×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தேசவிரோத அமைப்புகளும் திட்டமிட்ட மதக் கலவரங்களும்

Saturday, 21 February 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

கர்நாடக மாநிலத்தில் புற்றுநோய் மருத்துவத்துக்குப் பெயர் பெற்ற ஷிமோகா நகரம் 19/02/2015 அன்று பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்டு ரத்த பூமியாகி இருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கு பதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இந்த அமைப்பு எத்தகையது? இது ஒரு அகில இந்திய இசுலாமியத் தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பு. இவர்களது தொடக்க நாள் என்று பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியைக் கொண்டாடுகிறார்கள். இதுதான் தேதியா அல்லது அவர்களது ஹிஜ்ரி முறைப்படி 10 மாத வருடக்கணக்கில் ஏதும் தேதிகளை வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இவர்களது ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பவை என்று கேரள உயர்நீதிமன்றம் 2012ல் தடை விதித்தது. இவர்களது இராணுவம் போன்ற சீருடை அணிந்த அணிவகுப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.

B-S5qonCcAAv6Ym

 

ஆனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரசு அரசு வழமை போல ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊர்வலத்துக்கும் பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி வழங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலவரத்துக்குத் திட்டமிடுகிறது என்று உளவுத்துறை எச்சரித்தது. அதனால் ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடக அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் தலையீட்டால் அனுமதி வழங்கப்பட்டது என்று உதயா டிவி விவாதத்தில் படாபட் சீனிவாஸா என்பவர் கூறினார். இதுவரை அரசுத் தரப்பில் இருந்து இது மறுக்கப்படவில்லை.

 

B-S5qonCcAAv6Yn


ஒற்றுமை ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆகவே இது தாருல் இஸ்லாம் எனப்படும் உலகளாவிய இசுலாமியமயமாக்கும் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட ஊர்வலம் என்று உறுதியாக நம்பலாம். ஆங்காங்கே பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களுக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அது பெரிய அளவில் உருவெடுக்காமல் போலீசாரால் தடுக்கப்பட்டது. போலீசார் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட போதும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களையும் ஹிந்து எதிர்ப்பு கோஷங்களையும் தொடர்ந்து எழுப்பினர். ஊர்வலம் காய்கறிச் சந்தையை நெருங்கிய போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுந்ததும் ஊர்வலத்தில் சில கற்கள் விழுந்ததாக கலந்து கொண்ட முஸ்லிம்கள் குரலெழுப்பினர். உடனடியாக சுற்றியிருந்த கடைகள், வண்டிகள் பொதுமக்கள் மீது கல்வீசினர் ஊர்வலத்தில் வந்த முஸ்லிம்கள். கோபி சர்க்கிள், காந்தி பஜார் உள்ளிட்ட இடங்களில் கடைகள் கொளுத்தப்பட்டன. வண்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது.


B-TNKNQCYAA0rtU

ஊர்வலம் முடித்துப் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த கும்பல் விஸ்வநாதன் என்பவரைத் தாக்கியது. பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட விஸ்வநாதன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இறந்துபோன விஸ்வநாதனுடன் சென்ற இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.

B-R4S4PCIAAIXco

இறந்தவர் ஒருவரின் உடலைத் தூக்கிச் சென்ற குழு ஒன்று தாக்கப்பட்டு பிணம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டது. கரும்புச்சாறு விற்கும் சிறுகடைகள், தெருவோரம் பழம் விற்பவர்கள் தாக்கப்பட்டனர். பஞ்சர் ஒட்டும் மரத்தடிக் கடைகள் கொளுத்தப்பட்டன. நேரு ரோடு, துர்கிகுடி, காந்தி பஜார், பி.ஹெச்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தாக்கப்பட்டதால் அவர்கள் வீடுகளிலும் கடைகளிலும் புகுந்து ஒளிந்துகொண்டனர். பல கடைகள், கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. சிவப்ப நாயக்கா சர்க்கிள் பகுதியில் இப்படிக் கலவரம் நடந்த போது காந்தி நகர் பகுதியில் முஸ்லிம்களால் போலீசார் தாக்கப்பட்டனர். பதிலுக்குத் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். கூடுதல் போலீஸ் படை களமிறக்கப்பட்டது. ஊரில் 144 ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. கேரளா, மங்களூர் பகுதிகளில் இருந்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற காவல்துறை உத்தரவிட்டது.
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=298194


சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு இசுலாமியர் வீட்டுக் கண்ணாடி உடைந்தால் மத சகிப்புத்தன்மை குறித்து மணிக்கணக்கில் விவாதிக்கும் ஊடகங்கள் இப்போது மௌனம் சாதிக்கின்றன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் உயிருக்குப் போராடுகின்றனர். ஆனால் மதசார்பின்மை பிராண்ட் ஊடகங்களுக்கு இது போணியாகாது என்பதால் வாய்மூடி இருக்கின்றன.

சரி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்பது என்னவிதமான கும்பல்?

இது பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் இசுலாமிய தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பாக 2006ல் தொடங்கப்பட்டது. கர்நாடக தன்மான மன்றம் (Karnataka Forum for Dignity), தமிழகத்தின் மனித நேய பாசறை, கோவா குடிமக்கள் மன்றம் (Goa's Citizen's Forum), இராஜஸ்தானின் சமுதாய, சமூக கல்விக் கழகம் (Rajasthan's Community Social and Educational Society), மேற்கு வங்கத்தின் குடிமக்கள் அதிகாரப் பாதுகாப்பு இயக்கம் (West Bengal's Nagarik Adhikar Suraksha Samiti), மணிப்பூரின் லிலாங் சமூக மன்றம் ( Manipur's Lilong Social Forum), ஆந்திரப் பிரதேசத்தின் சமூக நீதிச் சங்கம் (Andhra Pradesh’s Association of Social Justice) ஆகிய இசுலாமிய அமைப்புகளின் கூட்டமைப்பே இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட சிமி (SIMI) என்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பின் மற்றொரு வடிவம் என்று கேரள அரசு 2012ல் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த அமைப்பின் செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அரசின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இவ்வமைப்பின் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதித்தது.
http://www.indianexpress.com/news/pfi-is-simi-in-another-form-kerala-govt-tells-hc/979440/

2010ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களின் வீடுகளில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள், அல் காயிதா, தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான பிரச்சார சிடிக்கள், ஆவணங்கள் ஆகியவை கேரள போலீசால் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதம் என்று இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம் நடத்தியது.
http://www.sify.com/news/police-unearth-cds-of-taliban-like-terror-module-in-kerala-news-national-khkmEjhgacc.html

2013ல் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீவிவாதிகளுக்கான ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தியது. அங்கே போலீஸ் ரெய்டு நடத்தியதில் முன்னணி அரசியல், சமூகத் தலைவர்களின் படங்கள், அவர்களது வாகன விவரம், அவர்களது நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் யோகாசனப் பயிற்சி முகாம் நடந்ததாக இந்த அமைப்பினர் கூறினர். யோகாசனப் பயிற்சிக்கு எதற்கு அரிவாள், கத்தி, பெட்ரோல் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள்? பின்னர் தேசிய விசாரணை ஆணையம் NIA விசாரித்து இவ்வமைப்பினர் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவிருந்ததைக் கண்டுபிடித்துச் சொன்னது.
http://www.dailypioneer.com/nation/kerala-cops-confirm-popular-front-terror-camp-in-kannur.html
http://archive.today/Xf5Ls

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மீது 27 கொலைகள் செய்ததாக வழக்கு பதிவானது. அனைத்தும் கம்யூனிஸ்டு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கொலை சம்பந்தமானது. இவர்கள் மீது 27 மதவாதக் கொலைகள், 86 கொலை முயற்சிகள், 106 மதக் கலவர வழக்குகள் உள்ளன என்று கேரள காவல்துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தங்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தப்படுவதாகத் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்டது. இதற்கு இவ்வமைப்பு எந்த ஆதாரங்களையும் அளிக்காமல் மறுப்பு மட்டும் வெளியிட்டது.
http://www.indianexpress.com/news/pfi-is-simi-in-another-form-kerala-govt-tells-hc/979440/

கேரளாவில் ஒரு தனியார் கிறிஸ்தவக் கல்லூரியில் தேர்வுக்கான கேள்வித்தாளில் முகமது நபி குறித்த ஒரு கேள்வி மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி கேள்வியைத் தயாரித்த பேராசிரியர் ஜோசஃப்பின் கை மணிக்கட்டுடன் வெட்டி எறியப்பட்டது. இப்படி கையை வெட்டச் சொன்னது தாருல் கடா (Darul Khada) என்ற ஷரியா சட்டப்படி இயங்கிவரும் இசுலாமிய கட்டப்பஞ்சாயத்து அமைப்பு. இதை நீதிமன்றம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த விசாரணையில் போலீசார் மிகப்பெரிய தீவிரவாதக் கட்டமைப்பைக் கண்டுபிடித்து அவர்களது செயல்பாட்டின் வேகத்தைக் குறைத்தனர். இந்த அமைப்பினர் விசாரணையைத் தொடர்ந்தால் மோசமான விளைவுகள் நேரிடும் என்று போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
http://news.rediff.com/report/2010/jul/07/islamic-court-ordered-chopping-of-profs-palm.htm

2012ல் விஷால் குமார் என்ற ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்புத் தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்களால் கொன்னி பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் முதுகில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இவரோடு சேர்ந்திருந்த 15 ABVP அமைப்பினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக நசீம் ஷஃபீக் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்புடைய மேலும் 19 பேர் தப்பிவிட்டதாகப் போலீஸ் கூறியது.


இதே ஆண்டு சச்சின் கோபால் என்ற ABVP அமைப்பின் மாவட்டத் தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்களால் கண்ணூர் பகுதி மாடர்ன் ITC கல்லூரியில் முதுகில் குத்திக் கொல்லப்பட்டார். தேசத்தின் முதுகில் மட்டுமல்ல தேசபக்தியோடு இருப்பவர்களையும் முதுகில் குத்துவது இந்தத் தீவிரவாத அமைப்பினரின் இயல்பு என்பது இதில் இருந்து தெரிகிறது.
http://newindianexpress.com/states/kerala/article572127.ece
http://www.thehindu.com/todays-paper/tp-national/article3864525.ece

தமிழகத்திலும் ஹிந்து இயக்கத் தலைவர்கள் கொலை, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்துக்களின் மீதான அடக்குமுறை, குடிகார முஸ்லிம் இறந்ததற்கு கலவரம் செய்து ஹிந்துக்களை மட்டும் தேடித் தேடித் தாக்கியது போன்ற பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் பேருந்தில் போகும்போது கோவிலைப் பார்த்துக் கும்பிட்ட ஹிந்து முஸ்லிம் வெறியர்களால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம், எவனோ அமெரிக்காவில் முகமது நபி பற்றி சினிமா எடுத்ததற்கு மவுண்ட் ரோட்டை மூன்று நாட்கள் மறித்தது போன்ற சம்பவங்கள் மேலும் அப்பாவி ஹிந்துக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகின்றன.


இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழகக் கிளை இராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால் காவல்துறை விசாரித்த போது கராத்தே பயிற்சி என்று சொன்னார்கள். கராத்தே பயிற்சிக்கு எதற்கு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான குறி பார்க்கும் அமைப்புகள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. கராத்தே பயிற்சிக்கு மேற்கு வங்கம், பிஹார், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஏன் முஸ்லிம்கள் மட்டும் வருகிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

இராமநாதபுரத்தில் சென்ற 2014ஆம் ஆண்டு இதே போல அமைப்பு நாள் ஊர்வலம் என்று போனார்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். போலீசாரிடம் சீருடை அணிவதில்லை, அமைதியாக ஊர்வலம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இராணுவம் போன்ற சீருடை அணிந்தும் டமாரங்கள் அடித்துக் கொண்டும் போலீஸ் வகுத்துக் கொடுத்த பாதையை விட்டு விலகி ஊர்வலமாகச் சென்றனர். போலீசார் தடுத்து எச்சரித்த போது மாவட்ட காவல்துறை அதிகாரி திரு.வெள்ளத்துரையை வண்டி ஏற்றிக் கொல்ல முயன்றனர். இவர்கள் மீது இன்னும் சரியான நடவடிக்கை இல்லை.
http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-41-28/item/538-jihadi-attacks-on-the-streets-of-ramanathapuram-a-reminiscent-of-kashmir

மேற்கு வங்கத்தின் பர்த்வான் பகுதியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் இவற்றுக்கும் தேசம் முழுவதிலும் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் இந்த அமைப்பு தீவிரவாதத்துக்கு மதத்தின் பெயரால் எல்லா விதமான ஆதரவும் தரும் ஒரு பயங்கரவாத கூட்டமைப்பு. சர்வதேச ஜிஹாதிகளான தாலிபான், அல் காயிதா உள்ளிட்ட அமைப்புகளுக்கு நம் நாட்டில் தளம் அமைத்துத் தர இவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் தடை செய்யப்படுவது தேச நலனுக்கு மிகவும் தேவையானது. கொத்தாக விழும் ஓட்டுக்காக இவர்களை வளரவிட்டால் தமிழகம் மீண்டும் 1998ல் கோவை சந்தித்த கொடூரத்தைச் சந்திக்க நேரலாம். பயங்கரவாதம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டால் மட்டுமே இந்த தேசத்தில் அமைதியான வாழ்வை விரும்பும் யாரும், குறிப்பாக ஹிந்துக்கள், நிம்மதியாக வாழ இயலும்.

வந்தே மாதரம்!

Read 2623 times
Rate this item
(2 votes)
Last modified on Saturday, 21 February 2015 16:28

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment