×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 11

Monday, 10 March 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

ghazni-muhamad


சோமநாதர் ஆலயக் கொள்ளை கஜினி மகமுதுவை இஸ்லாமியர்களிடையே ஒரு வெற்றி வீரனாக ஆக்கியது. 10 நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் கஜினி மகமுது இஸ்லாமிய உலகில் ஒரு மாபெரும் சாதனையாளனாகப் பார்க்கப்படுகிறான். கஜினி மகமுது ஹிந்துஸ்தானத்தை ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை. அவன் படையெடுப்புகள் அனைத்தும் ஹிந்துஸ்தானத்துச் செல்வங்களைக் கொள்ளையிட்டுக் கொண்டு தனது மலை நகரமான காஜ்னிக்குச் செல்லவேண்டும் என்பதே. மார்க்கக் கடமையாக சிலை வழிபாட்டுத் தலங்களை இடிக்க எண்ணினான். அதைச் செய்தான்.
John Keay, "A History of India", Harper Collins, New Ed edition, 2001, (ISBN 978-0006387848)

 

somnath sandel wood door

 

அவனது பாரதப் படையெடுப்புகளில் கொள்ளையிட்ட செல்வத்தின் மதிப்பு சுமார் 30 கோடி தினார்கள் இருக்கும் என்று அரபு வரலாற்றாசிரியர்கள் கணக்குச் சொல்கிறார்கள். இது தவிர பல்லாயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்துச் சென்றான் கஜினி மகமுது. சோம்நாத் கோவிலின் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கதவுகளைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய்த் தன் அரண்மனை வாசலில் வைத்துக் கொண்டான்.

 

 somanathtemple loot

 

ஆனால் சோம்நாத் கோவிலில் அவன் எதிர்பார்த்த செல்வம் கிடைக்கவில்லை. மன்னன் பீமதேவ சோலங்கி கோவிலின் செல்வங்களில் தன்னால் எடுத்துச் செல்ல இயன்றவற்றை கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டான். சிவலிங்கத்தில் நெற்றிக்கண்ணாகப் பொருத்தப்பட்டிருந்த சந்திரகாந்தக் கல் குறித்து மகமுதுவுக்கு பலரும் சொல்லியிருந்தார்கள். அதை எடுத்துச் செல்ல எண்ணி வந்தவன் அது கிடைக்காமல் ஏமாந்தான். அவன் வந்த போது பவழத்தால் லிங்கத்தின் நெற்றிக்கண் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்த பெருஞ்செல்வம் கிட்டாமல் ஏமாந்து போனான்.

 

 

ghazni-muhamed-fall-love-to-man

ஓரினச் சேர்க்கையில் ஆண்களிடம் மயக்கம் கொண்டிருந்த மகமுது 400 நடனப் பெண்களைப் பிடித்துக் கொண்டு செல்வம் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள் என்று மக்களை மிரட்டினான்.

 

76297 522069974480952 46274237 n

யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆகவே ஆற்றாமையில் கண்ணில் கண்ட ஹிந்துக்கள் அனைவரையும் கொன்று குவித்தான். பிறகு 400 பெண்களையும் கோவில் கதவையும் அகப்பட்ட செல்வத்தையும் அள்ளிச் சென்றான். கொல்லப்பட்டவர்களின் இரத்தம் கடலிலும் கடற்கரை மணலிலும் கலந்துபோனதால் பல நாட்களுக்குக் கடல் சிவப்பு நிறத்திலேயே இருந்தது என்று இஸ்லாமிய அறிஞரும் வரலாற்றாளருமான அல்பிரூனி பதிவு செய்கிறார், இவர் கஜினி மகமுதுவுடன் ஒரு சில ஹிந்துஸ்தானப் படையெடுப்புகளில் உடன் வந்துள்ளார். இவர் தஹ்கிக் இ ஹிந்த் என்ற நூலை எழுதியிருக்கிறார்.

 

மகமுது இத்தனை செல்வத்தைக் கொள்ளையடித்த போதும் அதை தன் பயன்பாட்டுக்கும் தன் வசதிக்குமே பயன்படுத்திக் கொண்டான். மிகுந்த வற்புறுத்தலின் பேரில் ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகமும், அல் பிரூனி என்ற அறிஞரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு நூல்நிலையமும், தான் கொள்ளையிட்ட ஹிந்துஸ்தானந்து சொத்துக்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள ஒரு அருங்காட்சியகமும் அமைத்தான்.

 

தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசும் கவிஞர்களை ஊக்குவித்தான் கஜினி மகமுது. உஸாரி, ஆஸாதி துசி, உன்சுரி ஆகிய கவிஞர்களை தன் வரலாற்றையும் தன்னைக்குறித்த புகழுரைகளையும் எழுதுவதற்கு அமர்த்தினான். ஃபிர்தௌசி என்ற கவிஞரை 60,000 தங்கக் காசுகள் தருவதாகச் சொல்லி தன் புகழ் பாடும் ஷாநாமா எழுதச் சொன்னான். ஃபிர்தௌசி மகமுதுவை வானளாவப் புகழ்ந்து வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற நல்லவர்களின் வரிசையில் வைத்து மிகவும் புகழ்ந்து எழுதினார். ஆனால் அவர் எழுதி முடித்து ஷாநாமாவை வெளியிட்டதும் 60,000 பொற்காசுகள் கொடுக்க மறுத்தான். அவர் வெறுப்புற்று மகமுது குறித்து கேலிக்கவிதைகளை எழுதி வெளியிட்டுவிட்டு தன் தாயகமான இரானுக்குப் போய்விட்டார்.

 

அல் பிரூனி எனும் இஸ்லாமிய அறிஞர் தஹ்கிக் இ ஹிந்த் என்ற புத்தகத்தை எழுதினார். ஹிந்துஸ்தானத்துக் கலாசாரம் குறித்து விரிவாக எழுதிய முதல் இஸ்லாமியர் இவர். ஹிந்துக் கலாசாரம் மற்றும் இஸ்லாமியக் கலாசாரம் குறித்த ஒப்பீட்டைச் செய்திருக்கிறார் என்ற போதும், அந்த ஒப்பீடு ஹிந்துக் கலாசாரம் இஸ்லாமியக் கலாசாரத்தை விடத் தாழ்ந்தது என்ற சிந்தனை கொண்டு எழுதப்பட்டதாகவே இருக்கிறது. ஹிந்துஸ்தானத்தில் 10 ஆண்டுகள் தங்கியிருந்த அல் பிரூனி பதஞ்சலியின் யோக சூத்திரத்தை கிதாப் பதஞ்சல் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ஹிந்துக்கள் சிறந்த தத்துவ ஞானிகள், நல்ல அறிவாளிகள் என்ற எண்ணம் கொண்டிருந்தார் அல் பிரூனி. ஹிந்துத் தத்துவங்களின் மீது ஈடுபாடு கொண்ட அல் பிரூனி ஹிந்துத் தத்துவங்களை விட இஸ்லாமிய மார்க்கத் தத்துவங்கள் சிறந்தவை என்று மிகவும் ஆணித்தரமாகப் பதிவு செய்கிறார்.

 

கஜினி மகமுதுவின் நிர்வாகம் துருக்கிய நிர்வாக முறை சார்ந்து இருந்தது. அடிமைகள் போரில் வீரம் வெளிப்படுத்தினால் இராணுவத்தில் பதவிகள் பெற வாய்ப்பிருந்தது. வருவாய் மற்றும் நிர்வாகம் பாரசீகர்கள் வசம் இருந்தது. இவன் பாரசீகர்களால் மிகவும் போற்றப்படுகிறான். இவன் தீவிர சுன்னி முஸ்லிமாக இருந்த போதும் பாரசீகக் கலாசாரத்தை மீட்டெடுத்தவன், பாரசீகர்களை நிர்வாகத்தில் அமர்த்தியவன் என்றும் போற்றப்படுகிறான். துருக்கியர்களை விடவும் பாரசீகர்களை இவன் நம்பினான். பாரசீக மொழியை ஆட்சி மொழியாக்கினான். இஸ்லாம் ஒன்றே இவனது ராஜ்ஜியத்தின் மதமாக இருந்தது.

 ghazni-muhamad-demolishing temple small

பாகிஸ்தான் ஆஃப்கனிஸ்தான் ஆகிய பகுதிகளில் இஸ்லாமை ஹிந்துஸ்தானத்தில் நிறுவி நிலை நிறுத்தியவன் என்று மகமுது போற்றப்படுகிறான். ஆனால் உண்மையில் சுல்தான் கஜினி மகமுது மிகப் பெரிய கொள்ளைக்காரன், கோவில்களை இடித்தும் கொள்ளையிட்டும் விக்கிரகங்களை உடைத்தும் ஹிந்துஸ்தானத்தில் கொடுமைகள் புரிந்தவன். இஸ்லாம் மதத்தை ஹிந்துஸ்தானத்தில் பரப்பவேண்டும். அதை எதிர்க்கும் விக்கிரக வழிபாட்டாளர்களை அழித்துவிடவேண்டும் என்று தீராத ஜிஹாதி வெறி கொண்டவன். ஈகைக் குணம் கொஞ்சமும் அற்றவன். தன் புகழுக்காக செலவுகள் செய்தவன்.

 


இஸ்லாமை ஏற்க மறுத்ததற்காக ஏறத்தாழ இரண்டு லட்சம் பொது மக்களைக் கொன்றுபோட்ட இரத்த மத வெறியன். இவன் 1030ல் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இறந்து போனான். இறப்பதற்கு முன் தான் கொள்ளையடித்த செல்வங்களில் செலவழித்தது போக எஞ்சியவற்றை கண்முன் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றும், இவற்றைப் பிரிந்து போகவேண்டுமே என்றும் வருந்தியதாகவும் பாரசீக செவிவழிக் கதைககள் தெரிவிக்கின்றன.
Hellmut Ritter, Handbook of Oriental studies: Near and Middle East, Vol.69, transl. John O'Kane, (Brill, 2003), 309-310.
Clifford Edmund Bosworth, The Ghaznavids: Their Empire in Afghanistan and Eastern Iran, 994-1040 (1963).
Muhammad Nazim, The Life and Times of Sultan Mahmud of Ghazna (1931).
Edward G. Browne, A Literary History of Persia (1906-1924)இத்தனை கொடுமைகளைச் செய்த கஜினி மகமுதுவை விடாமுயற்சிக்கு உதாரணம் என்று நாம் சொல்வது நம்மை நாமே இழிவு படுத்திக் கொள்வதாகும். அவனது படையெடுப்புக்கள் அனைத்தும் கொள்ளை, கொலை, மதமாற்றம், கோவில் இடிப்புகள் என்பதை மையப்படுத்தியே நடந்தவை. ஹிந்துஸ்தானத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் படையெடுத்துக் கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவுடன் கொடுமை இழைத்த ஒருவன் எப்படி விடாமுயற்சிக்கு முன்னுதாரணம் ஆவான்? இது வரலாற்றைத் திரித்து நம் முன்னோர்களை நாமே பழித்துக் கொள்ள வழிசெய்யும் செயல். ஆகவே இனி ஊழல்களுக்கு கஜினி மகமுதுவின் கொள்ளைகளை உதாரணமாகச் சொல்வோம். விடாமுயற்சிக்கு அல்ல.

 

 Images Source : Google Images

Read 5336 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 06 August 2014 10:12

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment