானத்தில் நிறுவிய வழிமுறைகள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
P. M. ( Peter Malcolm) Holt, Bernard Lewis, The Cambridge History of Islam, Cambridge University Press, (1977), ISBN 0-521-29137-2 .
Barnett, Lionel (1999). Antiquities of India. Atlantic.

Read 1600 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 06 August 2014 10:11

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment