×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 14

Sunday, 27 April 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

1179ல் பிருதிவிராஜனின் தாய் ஒரு கனவு கண்டாள். அது ஒரு முஸ்லிம் ஃபகிர் அஜ்மீர் பாலைவனத்துக்கு வருகை தந்து தன் மகனைக் கொல்வதாக அமைந்திருந்தது. இதனைச் சொன்னபோது பிருதிவிராஜன் அலட்சியப்படுத்தினான். பின்னர் கோரியின் படையை 1191ல் தோற்கடித்துவிட்டு வந்து தன் தாயின் கனவு கனவாகவே போனது என்று இறுமாந்து கூறினான்.

 

349sufi

முதலாம் ஹிந்துஸ்தானப் போரில் தோற்றுப் போய்த் திரும்பிய கோரி முகமதுவை க்வாஜா மோயினுத்தீன் சிஷ்டி என்கிற சுஃபி துறவி உற்சாகப்படுத்தினார். அவனுக்கு அறிவுரைகள் சொல்லித் தேற்றி அல்லாவின் உத்தரவு இருப்பதால் மீண்டும் போர் நடந்தால் வெற்றி நிச்சயம் என்று உறுதியளித்தார். அவனுக்கு முன் இவர் லாகூர் வழியாக அஜ்மீர் வந்து சேர்ந்தார். இவர் 1141ல் ஈரானில் பிறந்தவர். இவர் சிஷ்டி என்னும் இஸ்லாமிய ஆன்மிக வம்சத்தைச் சேர்ந்தவர். இந்த வம்சம் முகமது நபியின் மைத்துனர் அலி இப்ன் அபி தாலிப் என்பவரால் தொடங்கப்பட்டது.

 

தனது 15ஆவது வயதில் மோயினுத்தீன் பெற்றோரை இழந்தார். தனது தந்தையின் தோட்டத்தைப் பராமரித்து வாழ்ந்து வந்தார். இவரது தோட்டத்துக்கு வந்திருந்த ஷேக் இப்ராஹிம் குண்டூசி எனும் ஃபகீருக்கு மோயினுத்தீன் சில பழங்களைக் கொடுத்தார். பதிலுக்கு தான் தின்று மீதம் வைத்திருந்த ஒரு ரொட்டித் துண்டை இவருக்குக் கொடுத்தார் ஷேக் இப்ராஹிம் குண்டூசி. அதைத் தின்றதும் மோயினுத்தீனுக்கு ஞானம் பிறந்தது என்று சொல்கிறார்கள். அவர் இதன் பிறகு தன் சொத்துக்களை விற்றுவிட்டு சாமர்கண்ட் சென்று இஸ்லாமியக் கல்வி கற்றார். பிறகு புகாரா சென்று மௌலானா ஹிசாமுதீன் புகாரி என்பவரிடம் குரானைக் கற்றார். உஸ்மான் ஹாரூனி என்ற சிஷ்டி வம்சத்தின் 15ஆவது மாயசக்தி கொண்ட ஃபகீரிடம் சுஃபி தீட்சை பெற்றார்.

 

தான் மெக்கா சென்றிருந்த போது முகமது நபி தன் கனவில் வந்து ஹிந்துஸ்தானத்துக்குச் சென்று அந்தப் பிரதேசத்தை இஸ்லாமிய மயமாக்க உத்தரவு கொடுத்ததாகவும் அதனாலேயே தான் ஹிந்துஸ்தானம் செல்வதாகவும் கூறினார். 1192ல் முகமது கோரியின் படையெடுப்புக்குச் சில மாதங்களுக்கு முன் இவர் அஜ்மீர் வந்தார். அவருடன் வந்தவர்கள் ராஜா பிருதிவிராஜனின் குதிரைகள் ஒட்டகங்கள் ஆகியவை மேயும் இடத்தில் தங்க இடம் கேட்டனர். மறுக்கப்பட்ட போது அங்குள்ள பாலைவனச் சோலை ஒன்றின் குளத்தில் சிறிய அளவில் நஞ்சைக் கலந்து விலங்குகளுக்கு நோய் வரச் செய்தனர். பின்னர் அவர்களே அதைக் குணப்படுத்தினர்.

 

kori ajmer

இது குறித்து பிருதிவிராஜனுக்குத் தகவல் போனதும் துறவிக்கு ஏன் இடமளிக்கவில்லை என்று தன் வீர்ர்களைக் கடிந்து கொண்டான். அவருக்கு மரியாதைகள் செய்தான். ஆனாலும் அவனை அவமதித்தே வந்தார் மோயினுத்தீன். மக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் அன்பு காட்டி இஸ்லாமின் பெருமைகள் குறித்தும் சுஃபி முறை குறித்தும் பிரச்சாரம் செய்தார். சலாஃபி, வஹாபி போன்ற வன்மைமிக்க வழிகளை விடுத்து ஆன்மிகத்தின் பெயரில் சுஃபி என்ற ஆடல் பாடல் தியான முறைகள் கொண்ட வழியில் அவர் இஸ்லாமைப் பரப்பினார். அவ்வப்போது செப்படி வித்தைகள் மூலம் சில அமானுஷ்ய தாக்கங்களை மக்களிடம் ஏற்படுத்தினார். அஜ்மீரில் ஒரு வராஹ பெருமாள் ஆலயத்தின் அருகில் இவர் அமர்ந்து கொண்டார், அங்கே வருவோரிடம் உருவ வழிபாடு தவறு என்றும் இறைவனின் பெருமைகளைக் குறித்துப் பாடியும் அவனைத் தியானித்தும் மட்டுமே அடைய முடியும் என்றும் கூறிவந்தார்.

 

கவாலி முறையில் அமைந்த இவரது சீடர்களின் சுஃபி பாடல்கள் மக்களை ஈர்த்தன. உருவமில்லாத இறைத்தன்மை குறித்து இவர் பேசியதும் ஹிந்துக்கடவுள்களைக் கும்பிட்டாலும் தன் பேச்சைக் கேட்க வருவோரை அனுமதித்து அன்பு காட்டியதும் இவரை ஒரு ஞானி என்று மக்களைக் கொண்டாட வைத்தன. இவர் படிப்படியாக மக்கள் மனதில் இஸ்லாமியக் கோட்பாடுகளை விதைத்தார். தன் இடத்துக்கு வந்து பிரார்த்திப்பவர்கள் பல இழப்புகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று கூறினார்.

 

ஆலயத்துக்கு அருகே அமர்ந்து கொண்ட இவர் “பிருதிவிராஜனை சஹாபுதீன் கோரியிடம் உயிருடன் ஒப்படைப்பேன்” என்று கூறிவந்தார். முகமது கோரிக்கு இரண்டாவது ஹிந்துஸ்தானப் போரில் வெற்றிக்கு மறைமுகமாக மிகவும் உதவினார். பிருதிவிராஜன் இஸ்லாமுக்கு மாறவோ அல்லது சுஃபி முறையை ஏற்கவோ செய்யாதது இவருக்கு மிகவும் கோபத்தைக் கொடுத்தது. பிருதிவிராஜனின் படைகளை வழிநடத்திய தளபதிகளின் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக கருத்துக்களைக் கூறிவந்தார். துறவி என்று தன்னை மதித்து வந்து பார்த்த தளபதிகள் உற்சாகமிழக்கும் வகையில் பேசினார்.

 

இதை எல்லாம் பிருதிவிராஜன் கவனத்தில் கொள்ளவில்லை. தன் மனைவியின் பால் கொண்டிருந்த மையலிலும் தோற்றோடிய முகமது மீண்டும் வந்தாலும் அவனை விரட்டியடிக்கத் தன் படைபலம் போதும் என்று இறுமாந்திருந்தான். தன் மனைவி சம்யுக்தை மீது மிகுந்த காதல் கொண்டிருந்த பிருதிவி 1191 வெற்றிக்குப் பிறகு அவளுடன் பல கோட்டைகளுக்குச் சுற்றுலா சென்று மகிழ்ந்திருந்தான். கருவுற்ற சம்யுக்தை ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். ஆனாலும் ஓரிரு மாதங்களில் மீண்டும் கருவுற்றாள்.

 

இந்நிலையில் கோரி முகமது மீண்டும் படையெடுத்து வந்தான். பிருதிவிராஜன் எல்லா ராஜபுத்திர அரசர்களுக்கும் படை உதவிகேட்டு தூது அனுப்பினான். 150 ராஜபுத்திர சிற்றரசர்கள் தங்கள் படைகளை பிருதிவிக்கு ஆதரவாக அனுப்பினர். ஆனால் கன்னோசி மன்னன் ஜெயசந்திரன் முகமது கோரியைச் சந்தித்து தனது படைகளை பிருதிவிக்கு ஆதரவாக அனுப்பப்போவதில்லை என்றும், பிருதிவியின் போர்த்தந்திர விவரங்களை உளவு சொல்வதாகவும் வாக்களித்தான், அதன்படி துரோகத்தை முழுமையாகச் செய்தான்.

www.sunniforum.com/forum/showthread.php?70754-Sufi-and-Sultan-How-a-great-sufi-saint-established-the-Muslim-rule-over-India

http://en.wikipedia.org/wiki/Muhammad_of_Ghor

http://ashraf786.proboards.com/thread/11241?page=1

http://indiansaga.com/history/prithviraj_tarain1.html

Read 7234 times
Rate this item
(2 votes)
Last modified on Wednesday, 06 August 2014 10:14

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment