×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 16

Saturday, 30 August 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

போரில் வென்ற கோரி முகமது ஹிந்துஸ்தானத்தில் தங்கி ஆட்சி செலுத்த இயலவில்லை. குஸ் மற்றும் க்வாராசிம் துருக்கியர்கள் அவனது தலைநகரைத் தாக்கிக் கொள்ளையிட்டனர். ஹிந்துஸ்தானத்தில் கொள்ளையிட்ட செல்வத்தைக் காப்பாற்ற அவன் அவ்வப்போது தன் தலைநகரத்துக்குச் சென்று தன் அண்ணனுக்குத் துணையாக எல்லைப் போரில் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது. ஆகவே அவன் தன் அடிமை ஒருவனை தான் கைப்பற்றிய ஹிந்துஸ்தானத்துப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ள நியமித்தான்.

அந்த அடிமையின் பெயர் குத்புதீன். அவன் குத்புதீன் ஐபெக் என்று அறியப்பட்டான். ஐபெக் என்றால் அடிமை என்று பொருள்.

Qutubuddin Aibak

அவனது தளபதியாக இருந்த முகமது கில்ஜி பிஹார் கோட்டையை 1193ல் கொள்ளையிட்டான். இங்கேயும் பல தோலாக்கள் தங்கமும் வெள்ளியும் வைர வைடூரியங்களும் பறிபோயின. மரக்கதவுகள் வேலைப்பாடு நிறைந்த பல கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கோவில்கள் கொள்ளையிடப்பட்டன. விவசாய நிலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிடங்குகளில் இருந்த உணவுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பிஹாரில் வன்முறை தலைவிரித்து ஆடியது. கொடூரம் என்பதன் பொருளை உணரத் தொடங்கிய ஹிந்துக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொல்லப்பட்டனர் அல்லது முடமாக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். பண்பாட்டு ஒழுங்குமுறையுடன் வாழ்ந்து பழகிய ஹிந்து மக்கள் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் முன் திகைத்து நின்று அந்தத் திகைப்பில் இருந்து மீளாமலேயே தோற்றனர், மாண்டனர். தங்களில் ஒருவனான ஜெயச்சந்திரன் இந்தக் கொடூரர்களுக்குத் துணை போனது மக்களை மிகவும் பாதித்தது.

ஆயிரக்கணக்கில் ஹிந்து ஆண்கள் முடமாக்கப்பட்டு அடிமைகளாக அரபுச் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டனர். கொல்லப்பட்ட ஹிந்து ஆண்களின் இரத்தத்தால் பூமி சிவந்தது என்று கில்ஜியுடன் வந்த அரபு வரலாற்றாளர்கள் குறிப்பெழுதி வைத்தனர். ஆயிரக்கணக்கான ஹிந்துப் பெண்கள் கில்ஜியின் படைவீரர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின் அடிமைகளாக விற்கப்பட்டனர். பலர் இடக்கைப் பெண்களாக அடிமைப்படுத்தப்பட்டனர். 10 வயதுக்கு உட்பட்ட ஹிந்து ஆண் பிள்ளைகள் சுன்னத் செய்யப்பட்டு மதரசாக்களில் சேர்க்கப்பட்டனர். போர்க்கலையும் பயிற்றுவிக்கப்பட்ட அந்தப் பிள்ளைகள் படைகளில் சேர்த்துக் கொள்ளபப்ட்டனர். 10 வயதுக்கு மேற்பட்ட ஹிந்து ஆண்பிள்ளைகள் முடமாக்கப்பட்டு அடிமைகளாக எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர். வயது வித்தியாசம் பாராமல் ஹிந்துப் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் முஸ்லிம் ஆண்களுக்கு அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தன் மகளுக்கு நேர்ந்த கதியால் நொந்து போன ஜெயச்சந்திரன் தன் துரோகத்தை நினைத்து வருந்தினான். தன் மகளுக்காகப் பழிதீர்க்கக் காத்திருந்தான். பல அரசர்களுக்குத் தூதனுப்பினான். ஆனால் பலரும் அவனது பேச்சுக்குச் செவிமடுக்கவில்லை. 1193ல் குத்புதீன் கன்னோஜியைச் சுற்றியிருக்கும் சிற்றரசுகளைத் தாக்கி வழமை போலக் கொள்ளையடித்துப் பெண்களைக் கவர்ந்து போனான். பல பெண்களை அவனது படை வீரர்கள் வன்புணர்ந்து அங்கேயே விட்டுச் சென்றனர். போர் என்று அறிவிப்பு ஏதுமின்றி ஏதோ கொள்ளைக்கூட்டத்தினர் நடத்தும் தாக்குதல் போல இவை அமைந்தன.

குத்புதீனிடம் புகார் சொன்ன போது அவர்களை முஸ்லிமாக மாறுங்கள் இல்லையேல் இதுவே கதி என்று எச்சரித்தான். மாற மறுத்தவர்கள் மீண்டும் இதே கொடுமைகளுக்கு ஆளாயினர். ஆண்கள் கொல்லப்பட்டும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டும் போக, பிள்ளைகள் மதரசாக்களுக்கு அனுப்பப்பட்டனர். குத்புதீன் 1193ல் வட இந்தியா முழுதும் படை நடத்திப் போய்க் கொள்ளையடித்தான். அயோத்தியா நகரைச் சுற்றியுள்ள பல கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினான். முக்கியக் கோவில்களில் கொள்ளையடித்தான். அங்கிருந்து வங்காளம் வரை தன் துருக்கப் படையுடன் சென்று கொலை கொள்ளைகளில் ஈடுபட்டான். அவனை எதிர்த்து நின்று போரிட்டு வெல்ல வீரமிருந்தும் பரஸ்பர நம்பிக்கையின்மையால் ராஜப்புத்திரர்களும் இன்னபிற க்ஷத்திரிய வம்சத்தினரும் வாளெடுக்காது வாளாவிருந்தனர்.

இந்த இழிநிலைக்குக் காரணமான ஜெயச்சந்திரன் இந்நிலையில் தன் நாட்டிலேயே படை திரட்டினான். இதை அறிந்த கோரி முகமது 1194ல் படையுடன் தில்லி வந்து அங்கிருந்து தன் அடிமை குத்புதீனுடன் கன்னோஜி மீது படையெடுத்தான். 10 லட்சம் வீரர்களுடன் வந்த ஜெயச்சந்திரனின் படை 50000 அரபு வீரர்களும் ஒரு லட்சம் அடிமைகளும் கொண்ட படையால் எதிர்கொள்ளப்பட்டது. ஜெயச்சந்திரன் கற்றுக் கொடுத்த யுத்த தந்திரங்களும் பிருதிவிராஜனிடம் கையாண்ட நள்ளிரவுத் தாக்குதலும் பெண்களைக் கவர்தலும் ஆகிய முறை(கேடு)கள் கொண்டு இந்தப் படையின் மன உறுதியைக் குலைத்தான் கோரி முகமது. போரில் ஜெயச்சந்திரன் குத்புதீனால் கொல்லப்பட்டதும் அவனது படை சிதறியது.

ஜெயச்சந்திரனின் மகன் ஹரிச்சந்திரன் எவ்வளவோ முயன்றும் மன்னனை இழந்த படையைக் கட்டுப்படுத்திப் போரிட முடியவில்லை. பெண்கள் கண்முன்னே பலாத்காரம் செய்யப்பட்டு அவர்களது கணவன்மார்களும் அண்ணன் தம்பிகளும் முடமாக்கப்பட்டும் பலர் கொல்லப்பட்டும் போயினர், தோல்வியிலும் கம்பீரமும் கௌரவமும் காத்துவந்த ஹிந்துப் பாரம்பரியம் இந்தக் கொடூரம் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றது. ஜெயச்சந்திரனின் மகன் ஹரிச்சந்திரன் உயிர் தப்பி ராஜஸ்தான் பாலைவனத்துக்கு ஓடினான். கோரியின் படை குத்புதீன் தலைமையில் காசி நகரத்தையும் கைப்பற்றிக் கொள்ளையடித்தது. 1000 கோவில்களை இடித்துத் தள்ள குத்புதீன் உத்தரவிட்டான்.

1195 முதல் 1197 வரை குஜராத் பகுதிகளில் தாக்குதல் நடத்தி தற்காலத்தில் பாடன் என்று அழைக்கப்படும் அனஹிலபடாகா/அனஹிலவாடா என்ற வளமிக்க பகுதியைச் சூறையாடினான். முன்பு பீமதேவனின் தாய் நைக்கிதேவி கோரி முகமதுவைத் தோற்கடித்து ஏற்படுத்திய அவமானத்துக்கு முகமதுவின் அடிமை பழிதீர்த்தான். ஆனால் அந்தத் தாய் இறந்த பிறகே அந்தப் பகுதியில் கால்வைக்கும் துணிவு அந்த அடிமைக்கு வந்தது.

1200ல் கோரசான் பகுதிகளில் ஆட்சிமாற்றம் ஏற்படவே தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முகமது அங்கே படை நடத்திச் செல்லவேண்டியதானது. தன் அண்ணன் கியாசுதீனுடன் ஏற்பட்ட பிணக்கினால் அண்ணனுடன் சண்டையிட்டான் முகமது. இந்தப் பிணக்கு 1202ல் கியாசுதீன் இறக்கும் வரை நீறு பூத்த நெருப்பாக இருந்துவந்தது. 1202ல் கியாசுதீன் இறந்ததும் ஹிந்துஸ்தானத்தில் இருந்து விரைந்து வந்து குரித் இனத்தின் பெரியோர் ஆதரவுடன் சுல்தானாக முடிசூடிக்கொண்டான் முகமது. இந்நிலையில் தன் குரித் பகுதியில் பல்வேறு முற்றுகைகளையும் போர்களையும் சந்தித்தான் முகமது. 1204ல் அண்ட்குட் பகுதியில் ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டான்.

அப்போது பஞ்சாப் பகுதியில் அவனுக்கு எதிர்ப்பு எழுந்தது. தன் எதிரிகளை அடக்கும் முன்னர் ஹிந்துஸ்தானத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டிய நிலை முகமதுவுக்கு. விரைந்து பஞ்சாப் வந்து சேர்ந்து எதிர்ப்பை தன் வழமையான கொடூரத்துடன் அடக்கினான். கொள்ளைகள், கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் தலைவிரித்தாடின. கொடூரமான முறையில் பலர் முன்னிலையில் சிலரைக் கொன்று அந்தக் கொடூரத்தைப் பார்த்த அச்சத்திலேயே ஆதரவற்ற மக்களை அடக்கினான் முகமது. 1206ல் எதிர்ப்புகள் அடங்கியதும் ஹிந்துஸ்தானத்தில் தன் பிரதிநிதியாக தன் அடிமை குத்புதீன் ஐபெக்கை அதிகாரபூர்வமாக நியமித்தான்.

1206 பங்குனி மாதம் தன் படைகளுடன் கோர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஜெலம் நதிக்கரையில் தாமிக் என்ற இடத்தில் மாலை நேரத்தொழுகையின் போது கொல்லப்பட்டான். இந்த இடம் தற்போது ஆஃப்கனிஸ்தான் எல்லைப்புறத்தில் இருக்கிறது. இவனைக் கொன்றது யார் என்பது குறித்துத் தெளிவற்ற விவரங்களே கிடைத்துள்ளன. கோகர் இனத்து வீரர்களால் இவன் கொல்லப்பட்டான் என்று சிலரும். இஸ்மாயிலி இனத்தினரால் கொல்லப்பட்டான் என்று சிலரும், குருடாக்கப்பட்டுச் சிறையில் வாடிய பிருதிவிராஜனைக் கொண்டுவரச்செய்து அவனை இகழ்ந்துபேச அவன் குரல் வந்த திசை நோக்கி அம்பெய்து முகமதுவைக் கொன்றான் என்று பிருதிவிராஜ் ராசோ என்ற நாட்டுப்புறப் பாடலிலும் சொல்லப்படுகிறது.

ஒரு கொள்ளைக்காரன், கொலைபாதகன், காமக்கொடூரன் மாண்டான் என்ற திருப்தியில் அடுத்து தில்லியில் அரியணை ஏறிய குத்புதீன் ஐபெக்கின் கொடூரங்கள் குறித்துப் பார்க்கும் முன் சற்றே நிதானித்து சூஃபி துறவி க்வாஜா மோயினுதீன் சிஷ்டியும் அவரது சீடர்களும் செய்த நம்பிக்கைத் துரோகங்களும் அவை இன்றளவும் தொடர்ந்து வருவது எவ்வாறு என்பது குறித்தும் ஒரு சிறு குறிப்பைப் பார்க்கலாம்.

Berwick, Dennison (1986). A Walk Along The Ganges. Dennison Berwick. ISBN 978-0-7137-1968-0.

Sahai, Shashi Bhushan (2010). The Hindu Civilisation: A Miracle of History. Gyan Publishing House. ISBN 978-81-212-1041-6.

Bindloss, Joe; Brown, Lindsay; Elliott, Mark (2007). Northeast India. Lonely Planet. ISBN 978-1-74179-095-5.

The crescent in India: a study in medieval history - Shripad Rama Sharma - Google Books. Books.google.co.uk. Retrieved 2012-07-11.

Sailendra Nath Sen, Ancient Indian History and Civilization, (New Age International, 1999), 327.

Michel Biran, The Empire of the Qara Khitai in Eurasian History, (Cambridge University Press, 2005), 70

Read 3217 times
Rate this item
(2 votes)
Last modified on Friday, 24 October 2014 14:10

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

3 comments

 • Comment Link venkat Monday, 27 October 2014 05:24 posted by venkat

  இப்படி நமது பாரத தேசத்தை சூரையாடியவர்களுக்கு, இன்றளவும் பாகிஸ்தான் என்ற நாட்டை, நம் நாட்டிலிருந்து பிரித்து ஏற்படுத்தியிருக்கிறோம், இன்னும் காஷ்மீரத்தை எதிர்ப்பார்கிறார்களே, இதற்கு நமது அரசாங்கமும் சரியான சாட்டையடி கொடுக்காமல், மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியில் இருக்கிறார்களே ஏன்? வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ? ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா? இந்தியாவை தாயகமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த நன்றி கூட கிடையாதா?
  அழித்த கோவிலகளை எந்த முஸ்லீமால் கட்டித் தர முடியும்? பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு? டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா? இதைக் கண்டு வாளாவிருத்தலே தப்பு. அதை ஆதரிப்பது அதைவிட கோழைத்தனம். தேச துரோகம்.

 • Comment Link venkat Monday, 27 October 2014 05:23 posted by venkat

  இப்படி நமது பாரத தேசத்தை சூரையாடியவர்களுக்கு, இன்றளவும் பாகிஸ்தான் என்ற நாட்டை, நம் நாட்டிலிருந்து பிரித்து ஏற்படுத்தியிருக்கிறோம், இன்னும் காஷ்மீரத்தை எதிர்ப்பார்கிறார்களே, இதற்கு நமது அரசாங்கமும் சரியான சாட்டையடி கொடுக்காமல், மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியில் இருக்கிறார்களே ஏன்? வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ? ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா? இந்தியாவை தாயகமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த நன்றி கூட கிடையாதா?
  அழித்த கோவிலகளை எந்த முஸ்லீமால் கட்டித் தர முடியும்? பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு? டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா? இதைக் கண்டு வாளாவிருத்தலே தப்பு. அதை ஆதரிப்பது அதைவிட கோழைத்தனம். தேச துரோகம்.

 • Comment Link venkat Monday, 27 October 2014 05:22 posted by venkat

  இப்படி நமது பாரத தேசத்தை சூரையாடியவர்களுக்கு, இன்றளவும் பாகிஸ்தான் என்ற நாட்டை, நம் நாட்டிலிருந்து பிரித்து ஏற்படுத்தியிருக்கிறோம், இன்னும் காஷ்மீரத்தை எதிர்ப்பார்கிறார்களே, இதற்கு நமது அரசாங்கமும் சரியான சாட்டையடி கொடுக்காமல், மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியில் இருக்கிறார்களே ஏன்? வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ? ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா? இந்தியாவை தாயகமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த நன்றி கூட கிடையாதா?
  அழித்த கோவிலகளை எந்த முஸ்லீமால் கட்டித் தர முடியும்? பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு? டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா? இதைக் கண்டு வாளாவிருத்தலே தப்பு. அதை ஆதரிப்பது அதைவிட கோழைத்தனம். தேச துரோகம்.

Leave a comment