×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஏன் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு?

Monday, 29 July 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

Read 1604 times
Rate this item
(0 votes)
Last modified on Sunday, 19 October 2014 14:33

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

2 comments

  • Comment Link ராஜேஷ் ராவ் Monday, 28 April 2014 14:26 posted by ராஜேஷ் ராவ்

    ”திண்ணிலை மறுப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்ற நக்கீரனின் சங்க இலக்கிய பாடலான நெடுநல் வாடை, மேட ராசியிலிருந்து இயக்கம் தொடங்குவதை குறிப்பிட்டிருப்பது சங்க இலக்கியங்களை “ஆழமாக” படித்தவர்களுக்குத் தெரியும். இன்று இருக்கும் தமிழ் நூல்களிலேயே தொன்மையானது தொல்காப்பியம். இந்த தொல்காப்பியம் ஐந்து நிலங்களின் கடவுளாக சேயோன் என்ற முருகனையும், மாயோன் என்ற கண்ணனையும், இந்திரனையும், வருணனையும், கொற்றவையையும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்திற்கு முன் ஏதாவது ஒரு நூல் இருந்து அதில் வேறு தெய்வங்கள் குறிப்பிடப்பட்டு கைபர், போலன் கணவாய் வழியாக தொல்காப்பியர் வந்தார் அல்லது கப்பலில் சிக்கித்தவிக்கும் போது நீங்கள் கடலில் சென்று மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து குடியமர்த்தும் போது இந்த தெய்வங்களையெல்லாம் புகுத்தினார் என்று ஏதாவது சான்றுகள் இருக்கிறதா?

    இராஜராஜ சோழன், கொங்கு பாண்டியர், காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் எழுதியவர்கள் தமிழர்கள் இல்லையா? அடிப்படை தமிழ் இலக்கியங்களும், பண்பாடும் தெரியாமல் தமிழுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் இந்த ஆரிய எதிர்ப்பு சித்தாந்தத்தின் முன்னோடியான பாரதிதாசன் இளைஞர் இலக்கியம் என்ற நூலில் சித்திரையை முதலாக கொண்டு மாதங்களை ஏன் வரிசை படித்தினார் என்ற பகுத்தறிவு கேள்வியை கேட்டு விட்டு வாருங்கள். பால. கௌதமன் ஆராய்ச்சி செய்யவேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டாம். அவரது வாதத்திற்கு சான்றுகளுடன் பதிலளிக்க நீங்கள் தயாரா?

    பாரதியை மேற்கோள் காட்டும் நீங்கள் பாரதியையும் படிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன், பாரதி பல இடங்களில் நான்மறைகளை குறிப்பிட்டுள்ளது பாரதியை படித்தவர்களுக்கு தெரியும். இந்த சித்திரை போராட்டம் என்ன? இதன் புகழ் என்ன? திராவிட ஆரிய இன வாதம் என்ன? தமிழ் பண்பாடு என்ன? என்பதை உங்களுக்கு தமிழின் மீது ஆர்வம் இருந்து மழைக்காவது பாடசாலையில் ஒதுங்கி தமிழ் கேட்டிருந்தால் இந்த வலை தளத்தில் இடம் பெற்றிருக்கும் கீழ்கண்ட கட்டுரைகள் / வீடியோ பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

    ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்
    ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்
    பொங்கலா, புத்தாண்டா - கருணாநிதியே பதில் சொல்!
    கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது
    வரலாற்று ஆசிரியரான கோயாபெல்ஸ்
    முடியலடா சாமி....
    எது புத்தாண்டு- சித்திரையா? தையா? - சன் டிவி விவாதம் (வீடியோ)
    பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ)
    தமிழ்ப் புத்தாண்டு மக்கள் டிவி கலந்துரையாடல் (வீடியோ)

  • Comment Link சந்திர மௌலீஸ்வரன்.ம.கி. Thursday, 17 April 2014 21:16 posted by சந்திர மௌலீஸ்வரன்.ம.கி.

    கௌதமன்--உங்களுடைய "சித்திரையில் ஏன் தமிழ்ப் புத்தாண்டு" கட்டுரை அதன் முன்னுரை முகப்புரை எழுதிய ராமகோபலானைத் தவிர வேறு யாரையுமே ஈர்க்கவில்லையா என்ன? இதிலிருந்தே உங்களுடையது "கட்டுரை" தான் என்பது தெரிகிறது! அதே சங்க இலக்கியங்களில் நீங்கள் இன்னும் "ஆழமாகவும் உண்மையாகவும்" இந்து முன்னணியைத் திருப்திப் படுத்தும் நோக்கம் இல்லாமலும் ஆய்வு செய்தால் பல உண்மைகள் விளங்கும். ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் பிணைக்கும் "உங்களது" தாகம் இன்னும் தீரவில்லை இல்லையா? அதே போல் ஆரியக் கடவுளர்களைத் தமிழர்களின் இயற்கைத் தேவதைகளுடன் மாமன் மாமி உறவுகளைக் காட்டிப் பிணைக்கும் தாகமும் தீரவில்லை "உங்களுக்கு". அதனால்தான் பாரதியின் "வேதம் நிறைந்த தமிழ்நாடு ----" என்ற வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவன் சொன்ன "வேதம்" வசந்தத்தின் யஜூர் எனச் சொல்லும் அளவிற்குச் சென்றுள்ளீர்கள்! பாரதி இனம் மொழி மதம் கடந்த பிறவி ஞானி என்பது உங்களுக்குத் தெரியாது என்பது தெரியும்! "உன்னை அண்டியோ தமிழை ஓதினோம்?" எனும் கருத்திற்கு இயைய வாழ்ந்தவன். வயிறு வளர்க்க எழுதவில்லை அவன்! பன்னிரண்டு மொழிகளைக் "கற்று" உணர்ந்து அதன் பின்தான் அவன் "யாமறிந்த மொழிகளிலே-----" என எழுதினான்! ஒரே ஒரு மொழியில்கூட ஒரே ஒரு பாடலை மனப் பாடம் செய்து கொண்டு மேடைகளில் "முழங்கி"த் தமிழ் "வரட்சி" செய்யும் இன்றைய கவிகள் அல்ல அவன்!
    இதைக் கவனியுங்கள் ---"இன்னும் நகர்ந்தவாறு இருக்கும் குமரி, வடக்கில் நகர்ந்து வந்து ஆசியத்துடன் (ஈரோப்பியத்துடன்) மோதியதில் இமயம் உயர அதில் கைபர் பிளக்க அதன் வழி தெற்கில் இறங்கிய ஈரோப்பியர் கால்வழியர் (ஆரியர்?) குமரியின் இனத்தாருடைய (திராவிடர்?) ஒருமித்த சென்னிலை வளர்நிலை கண்டு மாண்பு கண்டு பல்வகைச் செல்வம் கண்டு அவருடன் இழைய விரும்பி முதலில் தம் கடவுளரைத் தமிழரின் இயற்கைத் தேவதையருடன் உறவாக்கினர்" இது எனது வரிகள் அல்ல! தமிழகத்தில் தமிழைச் சொல்லி வயிறு வளார்க்கும் யாருடையதும் அல்ல! தமிழுடன் எவ்வாறாவது இணைய அலையும் யாருடையதும் அல்ல! முடிந்தால் கண்டறியுங்கள்! முடியாவிட்டால் என்னுடையது எனக் கொள்ளுங்கள்! ஆனால் தயவு செய்து ஒரு அரைகுறை ஆராய்ச்சி, ஆராய்ச்சியே தேவை இல்லாத இந்த "தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள்?" என்பதில் வேண்டாம்! பக்கத்து வீட்டில் நடப்பதை ஆய்ந்தபடியே இருந்து "உங்களுடைய ஸம்ஸ்க்ருதம்" தேய்வதை ( கோபத்தால் கொதிக்க வேண்டாம்!!) நீங்கள் பார்ப்பதே இல்லை! நாபிக் கமலத்தில் இருந்து எழுந்து ஒரு காம்பீர்யத்துடன் அதிரும் ஒரு நல்ல ஸம்ஸ்க்ருத மொழியை மற்றவற்றுடன் கலப்புச் செய்வதை விடுத்து அதைத் தூய்மையான நிலையில் பயன் படுத்துங்கள்! ஏனென்றால் பாரதத்தில் தமிழகத்தில் "கலப்பினம்" எதுவுமே காலூன்ற முடியாது!
    அது சரி, இந்த "வரலாற்றுப் புகழ் பெற்ற சித்திரைப் போராட்டம்" (நீங்கள் எழுதிய சொந்த வரலாறா?) எங்கே நடந்தது அல்லது நடக்கிறது? உங்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா?

Leave a comment