×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

விழுப்புரத்தில் தேசியக்கொடியை ஏற்றத் தடை, ஜிகாத்துக்கு அரசு ஆதரவு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மந்தகரை திடலில் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் மக்கள் நல உதவிகள் வழங்கவும், ஒலி ஒளி அமைத்து தேச பக்திப் பாடல்களை ஒலிபரப்பவும் இந்து முன்ணனி அமைப்பினர், 23-01-2014 வியாழக்கிழமை அன்று திரு. ராமு, நகர தலைவர் அவர்கள் தலைமையில் காவல்துறை ஆய்வாளர் திரு. ராமநாதன் அவர்களைச் சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தனர்.

 

அதற்கு காவல்துறை ஆய்வாளர் இந்த பகுதியில் ஏற்கனவே தமிழ்நாடு காவல் சட்டப்பிரிவு 30(2) அமலில் உள்ளதால், போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதை முறைப்படுத்த வேண்டியுள்ளதாகவும், ஏற்கனவே இரு பிரிவினர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு கோட்டாச்சியர் முன்னிலையில் அமைதி கூட்டம் நடந்துள்ளதாகவும், மேலும் இந்து அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற நம்பகமான ரகசிய உளவுத் தகவல் உள்ளது என்றும் கூறி அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர். இதோ, காவல்துறையின் அனுமதி மறுப்பு கடிதம்:

Villupuram-Flag-hoisting-issue

 

இந்த சம்பவம் குறித்து 27/01/2014 திங்கள்கிழமை அன்று இந்து முன்ணணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் அவர்களை தொலைபேசி மூலம் நாம் தொடர்புகொண்டோம். அந்த உரையாடலின் போது, அவர் அங்கு நடந்து வரும் பிரச்சினைகளைப் பற்றி விலாவாரியாக விளக்கினார்.

 

2012ல் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தமுமுகவை சேர்ந்தவர்கள் அவர்கள் அமைப்புக் கொடியை நிறுவி அதைச் சுற்றி வேலி அமைத்து  இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை எதிர்த்து இந்து முன்ணனி அமைப்பினர் போராட்டம் நடத்தியதாகவும். இதைக் காரணம் காட்டி மந்தகரை பகுதி பதட்டமாக உள்ளது இந்து முஸ்லீம் பிரச்சினை வரும் என்று கூறி தேசியகொடி ஏற்ற அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை ஆய்வாளர் திரு.ராமநாதன் அவர்கள் கூறியதாக சொன்னார். அதற்கு இந்து முன்ணனி அமைப்பினர் நாங்கள் ஏற்றப்போவது இந்து முன்ணனி கொடியில்லை, தேசியக்கொடிதான், தேசபக்திபாடல்கள் தான் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப் போகிறோம், ஆகவே அனுமதி அளியுங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு காவல்துறை ஆய்வாளர் திரு.ராமநாதன் அவர்கள் இது மேலிடத்து உத்திரவு என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னதாகவும், உடன் இந்து முன்ணனி அமைப்பினர் தடையை மீறி நாங்கள் தேசியக்கொடி ஏற்றுவோம், சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தாகவும் இந்து முன்ணனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நம்மிடம் கூறினார்.

 

26.11.2014 ஞாயிறு காலை இந்து முன்ணனி அமைப்பினர் பொது மக்களுடன் இணைந்து கொடியேற்ற கூடியுள்ளனர். அதற்கு முன்பாகவே தேசியக்கொடியை ஏற்றக் கூடாது என்று மந்தகரை திடலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தேசியக் கொடி ஏற்றுவதைப் போலீஸாரே தடை செய்வது பொதுமக்களைக் கடும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியது. போலீஸார் மக்களை கலைந்து செல்லச் சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதையும் மீறி நூற்றுக்கணக்கான மக்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று ’வந்தே மாதரம், ஜெய்ஜிந்த், பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைசியாக போலீஸார் முதலில் அருகிலுள்ள நூலகத்தில் மட்டும் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி அளித்துள்ளனர். தொடர் போராட்டத்துக்குப் பிறகு பிறகு மந்தகரை திடலிலும் தேசியக் கொடி போலீஸின் அனுமதியுடன் ஏற்றப்பட்டது.

 

இந்த மந்தகரை திடலில் முஸ்லீம் லீக் கொடி மற்றும் தவ்ஹீத் ஜமாத் கொடிகள் உள்ளன. ஆனால் இந்து முன்ணனி கொடி ஏற்ற வேண்டுமென்றால் அதற்கு அனுமதி மறுத்து பிரச்சினை செய்வதாகவும் இந்து முன்ணனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நம்மிடம் தெரிவித்தார்.

 

மேலும், அவர் இந்த கொடி கம்பங்கள் குறித்து கூறும் போது, நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கொடிகம்பங்கள் மற்றும் கூரை கொட்டகைகள் போன்ற எல்லாவற்றையும் நகராட்சி நீக்கியுள்ளதாகவும், ஆனால் திடலில் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திலுள்ள கொடிக்கம்பத்தை நீக்க முயன்ற போது அதை முஸ்லீம்கள் சுற்றி நின்று தடுத்தாகவும் இந்த எதிர்ப்புக்கு நகராட்சி அடிபணிந்து ஆக்கிரமிப்பை விட்டுவைத்துள்ளதாகவும் ராஜ்குமார் கூறினார். இப்படியே போனால் நகராட்சி இடத்தை தமுமுகவுக்கு பட்டா போடாமலேயே விட்டுக்கொடுத்துவிட்டாலும் ஆச்சரியமில்லை என்று தெரிவித்தார் அவர்.

 

இச்சம்பவம் இந்து மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது சுதந்திர போராட்ட காலத்து ஆங்கிலேய ஆட்சியை நினைவுப்படுத்துகிறது என்று பொதுமக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். நகராட்சி அமைப்பால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆக்கிரமிப்பு கொடிகம்பங்களை அகற்ற முடியவில்லை என்பது இவர்களது பயங்கரவாதத்தின் பிடி அரசு எந்திரத்தை இறுக்கி வளைத்துள்ளதையே காட்டுகிறது.

  • தன் தாய்நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்த கூட இந்து மக்களுக்கு உரிமையில்லையென்றால் நாம் வாழ்வது இந்தியாவிலா, பாகிஸ்தானிலா அல்லது ஆஃப்கானிஸ்தானிலா?
  • முஸ்லீம் லீக் மற்றும் ஜமாத் கொடிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து ஆக்கிரமிப்புக்கு அரசே துணை போவது சரியா? சட்டம் ஒழுங்கு என்பது அப்பாவி பொதுமக்களான இந்துக்களுக்கு மட்டும் தானா?
  • பயங்கரவாத சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்றி, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே பயங்கரவாத சக்திகளுக்கு அஞ்சி மண்டியிடுவது காவல்துறையின் அமைப்புக்கே அவமானமில்லையா?

 

காவல்துறையின் இந்த அச்சப்போக்கையும், தேச விரோத சக்திகளின் அராஜகப் போக்கையும், நகராட்சியின் கையலாகாத்தனத்தையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு தேச பக்தர்களுக்கு அநீதி ஏற்படுவதை தடுக்கவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Read 1249 times
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 14 October 2014 10:09

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment