×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வரலாற்றுப் புகழ்பெற்ற சித்திரை போராட்டம் - திராவிட வாதத்திற்கு சவுக்கடி!

Monday, 14 April 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

சித்திரையே புத்தாண்டு என்பதற்கான ஆதரங்கள். தை..தை என்று குதித்தவர்களை தலை தெறிக்க ஓடவிட்ட கதை.. அறிவியலும், ஆன்மீகமும், அரசியலும் கலந்த சுவாரசியமான பேச்சு

 

 

 

Read 2862 times
Rate this item
(1 Vote)
Last modified on Monday, 16 February 2015 07:34

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

3 comments

 • Comment Link Rajesh Rao Monday, 28 April 2014 14:11 posted by Rajesh Rao

  ஏன் சித்திரையில் தமிழ்புத்தாண்டு என்ற நூலில் விமர்சனமாக ஒரு திராவிட குஞ்சு தன் புத்திசாலிதனத்தை இந்தப் பேச்சுடன் இணைத்து வசைமாரி பொழிந்திருந்தது.ஆகவே, இந்தப் பேச்சு இடம் பெற்ற பகுதியிலும் எனது மறுமொழியை பதிவு செய்துள்ளேன்.

  ”திண்ணிலை மறுப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்ற நக்கீரனின் சங்க இலக்கிய பாடலான நெடுநல் வாடை, மேட ராசியிலிருந்து இயக்கம் தொடங்குவதை குறிப்பிட்டிருப்பது சங்க இலக்கியங்களை “ஆழமாக” படித்தவர்களுக்குத் தெரியும். இன்று இருக்கும் தமிழ் நூல்களிலேயே தொன்மையானது தொல்காப்பியம். இந்த தொல்காப்பியம் ஐந்து நிலங்களின் கடவுளாக சேயோன் என்ற முருகனையும், மாயோன் என்ற கண்ணனையும், இந்திரனையும், வருணனையும், கொற்றவையையும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்திற்கு முன் ஏதாவது ஒரு நூல் இருந்து அதில் வேறு தெய்வங்கள் குறிப்பிடப்பட்டு கைபர், போலன் கணவாய் வழியாக தொல்காப்பியர் வந்தார் அல்லது கப்பலில் சிக்கித்தவிக்கும் போது நீங்கள் கடலில் சென்று மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து குடியமர்த்தும் போது இந்த தெய்வங்களையெல்லாம் புகுத்தினார் என்று ஏதாவது சான்றுகள் இருக்கிறதா?

  இராஜராஜ சோழன், கொங்கு பாண்டியர், காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் எழுதியவர்கள் தமிழர்கள் இல்லையா? அடிப்படை தமிழ் இலக்கியங்களும், பண்பாடும் தெரியாமல் தமிழுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் இந்த ஆரிய எதிர்ப்பு சித்தாந்தத்தின் முன்னோடியான பாரதிதாசன் இளைஞர் இலக்கியம் என்ற நூலில் சித்திரையை முதலாக கொண்டு மாதங்களை ஏன் வரிசை படித்தினார் என்ற பகுத்தறிவு கேள்வியை கேட்டு விட்டு வாருங்கள். பால. கௌதமன் ஆராய்ச்சி செய்யவேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டாம். அவரது வாதத்திற்கு சான்றுகளுடன் பதிலளிக்க நீங்கள் தயாரா?

  பாரதியை மேற்கோள் காட்டும் நீங்கள் பாரதியையும் படிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன், பாரதி பல இடங்களில் நான்மறைகளை குறிப்பிட்டுள்ளது பாரதியை படித்தவர்களுக்கு தெரியும். இந்த சித்திரை போராட்டம் என்ன? இதன் புகழ் என்ன? திராவிட ஆரிய இன வாதம் என்ன? தமிழ் பண்பாடு என்ன? என்பதை உங்களுக்கு தமிழின் மீது ஆர்வம் இருந்து மழைக்காவது பாடசாலையில் ஒதுங்கி தமிழ் கேட்டிருந்தால் இந்த வலை தளத்தில் இடம் பெற்றிருக்கும் கீழ்கண்ட கட்டுரைகள் / வீடியோ பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

  ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்
  ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்
  பொங்கலா, புத்தாண்டா - கருணாநிதியே பதில் சொல்!
  கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது
  வரலாற்று ஆசிரியரான கோயாபெல்ஸ்
  முடியலடா சாமி....
  எது புத்தாண்டு- சித்திரையா? தையா? - சன் டிவி விவாதம் (வீடியோ)
  பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ)
  தமிழ்ப் புத்தாண்டு மக்கள் டிவி கலந்துரையாடல் (வீடியோ)

 • Comment Link மனோகரன் தங்கவேலு Wednesday, 16 April 2014 14:43 posted by மனோகரன் தங்கவேலு

  நீங்கள் ஒன்பது அட்டவணை இருப்பதாக சொன்னீர்கள். சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கான ஆதாரத்தைத் தான் தேடுகிறோம். எந்த தமிழனும் தை மாதத்தில் தான் புத்தாண்டு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டான். கருணாநிதியும் உளுத்தம் பருப்புகள் வேண்டுமானால் கும்மி அடிக்கலாம்.
  எங்களுக்கு ஆதாரங்கள் தான் தேவை. தை இல்லை என்பதற்கு எங்கள் வாய் வார்த்தைக்கே போதும்.
  எங்களுக்கு வேண்டியது ஆதாரங்கள். கருணாவுக்கு எதிரான பேச்சுக்கள் இல்லை.
  ஆதாரங்கள் இருப்பதைச் சொல்லும் நீங்கள் அந்த ஆதாரங்களை அனுப்பினால் இந்த திராவிடக் கூட்டத்துடன் தெம்புடன் சண்டை போடுவேன்.
  இந்த முகப் புத்தகத்தில் சில வருடங்களாகவே இங்க பலருக்குள் பேதங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கருத்து இது.
  இன்று செய்தித் தாள்களை விடவும் மிகப் பெரிய ஊடகமாகத் திகழ்வது இந்த சமூக வளை தளங்கள் மட்டுமே.

 • Comment Link nandhitha Wednesday, 16 April 2014 14:29 posted by nandhitha

  வணக்கம்
  அருமையான சொற்பொழிவு. மிக்க நன்றி. மற்றவர்களின் உரையையும் பதிவிட்டால் நல்லது
  அன்புடன்
  நந்திதா

Leave a comment