×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
தமிழ்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு

தமிழ்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு

ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியம்

ஹிந்து மத விஷயங்களை மட்டுமே கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கும் திராவிட இனவெறியாளர்களும், நாத்திகர்களும், தங்களை முற்போக்காளர்கள் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், ஹிந்துக்களிலேயே ஒரு சிறு பிரிவினரும் ஆடைகள் கட்டுப்பாட்டிற்கு எதிராக பேசுவது அவர்களது அறியாமையையும் அகம்பாவத்தையும் தான் காட்டுவதாக இருக்கின்றது.

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப் பாடகர்கள் (நூல் விமர்சனம்)

இந்நூலை தமிழகத்தில் அனைவரும் படித்து இன்புற வேண்டும்; நம் இசைப்பாடகர்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பாடகரைப் பற்றியும், ஒவ்வொரு நூலையும் நீங்கள் தேடியலைய வேண்டாம். அனைவர் பற்றியும் அழகாகத் தொகுத்து ஒரே நூலாகத் தந்துள்ளார் பெரியவர் திரு.பாரத்வாஜ் அவர்கள். அவருடைய இப்பணி இசைப்பணி, இறைப்பணி, இன்பம் கொள்ள வைக்கும் ஈகைப்பணி என்றும் கூறலாம். 

கம்பன் என்றொரு மானிடன் (நூல் வெளியீட்டு விழா மற்றும் நூல் விமரிசனம்)

பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்களின் “கம்பன் என்றொரு மானிடன்” என்ற நூலும் அவர்தம் பண்புக்கு உரைகல்லாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. இந்நூலில் பாரதியின் வாக்கினைக் கம்பன் கண்ட மானுடவியல் மூலம் அவர் எடுத்துக்கூறும் பாங்கும், விளக்கும் விதமும் அருமை. கம்பனைப் பற்றி எத்துணையோ ஆசிரியர்களும் தமிழறிந்த சான்றோரும் தத்தம் நோக்கில் விரிவுரை ஆற்றியுள்ளனர்; ஆய்வு நூல்கள் எழுதியுள்ளனர். அவர்களின் வரிசையில் வந்த சாமி தியாகராசன் அவர்களும் தம் நூலில் கம்பனைப் பற்றி ஆய்ந்து கூறியுள்ளார். ஆனால் “கம்பன் என்றொரு மானிடன்” என்ற பாரதியாரின் வாக்கினை தன்னுடைய நூலுக்குத் தலைப்பாக அவர் வைத்து நாம் மறக்க இயலாதபடி நூலை அமைத்துள்ளார்.

 

குறள் கற்போம்! குறையின்றி வாழ்வோம்!

இளைய சமுதாயத்தினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் பயனளிக்கும் விதமாக, ”குறள் கற்போம்; குறையின்றி வாழ்வோம்” என்கிற தலைப்பின் கீழ், தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களின் தொடர் சொற்பொழிவை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்து வழங்குவதில் பெருமை அடைகிறது.

தேவ பூமியில் தெய்வீக நதிக்கரையில் தெய்வப்புலவர்

திருவள்ளுவர் கல்திருமேனி உருவாகி நிறைவடைந்த நிலையில், அதை உத்தர்கண்ட் மாநில பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்களிடம் ஒப்படைக்கும் விழா சென்னையில் மிகவும் விமரிசையாக நடந்தது. 27.08.2015 அன்று சென்னை தி.நகர் வாணிமகாலில் திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பாக நடைபெற்ற விழாவில், விழாவிற்குத் தலைமையேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வெ.இராமசுப்பிரமணியன் அவர்கள், மஹாபலிபுரத்தில் உருவாகி வரும் கல்திருமேனியைப் போன்ற சிறிய பிரதி ஒன்றை தருண் விஜய் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.  

ஒவ்வொரு துகளும் ஒரு மஹாமேரு - 3

இந்த இந்தியத் திருக்கண்டத்தில், எங்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு, மணல் கொள்ளை பற்றி அப்படியென்ன கேள்வி எழுப்பப் போகிறாய்? என மொணமொணப்பது காதில் விழுகிறது.


நாம் பேசிக்கொண்டிருந்த திருச்சியில், ஸ்ரீரங்கத்தின் கோயில் கட்டுமானம் மற்றும் அக்ரஹாரத்தின் வடிவமைப்பையே ஒர் உதாரணமாகக் கொள்வோம்.

சித்திரைத் திருவிழா ஆசியுரை

சித்திரைத் திருவிழா ஆசியுரை - காசி திருமடம் திருபனந்தாள் இணை அதிபர் தவத்திரு. சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள்

 

 

வரலாற்றுப் புகழ்பெற்ற சித்திரை போராட்டம் - திராவிட வாதத்திற்கு சவுக்கடி!

சித்திரையே புத்தாண்டு என்பதற்கான ஆதரங்கள். தை..தை என்று குதித்தவர்களை தலை தெறிக்க ஓடவிட்ட கதை.. அறிவியலும், ஆன்மீகமும், அரசியலும் கலந்த சுவாரசியமான பேச்சு

 

ஒவ்வொரு துகளும் ஒரு மஹாமேரு - 2

திருச்சி - கரூர் பிரதான சாலை வழியாக திருச்சியின் வெளிப்புறம் நகர்வதற்கோ, அல்லது திருச்சிக்குள் நுழைவதற்கோ பயணித்தால், இரு புறமும் தென்னை வளாகங்களுடன், ஒருபுறம் காவிரியின் உயர்ந்த கரை மேட்டுக்கு அப்பால் முழுமையாக கண்ணுக்குள் ஒளிக்க முடியாத மணல்விரிப்பும், தண்ணீருமாக, மறுபுறம் காவிரிக்கு இணையான ரயில் தண்டவாளங்களுமாக ஒரு ரம்மியமான சூழலில் நகர்வோம்.

 

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் சமயம் சைவசமயமே

சிலப்பதிகாரத்தை எழுதிய வித்தகப் புலமையாளர் இளங்கோவடிகள் என்றும் சிலர் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர் சமண சமயத்தவர் எனக் கூறுவதற்கு நூலில் எந்த ஆதாரமும இல்லை. பிறகு ஏன் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்றால், அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் சொல்லிச் சென்ற கருத்தை ஏற்று அவ்வாறு சொல்லிவருகின்றனர்.