×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

திண்டுக்கல்லில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த முஸ்லீம்கள் - இந்துக்கள் மறியல் போராட்டம்

Friday, 07 March 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

திண்டுக்கலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் ராஜக்காப்பட்டி கிராமத்தின் முத்தாலம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 18 பட்டி மக்களும் 5 ஆண்டுகளுக்கொருமுறை இத்திருக்கோவிலில் நடைபெறும் வழுக்கு மரம் ஏறும் திருவிழாவில் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். இந்த முத்தாலம்மன் கோவில் அருகாமையில் உள்ள முனீஸ்வரன் கோவில் புனரமைப்பு பணியை கிராம மக்கள் தொடங்கும் போது இப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் சில நில பத்திரங்களைக் காட்டி இந்துக்களைத் தடுத்துள்ளனர். இடம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று காவல்துறையும் தெரிவிக்க, இந்துக்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்க்கத் தொடங்கினர்.


இந்துக்கள் பத்திரங்களை சரிபார்க்கும் தகவல் அறிந்த முஸ்லீம்கள் நீதிமன்றம் சென்று கோவில் கட்டுவதை எதிர்த்து தடையுத்தரவு பெற முயற்சித்து வருகின்றனர். 1973ம் ஆண்டு கல்வெட்டு இருந்தும் பல தலைமுறைகளாக விழா கொண்டாடப்படுவதையும் கருத்தில் கொள்ளாத காவல்துறையினர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணாமல் காலம் தாழ்த்தி வந்தனர். 1983ற்குப் பின் 18 முறை பல பெயர்களில் போலியாக இந்தக் கோவில் சொத்து கைமாறிய ஆவணத்தை சமர்ப்பித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சினை தொடர்பான சமாதான கூட்டத்தில் இந்துக்கள் தரப்பு ஆவணங்களைக் கண்டுக்கொள்ளாமல், ”வேண்டுமென்றால் முஸ்லீம்களிடம் பேசி 5,10 அடி நிலம் தருகிறோம் பெற்றுக்கொண்டு போங்கள்” என்று சொல்லி முஸ்லீம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது காவல்துறை.


இந்த அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைக் கண்டித்து ராஜக்காப்பட்டி இந்துக்கள் இன்று (07.03.2014) சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார், DSP மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் நிலம் கோவிலுக்குச் சொந்தமானது தான் என்ற ஆவணங்களை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். உங்கள் ஆதாரம் சரியானது தான் வரும் 15.03.2013க்குள் இந்த கோவிலுக்குச் சொந்தமான இடம் எவ்வளவு என்பதை சர்வே எடுத்து கல் ஊன்றி தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்ததின் அடிப்படையில் மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி திரு. இராஜகோபால்

//1965லிருந்து 1990 வரை பூசாரிகளுக்கு சம்பளம் வழங்கிய டாகுமெண்டை பூசாரிகள் பேரவையிலிருந்து கொடுத்துள்ளார்கள். இந்த ஆதாரத்தையும் தாசில்தாரிடம் சமர்பித்துள்ளோம். இதில் 1983க்கு முன்புவரை உள்ள பத்திரங்களில் இந்த இடம் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்றுதான் உள்ளது. அதன் பிறகு மதரஸா பள்ளிவாசல் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஊர் மக்கள் யாரும் ஒப்புதல் கையெழுத்திடவில்லை. மேலும், கோவிலிருந்து வடக்கே உள்ள அரண்மனைக்குச் சொந்தமான 36 செண்ட் இடம் முஸ்லீம்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தத் தரவுகளையும் பரிசீலிக்காமல் அரசு அதிகாரிகள் ஊர்மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பின்னர் ஊர்மக்கள் 15-03-2013வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம் அதற்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சொல்லி கலைந்து சென்றனர். // என்றார்.


இந்த கிராமத்தில் 2500 இந்துக் குடும்பங்களும் 150 முஸ்லீம் குடும்பங்களும் உள்ளன. இப்படி ஒரு பெரும்பான்மையாக இந்துக்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு கையளவு முஸ்லீம்கள் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு கோவில் சீராமைப்பைத் தடுத்து அராஜகம் செய்யும் அளவிற்கு துணிந்துள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் நீதியற்ற அரசாங்கமே! முஸ்லீம்களுக்காகச் சட்டவிரோதமாக எதையும் செய்யத் துணியும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும். இந்த அதிகாரிகளுக்கு, இந்தத் துணிச்சலைக் கொடுத்த மைனாரிட்டி அரசியலை வளரவிட்டால் இந்த நாட்டில் இந்துக்களின் வாழ்வே கேள்விக்குறியாகி விடும். தங்கள் கிராமதேவதையின் மீதிருந்த அசையாத பக்தியினால் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் இந்த கிராமத்தினருக்கு ஒவ்வொரு இந்துவும் துணை நிற்கவேண்டும் என்று வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வேண்டுகிறது.

Read 1586 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 10:18

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment