×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

குறள் கற்போம்! குறையின்றி வாழ்வோம்!

Saturday, 24 October 2015 09:12 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் நம் வாழ்வியல் நெறிக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால் அவர் சொல்லாத விஷயங்களே இல்லை எனலாம்.

கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது, கசடறக் கல்வி கற்க வேண்டும்; பின்பு கற்ற கல்வியின் படி நிற்க வேண்டும் என்று கூறியவர் திருவள்ளுவர். அதாவது நாம் கற்றுணர்ந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் நமது வாழ்க்கையில் கொண்டுவந்து அவற்றின் படி நடந்துகொண்டு சிறப்புற வாழவேண்டும் என்றார்.

தமிழ் மொழியின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றான திருக்குறளைக் கற்றுணர்ந்து அது கூறிய வழிகளில் நடந்தால் அறம் நிறைந்த வாழ்க்கையாக நமது வாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆகவே, நம் மக்களுக்கு, குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் பயனளிக்கும் விதமாக, ”குறள் கற்போம்; குறையின்றி வாழ்வோம்” என்கிற தலைப்பின் கீழ், தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களின் தொடர் சொற்பொழிவை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்து வழங்குவதில் பெருமை அடைகிறது.

அனைவரும் குறள் நெறிகளைக் கற்று குறையின்றி வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு இந்தத் தொடர் சொற்பொழிவை வழங்குகிறோம்.

 

Read 798 times
Rate this item
(3 votes)
Last modified on Saturday, 24 October 2015 10:42

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment