×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

எது தர்மம்?

Friday, 24 May 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

//தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்//
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே?.....யோசிச்சுப் பாருங்கள்.

 

மேலும் அந்த தர்மவான் சொல்கிறார்
//தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்பதையும் அவர்கள் உணராமல் இருப்பதுதான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது//


இப்படி அந்த தர்மவானை வேதனைப்படுத்திய அதர்மம் என்ன? யார் அந்த தர்மவான்?
குஷ்பு இன்னொரு மணியம்மை - கொந்தளிக்கும் உறவுகள் என்ற தலைப்பில் 21.2.2013 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டர் பத்திரிகை, கருணாநிதி மற்றும் மணியம்மை வேடத்தில் குஷ்புவின் படத்தை போட்டது தர்மவான் கருணாநிதியை 16.2.2013 அன்று வேதனைப்பட வைத்தது.


”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்” என்ற சொற்றொடரை பாரதி பயன்படுத்திய மஹாபாரத தர்மயுத்தத்தின் கதாநாயகன் கண்ணன். இந்தக் கண்ணன் காமாந்தகன் என்று முரசொலியில் கட்டுரை எழுதியவர் நம் தர்மவான். பாரதியோ பார்ப்பனன். இந்த ஆரிய நீதியை சுத்த திராவிட இன அடையாளமான கருணாநிதி பயன்படுத்தலாமா?
அண்ணாயிசம் இருக்க ஆரியம் புகல்வதேன்?
ஆண்- பெண் உறவை பார்க்கும் நம் தர்மம் என்ன?

 

வயதான மஹாத்மா காந்தி, இரண்டு இளம் பெண்களுடன் வருவதை நம் தலைவர் அண்ணா எப்படி ’தர்ம சிந்தனையுடன்’ பார்த்தார்?


இதோ திராவிட நாடு பத்திரிகையில் நம் தலைவர் அண்ணா உதிர்த்த முத்து......
”சுசிலா நையார்கள் சுற்றியிருக்க, கோகில கானங்கள் குயிலிசை பாட காந்தியார் பவனி வருகிறாராம் பவனி!”
காந்தி ஆரியர், அதனால் குயில் இசைக்கிறது...

 

ஆனால் திராவிடம் என்ன சொல்கிறது?
’மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது’ (விடுதலை - தந்தை பெரியார் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17-9-1967)

 

பெரியார் என்றால் ’கவனிப்பு’ . காரணம் அவர் திராவிடர்
காந்தி என்றால் ’சுற்றம்’ குயில் இசை பாட’ . காரணம் இவர் ஆரியர்
கருணாநிதி பின் பற்றுவதோ திராவிடம் ! குஷ்புவையும் ’கவனிப்பு’ என்று எடுத்துக் கொள்ளலாமே !

 

ஏன் தர்மத்தை இழுக்க வேண்டும்?

Read 1184 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 09:56

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment