×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப் பாடகர்கள் (நூல் விமர்சனம்)

Monday, 08 February 2016 13:25 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப் பாடகர்கள்
(நூல் விமர்சனம்)
 
 
 
பி.ஆர்.கீதா
 
 
 
 
“செயற்கரிய செய்வார் பெரியார் சிறியார்
செயற்கரிய செய்க லாதார்”
 
 
 
 
என்ற வள்ளுவர் வாக்கு ஈண்டு என் மனத்தில் தோன்றியது. அதற்குக் காரணம் என் உள்ளத்தைக் கவர்ந்த ஒரு நூல். அதன் பெருமை என்னால் விரிக்கமுடியுமா என்பதும் ஐயமே! 
 
 
 
 
 
ஆம். “பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைப் பாடகர்கள்” என்ற அற்புத நூலைப் படிக்கும் பேறு எனக்கு வாய்த்தது. இறைவன் திருவருள் கூட்டாமல் எனக்கு இப்பேறு கிட்ட வழியில்லை. இந்நூலைப் படிக்கப் படிக்க நம் இசைப்பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்தேன். அவர்தம் பெருமை அறிந்தேன். குடத்துள் இட்ட விளக்காக இருக்கும் அவர்தம் உள்ள்ப் பாங்கினை, மேன்மையை அறிந்தேன். இவற்றை உள்ளடக்கிய, சிறந்த நூலை அளித்த பெரியவர் திரு.எஸ்.எஸ்.பாரத்வாஜ் அவர்களின் திருப்பணியை எண்ணியெண்ணி மனம் மகிழ்ந்தேன்; மனம் குளிர்ந்தேன்; மனம் நிறைவுற்றேன். இன்னும் நன்றிப் பெருக்கில் அவர்தம் திருவடி பணிகின்றேன். 
 
 
 
 
 
 
S.S.Baradwaj 1
 
 
 
 
 
 
அவர் நுலைத் திறனாய்வு செய்யும் தகுதி எனக்கில்லை; ஆனால் யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என எண்ண எனக்கு உரிமை உள்ளது. இந்நூலை தமிழகத்தில் அனைவரும் படித்து இன்புற வேண்டும்; நம் இசைப்பாடகர்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பாடகரைப் பற்றியும், ஒவ்வொரு நூலையும் நீங்கள் தேடியலைய வேண்டாம். அனைவர் பற்றியும் அழகாகத் தொகுத்து ஒரே நூலாகத் தந்துள்ளார் பெரியவர் திரு.பாரத்வாஜ் அவர்கள். அவருடைய இப்பணி இசைப்பணி, இறைப்பணி, இன்பம் கொள்ள வைக்கும் ஈகைப்பணி என்றும் கூறலாம். 
 
 
 
 
 
எத்தனை பாடுபட்டு அவர் இந்நூலை ஆக்கியுள்ளார் என்பதனை நூலைப் படிக்கும்போதே நாம் தெரிந்துகொள்ளலாம். நமக்கு சில இசைப்பாடகர்கள் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்திருக்கும். சிலரின் பாடல்கள் மட்டுமே தெரிந்திருக்கலாம். ஆனால் அவர்களில் சிலர் கருவில் திருவுடையர்; சிலர் குருவருளினால் பாடகரானவர்; சிலர் இறையருளால் இன்னிசை மழை பொழிந்தவர்; சிலர் அதிசயங்கள் நிகழ்த்தி அன்புநெறி காட்டியவர். இவர்கள் அத்தனை பேரின் மேன்மை, திரு.பாரத்வாஜ் அவர்களின் மூலம் நூலாக வெளிப்படவேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டிருப்பது திண்ணம். அதனால்தான் செயற்கரியதைச் செய்து மேலே சொன்ன திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கின்றார் ஆசிரியர். இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்றால் மிகையில்லை. 
 
 
 
 
 
S.S.Baradwaj 2
 
 
 
 
 
ஆசார்ய இரத்தினங்கள், சைவ இரத்தினங்கள், வைணவ இரத்தினங்கள், சங்கீத இரத்தினங்கள், குரு இரத்தினங்கள், யோக இரத்தினங்கள் என்று அழகாக வகைப்படுத்தி ஒவொரு இரத்தினம் பற்றியும் நமக்கு விளக்கமளிக்கிறார். இந்த இரத்தினங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்தவர்கள் இருக்கலாம். இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லா இரத்தினங்களையும் எல்லாரும் அறிந்திருப்பார்களா என்பது ஐயம் தான். ஆகவே, தமிழரனைவரும், தமிழடியார் அனைவரும், தமிழிசை விற்பன்னர் அனைவரும் இந்நூலைப் படித்தே ஆகவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
 
 
 
 
 
மணிமேகலைப் பிரசுரம் நல்ல புத்தகங்கள் வெளியிடும் நிறுவனம். அந்நிறுவனம் மேன்மேலும் இத்தகு நூல்களை வெளியிட்டுத் தமிழ்நாடும் தமிழரும் நன்னெறி செல்ல உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்நிறுவனத்திற்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். நூலில் ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகளும் அச்சுப் பிழைகளும் இருக்கின்றன. அடுத்து வரும் பதிப்புகளில் அவற்றைக் கவனித்து நீக்க வேண்டும். மற்றபடி, இப்புத்தகம் தமிழர் கையில் தவழவேண்டிய தலையாய புத்தகம் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.  
 
 
 
Read 426 times
Rate this item
(1 Vote)
Last modified on Monday, 08 February 2016 16:51

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link Krishnamurthi Balaji Tuesday, 09 February 2016 07:12 posted by Krishnamurthi Balaji

    அரிய ஒரு நூல்! அருமையான விமர்சனம்! B.R.Geetha அவர்களுக்கு நன்றி. புத்தகத்தைக் கணினி வழி வாங்க வழியுண்டா?

Leave a comment