×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பயங்கரவாதத்துக்கு எதிரான காவல்துறையின் பலவீனம் – பயமா? சுதந்திரமின்மையா?

Wednesday, 01 July 2015 00:00 Written by  பி.ஆர்.ஹரன் font size decrease font size decrease font size increase font size increase font size

வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் கணிசமான அளவில் உள்ளனர். இதில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர், பெரும்பான்மையானவர்கள் தோல் பதனிடும் தொழிலில் இருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து விதமான வியாபாரங்களையும் முஸ்லிம் சமுதாயத்தினர் இப்பகுதியில் செய்து வருவதைப் பார்க்கலாம்.


இவர்களுடைய வாக்குகள் தான் அந்தப் பகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஆகவே தான் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் முஸ்லிம் சமுதாயத்தினரைச் சேர்ந்தவர்களையே தங்கள் வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. அதோடு மட்டுமல்லாமல் அந்தச் சமுதாயத்தினரை எவ்வகையினேலும் திருப்திப்படுத்தும் விதமாகவும் செயல்படுகின்றனர்.


கடந்த சனிக்கிழமை (27 ஜூன்) இரவு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் முஸ்லிம் சமுதாய மக்கள் சாலைகளில் கடுமையான வன்முறையில் இறங்கியுள்ளனர். காவல்துறையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கர வன்முறையில், சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு நேர்ந்துள்ளது.

ambur muslim protest



வன்முறையும் அதன் பின்னணியும்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா (23), தோல் பதனிடும் நிறுவனத்தில் பணியில் இருந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரிந்த ஷமீல் அகமது (26) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களின் கள்ளத் தொடர்பு தெரியவந்ததால், அந்த நிறுவனத்தில் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளனர். பிறகு ஈரோடில் வேலை தேடிக்கொண்ட ஷமீல் அகமது, பவித்ராவை ஈரோட்டுக்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து இருந்துள்ளார். பிறகு பவித்ராவின் வீட்டிற்கு ஃபோன் செய்து அவரைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஜூன் 13ம் தேதி வீட்டை விட்டுப் போன பவித்ரா இன்றுவரை வீடு திரும்பவில்லை.


இதனிடையே பவித்ராவின் கணவர் பழனி, ஷமீல் அகமது தன் மனைவியைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று அவர் மீது சந்தேகம் உள்ளதாகக் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு ஷமீல் அகமதுவை விசாரணைக்காகப் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.  விசாரணை முடிந்து அவரைத் திருப்பி அனுப்பியவுடன், அவர் உடல்நிலை மோசமானதாகவும், அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பிறகு வேலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் நல்ல சிகிச்சை தேவை என்பதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் கடந்த வெள்ளிக்கிழமை 26ம் தேதி இரவு இறந்துள்ளார்.


இதனிடையே, 15ம் தேதி ஷமீல் அகமதுவை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், 19ம் தேதி வரை நான்கு நாட்கள் அவரைச் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு தனியார் இடத்தில் காவலில் வைத்திருந்ததாகவும், அப்போது விசாரணை என்கிற பெயரில் கடுமையாக அடித்து உதைத்துள்ளதாகவும், அதனால்தான் அவருடைய உடல்நலம் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி அவர் இறந்துவிட்டார் என்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறைத் தரப்பு இதை மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ஷமீல் அகமது இறந்த செய்தி கிடைத்ததும், 27ம் தேதி சனிக்கிழமை அவருடைய உடலுடன் இறுதி ஊர்வலம் செல்ல அனுமதி பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அன்று இரவு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆம்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, ஷமீல் அகமதுவைத் தாக்கிய இன்ஸ்பெக்டர் மார்டின் மற்றும் காவலர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த காவல்துறை உயர் அதிகாரிகள், ஷமீல் அகமதுவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மீதும், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சபாரத்தினம் மீதும், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீதும் குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) பிரிவின்கீழ் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை இடைக்காலப் பணி நீக்கமும் செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாகத் தீவிரமாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் அவர்களும் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையும் நீதித்துறையும் இவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுத்த பிறகும், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று கூறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை-பெங்களூரு சாலையில் 500க்கும் மேற்பட்டோர் கூடி சாலைப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, பொதுச் சொத்துக்களை நாசம் செய்து, பயங்கரமான வன்முறையிலும் தீ வைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் குவிக்கப்பட்ட பின்பும் அவர்களை விட அதிகமான எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமானவர்கள் கூடி மேலும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர்.

சாலையில் போய்க்கொண்டிருக்கும் வாகனங்களைத் தாக்கியுள்ளனர். பேருந்துகள், லாரிகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்த பொது மக்களும், லாரி ஓட்டுனர்களும் கூட கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ள்ளனர். ஒரு வேன், ஒரு மினி பஸ், நான்கு இரண்டு சக்கர வாகனங்கள், இரண்டு போலிஸ் ஜீப்புகள், அருகில் இருந்த ஒரு டாஸ்மாக் ஒயின் ஷாப் ஆகியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

minibus burning

tacmac shop

மேலும் அருகில் இருந்த பல கட்டிடங்களையும் கற்கள் வீசித் தாக்கிச் சூரையாடியுள்ளனர். இரண்டு தனியார் மருத்துவமனைகளும் ஆம்பூர் டவுன் காவல் நிலையமும் சூரையாடப்பட்டுள்ளன. ஒரு ஆம்புலன்ஸ் உட்பட பல பேருந்துகளும், லாரிகளும், கற்களால் தாக்கப்பட்டு அவற்றின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன. ஆம்பூர் மட்டுமல்லாமல், அருகில் உள்ள நெல்லிக்கொல்லை போன்ற பகுதிகளீலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

attacked bus1


வேலூர் சரக டி.ஐ.ஜி தமிழ்சந்திரன், மாவட்டக் கண்காணிப்பாளர் செந்தில்குமரி, துணைக் கண்காணிப்பாளர்கள் கணேசன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் திரண்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த வன்முறையாளர்கள் காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கியதில், கண்காணிப்பாளர் செந்தில்குமரி மற்றும் 15 பெண் போலீஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கடுமையாகக் காயம் அடைந்துள்ளனர். கற்கள் மட்டுமல்லாமல், பிளேடுகள், கத்திகள் போன்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

police attack1


police attack2


police attack3


police attack4



திட்டமிட்ட தாக்குதலா?


Aslam Bash

இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் முகமான மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா, போராட்டக்காரர்களையும் மற்ற அடிப்படைவாத இயக்கத்தவர்களையும் தூண்டிவிட்டு வன்முறையில் இறங்கவைத்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது. அதை மறுத்து, தான் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்ததாகக் கூறுகிறார் அவர். ஆனால் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை மாலை ஏழரை மணிக்கெல்லாம் அடைக்கச் சொல்லியுள்ளனர் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.


மேலும், முன்னேற்பாடாக வெளியூரிலிருந்து முஸ்லிம்களை வரவழைத்துத் தங்கவைத்திருந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக 17 வயதுக்குக் குறைவான சிறார்களைக் கல் எறிவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்தத் தாக்குதலும் வன்முறையும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசரித்து வருகிறார்கள். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷாவைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது.

 minors van


கள்ளக் காதலா அல்லது லவ் ஜிகாதா?

இந்தியா முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் ஒரு இயக்கமாக நடத்தப்பட்டு வரும் “லவ் ஜிகாத்” தமிழகத்திலும் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன மதத்தைச் சார்ந்த பெண்களைக் காதல் வலையில் சிக்க வைத்து, மதம் மாற்றித் திருமணம் புரிந்துகொள்வதை ஒரு இயக்கமாகவே செய்து வருகிறனர். இதில் கன்னிப்பெண்கள் மட்டுமல்லாமல், திருமணமான இளம்வயது பெண்களையும் சிக்க வைக்கின்றனர். அதே யுக்தியை இறந்துபோன ஷமீல் அகமதுவும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ஷமீல் அகமதுவுடன் இணைத்துப் பேசப்படும் 23 வயது பவித்ரா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒரு குழந்தைக்குத் தாயும் கூட. இருப்பினும் அவரைக் காதல்வலையில் சிக்க வைத்து, தான் தங்கியிருக்கும் ஈரோடுக்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து இருந்துவிட்டு, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டேன் என்று அவர் வீட்டாரிடமே ஒருவன் சொல்கிறான் என்றால் அவனுடைய பின்புலத்தில் ஒரு பெரும் சக்தியே இருக்கிறது என்றுதானே அர்த்தம். ஷமீல் அகமது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கிளைத்தலைவர் என்பதும் குறிபிடத்தக்கது. மேலும் காணாமல் போன பவித்ரா இன்றுவரை வீடு திரும்பவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆகவே, ஷமீல் அகமது-பவித்ரா உறவு கள்ளக்காதலா அல்லது லவ் ஜிகாதா என்பதைத் தீவிர விசரணையில் கண்டறிய வேண்டும். காணாமல் போன பவித்ரா என்ன ஆனார்? உயிருடன் இருக்கி/றாரா, கொலை செய்யப்பட்டுவிட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும்.



வன்முறைக்குப் பிறகு...

ஆம்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தாலும், காவல்துறை இதுவரை 95 பேரை மட்டுமே அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. முதல்நாள் 150 முதல் 200 பேர் வரைக் கைது செயப்பட்டதாகவும், அஸ்லாம் பாஷா அவர்கள் தலையீட்டில் பலரை விடுவித்துவிட்டதாகவும் தகவல் வருகின்றது. மிச்சமிருக்கும் கைது 95 பேர்கள் வேலுர், கடலூர் மற்றும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சிறையிலேயே மட்டன் பிரியாணி வழங்குவதற்கும் காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது.

பவித்ராவைக் கண்டுபிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விசாரித்துக் கண்டறிய, வருவாய்த்துறையினர் நான்கு குழுக்கள் அமைத்துள்ளனர். மேலும் ஜுடீஸியல் மாஜிஸ்ட்ரேட் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் DGP அசோக் குமார் அவர்களை சந்தித்துள்ளதாக முகநூல் முஸ்லிம் மீடியா தெரிவிக்கின்றது. இந்தச் சந்திப்பின் போது கூட்டமைப்பு சார்பாக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஹனிஃபா, SDPI கட்சி மாநில தலைவர் K.K.S.M. தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், வெல்ஃபேர் பார்ட்டி மாநில தலைவர் S.N. சிக்கந்தர், ஜமாத்துல் உலமா சென்னை மாவட்ட தலைவர் தர்வேஷ் ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டதாகவும், காவல்துறையின் சார்பாக DGP அசோக் குமார், உளவுத்துறை IG கண்ணன், DIG ஈஸ்வரன், SP அருளரசு ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அப்போது கூட்டமைப்பு சார்பில்


1. இளைஞர் ஷமீலின் படுகொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மார்டின் உட்பட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

2. படுகொலை செய்யப்பட்ட ஷமீலின் குடும்பத்திற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

3. ஆம்பூரில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

5. ஆம்பூரில் அமைதி திரும்பிடவும், பொதுமக்கள் மத்தியில் நிலவியுள்ள அச்சம் நீங்கிடவும் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாகவும் முகநூல் முஸிம் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளில், ”முஸ்லிம்கள்” என்கிற பதத்திற்குப் பதிலாக “பொதுமக்கள்” என்கிற பதத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பொதுமக்களே வன்முறையில் இறங்கியதாக ஒரு தோற்றத்தை முன்னிறுத்துகிறார்கள். பொதுமக்கள் என்கிற போர்வையில் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

ஆம்பூர் வன்முறை சம்பந்தமாக, ஹிந்து முன்னணி நிறுவனர் தலைவர் திரு.ராமகோபாலன், “மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு, அரசு தள்ளினால், காவல்துறையே பாதுகாப்பு இல்லாத துறை என்கிற நிலை ஏற்பட்டால், இதன் விளைவுகள் விபரீதமாக மாறிவிடும்” என்று எச்சரித்தும், “வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டியவர்கள், பரப்பியவர்கள், அதை முன்னின்று நடத்தியவர்கள் ஆகியோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி, ஹிந்து மக்கள் கட்சி மற்றும் ஹிந்து அமைப்புகள், வன்முறையைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

 

காவல்துறையினர் மீதான முஸ்லிம்களின் தாக்குதல் ஒரு தொடர்கதை

காவல்துறைக்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போக்கு தமிழகத்திற்குப் புதியது கிடையாது. பல வருடங்களாகவே தொடர்ந்து நடந்துவருவது தான். 1997ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதியன்று கோவையில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மூன்று பேர் ஒரே மோட்டார் பைக்கில் சென்றதற்காகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சாதாரணக் கடமையைக் காவல்துறையினர் செய்ததற்காகப் போக்குவரத்துக் காவலர் செல்வராஜை அல் உம்மா இயக்கத்தவர்கள் கத்தியால் குத்திப் படுகொலை செய்தனர்.


இந்தச் சம்பவத்திற்கு முந்தைய 18 மாதங்களில் காவலர் மற்றும் சிறைக்காவலர்கள் நால்வர் கோவையிலும் மதுரையிலும் முஸ்லீம் இயக்கத் தீவிரவாதிகளால் கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்த நால்வரில் மதுரை மத்திய சிறை ஜெயிலர் எஸ்.ஜெயப்ரகாஷும், கோவை மத்திய சிறை வார்டர் ஜி.பூபாலனும் முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த மாதிரியான போலீசுக்கு எதிரான முஸ்லிம்களின் தாக்குதல்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.


ஆகவே, முஸ்லிம்கள் காவல்துறைக்கு எதிராக வன்முறையில் இறங்குவது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல வருடங்களாக நடந்து வரும் தொடர்கதைதான்.

 

அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் ஆதரவு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் ஒருவிதமான போலித்தனமான மதச்சார்பின்மைக் கொள்கை கடைப்பிடித்து வரப்படுகிறது. நேருவின் சோஷலிச செக்யூலரிஸ கொள்கைகளப் பின்பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப் போலி மதச்சார்பின்மை கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. இதன் விளைவாக அரசியல் கட்சிகள், சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு அவர்களை எவ்வழியிலேனும் திருப்திப் படுத்தி அவர்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்ளப் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றுகின்றன.


ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களிடம் சரண் அடையாத குறையாக செயல்படுவதைக் கண்ட சிறுபான்மையின மக்கள் தங்களுடைய காரியங்களைச் சுலபமாக சாதித்துக்கொள்ளத் தொடங்கினர். இந்த அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல், சிறுபான்மையின மக்களிடையே ஒரு அகம்பாவமான மனப்போக்கை தோற்றுவித்தது. தங்களுடைய வாக்கு வங்கியைச் சாதகமாக வைத்துக்கொண்டு நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தங்களுடைய ஆக்கிரமிப்பைப் பெருக்கத் தொடங்கினர். தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுக்கும்படி செய்தனர். ஆட்சியாளர்களும் மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பான்மையினருக்கு விரோதமாகவும் சிறுபான்மையினருக்குச் சாதகமாகவும் பல கொள்கைகளைப் பின்பற்றி வாக்கு வங்கி அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடந்தேறிவருகிற அயோக்கியத்தனமான அரசியல்.


இதன் பயனாக சிறுபான்மையின மக்களுக்கு, குறிப்பாக அவர்களிடையே புற்றீசல் போலக் கிளம்பிக்கொண்டிருக்கும் மத அடிப்படைவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு ஆக்கிரமிக்கும் மனோபாவமும் அடங்கமறுக்கும் மனப்பான்மையும் எற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், நாம் என்ன செய்தாலும் நம் மீது ஆட்சியாளர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்கிற மமதையும் ஏற்பட்டுள்ளது.


இதன் விளைவே நாடெங்கும் அதிகரித்து வரும் மத அடிப்படைவாதமும், மதமாற்றமும், தீவிரவாதச் செயல்களும். இதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிகம் என்று சொல்லலாம். அதற்குக் காரணம் ஹிந்து விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும். கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியிலிருக்கும் தி.மு.கவும் அ.தி.மு.கவும், பெரும்பான்மையினருக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளன என்பதற்குத் தமிழகத்தில் வேகமாகப் பெருகி வரும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றங்களும், அவர்களின் அடிப்படைவாத, தீவிரவாத நடவடிக்கைகளுமே சான்று.


இந்தப் பின்னணியில்தான் நாம் ஆம்பூர் வன்முறையைப் பார்க்க வேண்டும்


தமிழகத்தில் உள்ள அடிப்படைவாத அமைப்புகள்

”இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்” (SIMI) நம் நாட்டில் பல மாநிலங்களில் பல பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் பழனி பாபா “ஜிகாத் கமிட்டி” என்ற இயக்கத்தையும், எஸ். எ. பாஷா “அல் உம்மா” இயக்கத்தையும் தொடங்கி, நடத்தி வந்தனர். இருவரும் பல வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டதோடு அல்லாமல் பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தினர். இதனிடையே, பழி தீர்க்கும் படலத்தில் பழனி பாபா கொலை செய்யப்பட்ட பிறகு, ஜிகாத் கமிட்டி சிதறுண்டு போனது. பின்னர் 1995-ல், பாஷாவுடன் ஏற்பட்ட மனமுறிவின் காரணமாக அல் உம்மாவிலிருந்து வெளிவந்த ஹைதர் அலியால், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” தொடங்கப்பட்டது. இவர் ஜிகாத் கமிட்டியில் பழனி பாபாவுடனும் இயங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஹைதர் அலியுடன் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த ஜவஹிருல்லாவும் இணைந்தார்.


பின்னர் கோவைத்தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல் உம்மா தடை செய்யப்பட்டதால் “மனித நீதிப் பாசறை” என்கிற பெயரில் இயங்கி வந்தனர். த.மு.முக தன்னுடைய அரசியல் முகமாக 2009-ல் மனிதநேய மக்கள் கட்சி என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. இவை போதாது என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், பாப்புலர் ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் தொடங்கப்பட்டன. தற்போது 24 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

 

சமீப கால நிகழ்வுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியும் அடைந்த பிறகு, இவர்களுடைய ஆக்ரோஷமும், ஆக்கிரமிப்பும், அராஜகமும் அதிகமாகிவிட்டது கண்கூடாகத் தெரிகின்ற விஷயம். இவர்களுடைய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழக அரசும் கண்மூடி மௌனமாக இருக்கின்றது.

முதலாவதாக, பாஜக மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்களின் நாடு தழுவிய ரத யாத்திரையின் போது, அக்டோபர் 28 2011 அன்று அவர் தமிழகம் வந்த சமயத்தில், திருமங்கலத்திற்கும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் இடையே, ஒரு பாலத்தின் கீழ் பைப் வெடி குண்டுகளை வைத்து அவரைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாகக் காவல்துறை எச்சரிக்கையாக இருந்து அந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்தனர்.

இரண்டாவதாக, 2012 செப்டம்பர் 14 முதல் 18 வரை, அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்ட “முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்ற திரைப்படத்தில் நபிகள் நாயகம் அவதூறு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திரைப்படத்தை எதிர்த்து ஐந்து நாட்கள் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையிலும் அமெரிக்க தூதரகத்தின் அருகிலும் வன்முறையில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள். வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்க தூதரகம் மூன்று நாட்கள் மூடப்பட்டது. அண்ணா சாலையின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு பொது மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். வன்முறையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் சென்னை மாநகர போலிஸ் கமிஷணர் திரு.திரிபாதி அவர்கள் பலிகடாவாக்கப்பட்டு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

மூன்றாவதாக, 2011 டிசம்பர் 19 மற்றும் 22 தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணி பகுதிகளில் தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் துறவி ஸ்ரீ ராமலிங்க அடிகளாரைப் பற்றி அவதூறு செய்து தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் இயக்கத்தினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர். காவல்துறை அவர்களை கண்டுகொள்ளாமல், புகார் கொடுக்கச் சென்ற ஹிந்து முன்னணி இயக்கித்தனர் மீது ஜாமீன் இல்லா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. ஆனால் தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மீது ஜாமின் உள்ள பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அவர்கள் கும்பலாக வந்து காவல்நிலையத்தை முற்றுகையிடுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்று ஒரு காவலர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நான்காவதாக 2012 ஜூன் 25-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில், மேற்குவங்கம், கேரளம், கர்நாடகம், பிகார் போன்ற நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்து இஸ்லாமிய அடிப்படைவாத முகாம் ஒன்றில் கலந்துகொண்ட நபர்களைப் பிடித்த காவல்துறை, தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை விட்டுவிட்டது.

ஐந்தாவதாக, ஜனவரி 2013-ல் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 24 இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. உலகை மிரட்டும் தாலிபான் பயங்கரவாதம் பற்றிய திரைப்படமாக இருந்தாலும் அதில் இஸ்லாம் மதவுணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகச் சொல்லி போராட்டம் நடத்தி படத்தை வெளியிடாமல் செய்தனர். அவர்களின் அரசியல் சாஸன விரோத போராட்டங்களுக்குச் செவி சாய்த்த தமிழக முதல்வரும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அளவிற்கு ஆள்பலம் இல்லை என்று கூறினார். கடைசியில் பேச்சுவார்த்தைகள் நடத்தி பல காட்சிகளை நீக்கிய பிறகே கமலஹாஸனால் படத்தை வெளியிட முடிந்தது.

அதே போல், நடிகர் விஜய் நடித்த “துப்பாக்கி” திரைப்படத்திலும் பயங்கரவாத இயக்கங்களைப் பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு இஸ்லாமிய மதவுணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன என்கிற பெயரில் ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழக அரசு தானாகவே விஜய் குழுவினரைக் கூப்பிட்டு காட்சிகளை நீக்கச் சொல்லி நடவடிக்கை எடுத்தது.

ஆறாவதாக, 2013 மே மாதம் 15-ம் தேதி, இந்தியாவின் மீது படையெடுத்தவர்களும் கொடுங்கோல் புரிந்தவர்களுமான ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு, அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்கிற பெயரில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஏழாவதாக, 2013 மே 19-ம் தேதி, காஷ்மீர் பயங்கரவாதியான யாஸின் மாலிக் என்பவனை, அவன் கடலூரில் தமிழ் பிரிவினைவாதக் கூட்டத்தில் கல்ந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைப் பேசிய பிறகும், கைது செய்யாமல் தப்பிச்செல்ல விட்டது தமிழகக் காவல்துறை.

எட்டாவதாக, 2013 ஜூலை 6-ம் தேதி, தனி இட ஒதுக்கீடு, திருமணச் சட்டத்திலிருந்து விலக்கல், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, பாஜக மற்றும் அதனைச் சார்ந்த ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகள், தாக்குதல்கள் சம்பந்தமாக பயங்கரவாதிகளான போலிஸ் ஃபக்ருதீன், பன்னா இஸ்மயில், பிலால் மாலிக் ஆகியவர்கள் மிகவும் காலதாமதமாகக் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் மூவருக்கும் உதவி செய்துள்ள முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்த மற்றவர்கள் இன்னும் பிடிபடாமலேயே இருக்கிறார்கள். இவர்களுள் சிலர், 2012 ஏப்ரல் 16-ல் பெங்களூரு பாஜக அலுவலகத்தின் அருகில் குண்டு வெடிப்பு நிகழ்த்தியதிலும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டினம் என்னும் ஊரில் சையத் என்கிற முஸ்லிம் தீவிரவாதி காவல்துறை துணை ஆய்வாளர் காளிதாசைத் தாக்கிக் கத்தியால் குத்தவந்தபோது, தற்காப்புக் கருதி அவர் சுட்டதில் அவன் இறந்து போனான். ஆனால் முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினர் பெரும் போராட்டம் நடத்தி அந்தத் துணை ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிய வைத்து அவரைக் கைதும் செய்யவைத்துள்ளனர். இது போதாதென்று அந்தத் தீவிரவாதி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5 லக்ஷம் உதவித் தொகையும் வழங்கியுள்ளது.


பலவீனமான காவல்துறை நாட்டு நலனுக்கு உகந்ததல்ல

மேற்கண்ட பல சம்பவங்களின் பின்னணியில் ஆம்பூர் வன்முறையைப் பார்த்தோமானால், நமக்குச் சில அப்பட்டமான உண்மைகள் தெளிவாகப் புரியும்.

1. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் ஆகியோரின் வாக்கு வங்கி அரசியலாலும், போலி மதச்சார்பின்மைக் கொள்கைகளாலும், முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள எந்த அளவுக்கும் செல்லக்கூடிய துணிச்ச்லைப் பெற்றிருக்கிறார்கள்.

2. எந்த ஒரு சிறிய விஷயத்திற்கும், தங்களுடைய எண்ணிக்கை வலிமையைக் காட்டி காவல்துறையையும், அரசையும், ஆட்சியாளர்களையும் மிரட்டிப் பணிய வைக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

3. அரசு (தி.மு.க அரசானாலும், அ.தி.மு.க அரசானாலும்) காவல்துறையைச் சுதந்திரமாக இயங்கவிடுவதில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும், சட்டப்படியான நடவடிக்கைகளைக் கூட, எடுக்க வேண்டாம் என்று அவர்களுக்கு வாழ்ய்மொழி உத்தரவும், அழுத்தமும் கொடுத்து வருகின்றது. இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவது. இதன் விளைவு என்னவென்றால் காவல்துறை சுதந்திரம் இன்றிச் செயலிழந்து பலவீனமாகக் காட்சி தருகிறது.

4. அப்படியும் நடவடிக்கை எடுக்க முயலும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்காமல், அவர்களைப் பணிமாற்றம் செய்தும், விசாரணைக்கு உட்படுத்தியும், கைது செய்தும் அரசு தவறான நடவடிக்கை எடுப்பதால், காவல்துறை அதிகாரிகள் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே பயப்படுகிறார்கள்.

5. முஸ்லிம் தீவிரவதிகள் பயன்படுத்தும் ஆயுதங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகக் கற்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதும், கற்களை வீசிப் பொதுச் சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பதும், சாதாரணமாகக் கஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத பிரிவினைவாத அமைப்புகள் செய்யும் தாக்குதல்கள். இது பாலஸ்தீனத்திலிருந்து காஷ்மீருக்கு வந்த பழக்கம். இது அடுத்ததாகத் தமிழகத்திற்கு வந்துள்ளது. அடுத்ததாக பிளேடுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தும் கத்திகள். இவை காஷ்மீர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பயன்படுத்துபவை. இவையும் தற்போது தமிழகத்தில் வழக்கத்தில் வந்துள்ளது.

6. கொலையானாலும், வன்முறையானாலும், உள்ளூர்வாசிகள் செய்யாமல் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்துச் செய்ய வைப்பதைத் தற்போது ஒரு யுக்தியாகவே பயன்படுத்துகின்றன இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள். ஆம்பூரில் கூட வெளியூர்களிலிருந்து வந்த ஆட்கள் அதிகம் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் குறிப்பிட்ட அளவு 17 வயதுக்குக் குறைவான சிறார்கள். போராட்டங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தும் யுக்தியும் பாலஸ்தீனத்திலிருந்து, காஷ்மீர் வந்து, தற்போது தமிழகமும் வந்துள்ளது. மேலும் தமிழகமெங்கும் பல பகுதிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் காணப்படுகின்றனர். அவர்களுடைய நடை உடை பாவனைகள் உள்ளூருக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கின்றது. அவர்கள் பெரும்பாலும் பள்ளிவாசல்களிலும் ஜமாத்துகளிலும் தங்கவைக்கப்படுகின்றனர். அவர்கள் யார், எந்த நாட்டைச் சேர்த்வர்கள், முறையான பயண ஆவணங்களையும் விசாக்களையும் வைத்துள்ளார்களா, என்பவையெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும்.

7. போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றும் அரசியல் கட்சிகளின் பேடித்தனமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆம்பூர் வன்முறை நடந்து மூன்று தினங்களுக்கு மேலாகியும், பாஜக தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் நடந்தேறிய வன்முறைத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் எந்த அரசியல்கட்சித் தலைவருக்கும் அவர்களைக் கண்டிக்கத் தைரியம் இல்லை.

8. ஹிந்துக்களுக்கு எதிராகத் தலித் சமுதாயத்தினரைத் திருப்பிவிட்டு, அவர்களை ஹிந்து பண்பாட்டிலிருந்து பிரித்துச் செல்ல, சிறுபான்மையினருடன் கைகோத்து முயற்சி செய்துவரும் திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் கட்சித் தலைவர்களின் கள்ள மௌனம் மிகப் பெரும் இறைச்சலாகக் கேட்கிறது. ஷமீல் அகமதால் ஏமாற்றபட்டு தற்போது காணாமல் இருக்கும் பவித்ரா தலித் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தும், இவர்கள் வாய்மூடி மௌனம் சாதிப்பது, இவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


காவல்துறையினரின் எண்ணங்கள்

வேலூர் மாவட்டக் காவல்துறையினர் தங்கள் பெயரைப் போடக்கூடாது என்று கூறி தினமலர் (30.06.2015) நாளிதழுக்குக் கூறியதை எடுத்துக்காட்டுவது, தமிழகக் காவல்துறையின் பரிதாபமான நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். அவர்கள் கூறியதாவது:

“கடந்த, 27ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, 800 போலீசார் மட்டும் இருந்தனர். ஆனால், கலவரம் செய்தவர்கள், 6,000 பேர். எஸ்.பி., செந்தில்குமாரி தாக்கப்பட்ட போது, நாங்கள் அதை தடுத்தோம். கலவரக்காரர்கள் எங்கள் மீது ஜல்லி கற்களை வீசித் தாக்கினர்; தடியால் அடித்தனர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உயிர் தப்பினால் போதும் என, ஓடி வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பல பெண் போலீசார் அழுது கொண்டே ஓடினர். கலவரக்காரர்கள் அந்த வழியே வந்த லாரி மற்றும் பஸ்களை கொளுத்தினர். பஸ்சில் வந்த பயணிகளை தாக்கினர். இதை நாங்கள் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி, கலவரம் செய்பவர்கள் மீது, 'லத்தி சார்ஜ்' செய்ய வேண்டாம்; துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்; கலவரக்காரர்களிடம் நைசாகப் பேசி சமாளிக்கும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததால், உயர் அதிகாரிகள் எங்களிடம், 'நீங்கள் அடி வாங்கி கொள்ளுங்கள்; திருப்பி அடிக்காதீர்கள்' என, கூறிவிட்டனர்.

இதனால், நாங்கள் பின் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டாவது காரணம், போலீஸ் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒரு கலவரத்தை அடக்க திராணியில்லாமல், 54 போலீசார் அடி வாங்கி ஓடி வந்த சம்பவம் தமிழகத்தில், முதல் முதலாக ஆம்பூரில் தான் நடந்தது.

இதற்காக, நாங்கள் வெட்கப்படுகிறோம். எங்கள் மீது தவறு இல்லை. மேல் அதிகாரிகள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு, நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். உயர் போலீஸ் அதிகாரிகள் எங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். கலவரக்காரர்கள் எப்படி தாக்கினர் என, விசாரணை நடத்தவே இல்லை.”

வேலூர் மாவட்டக் காவல்துறையினரின் மேற்கண்ட வாக்குமூலம், பயங்கரவாதத்துக்கு எதிரான தமிழகத்தின் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது தமிழகக் காவல்துறை, பலவீனமாக, செயலிழந்து, பயத்துடன் இருக்கிறது. இந்த அவலமான நிலையைத்தான் ராமகோபாலன் தன்னுடைய பத்திரிகை அறிவிப்பில் தெளிவாகக் கூறி எச்சரிக்கை செய்துள்ளார். தமிழ் மக்கள் தமிழகத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.


முதல்வர் மௌனத்தைக் கலைத்து விளக்கம் தரவேண்டும்

தன்னுடைய ஒரு முக்கிய அங்கமான கவல்துறையைப் பாதுகாக்க ஒரு அரசு தவறிவிட்டால், அது நாட்டிற்கே கேடு விளைவிக்கும். அது நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு, காட்டாட்சி நிலவுவதற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிக்கும்.

விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனையின் போது, “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் 7 லக்ஷ்ம் உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம். ஆகவே அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழகத்தின் 524 சினிமா தியேட்டர்களுக்கும் அரசு பாதுகாப்பு கொடுக்க முடியாது.” என்று தன்னிலை விளக்கம் அளித்த முதல்வர்,

வரிசையாக ஹிந்து இயக்கத்தவர்கள் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது, “கொடுக்கல் வாங்கல், ரியல் எஸ்டேட், கள்ளத் தொடர்பு, கந்துவட்டி ஆகிய காரணங்களால் நடந்த கொலைகள்” என்று அப்போதைய டி.ஜி.பி. மூலமாக விளக்கம் கொடுத்துவிட்டு, “தமிழகத்தில் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் முதன் முறைக் குற்றச் செயல் புரிபவர்கள் என்பதால் அவர்களைப் பற்றி முன்கூட்டியே அறிதல் இயலாது என்றும் குற்றங்களை முற்றுமாக அழிக்க முடியாது; அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் முடியும்” என்றும் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர்,

மூன்று தினங்களாகியும் இந்த மாபெரும் கலவரத்தைப் பற்றி மௌனம் மட்டுமே சாதிப்பது எங்ஙனம்? இந்த வன்முறைக் கலவரத்தைப் பற்றியும், தமிழகத்தில் பொதுவாகவே பெருகிவரும் அடிப்படைவதம் மறும் ஜிகாத் பற்றியும் தமிழக மக்களுக்கு விளக்கம் தரவேண்டிய கடமை முதல்வருக்கு இருக்கிறது.

 

ஆதாரம்: - பத்திரிகைச் செய்திகள்

Read 2770 times
Rate this item
(7 votes)
Last modified on Wednesday, 01 July 2015 18:50

1 comment

  • Comment Link padma Thursday, 02 July 2015 07:16 posted by padma

    we ll never learn any lesson

Leave a comment