×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

விஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சியா?

Thursday, 23 May 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம்.

ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர்.

இந்த நாட்டைக் கூறு போட வேண்டுமென்றால் என்னைக் கூறு போடுங்கள் என்று சொன்ன காந்திஜியும், பாகிஸ்தான் என்பது கற்பனைப் பிதற்றல் என்று சொன்ன ஜவஹர்லால் நேருவும், அவர்களால் வளர்க்கப்பட்ட மத நல்லிணக்கப் பேயின் முன் கூனிக்குறுகி நின்ற அவலம் வரலாற்றில் மறைக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.

இஸ்லாம் மத நம்பிக்கை என்ற பெயரில் நடந்த சட்ட மீறல்களும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், இஸ்லாமியரின் தவறைச் சுட்டிக் காட்டிய தேசிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டனர். “ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” என்ற முழக்கத்தின் வெளிப்பாடு 1947 ஆகஸ்டு 14-ல் பூரண சுதந்திரம் என்று முழங்கிய தலைவர்கள் கண்முன் பாரத நாடு வெட்டப்பட்டு பாகிஸ்தான் உதயமானதில் கொண்டு விட்டது.   இந்தப், பிரிவினையின் விளைவாக பாரத நாடு நான்கு பெரும் போர்களை சந்தித்து, பொருளாதாரத்திலும் பின்னடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் வலுவிழந்து உள்ளது.
விடுதலைக்குப் பின்னும் வரலாற்றில் நாம் செய்த தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் இந்த நாட்டின் சட்டத்தையே நிராகரித்த போது, 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு துரோகம் இழைத்தது. அந்த நாள்தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்ட நாள்.

இறைவன் அருளாலும் பல ரிஷி முனிவர்களின் கிருபையாலும் அயோதியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற முனைப்பு ஹிந்துக்களுக்கு இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஏற்பட்டது. ஹிந்துக்கள் பாரத நாட்டிற்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். பெரும்பான்மையை அனுசரித்துப் போக வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கும் ஏற்படத் தொடங்கியது.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் ஞாயமற்ற அடிப்படைவாத எண்ணங்களை வளரவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலே அமர வேண்டுமென்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றின. இதன் விளைவாக தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீதும் பண்பாட்டின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களைத் தீவிரவாதிகள் என்று கட்டம் கட்டி ஒதுக்கும் இழிசெயலில் அரசியல் கட்சிகளும் மேற்கத்திய அடிவருடிகளான அறிவுஜீவிகளும் இறங்கினர்.

ஹிந்து ஒற்றுமையை சீர்குலைத்ததுடன் நாட்டின் இதிகாச புருஷர்களையும் மஹான்களையும் கொச்சைப் படுத்தி, இந்த தேசத்து மாண்பின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலில் இறங்கினர். பல திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், ஏன் இன்னும் சொல்லப்போனால் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களிலும் கூட இந்த இழிசெயலை சிரமேற்கொண்டு செய்தனர்.

இன்று சர்ச்சைக்குள்ளான விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசனும் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை தங்கள் வாழ்க்கை லட்சியம் என்றே பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் மார்தட்டி பறைசாற்றியவர்கள். அடிப்படை ஆதாரமின்றி கொச்சைப்  படுத்துவதை ஞாயமா என்று கேட்டால், கருத்துச் சுதந்திரம் என்று கொக்கரித்தவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அடாவடித்தனம் செய்யும்போது, கமலஹாசனுக்கு மத நல்லிணக்கவாதி என்று சான்றிதழ் வழங்கிய கருணாநிதி, முஸ்லிம்களுடன் கமலஹாசன் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கருத்துச் சுதந்திரத்திற்குப் புது விளக்கம் தந்துள்ளார்.

ஹிந்து என்றால் திருடன், ராமன் எந்த பொறியியற் கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், பொட்டு வைப்பது மூடநம்பிக்கை என்றெல்லாம் ஹிந்துக்களை இழித்தும் பழித்தும் பேசியபோது ஹிந்துக்களின் மனம் புண்படுவதை எண்ண்ணிப் பார்த்தாரா? அந்த எண்ணத்தில் என்றாவது ஒருநாளாவது ஹிந்துக்களிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தாரா?

ஹிந்துக்களை அவமானப்படுத்தும் கருத்துக்களை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலே ஹார்மனி இந்தியா என்ற அமைப்பின் மூலம் விஷமாகக் கக்கிய கமலஹாசனுக்கு ஆதரவாக இன்று ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காட்டு நவாப் வீதிக்கு வந்தாரா?

இந்தத் தருணத்தில் ஆற்காடு நவாப் அவர்களின் மதநல்லிணக்கச் செயல் ஒன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மார்ச்சு 6, 2008 அன்று, முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு சென்னையில் நடத்தியது. பாரதத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திக் கொலை, கொள்ளை, கோவில்கள் அழிப்பு, போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட முகலாய அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. இதே கமலஹாசன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காடு நவாப் துண்டுதலினால் வரலாற்ரு ஆவணங்கள் கொண்ட அந்தக் கண்காட்சி காவல்துறையின் உதவியுடன் மூடப்பட்டது. ஒரு வரலாற்றுக் கண்காட்சியைக் கூட தமிழகத்தில் நடத்த முடியாமல் செய்வோம் என்று சாதித்துக் காட்டிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இதே காவல்துறையும் கமலஹாசனும் துணை போனார்கள். இன்று அதே அடிப்படைவாதம் விஸ்வரூபம் எடுத்து கமலஹாசன் படத்தை விழுங்கிவிட்டது. கருத்துச் சுதந்திரம் அன்று போல் இன்றும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் ”புதிய தலைமுறை” தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் திரைப்பட எதிர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கமலஹாசன், “இல்லாத ஒரு விநாயகர் சதுர்த்தி.. அதைப் பெரிதாக கொண்டாடி ஒரு பூதாகரமான ஃபெஸ்டிவல் (திருவிழா) ஆக IPL/CCL  போல இருக்கிறது. அந்த விழாக்களைப் பார்க்கும்போது ஒரு பதட்டம் ஏற்படுகிறது” என்று முஸ்லிம்களைத் திருப்திப் படுத்த ஔவை தந்த விநாயகர் அகவல் கண்ட ஹிந்துக்கடவுளைக் கொச்சை படுத்தியுள்ளார்.

இஸ்லாம் என்ற தங்கள் மதத்தின் பெயரில் அண்ணன் தம்பி உறவை அறுத்துவிட்டு தாய்நாட்டையே வெட்டிப்பிளந்த முஸ்லிம்களுக்கு கமலஹாசன் எம்மாத்திரம்? தேவையில்லாமல் விநாயகரை தூஷித்ததால் விக்னம் தான் அதிகமானதே தவிர விஸ்வரூபம் வெளிவரவில்லை.

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள திமுக அரசு எந்த அளவிற்குச் சுதந்திரம் கொடுத்ததோ, அதே அளவிற்கு அதிமுக அரசும் தற்போது சுதந்திரம் கொடுத்து வருகின்றது.  

மத்திய திரைப்படத் தணிக்கை குழு அனுமதி வழங்கிய திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது என்ன ஞாயம்? அது எந்த விதத்தில் நீதியாகும்? ஏன் இவர்கள் நீதியை விற்கிறார்கள்? கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்? அதுவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில்? 

உண்மை என்னவென்றால் தமிழகம் இன்று ஒரு அமைதி[ப் பூங்காவாக இல்லை. நாற்பது ஆண்டுகள் முன்பு காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படி இன்று தமிழ்நாடு மாறிவிட்டது. சட்டமும் அரசும் காவல்துறையும் அப்பாவி ஹிந்துக்களைத்தான் கட்டுப்படுத்த முடியும். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இவைகள் கைகட்டி சேவகம் செய்யும் அடிமைகளே. தமிழகத்தில் அடுக்கடுக்காக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட சட்ட மீறல்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு மறைமுக உதவியும் செய்ததனால், இன்று ’விஸ்வரூபம்’ தமிழகத்தில் ஓடாது என்ற சுவரொட்டி விஸ்வரூபம் திரையரங்குகளில் ஓடத் தகுதி பெற்றது என்ற மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழைவிட வலிமை பெற்றதாகிவிட்டது.

அமெரிக்காவில் முகம்மது நபியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்கிற திரைப்படம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என்று, அந்தத் திரைப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில் அமெரிக்க துதரகத்தின் முன்னால் 15 செப்டம்பர் 2012 அன்று போரட்டத்தில் இறங்கினர் முஸ்லிம் இயக்கங்கள். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூதரகத்தின் முன்னால் ஆர்பாட்டம் நடத்தினர்; தமிழக அரசும் அனுமதித்தது. தூதரகத்தை மூடவும் செய்தார்கள். முற்றுகை இட்ட எந்த முஸ்லிம் அமைப்பையோ, தாக்குதல் நடத்திய முஸ்லிம் அமைபுகளின் மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு.

அந்தப் போராட்டம் அமெரிக்க தூதரகத்திலிருந்து அண்ணா சாலை முழுவதற்கும் பரவியது. எந்தத் தொடர்பும் இல்லாமல் லட்சக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுமாறு, பலமணி நேரம் சென்னையின் உயிர்நாடியான அண்ணா சாலையை ஸ்தம்பிக்கச் செய்தனர் முஸ்லிம் அடிப்படைவாதிகள். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலிஸார் தாக்கப்பட்டனர். அண்ணா சாலையிலேயே நமாஸ் நடத்தப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்தது. சென்னை காவல்துறை ஆணையர் பலிகடாவாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் எந்த அடாவடி முஸ்லிமும் கைது செய்யப்படவில்லை.

சென்னையில் 19 டிசம்பர் 2012 அன்று தமிழகத்தின் தவப்புதல்வர்களில் ஒருவரான வடலூர் ரமலிங்க வள்ளலார் அவர்களைக் கொச்சைப்படுத்தி முஸ்லிம்கள் (தமிழ்நாடு தௌஹித் ஜமாத்) துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். இதை எதிர்த்து புகார் செய்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்சேபகரமான கருத்துக்களை அள்ளிவீசிய முஸ்லிம்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவிலை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலர் ஆனந்தன் சென்ற 2012-ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி வெட்டப்பட்டார். எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவிலை.

இப்படிப் படிப்படியாக இந்த அரசின் மெத்தனப்போக்கையும் செயலின்மையையும் புரிந்துகொண்ட முஸ்லிம்கள் தங்கள் நிலைபாட்டை ஒருபடி மேலாக மாற்றியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று 1920-ல் கோரிக்கை வைத்து பிரிவினை அரசியலைத் தொடங்கியவர்கள், 1940-ல் தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்கும் அளவிற்குத் தங்களை வளர்த்திக் கொண்டனர். அன்றைய நம் தலைவர்களின் பலவீனப் போக்கும் தவறான அரசியல் கொள்கையும்தான் அதற்குக் காரணம்.

அவுரங்கசீப் கண்காட்சியை முஸ்லிம்கள் எதிர்த்து மூடியவுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இன்று விஸ்வரூபம் வீணாகப் போயிருக்குமா? வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்க வந்த அவுரங்கசீபை வரலாற்றின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் உலகம் தழுவிய இஸ்லாமின் ரத்த உறவாகப் பார்த்து இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம் என்பதை முஸ்லிம்கள் நிலைநாட்டியபோது கண்டுகொள்ளாமல் விட்டது, இன்று விஸ்வரூபமாகப் பிரிவினை வாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் உரிமத்தை முஸ்லிம்களுக்குக்ம் கொடுத்து விட்டது.

விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படும் ஆஃப்கான் தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு முஸ்லிம் மதத்தினர் தொலைக்காட்சிகளில் கருத்துத் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நம் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அப்பாவிப் பொதுமக்களும் யார்? நம் நாட்டில் இருந்துகொண்டே நம் நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நாசகார செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்லும் அளவிற்குத் துணிச்சலை இந்த முஸ்லிம்களுகு கொடுத்தது யார்? இப்படிப் பேட்டி அளித்தவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, இந்தப் பேட்டியைக் கேட்டுவிட்டுத் திரைப்படத்தைத் தடை செய்தது என்றால், இங்கு நடப்பது தமிழன் அட்சியா அல்லது தாலிபான் ஆட்சியா? 

  
கடைசிச் செய்தி: தமிழக அரசின் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கமலஹாசன் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, குடியரசு தினத்தன்று திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் 28 ஜனவரி திங்களன்று, ”தீர்ப்பு நாளை (29 செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும். அதற்குள் இன்று கமலஹாசன் அவர்கள் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சமரசத்திற்கு வருவது நன்மை பயக்கும்” என்று கூறியுள்ளார்.

மத்திய தணிக்கைக் குழுவினரால் அனுமதி அளிகப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திங்கட் கிழமை தீர்ப்பளிப்பதாகச் சொன்ன நீதிமன்றம் ஒரு நாள் கழித்து தீர்ப்பு அளிப்பதாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், கமலஹாசனும் அரசாங்கமும் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சொல்வது முஸ்லிம் தீவிரவாதத்திற்கு நீதிமன்றமும் பயப்படுகின்றதோ என்கிற சந்தேகத்தை ஏர்படுத்துகிறது.
   

Read 1277 times
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 14 October 2014 10:14

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment