×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழகத்தில் மேலும் ஒரு கொலைகார கட்சி

Friday, 14 November 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

அமெரிக்காவில் வெளியான ஒரு திரைப்படத்துக்கு சென்னை மவுண்ட் ரோடே ஸ்தம்பிக்க வைக்கப்படலாம். வாகனங்கள் சேதப்படுத்தப்படலாம். அமெரிக்கத் தூதரகத்தில் கல்லடிக்கப்படலாம். அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல!

உலகத்தீவிரவாதத்தைக் கதைக்கருவாகக் கொண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தால் அதை எதிர்த்து திரையரங்கங்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தி மாநில அரசு கையறு நிலையைக் கொள்ளச் செய்யலாம். சென்சார் படத்தை வெளியிட அனுமதித்தாலும் இவர்கள் வன்முறை காட்டி அச்சுறுத்தி அனுமதி மறுக்கலாம். அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடையை மீறி ஊர்வலம் போகலாம். அனுமதி பெற்ற வழியிலேயே செல்லுங்கள் என்று நெறிப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரியைக் கார் ஏற்றிக் கொல்ல முனையலாம். அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல!

இராமநாதபுரத்தில் கேணிக்கரை காவல்நிலையம் சூறையாடப்படலாம். அதை நிகழ்த்திய வன்முறையாளர்கள் மீது வழக்கு வராதிருக்க கும்பலாகச் சென்று போரட்டம் என்ற பெயரில் மீண்டும் வன்முறை நிகழ்த்தலாம். அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல!

குடி போதையில் தன்னைக் கொல்ல முயன்ற ஒருவனை தற்காப்புக்காகச் சுட்ட காவல்துறை அதிகாரியை எதிர்த்து ஊர்மக்களை மீறிச் சில அமைப்பினர் போராட்டம் நடத்தி காவல்துறையில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் மட்டுமே குறிப்பிட்ட பகுதிகளில் பதவிக்கு வரமுடியும் என்ற சமூக விரோத நிலையை ஏற்படுத்தலாம். அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல!

இராமேஸ்வரம் கிராமங்களில் ஊரின் ஒரு பகுதியில் பொதுவழியில் அந்நியர்கள் உள்ளே வரக்கூடாது என்று ஜமாத் மூலம் அறிவிப்புப் பலகை வைக்கலாம். அது சட்டத்தைக் கையிலெடுக்கும் அநீதியல்ல!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேருந்தில் சென்ற ஹிந்து ஒருவர் வழியில் கோவிலைப் பார்த்துத் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது நம்பிக்கையை இழிபடுத்தும் விதமாக வாக்குவாதம் செய்து அவரையும் பேருந்து நடத்துனரையும் கும்பல் சேர்ந்து மிரட்டி வழிபட்ட ஹிந்துவைப் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடலாம். அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல!

இன்னும் இது போன்ற பல சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவல்ல என்று வேடிக்கை பார்க்கப்படலாம். ஊடகங்களும் இவை குறித்துச் செய்தி வெளியிட்டால் தம் மதசார்பற்ற புனிதம் கெட்டுப்போகுமே என்ற அச்சத்தில் பேசாதிருக்கலாம்.

இப்படி ஊருக்குள் சட்டம் நீதி எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி தடியெடுத்துத் தண்டல்காரர்களாக 800 ஆண்டுகள் பாரதத்தை ஆட்டிப்படைத்த கும்பல் இன்றும் தேசத்தின் அரசியல் சாசனத்தை மதிக்காமல் அராஜகம் செய்துவருகிறது. இப்படி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு அபாயம் நம்மவர் பலரால் கண்டுகொள்ளப்படவில்லை. அந்த அபாயம் தமிழகத்தில் காலூன்றிவிட்டது என்பதும் நம்மில் பலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எத்தனையோ கட்சி அதுல இதுவும் ஒண்ணு என்ற கருத்துடன் பலரும் அபாயத்தை உணராமல் போவதனால் இதன் அடிப்படை குறித்துச் சற்றே விரிவாகப் பேசவேண்டிய நிலை நமக்கு.

மஹாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்குக் குறைவென்ற போதிலும் பெருவெற்றி என்று பெருமிதம் கொள்ளத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என்று அரசியல் நோக்கர்களும் சில வல்லுநர்களும் ஒப்புக் கொண்டார்கள். வழமை போல இது ஆபத்தானது என்றும் அவர்கள் சொல்லத் தவறவில்லை. சில கூர்நோக்கர்கள் கவனித்த போதும் காங்கிரசுக்கும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கும் ஆபத்து என்ற அளவிலேயே ஒரு விஷயத்தைக் கணித்தனர். சரி ஹிந்துத்வர்களும் சங்க பரிவாரம் சார்ந்தோரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் காங்கிரசு இல்லாத இந்தியாவை நோக்கிய பயணத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்று மகிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆபத்தை கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ஒரு வகையான ராஜதந்திரம்(!!??) என்ற வாதத்தை ஒருபுறம் வைத்துவிட்டு ஆபத்து குறித்துப் பார்ப்போம்.

தேசத்துக்குப் பேராபத்து மிக்க அந்த விஷயம் ஒவைசி சகோதரர்களின் கட்சியான மஜ்லிஸ் இட்டேஹாதுல் முஸ்லிமீன் மஹாராஷ்டிரத்தில் 2 இடங்களில் வென்று அதன் அடிப்படையில் விரிவாக்கம் என்ற பெஉயரில். இந்தக் கட்சியினர் தேச ஒற்றுமைக்கோ சமுதாய நல்லிணக்க வாழ்வுக்கோ பாடுபடுவர் என்பது குதிரைக்குக் கொம்பு முளைத்து அது தந்தமாக மிளிர்வதான கற்பனை. வரலாறும் இதற்குப் பற்பல சான்றுகளைக் கொண்டிருக்கிறது. இசுலாமியர்களிடையே தம்மைத் தன்னிகரற்ற தலைவர்களாகச் வரித்துக் கொண்டு இசுலாமியர் வாக்குவங்கியைத் தம் பக்கம் தக்கவைப்பதே ஒவைசி குடும்பத்தின் நோக்கம். இவர்கள் தாருல் இசுலாம் என்ற இசுலாமிய தேசத்தைத் தம் இலக்காகக் கொண்டவர்கள். இவர்களது வரலாற்றைச் சற்றே கவனித்தால் இவர்கள் எங்கே செல்ல விழைகிறார்கள் என்பதையும் தேசத்தை என்னவாக்க எத்தனிக்கிறார்கள் என்பதும் புரியும். ஆந்திரத்தில் என்.டி.ராமாராவ் தேசத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் மொத்தமாகத் தன்னிடம் கொண்டது போல் ஆட்சி நடத்திய இந்திராகாந்தியின் கட்சியைத் தோற்கடித்து ஆந்திர மாநிலத்து ஆட்சியைப் பிடித்த காலத்தில் கூட பீடித்துவரும் பிணியான இந்த மஜ்லிஸ் அமைப்பைத் தொந்தரவு செய்யத் துணியவில்லை. சிறுபான்மையினர் நலம் பேணல் என்ற போர்வையில் நெடுங்காலமாக நடந்துவரும் அராஜகத்தின் ஒரு பகுதியாக அதைக் கொள்ளலாம். ஆனால் மஜ்லிஸ் இதற்கு என்றாவது எப்படியாவது நன்றி பாராட்டியதா என்றால் இல்லவே இல்லை.

தெலுங்கானா பிரிந்த பிறகு மாநில அரசுச் சின்னம் முதல் நிர்வாகம் வரை மஜ்லிஸ் முழு ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஐதராபாத் நிஜாமின் திட்டமாகும். அவர் காலத்தில் உருது மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு, தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இசுலாமியமயமாக்கம் சமஸ்தானம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட ஹிந்துப் பண்டிகைகள் தேவையற்ற கொண்டாட்டங்களாக அறிவுறுத்தப்பட்டன. தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்பியும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா 1948ல் ஐதராபாத் பாரதத்துடன் இணைக்கப்பட்டதைக் கண்டித்தார். வன்முறையால் நிகழ்ந்த இணைப்பு இது என்றும் ஐதராபாத்தும் கஷ்மீரமும் என்றுமே பாரதத்தின் அங்கங்களாக இருந்ததில்லை என்றும் அவர் சொன்னார். இது மஜ்லிஸ் அமைப்பின் அடிப்படைக் கொள்கையே ஆகும். தெலுங்கானா தற்போது மஜ்லிஸ் அமைப்பின் முழுக்கட்டுப்பாட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தேசவிரோத, சமுதாய விரோத, ஹிந்து விரோத சக்திகள் தான் மஜ்லிஸ் அமைப்பினர். இவர்களது வரலாறு குறித்து முன்பே விரிவாகப் பேசியிருக்கிறோம். சற்றே சுருக்கமாக இவர்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.

ஒவைசி என்றாலே ஆந்திர மக்களுக்கு பயங்கரவாதம், பாகிஸ்தான் ஆதரவு, படுகொலை போன்ற கொடும் சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். 15 நிமிடம் காவல்துறை ஓரமாய் நிற்கட்டும் இந்தியாவிலிருக்கும் 25 கோடி முஸ்லிம்கள் 100 கோடி ஹிந்துக்களை ஒழித்து விடுவோம் என்று இரத்தவெறி பிடித்துக் கொக்கரித்த அக்பருதீன் ஒவைசியின் சகோதரனும் அக்கட்சியின் தலைவருமானவரே அஸாதுதீன் ஒவைசி. அக்பருதீனுக்கு அண்ணன் என்பதை தன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துத் தன் தந்தை மறைந்த சுல்தான் சலாவுதீன் ஒவைசிக்கு நிம்மதி தருபவர் அவர். சtமீபத்தில் இந்த அண்ணன் ஒவைசி ஒரு விஷயம் பேசினார். ”ஹிந்துஸ்தானம் பாகிஸ்தானின் மீது படையெடுக்கத் துணிந்தால் பாரதத்தில் உள்ள 25 கோடி முஸ்லிம்களும் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போர் புரிவார்கள்” என்பதே அந்தப் பேச்சு. 15 நிமிடங்களில் கொன்று விடுவோம் என்றான் தம்பி எப்படி கொல்லுவோம் யாருடன் சேர்ந்து கொல்வோம் என்று திட்டத்தைத் தெளிவுபடுத்தினான் அண்ணன். என்னே சகோதர ஒற்றுமை! இந்த கொலைகார அழைப்பு கஷ்மீர் அப்சர்வர் என்ற பத்திரிகையில் செய்தியாக வந்தது. இருதினங்களுக்குப் பின் செய்தியைக் காணவில்லை என்கிறது பத்திரிகையின் இணையதளம். ஆனால் ஆதாரங்கள் சேர்ந்துள்ளன. பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு விவாத தளத்தில் இது குறித்துப் பெருமையாக எழுதியிருக்கிறார்கள்.

http://defence.pk/threads/if-india-attacks-pak-indian-muslims-will-join-pak-army-owaisi.332014/

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் நாடு, மொழி, இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இசுலாம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாய் இருப்பவர்கள் என்பதே அந்தக் கொள்கையின் சாரம். இதே உலகாயத இஸ்லாமியக் கொள்கை தான் 1947ல் நம் நாட்டைக் கூறுபோட்டது. இன்று உலகெங்கும் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாத, பிரிவினைவாத செயல்களுக்கு இந்த கொள்கையே அடித்தளமாக அமைந்துள்ளது. இந்தக் கொள்கையிலேயே ஒவைசி குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பயணித்துள்ளது. இந்த குடும்பத்தில் பிறந்த அசாதுதீன் ஒவைசியை முதலில் நாம் தெரிந்து கொள்வோம். லண்டனில் சட்டம் படித்த பாரிஸ்டர். பாராளுமன்ற உறுப்பினர். தம்பிக்குச் சற்றும் சளைக்காத அண்ணன். அசாமில் ஊடுறுவிய பங்களாதேசத்து இசுலாமியருக்கு அரசு உதவவில்லை என்றால் முஸ்லீம் இளைஞர்கள் செய்யும் புரட்சியைத் தடுக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் அரசை மிரட்டியவர். அரசுப்பணத்தில் 'முஸ்லிம்களுக்கு மட்டும்' என்று எழுதி வைத்து அரசு உதவிகளை வழங்கியவர். இப்படிப் பேச அவருக்குத் துணிவு எங்கிருந்து கிடைக்கிறது? அவரது பின்னணி என்ன? யார் யார் அவரை ஆட்டுவிக்கின்றனர்?

குல் ஹிந்த் மஜ்லிஸ் ஏ இட்டேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) என்பது ஓவைசி சார்ந்துள்ள கட்சி. இந்தக் கட்சியின் வரலாறு என்ன? கொள்கை என்ன என்று பார்த்தால் இவர்களின் இந்த இந்துஸ்தான எதிர்ப்பு வெறி ஆச்சரியம் தராது. இந்த மஜ்லிஸ் அமைப்பு 1927ல் அப்போதைய ஐதராபாத் நிஜாமின் உத்தரவின் பேரில் அவருக்கு ஆதரவாகத் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு ஐதராபாத் ஒரு முஸ்லிம் சமஸ்தானமாக தனித்து இருக்கவேண்டும் என்று பாடுபட்டது. ஐதராபாத் இந்தியக் குடியரசுடன் இணைவதை எதிர்த்தது. 800 ஆண்டுகால இசுலாமியர் ஆட்சியில் ஹிந்துக்களின் அரசியல் கலாசார விழிப்புணர்வு பல்வேறு துறவிகள் பக்திமான்களால் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்த போதும் 19ஆம் நூற்றாண்டில் ஹிந்துக்களின் அரசியல் விழிப்புணார்வு தலை தூக்கியது. ஐதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் 90% மக்கள் ஹிந்துக்கள். அவர்கள் அரசியல் பலம் பெறுவது தன் அதிகாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் என்று அஞ்சிய நிஜாம் ஹிந்துக்களின் கலாசார அடிப்படையைக் குலைக்கத் திட்டமிட்டார். தன் சமஸ்தானத்தில் பல ஊர்களின் பெயர்களை உருதுப்படுத்த உத்தரவிட்டார் நிஜாம். 1905ல் ஹைதராபாத் ஒரு இசுலாமிய நாடாக அறிவிக்கப்பட்டது. உஸ்மானியா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டு உருதுக்கல்வி போதிக்கப்பட்டது. உருது பேசும் முஸ்லிகளுக்கு முக்கியத்துவம் தந்தும் உருது தெரிந்த ஹிந்துக்களுக்கு சலுகைகள் வழங்கியும் உத்தரவிட்டார் நிஜாம். தெலுங்கு மொழி மதிப்பிழந்தது. ஹிந்து கலாசாரம் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டது.

1947ல் ”விடுதலை! விடுதலை! பாரத மாதா கீ ஜெய்!” என்று பாரதம் முழுவதும் முழங்கிய போது நிஜாமின் சமஸ்தானத்தில் ”ஆஜாத் ஹைதராபாத்” முழக்கம் அங்கே கேட்டது. கொடுமை தாங்க முடியாமல் பல்லாயிரம் ஹிந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து பாரதத்தில் தஞ்சம் புகுந்தனர். பிற பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் முஸ்லீம் மன்னனுக்கு ஆதரவாக ஹைதராபாத் வந்தனர். அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் இருப்பிடமும் வழங்கப்பட்டது. ஹைதராபாத் சுதந்திர தேசம் என்று அறிவித்த இரண்டு மாதங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகரித்தது என்று பாண்டுரங்கராவ் குல்கர்னி தெரிவிக்கிறார். நிஜாம் உலக இசுலாமிய நாடுகளுக்கு இராணுவ மற்றும் அரசியல் உதவி கேட்டு தூதுவர்களை அனுப்பினார். ஹைதராபாத்தில் மக்களுடன் இணைந்து ஹிந்து அமைப்பினர் பாரதத்துடன் இணையப் போராடினர். இந்தப் போராட்டத்தை சுவாமி இராமானந்த தீர்த்தர் வழிநடத்தினார், நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். அவர்களை நிஜாமின் ரசாக்கர் படையினர் கொடூரமாகத் தாக்கி அடக்கி வைத்தனர். ரஜாக்கர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி பாகிஸ்தானுடன் இணைய நிஜாமைக் கட்டாயப்படுத்தினார்.

http://www.hindu.com/thehindu/2003/04/27/stories/2003042700081500.htm
http://www.srtri.in/index.htm

ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன, பயிர்கள் கொளுத்தப்பட்டன, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். எர்ரபள்ளம் என்ற கிராமத்தில் சந்த் கான் என்ற காவல் அதிகாரியின் துணையுடன் ரஜாக்கர்கள் ஒவ்வொரு வீடாகக் கொள்ளையடித்து மொத்தக் கிராமத்தையும் சூறையாடினர். 70 பெண்கள் கிராமத்தின் நடுவே வைத்து வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஹைதராபாத் வங்கியில் 22லட்சம் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டது. இந்நிலையில் 1948ல் பாரதத்தின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆப்பரேஷன் போலோ என்ற பெயரில் இந்திய ராணுவம் 5 முனைகளில் ஹைதராபாத்தைத் தாக்கிக் கைப்பற்றியது. நிஜாம் சரணடைந்தார். காசிம் ரிஸ்வி சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் இதற்குள் ஹைதராபாத்தில் இருந்த ஹிந்துக்கள் பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். இத்தகைய கொடுமைகளைச் செய்த ரஜாக்கர் படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட போதும் அவர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி உட்பட பலரும் நேருவின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சர்தார் படேல் ரிஸ்வியின் இந்திய இறையாண்மைக்கு எதிரான திமிர்பிடித்த பேச்சைக் கேட்டு அவரைச் சிறையில் அடைத்தார். 1957ல் ரிஸ்வி நேருவின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானுக்குப் போய்விடவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அவர் இட்டேஹதுல் முஸ்லிமீன் அமைப்பை யாரிடமாவது ஒப்படைக்க எண்ணி பலரிடம் பேசினார். யாரும் முன்வராத நிலையில் மௌலானா அப்துல் வஹீத் ஒவைஸி என்ற வழக்கறிஞரிடம் அமைப்பை ஒப்படைத்தார். பின்னர் பாகிஸ்தான் சென்றார்.
http://www.time.com/time/printout/0,8816,799076,00.html

மஜ்லிஸ் மீதான தடை 1957ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மௌலானா அப்துல் வஹீத் ஒவைசி இதனை அரசியல் கட்சியாக்கித் தலைமை ஏற்றார். தலைமை ஏற்றவுடன் இவர் பாரத்தத்துக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும், முஸ்லிம்களுக்கு வெறியேற்றும் வகையிலும் பேசத் தொடங்கினார். 1958ல் ஓராண்டு காலமாகப் பேசிவந்த தேசவிரோதப் பேச்சுக்காகவும், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காகவும் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 11 மாத சிறைவாசத்துக்குப் பிறகு தேசத்துக்கு எதிராகப் பேசுவதில்லை என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார். http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hate-speech-not-new-for-Owaisi-clan/articleshow/17963124.cms

1992 நவம்பர் மாதத்தில் காவல்துறை அதிகாரி கிருஷ்ணபிரசாத் பிருந்தாவன் காலனியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் அங்கே சென்றார். மஜ்லிஸ் அமைப்பின் கைத்தடியும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியுமான முஜீப் என்பவனால் கிருஷ்ணபிரசாத்தும் ஒரு காவலரும் கொல்லப்பட்டனர். கொன்ற முஜிப்பையும் அவனுக்குத் துணை நின்ற அவனது தம்பி நஜீபையும் பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றித் தங்கவைத்து ஒவைசி குடும்பம் காப்பாற்றியது. 19 ஆண்டுகள் கழித்து 2002 ஜனவரி மாதத்தில் இந்த இருவரில் நஜீபைக் காவல்துறையினர் கைது செய்தனர். முஜிப்பைக் கைது செய்து ராஜஸ்தானில் சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் லஷ்கர் இ தய்யபா, ஜய்ஷ் ஏ முகமது, சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். http://www.newindianexpress.com/cities/hyderabad/article326589.ece?service=print

2007ல் மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஐதராபாத் வந்த போது அவரைத் தாக்கினர். நஸ்ரின் தலையைக் கொய்வது இசுலாமியக் கடமை என்று கூறினர். தஸ்லிமா நஸ்ரின் மற்றும் சல்மான் ருஷ்டி இருவருக்கும் எதிரான உயிர்க்கொலை ஃபத்வாவை செய்லபடுத்துவோம் என்று சூளுரைத்தனர். ஹைதராபாத் உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை இடங்களில் இவர்கள் வைத்ததே சட்டம் என்ற வகையில் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் நடந்து வருபவர்கள். ஆனால் ஓட்டு வங்கி மதசார்பின்மை என்று காங்கிரசுக் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் இவர்களைக் கண்டு கொள்ளாது இருக்கின்றன. இந்த அமைப்பின் கோட்பாடு இந்தியாவை இசுலாமிய நாடாக்குவதே என்பது இந்த வரலாற்றைப் பார்க்கிற போது புரியவரும். அசாதுதீன் ஒவைசி தாலிபான்களிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். இல்லையென்றால் முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை அரசு இழக்க நேரும் என்று மிரட்டினார்.

இந்த மஜ்லிஸ் கட்சியின் ஆதரவு ஆந்திர சட்டமன்றத்தில் காங்கிரசுக்குத் தேவைப்பட்டது என்பதால் இவர்களின் பல தேச இறையாண்மைக்கு எதிரான போக்கு கண்டு கொள்ளப்படவில்லை. 2011ல் ஆந்திர பொது விநியோகத்துறை அமைச்சர் அடிலாபாத் பகுதியில் ரேஷன் கடை முறைகேடுகள் குறித்த புகார் பற்றி விசாரிக்க வந்தார். மஜ்லிஸ் கட்சியினர் அமைச்சர் ஒவைசியின் அனுமதியின்றி வந்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றனர். அமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.

http://www.hindustantimes.com/india-news/newdelhi/should-hold-talks-with-taliban-owaisi/article1-1022378.aspx
http://www.hindu.com/2007/08/11/stories/2007081161781600.htm
http://ibnlive.in.com/news/mla-vows-to-behead-taslima-nasreen/46658-3.html

நிலவரம் இப்படி இருக்க 2014ஆம் ஆண்டு ஆந்திர, தெலுங்கானா சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் ஆந்திரத்தில் மஜ்லிஸ் மண்ணைக்கவ்வியது. தெலுங்கானாவில் 4% வாக்குகளுடன் 7 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. இதற்கா இந்த ஆட்டம் என்றால் ஆமாம். இந்த 4% வாக்குகளைக் கொண்டு தெலுங்கானா அரசை மிரட்டவும் தன் ஆணைப்படி ஆடவும் வைக்கிறார் ஒவைசி என்பது குற்றச்சாடு. ஆனால், ஒவைசியைப் புறந்தள்ளினால் போர்த்திக் கொண்டிருக்கும் மதசார்பின்மைப் போர்வை நழுவி விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மஜ்லிஸ் ஊதும் மகுடிக்கு ஆடுகிறது. இந்நிலையில் மஜ்லிஸ் தனது விரிவாக்கத்தைத் தொடங்கியது. மஹாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் 24 இடங்களில் போட்டியிட்ட மஜ்லிஸ் 2 இடங்களில் வென்றது. 3 இடங்களில் இரண்டாவதாக வந்தது, 9 இடங்களில் மூன்றாவதாக வந்தது. இது கவலைகொள்ளத்தக்க விஷயம் என்ற போதும் அதிர்ச்சி தரத்தக்க இன்னொரு விஷயம் இருக்கிறது.

சிவசேனையுடன் மஜ்லிஸ் செய்து கொண்ட ரகசிய உடன்பாடுதான் அது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றதும் பல இடங்களில் காங்கிரசு, மற்றும் தேசியவாத காங்கிரசுக்கான முஸ்லிம் ஓட்டுப் பிளவைக் கணக்கெடுத்தது சிவசேனை. இந்நிலையில் இவ்விரண்டு காங்கிரசுக்கட்சிகளையும் விரட்டியடித்து அவர்களுக்கான முஸ்லிம் வாக்குகளைத் தான் பிரித்துவிடுவதாகக் கூறி மஜ்லிஸ் உள்ளே புகுந்தது. உத்தவ் தாக்கரே அசாதுதீன் ஒவைசியின் பேச்சில் நம்பிக்கை கொண்டாரா அல்லது தன்னைப்போலவே தந்தையிடமிருந்து பிதுரார்ஜிதமாகக் கட்சியைப் பெற்றவர் என்ற பாசம் கொண்டாரா தெரியவில்லை. ஒவைசியோடு உடன்பட்டார். பல இடங்களில் சிவசேனையைக் கலந்தாலோசித்தே வேட்பாளர்களை நிறுத்தியதாக மஜ்லிஸ் கூறியது. சிவசேனை இதை மறுக்கவும் இல்லை. இதே போன்ற ஒரு பேரம் வைக்கப்பட்டது. ஆனால் பாஜக அதை நிராகரித்துவிட்டது என்றும் மஜ்லிஸ் அமைப்பின் மஹாராஷ்டிரப் பொறுப்பாளர்கள் கூறினர். முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், இஸ்லாமிய பழமைவாதத்தில் சிக்காதவர்கள் என்று பொதுவாக அறியப்பட்டவர்களே மும்பை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் மஜ்லிஸால் நிறுத்தப்பட்டனர். கிராமம் சார்ந்த தொகுதிகளில் அடிப்படைவாதிகள் களம் கண்டனர். இவர்களால் வைக்கப்பட்ட கோஷம் “ஓடிப்போ ஹிந்துவே அக்பர் வருகிறார்” என்பதாகும். இன்னும் சில இடங்களில் “ஓடிப்போ மோடியே அக்பர் வருகிறார்” என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.


 

பிரச்சாரத்தில் அக்பருதீன் ஒவைசி பேசுகையில் ”வசதிக்கேற்ப பல மசூதிகளைக் கட்டுங்கள். ஒவ்வொன்றுக்கும் பாபர் மசூதி என்று பெயரிடுங்கள். குறைந்தபட்சம் ஒரு லட்சம் மசூதிகள் கட்டப்படவேண்டும்” என்று கூறினார். அதே போல தலித் மக்கள் வாழும் பகுதிகள் காங்கிரசுத் தலைவர் சுஷில் குமார் ஷிண்டேவின் கோட்டை என்று அறியப்பட்டவை. அங்கே பேசிய அக்பருதீன் “எங்கள் மாநிலத்தில் நன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் உங்கள் துன்பம் கண்டு அதற்காகப் போராடவே இங்கே வந்தோம்” என்று பேசினார். தலித்களைக் கவர்வதற்காக எந்த இஸ்லாம் மதத்தில் அம்பேத்கர் சேர மறுத்தாரோ அதையும் அவர் பெயரையும் இணைத்து “ஜெய் மீம் ஜெய் பீம்” என்று கோஷமிட்டார்கள். தேர்தலில் இரண்டு இடங்களில் வென்ற பிறகு அசாதுதீன் ஒவைசி கூறுகையில் “நாங்கள் இங்கே தேர்தலில் நிற்க வந்த போது முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க வருவதாகப் பலரும் குற்றம் சாட்டினர். ஆனால் நாங்கள் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் தங்கள் பிரச்சினைகளைச் சொல்ல ஒரு களம் ஏற்படுத்தவே வந்தோம். மக்களும் எங்களை அங்கீகரித்துள்ளனர்” என்றார். இது போதுமே சிவசேனையை இவர்கள் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று புரிந்துகொள்ள!
http://m.newindianexpress.com/nation/367831

இத்தகைய நம்பிக்கைத் துரோகிகள் தமிழகத்தில் காலூன்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் இந்திய தேசிய லீக் என்ற பெயரில் வலம் வரும் முஸ்லிம் லீகில் இருந்து பிரிந்து இரு கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் ஒன்றிவிடும் வழக்கத்தை இதுவரை கொண்டவர்கள் ஐதராபாத் சென்று ஒவைசியைச் சந்தித்து தமிழகத்தில் காலூன்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் குரலாக மஜ்லிஸ் ஒலிப்பதாகவும் ஆகவே தமிழகத்தில் அவர்கள் வந்து முஸ்லிம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் அப்துர் ரஹீம் என்ற இந்திய தேசிய லீக் தலைவர்.
http://www.shajiullahfirasat.com/hyderabad/mim-formed-tamilnadu/

இந்த ஒவைசி அரசுப்பணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று தட்டி எழுதி வைத்து உதவித்தொகை வழங்கிய மதத்தீவிரவாதி. தாலிபான்களுடன் சமாதானப் பேச்சு நடத்தாவிட்டால் இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் கலவரம் செய்வார்கள் என்று மன்மோகன்சிங்கை மிரட்டிய தீவிரவாதி. ஏற்கனவே தமிழகத்தில் இசுலாமிய பயங்கரவாதிகளும் அடிப்படைவாதிகளும் செய்யும் அட்டூழியம் தாங்கவில்லை. இவர்களுடன் தாலிபான்களை விதந்தோதும் ஒவைசி சேர்ந்து கொண்டால் தமிழகத்துக்கு பெரும் ஆபத்துதான். தமிழகத்தை ஆண்டவன் எவனும் இந்த ஆபத்தில் இருந்து தமிழகத்தைக் காக்கும் வல்லமை பெற்றவனில்லை. மாறாக இவர்களை அனுசரித்துக் கொண்டு ஓட்டுவாங்க எண்ணும் மூடர்களே. இதில் விதிவிலக்கு என்று யாருமில்லை. ஹரிஜனங்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டு அரசியல் நடத்தும் திருமாவளவன் பெரும்பாலும் இசுலாமியர்களுடனே வலம் வருகிறார். டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பெயர் சொல்லி அரசியலில் பிழைப்பவர்கள் அவர் எங்கே போனால் தேசம் நாசமாகும் என்று பெருஞ்செல்வத்தை மறுத்தாரோ அங்கேயே சென்று சேர்வது அவருக்குச் செலுத்தப்படும் என்னவிதமான அஞ்சலி என்று புரியவில்லை. இந்நிலையில் திருமாவளவன் இசுலாமியக் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றுபவர் என்று அவருக்குப் பாராட்டு வேறு.

http://thondinewsnews.blogspot.in/2013_07_01_archive.html

madhani thirumavalavan

இவர் இசுலாம் மதத்துக்கு மாறுவது குறித்தோ அதன் கோட்பாடுகளைப் பின்பற்றுவது குறித்தோ நமக்கேதுமில்லை. அண்மையில் ப்யங்க்ரவாதி அப்துல் நாசர் மதானினியை திருமாவளம்வன் சந்தித்து இந்த மஜ்லிஸ் கட்சியை தமிழகத்தில் தொடங்க பேச்சு நடத்தியாக செய்தி வெளியாகியுள்ளது. ஒவைசியின் அரசியல் பாதைக்கு அடியெடுத்துக் கொடுத்து தேசத்தை இசுலாமிய மயமாக்கும் பயங்கரத்தை நிறைவேற்ற சமூக விரோத வழிகளில் செயலாற்றி வரும் அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இது ஒரு தீவிரவாத அமைப்பு என்பதும் இதன் நடவடிக்கைகள் சமூக ஒற்றுமைக்கும் தேசத்தின் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பவை என்பதை நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். 1998 கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகளுக்குத் துணை நின்று வழிநடத்திய அப்துல் நாசர் மதானி எனும் பயங்கரவாதிதான் இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிறுவனர். இவர்கள் தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் பல அமைப்புகளை நிறுவி அந்த அமைப்புகள் மூலம் தீவிரவாதப் பயிற்சியும் அடிப்படைவாதமும் கற்பிக்கின்றனர். சமூக சேவை அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் எந்த ஒரு பேரிடர் சமயத்திலும் களமிறங்கி மீட்புப் பணிகளில் உதவியாற்றியதில்லை.

இப்படிப்பட்ட அமைப்புகளின் அரசியல் முகமாகத்தான் மஜ்லிஸ் அமைப்பும் ஒவைசி குடும்பமும் வலம் வர விழைகிறது. தமிழகத்தில் ஏற்கனவே காலூன்றி வன்முறைகளைத் தூண்டிவிட்டு அரசை முடக்கிப் பொதுமக்களின் அமைதியான வாழ்வை அழிக்கும் நோக்குடன் வெறிகொண்டு திரியும் தீயசக்திகளுக்கு இது ஒரு அரசியல் முகமூடியாக அமையும். மஜ்லிஸ் தமிழகத்தில் காலூன்ற அனுமதித்தால் தமிழகம் தென்னகத்தின் கஷ்மீராக அந்நிய சக்திகளின் பிடியில் சிக்கிவிடும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி அறம் வளர்த்தும் அறவாழ்வு வேண்டி வந்தாரை வாழவைத்தும் வரலாறு படைத்த தமிழகம் இந்தக் கொடுந்தீவிரவாதிகளைத் தன்னகத்தே கொண்டால் தீராப்பழிக்கு ஆளாகும்.

Read 3444 times
Rate this item
(3 votes)
Last modified on Friday, 14 November 2014 13:53

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link vinoth thackeray Thursday, 19 February 2015 10:09 posted by vinoth thackeray

    very well work

Leave a comment