×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஒவ்வொரு துகளும் ஒரு மேரு மலை

Wednesday, 12 March 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

eastjavamap

 

இன்றைக்கும் அது ஒரு கனவு போலவே இருக்கிறது.

 

ராஜாவுக்காக வந்த காமக்கிழத்தி காமக்களியாட்டத்தின் இடையே தனது நிஜமான பேய் ஸ்வரூபத்தினை அவ்வப்போது காட்டியபடி, காமத்தில் வீழ்த்துவதாகப் படித்த சிறுவயதுக் கதைகளை நினைவுக்கு கொணர்கிறது, அந்தக் கிழக்கு ஜாவகத்தின் கிராம வீட்டின்


முன்னிருந்து பார்க்கும் குணுங் ப்ரோமோவும் குணுங் சுமேருவும்.

 

MOUNT MERU  MOUNT BROMOR FROM MOUNT BATOK

 


என்ன, புதிதாக எதைச்சொல்கிறாய் என்கிறீர்களா?


இன்றைக்கும் பிரமிக்க வைக்கும் எரிக்குழம்பு லாவாவினை எப்போதும் கக்கத் தயாராக நிற்கும் பிரம்ம மலையையும், மேரு மலையையும் தான் இந்தோனேசிய மொழியில் இங்ஙனம் அழைக்கிறார்கள். 2010ம் ஆண்டு நடுவாந்திரத்தில் கூட தன் அக்கினித்திராவகத்தினைக் கக்கியிருக்கிறது இந்த மேரு மலை.


இந்த மலைகளைச்சுற்றிலும், மணல் கடல் (லாவூத் பாசீர்) என்கிற அளவுக்கு, விரிந்த சன்னமான மணல் பரப்பு மட்டுமே தெரிகிறது. மலைகளிலிருந்து கிளம்பும் எரிமலைக்குழம்பு, பக்கம் பக்கமாக வகிடு எடுத்த கிழவன் தலை மாதிரி வழிந்து, இந்த மணல் கடலை கந்தக மற்றும் கனிம வளம் கொண்ட மண்ணால் நிரப்புகிறது.


இந்த மலைகளுக்கிடையே மலையேற்றம் போக நினைப்பவர்கள், இந்த மணல் கடலைத்தாண்டித்தான் போக வேண்டும். மணல் கடல் பத்து கிலோ மீட்டர் அளவுக்கு; அதைத்தாண்டி முப்பது கிராமங்களில் பூர்வீக இந்துக்குடிகள்.


என்னடா… எரிமலைக்கருகாமையிலான கிராமத்தில் அமர்ந்த வண்ணம், பயமின்றி, எரிச்சலின்றி, இயல்பாக கதைக்க முடியுமா என்றால், கிராமங்கள் எல்லாம், பச்சென்று வயலும், தோப்புமாக இருக்கிறது. எரிமலை அத்தனை மண்வளத்தினை கொடுத்திருக்கிறது.

 

TENGGAR-WOMAN-WHO-HOSTED-ME


வேர் பலா ஒன்றை அறுத்து, தேன் தோய்க்காமலேயே தித்திப்பில் திணறும் வாயில், மேன்மேலும், தின்ன அடைத்த வண்ணம், இடையே, பலாச்சுளை ஜீரணிக்க, இன்னும் திகட்டும் செடி அன்னாசிப்பழமும் எனக்கு உபசரித்த வண்ணம், அந்த இந்து பூர்வீக குடியின் பேச்சிலிருந்த மண்ணின் மைந்தர் (என்னோடு பேசியவர் ஒரு பெண்) என்ற உவகை எனக்கு பழங்களைக் காட்டிலும் திகட்டியது.


எரிமலைக்கு அருகாமையில் வயலும், தோட்டமுமாக வளருமா என்றால், எரிமலையிலிருந்து, குளிர் குழம்பும், கொதி குழம்புமாகத்தான் வரும். ஆனால், சுற்றுப்புற சீதோஷண நிலை என்ன தெரியுமா… பகலிலேயே பூஜ்ஜியம் டிகிரி. இரவிலோ, அதற்கும் கீழே…


இப்போது புரிகிறதா… ஏன் ராஜாவின் காமக்கிழத்தி கதை கதைத்தேன் என்று…


நான் ஒன்றும் பழைய கதையைப்பேச வரவில்லை.. இன்றைக்கும் இந்த இந்துப்பூர்வீகக் குடிகள் இந்த இரு மலைகளையும் வழிபடுகிறார்கள்… அதற்காக இந்த மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தில் போதோன் கோயில் என்ற பெயரில் ஒரு கோயிலும் உண்டு.

 

ROAD-ACROSS-SEA-OF-SAND


அதிலிருந்து வரும் ஒவ்வொரு மணல் துகளும், ஒரு மகாமேரு என்கிற ரீதியில். அவர்களுடைய நம்பிக்கை – எப்படி, இந்தியாவில், கைலாயம் என்றால், கைதொழுவோமோ… அப்படி..


இந்த இந்துக்களுக்கு மட்டுமல்ல… புத்த மதத்தினரும் அங்ஙனமே கருதுகிறார்கள்.


அறிவியல் ரீதியாகப்பார்த்தால், பூமியின் அடியாழத்தில், அச்சுத்தட்டுகள், ஒன்றின் மேல் ஒன்றாக நகர்த்த எத்தனிப்பில், வெளியேறும் மண் திராவகம் தான் – இந்த எரிமலைக்குழம்புகள். ஆனால், இந்த மக்கள், பிரம்மாண்ட சக்தியின் அவதானமாக இந்த மலைகளின் செயலைக் கருதுகிறார்கள்.


ஆமாம்!.. இன்றைய இந்தோனேசியாவின் பாலித்தீவில்தானே  இந்துக்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.. என்று முணுமுணுக்கிறீர்களா…


மூத்த இந்துக்குடிகள், கஜமடா அரசர் முஸ்லிம் மதமாற்றத்திற்கு தலையசைத்த போது, அவருடைய வம்சமும் குடிகளும் மதம் மாறினர். அண்டை நாட்டு மகபஜித் அரசர் ப்ரவிஜயர் வழித்தோன்றல்களுக்கு இந்த மத மாற்றம் பிடிக்கவில்லை. வழித்தோன்றல்களின் அரசி வேறு யாரும் இல்லை. மகபஜித் அரசரின் ஒரே பெண் ரோரோ அந்தெங், மற்றும் அவருடைய கணவர் ஜக சேகரும் தான். ஆனால், கஜமடா நாட்டிலிருந்து கொடுத்த தொல்லைகளினால், அவர்கள் புலம் பெயர்ந்து, பிரம்ம மலையடிவாரத்தை அடைந்து இந்த முப்பது கிராமங்களை ஒரு நாடாக உருவாக்கினார்கள். அவர்களின் நாட்டிற்கு தெங்கர் நாடு எனவும் பெயரிட்டனர். முகலாய மத மாற்றத்தொல்லைகளுக்கு ஆட்படாது, இந்துக்களாகவே வாழ புலம் பெயர்ந்த கதை இது.


(இவர்களுக்குக் குழந்தைகள் இல்லையாதலில், பிரம்ம மலையிடம் வேண்டிக்கொண்டதில், இருபத்தி ஐந்து குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் கடைசிக் குழந்தையை பிரம்ம மலை தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லியும், செய்யாததால், எரிவாயிலிருந்து புறப்பட்ட ஜ்வாலை, அந்த மகனை விழுங்கியதாகவும் செவிவழிச் செய்திகள் சொல்லுகின்றன.) இதனை நிரூபிக்கின்ற விதத்தில், இன்றைக்கும், தெங்கர்களின் நாள்காட்டியின், கடைசி மாதத்தில் இந்த மலைகளுக்கு விழா எடுப்பது நடைபெறுகிறது.)


சரி! அது போகட்டும்; இன்றைய இந்தோனேசியா, உலகில் அறிவிக்கப்பட்ட பெருவாரியான முதன்மை இஸ்லாமிய நாடாகக் கருதப்படும் வேளையில், இவர்களின் இந்த நம்பிக்கைக்கு என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா;


இவர்களின் இந்த இயற்கையோடு இயைந்த வாழ்வு, சுற்றுச்சூழலுக்கு நன்மையானது என்பதை உணர்ந்து, இந்த மலைகளும், ”மணல் கடல்” என்ற பத்து கிலோமீட்டர் சுற்றமும், முப்பது கிராமங்களும் – ப்ரோமோ தெங்கர் சுமேரு பூங்கா வளாகம் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றது.


நான் அங்கே தங்கியிருக்கும் வேளையில், அந்த நம்பிக்கை எத்தகைய அரணாக அமைந்திருக்கிறது என்பதைக் காண முடிந்தது.


அந்த தெங்கர் மூதாட்டியின் விருந்தாளியாக அந்த மாலையில் அவள் வீட்டருகே அமர்ந்த போது, நான் விடைபெறுவதற்கு முன் என்னுள் உறுத்தலாயிருந்த இருந்த இந்தக் கேள்வியைக் கேட்டேன்.


ஆமாம்! கொதி குழம்பாக நாலாப்புறமும், மண் சாம்பல், சாபம் போலவும் அவள் சொன்ன பதில் திகைக்க வைத்தாலும், என்னை ஒப்புதலுடன் தலையசைக்க வைத்தது.


”அவை இரண்டும், எங்கள் தாய் போல… சக்திமயமானவர்கள்… வேகமிருந்தாலும், நாங்கள் தவறு செய்தாலொழிய, தாயின் கோபம் எங்களைக் கொல்லாது… நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு அகலுவதில்லை.”


என்ன, கதை சொல்லி எதை விளக்க இந்த முகாந்திரம் என்கிறீர்களா…


இவர்களின் நம்பிக்கை, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆதாரமாய் வாழ்ந்த சாயி பாபாவின் உபதேச மொழிகளான பொறுமை மற்றும் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு. மேம்பட்ட மனித வாழ்க்கைக்கு உதாரணமாக இருப்பவர்கள் மட்டுமல்ல… நம் இந்தியத் திரு நாட்டில், மூட நம்பிக்கை என சித்தரிக்கப்பட்டதால், சீரழிக்கப்படும் விஷயங்களிலிருந்து விடுபட, விடை தருபவர்களும் தான்.


எப்படி என்கிறீர்களா… தொடருங்கள் என்னோடு…


(இந்த இரு மலைகளின் ஆக்ரோஷத்தினை காண – www.youtube.com  வலைதளத்தினைத் சுட்டி, gunung bromo & semeru live - search எனப்பாருங்கள்.

Read 3217 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 18:42

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment