×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ISISன் தளமாக மாறும் தமிழகம்

Thursday, 21 August 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

46 பெண்களை பாதுகாப்பாக திருப்பியனுப்பிய ஒழுக்க சீலர்கள்!

இந்தியாவில் தடைசெய்யப்படாத அமைப்பு!

விளையாட்டாக சிறுவர்கள் செய்த சாகசம்!

இவர்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை

யார் இவர்கள்?

 

போட்டிபோட்டுக்கொண்டு ஊடகங்களும் அரசுகளும் தானாக தாயத்து கட்டிக்கொண்டு ஆடுகிறார்களே?

இந்த விளையாட்டு பனியனை நன்றாக கவனியுங்கள்!

isis tshirt

இதில் நாங்கள் ISIS அதாவது ஈராக் சிரியா இஸ்லாமிய நாட்டுடன் உள்ளோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ISIS அமைப்பு சிரியா மற்றும் ஈராக் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வரும் ஒரு அடிப்படைவாத முஸ்லீம் பயங்கரவாதக் கும்பல். இந்த கும்பல் மதத்தின் பேரால் பல்லாயிரக்கணக்கான பெண்களை, குழந்தைகளை, முதியவர்களை கொன்றதோடு நடுத்தெருவிலே மக்களை சுட்டுக்கொன்று குவித்து அந்த பயங்கர படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு இஸ்லாமிய கடமை இதுதான் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

abu bagdadi

ISIS அமைப்பு அபு பக்கர் அல் பக்தாதி என்ற பயங்கரவாதியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. சிரியாவையும், ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றிய இந்த பயங்கரவாத அமைப்பு அபு பக்கர் அல் பக்தாதியை caliph அதாவது அகில உலக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமாக மாற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த ISIS அமைப்பு தாருல் இஸ்லாம் அதாவது இஸ்லாமிய உலகம் என்ற வரைபடத்தை வெளியிட்டு அந்த பகுதிகள் அனைத்தையும் இஸ்லாமிய நாடாக்குவோம் என்று சூளுரைத்துள்ளது.

isis map

இந்த பயங்கரவாத அமைப்பின் வரைபடம் நம் பாரத நாட்டை குரஸன் என்ற பெயரில் அழைத்து, இஸ்லாமியர் சட்டத்தால் நிர்வகிக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக அடையாளம் காட்டியுள்ளது.

இப்படிப்பட்ட பயங்கரவாத பிரிவினைவாத அமைப்பின் பெயரில் டிசர்ட்டுகளை அணிவது விளையாட்டுத்தனம் என்று சொல்லி நம் நாட்டின் ஒருமைப்பாடோடு விளையாடுகிறது இஸ்லாமிய அமைப்புகள்.

"46 இந்தியப் பெண்களை நகம் படாமல் பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்த ஒழுக்கசீலர்கள் என்பதை அங்கீகரித்து தொண்டியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் ISIS டிசர்ட்டுகள் அணிந்தார்கள்" – என்று இராமநாதபுரம் காவல்துறை கண்காளிப்பாளர் மயில்வாகனனிடம் கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் கூறியதாக ஆகஸ்ட் 6, 2014 அன்று “தி ஹிந்து” பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

isis the hindu

 

இப்படி ISIS அமைப்பின் ஒழுக்கத்தை மெச்சுபவர்கள் அவர்கள் வீட்டுப்பெண்களை இன்னொருவர் பிடியில் 15 நாட்கள் தங்கவைத்து விட்டு ஒரு நகம்கூட படாமல் திருப்பியனுப்பி வைத்தார்கள் என்று கடத்தல்காரர்களை கொண்டாடுவார்களா?

அகில உலக இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியை நிறுவத்துடிக்கும் ISIS பயங்கரவாதிகளை இந்தியாவில் பிரபலப்படுத்தத் துடிக்கும் கும்பலை தப்ப வைக்க ”இந்த நகம்படாத பெண்கள்” கதையை முன்னிறுத்தும் தவறைச் செய்தது இந்து பத்திரிக்கையா? அல்லது இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளாரா? காவல்துறை கண்காணிப்பாளர் சொல்லி இந்து பத்திரிக்கை எழுதியிருந்தால் இந்த அதிகாரி பயங்கரவாதியைத் தப்பவைக்கும் தேசத்துரோக குற்றத்தைச் செய்தவராகிறார். இந்து பத்திரிக்கையே இப்படி எழுதியிருந்தால் இந்து பத்திரிக்கையை கண்டித்து இராமநாதபுரம் SP மயில்வாகனன் ஏன் ஒரு அறிக்கையை கூட விடவில்லை. அப்படியென்றால் இந்த ISIS வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் இராமநாதபுரம் SP மயில்வாகனன் தானே?

ISIS தடைசெய்யப்படாத அமைப்பு அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முஸ்லீம்கள் பேஸ் புக் (Face book) பக்கங்களில் பதிவிட்டனர். இதே கருத்தை பல இஸ்லாமிய அமைப்புகளும் தங்களுக்கு தாங்களே அறிவுஜீவிகள் என்று பட்டம் சூட்டிக்கொண்ட வீண் ஜம்பங்களும் டிவி சேனல்களிலும் பத்திரிக்கைகளிலும் தம்பட்டம் அடித்தன.

fb sangairidwan

 

ஒரு தடை செய்யப்படாத அமைப்பு குண்டுவைத்தாலோ பிரிவினைவாத செயலில் ஈடுபட்டாலோ எந்த நடவடிக்கையும் இந்திய சட்டப்படி எடுக்க முடியாது என்ற ஆபத்தான இஸ்லாமிய பிரிவினைவாதிகளின் கருத்தை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE, Chennai, 7.8.2014 ) வெளியிட்டுள்ளது.


indianexpress isis

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Textile-Owner-Held-in-ISIS-T-shirts-Case/2014/08/07/article2368006.ece

இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டித்து மேடைகளிலே இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் பேசினால் இந்து இயக்கங்களை தடை செய், பிரிவினைவாதம் தலைத்தூக்குகிறது என்றெல்லாம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் பின்னால் எரியும் தீ இவர்கள் பின்னால் கொழுந்துவிட்டு எரிவதுபோல் கத்துபவர்கள் மனசாட்சி உள்ளவர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?

இந்தியாவை ஆக்கிரமித்து இஸ்லாமிய நாடாக மாற்றும் ISIS அமைப்பை தடை செய்!

இதன் ஆதரவாளர்களை கைது செய்!

என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும். இதற்கு மாறாக இது தடைசெய்யப்படாத அமைப்பு என்று சொல்லி இந்தச் சதியை ஆதரிப்பது தேசத்துரோகம் தானே! இந்த ISIS பனியன்களை அணிந்து கொண்டு தொண்டி மசூதி முன் காட்சியளித்த இளைஞர்களின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சங்கை ரிதுவான் என்பவர் இந்த ISIS ஆதரவாளர்களை ”தொண்டியிலிருந்து புறப்பட்ட சூறாவளி” என்று குறிப்பிட்டிருந்தார்.

sangai ridwan

sangai ridwan fb thondi

சூறாவளி என்ற சொல் பத்திரமாக பெண்களை பாதுகாப்பதற்கோ இருக்கும் இடத்தில் தொந்தரவே இல்லாமல் வீசும் தென்றலுக்கு உவமையாகவோ சொல்லப்படுவதில்லை. ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தி பலத்தின் மூலம், பலாத்காரத்தின் மூலம் ஒன்றை அழித்து மற்றொன்றை நிலைநாட்டும் சக்தியாகத்தான் குறிப்பிடப்படும். பயங்கரவாதத்தை பரப்புவோம் என்று முஸ்லீம்களே ஒப்புக்கொண்டபின் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் மீடியாக்களும் அரசு அதிகாரிகளும் ”நடு”நிலை நாயகர்களும் பிரிவினைவாதிகளை விட கொடியவர்கள்.

இந்த ISIS பயங்கரவாத குழுவிற்காக நம் தமிழகத்திலிருந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் முஸ்லீம்களை பயிற்சிகொடுத்து பிரிவினைவாத முஸ்லீம் அமைப்புகள் அனுப்பி வருகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஹாஜா பக்ருதின் - ”சிரியாவில் இந்த பயங்கரவாத போராட்டத்தில் பலரை கொன்று குவிக்க கிடைத்த வாய்ப்பின் மூலம் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறியதாக” - தன் பெற்றோரிடம் தொலைப்பேசியில் உரையாடியதை 21 ஜூலை 2014 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

isis cuddalore indian express

http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-youth-joins-ISIS-family-recalls-his-journey-into-insurgency/articleshow/38771536.cms

இது போலவே கடலூரைச் சேர்ந்த குல் முகமது மரைக்காச்சி மரைக்காயரின் ஈராக் போர் பங்கெடுப்பை 25 மார்ச் 2014 அன்று தி ஹிந்து வெளியிட்டது.

 chennai youth fighting isis hindu

http://www.thehindu.com/news/national/chennai-youth-fighting-in-syria-jihad/article5827857.ece

இதுபோலவே கோவை, சென்னை,குமரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை சிரியாவிற்கு போரிட காஜா மொய்தீன் என்பவர் அனுப்பத் திட்டமிட்டிருந்ததை ஆகஸ்ட் 14 2014 அன்று மாலைமலர் வெளியிட்டது. கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை காஜா மொய்தீன்கள்! எத்தனை மரைக்காயர்கள்! எத்தனை லெப்பைகள்! எத்தனை ராவுத்தர்கள்! எத்தனை பட்டாணிகளோ?

malaimalar isis part2malaimalar isis part1

 http://www.maalaimalar.com/2014/08/14131252/send-youths-siriya-and-get-mil.html

ISIS பயங்கரவாத அமைப்பு அதற்காகப் பயிற்சிக் கொடுத்து பயங்கரவாதிகளை தமிழகம் அனுப்பிக் கொண்டு இருக்கிறது என்று எழுதும் இந்தப் பத்திரிக்கைகள் டிசர்ட் விவகாரம் வரும்போது சால்ஜாப்பு வார்த்தைகளைச் சொல்லி செய்தி வெளியிடுவது பயங்கரவாதிகளை தப்பவைப்பதுடன் இந்த அமைப்புகளை மேலும் வலுப்பெற மறைமுக உதவி செய்வதுபோல் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் துருக்கியில் இஸ்லாமிய மத தலைமைப் பீடத்தை நடத்திவந்த caliph,  அந்த நாட்டு மக்களாலேயே தூக்கியெறிப்பட்டார். அவரை மீண்டும் caliph ஆக நியமிக்க வேண்டும் என்றுச் சொல்லி பாரதத்திலிருந்து பல முஸ்லீம்கள் வடக்கு நோக்கிச் சென்றனர். இஸ்லாமிய உலகம் அமைப்போம் என்ற கோஷத்துடன் ஆப்கானிஸ்தான் அமீரை பாரதத்தின் மீது படையெடுத்து வர கடிதம் எழுதினார் மெளலானா முகமது அலி மற்றும் சௌவுகத் அலி. இந்தப் போராட்டத்தில் ஆங்கிலேயரை வெற்றிக்கொள்ள முடியவில்லை என்றவுடன் கேரளத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துக்கள் மதமாற்றப்பட்டனர். உலகவரலாற்றின் கோரமான கலவரங்களில் ஒன்றான இந்தக் கலவரம் ”மாப்ளா கலவரம்’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

 Moplah Riots in Kerala

இந்தக் கலவரத்தின்போது அதற்கு 100 ஆண்டுகள் முன்பு ஆப்கானிஸ்தான் மன்னனை பாரதத்தின் மீது படையெடுத்து வரச் சொல்லி அவனுக்கு உதவ தயாராக இருப்பதாகக் கடிதம் எழுதிய திப்பு சுல்தான் உதாரண புருஷனாக சித்தரிக்கப்பட்டான். இன்று ISIS அமைப்புக்கு ஆள் சேர்க்கும் அமைப்புகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் இதே திப்புசுல்தானை நாயகனாக கருதி அவனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைக்கிறது. இதை ஓட்டுக்காக மண்டியிடும் அரசும் அரசியல் கட்சிகளும் முன்னின்று செய்து வருகின்றன.

ISIS டிசர்ட் விவகாரத்தில் இஸ்லாமிய கோரிக்கையை வைத்து கலவரம் செய்யும் எந்த முஸ்லீம் அமைப்பும், மதச்சார்பின்மை, மனித உரிமை பேசும் அமைப்புகளும்  இந்த முஸ்லீம் இளைஞர்களை கண்டிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ எந்த முஸ்லீம் அமைப்பும் ISIS அமைப்புக்கு ஆதரவாக இல்லை என்று அறிவித்துள்ளது.

பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்காக மும்பையில் போராட்டம் நடத்தப்பட்டு நம் நாட்டு போர் நினைவுச்சின்னம் தாக்கப்பட்டது. ஏற்கனவே நம் அரசால் தடைசெய்யப்பட்டபிறகும், “Innocence of muslims” என்ற திரைப்படத்தின் பெயரால் சென்னை அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டு மவுண்ட்ரோடு கலவர பூமியானது, இலங்கையில் ஒரு மசூதி இடிக்கப்பட்டதற்காகவும், ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டதற்காகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது, விஸ்வரூபம் திரைப்படத்திற்காக திரையரங்கில் குண்டு வீசப்பட்டது.

chennai usconsulate attack1 amar-jawan-jyoti-b-14-08-20

இப்படியெல்லாம் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்காக பொங்கியெழும் இஸ்லாமிய அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் கொல்லப்படும்போது ஏன் பொங்கி எழவில்லை? உண்மையாக ஒரு இஸ்லாமியனுக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்றால் அதிமாக முஸ்லீம்களை கொன்ற ISIS அமைப்பை ஆதரிக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்காக ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்? ”இந்தப்போராட்டம் இஸ்லாமியரின் உரிமை போராட்டம் என்பதல்ல.

ISILkillingfields

உலகு தழுவிய இஸ்லாமிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் அடிப்படைவாத பிரிவினைவாத நாசக்கார போராட்டம்” - என்பது இதிலிருந்து திட்டவட்டமாகிறது. ஹஜ் யாத்திரைக்காக அரசாங்கத்திலிருந்து நிதியுதவி பெற்று ஊரெல்லாம் ஹஜ் ஹவுஸ் கட்டும் முஸ்லீம்கள் மெக்காவிலிருக்கும் காபாவை தகர்ப்போம் என்று ISIS கருத்து வெளியிட்டவுடன் ISISக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு நாள் என்று ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஐ அனுசரிக்கும் இந்த பாபரின் வாரிசுகளுக்கு ISIS காபாவை இடிப்பது ஏற்புடையதா?

kaba

 

http://www.huffingtonpost.com/2014/07/01/isis-destroy-kaaba-mecca_n_5547635.html#

பாரதத்திலிருந்து இளைஞர்கள் ISISற்காக போரிடச்செல்வதும் அதன் பயற்சிக்களங்களும் ஆதரவு பிரச்சாரங்களும் நம் நாட்டில் இருப்பது அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த பின்னும் பாரதத்தில் ISISஆல் அச்சுறுத்தல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததை ஆகஸ்ட் 13, 2014 தேதியிட்ட தினமலர் வெளியிட்டுள்ளது. 

isis dinamalar nofear

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1045072

10 ஆண்டுகால பலவீனமான ஆட்சியிலிருந்து ஒரு பாதுகாப்பான ஆட்சிவரும் என்ற ஏக்கத்துடன் வாக்களித்த நம் நாட்டு மக்களுக்கு இந்த அறிக்கை பேரிடியாக அமைந்துள்ளது. இந்தப் பார்வையை மத்திய அரசு மாற்றிக்கொள்ளவேண்டும், மாற்றிக்கொள்ளும் என்று நம்புவோமாக!

இந்த நம்பிக்கைக்கு சற்று ஆறுதலாக ஆகஸ்ட் 20, 2014 தேதியிட்ட தினமலரில் கனடா நாட்டை சேர்ந்த ஒரு பயங்கரவாதி ISISல் இளைஞர்கள் சேர அறைகூவல் விடுக்கும் வீடியோ படம் தமிழ் வாசகங்களுடன் வெளியிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி தமிழக அரசை தீவிரமாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வளவு நடந்தும் ISIS நடவடிக்கை தமிழகத்தில் தீவிரமாக இல்லை என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு தளர்த்தியதாகத் தெரியவில்லை. ஓட்டுக்காக நாட்டை விற்கும் இழிச்செயலை அரசு செய்யலாமா?

isis video tn dinamalar 20 8 2014

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2014/08/20/ArticleHtmls/20082014006009.shtml?Mode=1

உலக வர்த்தக மையத்தை தகர்க்கவும், மும்பையில் தாக்குதல் நடத்தவும், ஐரோப்பியாவில் இரயில் நிலையங்களைத் தகர்க்கவும், பாரதப் பாராளுமன்ற கட்டடத்தைத் தாக்கவும் உலகம் முழுவதும் சதிச்செயல்களில் ஈடுபட பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக பாகிஸ்தான்,   ஆப்கானிஸ்தான் விளங்கியதால் இன்று இந்த இருநாடுகளும் உலக நாடுகளால் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. இந்த நாடுகளில் தாலிபான்களின் காட்டாச்சியே  நடைபெறுகிறது. இந்தப் பயங்கரவாத விளைநிலங்களை தாலிபான் நாடு என்று அழைக்கிறார்கள். இன்று தமிழகத்திலிருந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள் என்றால் இங்கு நடப்பது தமிழன் ஆட்சியா? தாலிபன் ஆட்சியா?

Read 12544 times
Rate this item
(11 votes)
Last modified on Friday, 29 August 2014 17:42

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

5 comments

 • Comment Link Ramesh Monday, 25 August 2014 11:38 posted by Ramesh

  Nice,informative and thought provoking article about ISIS m will open the eyes of many Muslim youngster and make them think rationally.

 • Comment Link Srikanth Friday, 22 August 2014 20:41 posted by Srikanth

  Thanks for bringing out the facts. People should understand the truth and stop being spectators. Many people even think that it is not any more possible to declare India as Hindu nation. For those people, I would like to point out the religious demography of Israel. According to the Israel Central Bureau of Statistics, the population in 2011 was 75.4% Jewish, 20.6% Arab, and 4.1% minority groups (source : Wikipedia).

 • Comment Link Sriram Friday, 22 August 2014 11:54 posted by Sriram

  சரியான கண்ணோட்டம். சபாஷ். தொடரட்டும்.

 • Comment Link நா. ஆறுமுகம் Friday, 22 August 2014 10:33 posted by நா. ஆறுமுகம்

  அற்புதமான பதிவு .
  தங்களின் முழு முயற்சி முலம் கிடைக்கப் பெற்ற தகவல்கள் சிந்திக்க வைக்கின்றது
  இஸ்லாம் மார்க்கத்தை தழுவுவதை விட .இஸ்லாம் அடிப்படை வாதத்தை இந்த தேசத்தில் வேறுன்ட செய்ய முயல்கிறார்கள் என்கின்ற உண்மை இந்த பதிவின் ழுலம் தெளிவாகிறது. மதத்தின் பெயரால் வியாபார நோக்கம் கொண்டு தமிழகத்தில் இருக்கும் அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் வேலை செய்கின்றனவா என்ற சந்தேகம் நமக்கு எழத் தோன்றுகிறது . இநத தேச மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது இருக்கும் மத்திய அரசுக்கு வாக்களித்தார்ளோ அநத நம்பிக்கை காப்பற்றப்பட வேண்டும் இந்நாட்டின் பண்பாடான ஒருங்கினைந்த தேச சிந்தனை மேலோங்க செய்ய இந்த தேச துரோக அடிப்படை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை வேறோடு மண்ணாக சாய்கக வேண்டும. காசுக்காக நான்வேலை செய்கின்றேன் என்ற தன்மை மறந்து நாட்டுகாக நான் உழைக்கின்றேன் என்ற தன்மையில் மயில் வாகணன் போன்ற அரசு அதிகாரிகளும் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்

 • Comment Link Ramalingam venkatraju Friday, 22 August 2014 10:27 posted by Ramalingam venkatraju

  INVADER, HUNTER, KILLERS, ROBERS, of Asia, India, for girls, pearls, gold, diamonds, power,from Islam for QURON,for more than 700 years directly, and more than 300 years by christiens Bible,with guns, bobms, atom, neculer bombs, for luting, and makeing Asians Slaves, in the name of Bible, jesus, NOW iNTLECTUAL CRIMES, PREVIOUSLY W.W.. W.W.2., NOW W.W.3... TO KILL HUMANS ,IN THE Name of Bible, and Quron.. is their history, since today...in the name of seculers, is also Intlectual crime on Asia, india...for vote bank, and many more....divide and rule...they could had declared India, for islamics, by love jihat, jihat, for quron, christien India for bible by love, blessings by sexing asian, Indian girls,

Leave a comment