×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்
வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 2

அரேபியாவிலும் ஹிந்துஸ்தானத்திலும் சில செவிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் திறந்திருந்தன. ஏன் என்று ஆராயப் போந்தால் ஹிந்துக்களும் இதில் மிக முக்கியக் காரணம் ஆகின்றனர். எப்படி?

 

துருக்கிய ஓட்டாமன் சாம்ராஜ்ஜியம் வீழத் துவங்கிய பிறகு மேற்கத்திய கிறிஸ்தவ ஆதிக்கம் இஸ்லாமியப் பகுதிகளில், குறிப்பாக அரேபியாவில், அதிகரித்தது. இஸ்லாமின் ஆதிகாலத்துக் கோட்பாடுகள் நலியத் துவங்கின. அந்தக் காலகட்டத்தில் சவூதி அரேபியாவின் நஜத் பகுதியில் பிறந்த முகமது இப்ன் அப்துல்வஹாப் என்பவர் துவக்கி வைத்த இஸ்லாமின் பழமைக்குப் புத்துயிரூட்டும் கோட்பாடு இது. வஹாப் தனது முடிவுகள் கருத்துக்கள் குறித்து பல்வேறு தரப்பினருடன் அமைதியாக விவாதித்துப் பார்த்தார். இறுதியில் உள்ளூர் மன்னர் உத்மன் இப்ன் மு அம்மார் என்பவரது உதவியுடன் தமது கருத்துக்களை நிறுவினார். இவர் முஸ்லிம்களின் பரவலான பழக்க வழக்கங்களை இஸ்லாமுக்கு எதிரானது புதிய கண்டுபிடிப்புகள் என்ற அடிப்படையில் அகற்றும்படி சொன்னார். வஹாபின் கருத்துக்கள் இஸ்லாமின் ஆதிக்கமிக்க கருத்துக்களாக சவூதி அரேபியாவில் திகழ்ந்தன. இந்த வஹாபிய முறை தவ்ஹீத் எனப்படும் சரியான இஸ்லாமிய மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதாக அறிவித்துக் கொண்டது. அல் தய்யிமியாவின் சிந்தனைகள் வஹாபை மிகவும் பாதித்தன. ஹதிஸ் மற்றும் குரான் தவிர பிற சட்டதிட்டங்களையும் பிற்கால மனிதர்களின் கருத்துருவாக்கத்தையும் இவர் நிராகரித்தார். தனித்தன்மை கொண்ட ஏக இறைவன் என்ற கோட்பாட்டை இவர் பின்பற்றினார். அதையே கற்பித்தார்.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

வஹாபி இஸ்லாம் பாரதத்தை மட்டுமல்ல உலகையே வளைக்கிறது. பிற மதங்களையும் கலாசாரங்களையும் மறுத்து அவை சார்ந்தோரை ஒன்று இஸ்லாமுக்கு மாறச் செய்ய முனைகிறது அல்லது கொல்கிறது.  வஹாபிசம் என்று ஆங்கிலத்திலும் வஹ்ஹாபிய்யஹ் என்று அரபு மொழியிலும் அழைக்கப்படும் இந்த கொடூரம் குறித்து சற்றே விரிவாகப் பார்க்கலாம். இதன் தோற்றுவாய் குறித்தும் வளர்ச்சி குறித்தும் பார்ப்போம். எதிர்காலம் குறித்தும் அலசுவோம். இதன் கொடூரப்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் எதிர்த்து நின்று நம் கலாசாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் என்னென்ன செய்யவேண்டும் என்றும் ஆராய்வோம்.