×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 10

Saturday, 01 March 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

Somnathtempledawn

 

சோம்நாத் ஆலயம் குஜராத்தின் கத்தியவார் பகுதியில் 12 ஜோதிர் லிங்க ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஜோதிர் லிங்கம் என்பது இறைவனின் ஒளிவடிவம். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது சோம்நாத். முதன்முதலாக இந்தக் கோவில் கட்டப்பட்ட காலம் குறித்து சரியான கணிப்புகள் இல்லை. மஹாபாரத காலத்துக்கு முந்தையது என்பது செய்தி. இரண்டாவது கோவில் முதல் கோவிலைப் புதுப்பித்து அதே இடத்தில் கட்டப்பட்டது. பொது ஆண்டு 649ல் வல்லபி பகுதியைச் சேர்ந்த யாதவ அரசர்களால் கட்டப்பட்டது.

 

725ல் சிந்துப் பகுதியின் அரபு ஆளுநர் ஜுனாயத் இந்தக் கோவிலை இடித்துக் கொள்ளையடிக்கப் பெரும்படை ஒன்றை அனுப்பினான். கொள்ளைக்குப் பிறகு கோவில் இடிக்கப்பட்டது. இதை மீண்டும் 815ல் பிரதிஹார மன்னன் இரண்டாம் நாகபட்டன் பெரிதாகக் கட்டினான். பெரிய கற்கோவிலாகக் கட்டப்பட்டு மீண்டும் பல நிவந்தங்கள் அளிக்கப்பட்டு இந்தக் கோவில் மீண்டும் பொலிவு பெற்றது. நிவந்தங்கள் சேர்ந்து கோவிலில் செல்வம் கொழிக்கிறது என்றதுமே இது அரபியர்களின் கண்களை உறுத்தியது.

 

ஆனால் நாகபட்ட மன்னர்களுக்கு அஞ்சி படையெடுக்கவில்லை. 1024ல் கஜினி மகமுது இந்தக் கோவிலின் மீது படையெடுத்தான். ஒரு லட்சம் பக்தர்கள் அமர்ந்து பிரார்த்திக்கத்தக்க மண்டபமும் ஆயிரக்கணக்கான பணியாளர்களும் கொண்ட சோமநாதர் ஆலயத்தின் செல்வச் செழிப்பு அவனைச் சுண்டியிழுத்தது. அங்கிருக்கும் நடன மங்கையரைக் கவர்ந்து செல்ல அவனது படையினர் துடித்தனர். பெருஞ்செல்வத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்லாது அக்கோவிலின் சிலைகளை உடைத்து உருவ வழிபாட்டை எதிர்க்கும் மார்க்கக் கடமையிலும் மகமுது குறியாயிருந்தான்.

 

கஜினி மகமுது பெண்கள் மீது விருப்பம் கொண்டவனில்லை. அவன் தன்னை அர்பணித்துக் கொள்ளும் தன்மை கொண்ட ஓரினச் சேர்க்கையாளன். மாலிக் அயாஸ் என்கிற ஜார்ஜியாவைச் சேர்ந்த துருக்கிய அடிமையிடம் மனதைப் பறிகொடுத்தான். இவர்களது காதல் குறித்துப் பல பாரசீகக் கவிதைகள் உள்ளன. ஒரு முறை மாலிக் அயாஸ் சுல்தான் மகமுதுவிடம் உங்கள் ராஜ்ஜியத்தில் சக்தி மிக்கவன் யார் என்று கேட்டான். சுல்தானைத் தவிர வேறு யார் இருக்க முடியும் என்று மகமுது பதில் சொல்ல, இல்லை சுல்தானை அடக்கியாளும் நான்தான் சக்தி மிக்கவன் என்று மாலிக் அயாஸ் சொன்னான். சுல்தான் அதை மறுக்க மனதின்றி இருந்தான். அடிமையின் அடிமை என்ற புகழ்பெற்ற கவிதை இவர்களைக் கருத்தில் கொண்டே இயற்றப்பட்டது. 1021ல் மாலிக் அயாஸை லாகூரின் அமீராக அறிவித்தான் மகமுது.
Neill, James (2008). The Origins and Role of Same-Sex Relations In Human Societies. McFarland. p. 308. ISBN 978-0786435135.

 

கஜினி முகமது பெருஞ்செல்வத்தை ஹிந்துஸ்தானத்துக் கோவில்களில் இருந்து கொள்ளையிட்டுச் சென்றான். அவனது 1000 குதிரைகளும் பளு தாங்காது திணறின என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். சோம்நாத் கோவிலில் அவனது கொள்ளை இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றது.

 


கோவிலின் வளம் என்று பார்த்தால் ஹிந்துஸ்தானத்து வைர வைடூரியங்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள் அந்தக் கோவிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டன. தங்கம் தாராளமாகப் புழங்கியது. 56 தேக்கு மரத்தூண்கள் கோவிலின் வாயிலைத் தாங்கி நின்றன. கோவில் மணியை அடிக்க தங்கச் சங்கிலி போடப்பட்டிருந்தது. அதுமட்டுமே ஏறத்தாழ இருபது கிலோ தங்கம் என்று பாரசீக புவியிலலாளரும் கஜினி மகமுதுவின் படையெடுப்புக் குறித்த குறிப்புகளை எழுதி வைத்தவருமான ஜக்காரியா காஸ்வினி பதிவு செய்துள்ளார், அவர் குறிப்புகளில் மேலும் காணக்கிடைப்பது “ஹிந்துஸ்தானத்துக் கோவில் சோம்நாதர் மீது சுல்தான் கஜினி படையெடுத்தான். அவனது படையெடுப்பு இஸ்லாம் மதத்தை ஹிந்துஸ்தானத்தில் நிலைநாட்டுவதற்காக அமைந்தது. போரில் வென்று ஹிந்துக்களை இஸ்லாமுக்கு மாற்ற எண்ணிய அவனது ஆசை நிறைவேறவில்லை. ஹிந்துக்கள் இவனது படையைக் கண்டதும் கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். அங்கே போருக்குத் தயார் செய்துகொண்டு சுல்தானின் படையை எதிர்த்துச் சாகும் வரை ஒவ்வொரு ஹிந்துவும் போரிட்டான். கிட்டத்தட்ட 50000 ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.”

 

கோவிலின் மொத்த நகைகள் பாத்திரம் பண்டங்கள் (அனைத்தும் தங்கம்) இவற்றின் மதிப்பு 22000 தினார் என்று குறிப்பிடுகிறார் அவர். சந்திரகாந்தக் கல்லினால் ஆன லிங்கத்தை உற்றுப் பார்த்த சுல்தான் அது எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்பது கண்டு அதிசயித்தான். அது ஏதோ மாய மந்திர வேலை என்று சிலர் சொல்ல, உற்றுக்கவனித்த சில தளபதிகள் கண்ணுக்குத் தெரியாத வகையில் அதன் ஆசனம் அமைக்கப்பட்டு அதில் இருத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றனர். ஒரு சில வீரர்களை அழைத்து அந்த லிங்கத்தின் அருகே சென்று அடியில் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான் மகமுது. ஏதுமில்லை என்றனர்.

 

ஒரு தளபதி இது காந்தத்தின் வேலை. கல்லுடன் சில இரும்புத் துகள்கள் சேர்க்கப்பட்டு காந்தவிசை எல்லாத் திசைகளிலும் சீராக இருக்குமாறு அமைத்திருக்கிறார்கள் என்றார். உடனே லிங்கத்தின் மீது இருந்த சில ரத்தினக் கற்கள் அகற்றப்பட்டன. லிங்கம் சற்றே அசைந்தது. மேலும் சில கற்களை அகற்ற லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அனைத்துக் கற்களும் அகற்றப்பட்டு லிங்கம் பூமியில் அமர்ந்தது. அங்கிருந்த படையினர் அதை நான்கு துண்டுகளாக உடைத்தனர்.

 

அதில் ஒரு பகுதி மெக்காவுக்கு அனுப்பப்பட்டு காபவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது, இரண்டாவது பகுதி மதீனாவில் முகமது நபியின் மசூதியில் வைக்கப்பட்டது. மூன்றாவது பகுதி கஜ்னி நகர மசூதியிலும் நான்காவது பகுதி மகமுதுவின் அரண்மனை வாயிலில் வைக்கப்பட்டது.

 

ஆனால் கஜினி மகமுதுவுக்கு சோம்நாத் கோவிலின் முழுச் செல்வமும் கிடைக்கவில்லை. சோம்நாத் பகுதியின் மன்னன் பீமதேவ சோலங்கி கோவிலின் கருவூலத்தில் இருந்து மிக முக்கியமான பொன் நகைகள், நவரத்தினங்கள், விலை உயர்ந்த பொருட்களை அபு மலைப்பகுதியில் உள்ள அசலக் கோட்டைக்கு (Achal Gadh) அனுப்பி வைத்தான். அங்கே காவல் மிகுந்த இடங்களில் இவை வைக்கப்பட்டன. மேலும் பல விலையுயர்ந்த பொருட்கள் அருகில் உள்ள தீவுகளுக்கும் அனுப்பி பாதுகாக்கப்பட்டன. எதிர்பார்த்த செல்வம் கிடைக்காத நிலையிலும் தன் முழுப்படையாலும் சுமக்க முடியாத அளவு பொருட்களைக் கொள்ளையிட்டுப் போனான் மகமுது.
Mir Jaffar Barkriwala, The Glorious Destruction of Hindoo Temples in Kathiawar and their replacement, Ul Akbari Publications, Bharuch, 1902
http://www.ibiblio.org/britishraj/Jackson3/index.html
Elliot, Sir Henry Miers (1952). The history of India, as told by his own historian Beirouni. 11. Elibron.com. p. 98. ISBN 978-0-543-94726-0.

 

தன் 17 படையெடுப்புகளில் மகமுது இழைத்த கொடுமைகள், அவன் அடித்த கொள்ளையின் மதிப்பு, அதனால் அவனுக்கு இஸ்லாமியரிடையே கிட்டிய பெரு மதிப்பு ஆகியன குறித்து இனி பார்ப்போம்.

Read 7986 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 06 August 2014 10:12

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment