சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலில் பத்ரு போர் என்று ஒரு விவரம் இசுலாமியத் தீவிரவாதிகளால் பேசப்படுகிறது. அதுவும் மாநில அரசுக்குச் சவால் விட்டு சமருக்கு அழைக்கும் எதிரிகளின் பேச்சுப் போலவே அறைகூவல்களை (மிக அதிகமான எழுத்துப்பிழைகளுடன்) வெளியிட்டுள்ளனர்.
இது என்னவென்று சற்றே உற்று நோக்கினால் பத்ரு போர் (Battle of Badr) என்பது மெக்காவிலிருந்து விரட்டப்பட்ட முகமது நபி மெதினாவில் தஞ்சமடைந்து அங்கிருந்து குரைஷிகளுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டு வந்து பத்ரு என்ற இடத்தில் அவர்களைத் தாக்கி வென்றதைக் குறிக்கிறது. இந்தப் போர் முகமது நபியின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
மெக்காவிலிருந்து விரட்டப்பட்ட முகமதுவின் முஸ்லிம்கள் மெதினாவில் இருந்து கொண்டு மெக்காவைச் சேர்ந்த வணிகக் குழுக்களைத் தாக்கி மெக்காவுக்குப் பொருளாதார அழுத்தத்தைக் கொடுக்க முயன்றனர். இதிலிருந்து தம் பொருளாதாரத்தை காக்கவும், சொத்துக்களைப் பாதுகாக்கவும், வணிகத்துக்கு ஊறு வராதிருக்கவும், பெருமைக்காகவும் என்று பல காரணங்களால் குரைஷிகள் ஒன்று கூடிப் படைதிரட்டி முகமதுவின் ஆட்களை எதிர்த்துப் போரிட வந்தனர். முகமது நபியின் படையினருக்கு இருந்த ஒரே நோக்கம் மதமாற ஒப்புக் கொள்பவர்களைத் தவிர மற்றவர்களைக் கொல்வதும் அவர்களது சொத்துக்களை முகமதுவின் கட்டளைப்படி தமக்குள் பகிர்ந்து கொள்வதும் தான்.
முகமது நபி தன் படையில் மெதினாவில் மதமாற்றப்பட்ட முஸ்லிம்களான அன்சல்கள் (எடுபிடிகள்), மெக்காவிலிருந்து தன்னுடன் வந்திருந்த மதமாற்றப்பட்ட குரேஷிகள் ஆகியோரைக் கொண்டிருந்தார். அவரது நோக்கம் குரேஷிக்கள் அனைவரையும் தம் வழியைப் பின்பற்றும் முஸ்லிம்களாக மாற்றுவது அல்லது அவர்களது இனத்தை அழித்தொழிப்பது ஆகும். இதற்காக கொலை வெறி கொண்டவர்களாகத் தன் படைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.
முகமதுவின் முஸ்லிம் படையில் இருந்த அபுதுர் ரஹ்மான் பின் ரவுஃப் என்பவர், “சமீபத்தில் குரேஷிக்களில் இருந்து முஸ்லிமாக மாறிய இரு இளைஞர்கள் முகமது நபியை எதிர்த்தும் பழித்தும் பேசும் அபு ஜாஹ்ல் என்பவரை கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்போவதாகச் சொல்லி அபு ஜாஹ்ல் யார் என்று அடையாளம் காட்டச் சொன்னார்கள். நான் அவர்களை வியந்து அபு ஜாஹ்ல் வந்ததும் அடையாளம் காட்டினேன். அவரை இருவரும் சேர்ந்து வெட்டிக் கொன்றனர்” என்று சொன்னதாக ஸஹி அல் புகாரியில் சொல்லபப்ட்டுள்ளது. இறந்தவரை இவர்கள் இருவரும் கொன்றனர் என்று உறுதிப்படுத்திக் கொண்ட முகமது நபி இறந்தவரின் சொத்தை இவர்களுக்கு அளித்தார். Sahih al-Bukhari, 4:53:369
தாங்கள் முன் பின் பார்த்திராத தங்கள் இனத்தவர் ஒருவர் முகமதுவைப் பழித்தார் என்பதற்காக அவரைக் கொடூரமான முறையில் கொன்ற வரலாற்றுப் பதிவுகள் கொண்ட இன அழிப்புத் தாக்குதலே இந்த பத்ரு போர். இந்த பத்ரு போர் ரமலான் மாதம் 17ஆம் நாள் நடந்தது. இதில் மதமாற்றப்பட்டவர்களைக் கொண்டு மாறாதவர்களைத் தாக்கிக் கொன்றனர். இப்போது பத்ரு போர் என்று கூவும் தீவிரவாதிகளும் இவ்வாண்டு ரமலான் மாதம் 17ஆம் நாள் அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களும் அதே போன்ற கொலை வெறியுடன், மதமாற்றப்பட்டவர்களைக் கொண்டே தாக்குவார்கள் என்று நம்புவதற்கு சமீப காலமாகத் தமிழகத்தில் நடைபெறும் ஜிஹாதி கொலைகளும் வஹாபிய இஸ்லாமின் வரலாறும் சான்றுகளாக நிற்கின்றன.
பத்ரு தாக்குதல் குறித்து நாம் சற்றே கவனத்துடன் உற்று நோக்குவோம்.
இஸ்ரேலுக்கு எதிரான யாம் கிப்பர் போர் (1973), பாரதத்துக்கு எதிரான கார்கில் போர் (1999), ஆகியவற்றுக்கு Operation Badr என்றே பெயர் வைத்தார்கள்.
இவ்விரு பத்ரு தாக்குதல்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது இரண்டுமே எதிரிகளைத் திசைதிருப்பி எதிர்பாராத விதத்திலும், நேரத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
1973ல் இஸ்ரேல் மீதான தாக்குதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் யூதர்கள் விரதமிருக்கும் யாம் கிப்பர் சமயம். இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும். பல யூதர்கள் மதக்கட்டுபாடுகள் பல கடைபிடிக்காவிட்டாலும் இந்த நாளை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள். முதல் நாள் மாலை தொடங்கி அடுத்த நாள் மாலை வரை. இந்த நேரத்தில் வண்டிகள் செல்லாது, சாலைகள் வெரிச்சோடிக் கிடக்கும். மருத்துவமனைகள் செயல்படும், ஆம்புலன்ஸ்கள் மட்டுமே செல்லும்.
யாம் கிப்பர் என்பது கழுவாய் தேடும் நாள் (day of atonement). மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை விட, மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். மன்னிப்பு என்றவுடன் பிரார்த்தனையில் ஈடு பட்டுப் பாவமன்னிப்புக் கேட்பது போல் இல்லாமல், நண்பர்கள் உறவினர்களிடம் பேசி தாங்கள் இதற்கு முன்னால் ஏதேனும் தீங்கு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவேண்டும். அப்போது தான் ஆண்டவன் நம்மை மன்னித்து அவர் வைத்திருக்கும் நல்ல பிள்ளைகள் புத்தகத்தில் நம் பெயரை சேர்த்துக் கொள்ள ஒப்புவார் என்பது நம்பிக்கை. அதற்காக எல்லோரும் g'mar Hatima Tova - May you be inscribed in the book of life (நல்வாழ்வின் புத்தகத்தில் உன் பெயர் பதிவாகட்டும்) என்று வாழ்த்துத் தெரிவிப்பார்கள்.
இப்படி இருக்கும் சமயத்தில் தாக்கினால் சுலபமாக இஸ்ரேலை அழித்துவிடலாம் என்பதே அரபு நாடுகளின் திட்டம். இதற்காக இவர்கள் கையாண்ட முறைகள் இஸ்ரேலைச் சற்றே ஆட்டிப் பார்த்துவிட்டது. நம்பிக்கைத் துரோகம் என்றாலும் அரசு சூழ்தல் என்று வந்தபின் அதைக் குற்றமெனக் கூற முடியாது. தம் நலனே முக்கியமென்று தானே எல்லா நாடுகளும் இருக்கும். பிறருக்காக நாட்டின் ஒவ்வொரு நலனாக விட்டுக் கொடுத்துக்கொண்டிருக்க அந்த நாடுகளை என்ன நேருவா ஆண்டார்?
1967ல் ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் வென்றதும் அதன் தன்னம்பிக்கையை அதிக அளவுக்கு உயர்த்திவிட்டிருந்தது. அதனாலேயே அரபு நாடுகள் தம்மை தாக்கத் துணியமாட்டார்கள், அப்படியே தாக்கினாலும் இஸ்ரேலிய விமானப்படை சில மணி நேரங்களில் அவர்களின் தாக்குதலை முறியடித்து வீழ்த்தும் என்ற அபார நம்பிக்கை இஸ்ரேலிடம் இருந்தது.
எகிப்தும் சிரியாவும் 6 நாள் யுத்தத்தில் இழந்த நிலப்பகுதிகளைத் திரும்பப் பெறத் துடித்துக் கொண்டிருந்தன. 1967 செப்டம்பர் மாதம் கார்டூம் நகரில் நடைபெற்ற மாநாட்டில் அரபு நாடுகள் ஒன்று கூடி மூன்று விஷயங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்தன.
- இஸ்ரேலுடன் அமைதியாகப் போவதில்லை
- இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை
- இஸ்ரேலுடன் உடன்படிக்கைகள் கொள்வதில்லை.
இதன்பிறகு இஸ்ரேல் 50 கோடி டாலர்கள் செலவு செய்து சூயஸ் கால்வாயைச் சுற்றியுள்ள தன் பகுதிகளைக் காக்க வேலி அமைத்தது. இந்நிலையில் எகிப்து அதிபர் நாசர் சோவியத் அதிபரிடம் தமக்கு மேலும் நவீன ஆயுதங்களைத் தருமாறும், இதற்கு மறுத்தால் தம் நாட்டுக்குத் திரும்பிச் சென்று சோவியத் தம்மைக் கைவிட்டது என்று சொல்லிப் பதவி விலக வேண்டிவரும் என்றும், தமக்குப் பின் பதவிக்கு வருவோர் அமெரிக்காவுக்கு ஆதரவாக நிற்பர் என்றும் கெஞ்சினார்.
சோவியத் அமைப்பு தங்களுக்குத் தரம்குறைந்த ஆயுதங்களை அளித்ததால் மட்டுமே தாங்கள் தோற்றதாக எகிப்து கூறியது. ஆனால் அவர்களது பீரங்கி, ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களில் முக்கால்வாசி இஸ்ரேலிடம் இருந்தது. போர்க்களத்தில் விட்டு விட்டு எகிப்துப் படையினர் ஓடிவிட இஸ்ரேலியர்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டனர். அதில் ஒரு பகுதியைத் தமது ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆராய்ச்சி செய்து தமக்கேற்றவாறு மேம்படுத்திக் கொண்டனர்.
இதனால் எகிப்தின் நாசருக்கு சோவியத் அதிபர் அளித்த பதில் “நாங்கள் என்ன கொடுத்தாலும் அது இஸ்ரேலிடம் தான் போகப் போகிறது. அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டுவாருங்கள் அவற்றையே தந்துவிடுகிறேன்” என்று சொன்னதாகப் பத்திரிக்கைகளில் கேலிச்சித்திரங்கள் வரைந்து எகிப்தியர்களை வெறுப்பேற்றினர் இஸ்ரேலியர்.
இந்நிலையில் 1970ல் நாசர் மறைவுக்குப் பிறகு அன்வர் சாதாத் பதவிக்கு வந்தார். அவருக்கு முக்கியமான பணியாக இருந்தது எகிப்து ராணுவத்தினருக்கு நம்பிக்கையளிப்பது. அதைச் செய்ய இஸ்ரேலுடன் போர் புரிந்து ஒரு சிறு பகுதியையாவது பிடித்துவிட்டால் போதும் என்று சொல்லிவந்தார். ஆனால் அவரது கூட்டாளி சிரியா தான் இழந்த கோலன் மலைப் பகுதியை முழுதுமாக இராணுவ நடவடிக்கை கொண்டு மீட்கப் போவதாகச் சொல்லிவந்தது.
அரபுக் கவுன்சிலில் சோவியத் உதவி இல்லாவிட்டாலும் தான் இஸ்ரேலைத் தாக்கப் போவதாக அறிவித்தார் சாதாத். பத்து லட்சம் எகிப்தியப் போர் வீரர்களைக் காவு கொடுத்தாவது இழந்த பகுதிகளை மீட்பேன் என்று அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்காவும் சோவியத்தும் தாங்களோ தங்களைச் சார்ந்த நாடுகளோ ஆயுதத் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்தன.
இதனால் எகிப்து 1972ல் ஒரு நாடகமாடியது. 20000 சோவியத் இராணுவ ஆலோசகர்களை சாதாத் எகிப்தில் இருந்து வெளியேற்றினார். இதன் பிறகு தாங்கள் சூயஸ் கால்வாயைத் தாண்டிச் சென்று இஸ்ரேலைத் தாக்குவோம் என்று அறிவித்தார். இந்த வெளியேற்றமே ஒரு கண் துடைப்பு. இதனால் சோவியத் அமெரிக்கவுடனான தன் ஒப்பந்தத்தை மீறாமலும் அதே வேளையில் தங்களின் கூட்டாளி பல்கேரியா மூலமாக எகிப்துக்கு மிக்-23 விமானங்களையும் ஸ்கட் ஏவுகணைகளையும் வழங்கியது.
இந்த ஏவுகணைகளும் விமானங்களும் வந்து சேர்ந்து எகிப்தியர்கள் பயிற்சி பெற்றுத் தம்மைத் தாக்க எப்படியும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று எண்ணினர் இஸ்ரேலியர். முன்னாள் எகிப்திய அதிபர் நாசரின் மருமகன் அஷ்ரஃப் மார்வான் இஸ்ரேலிய மொசாத்தின் உளவாளியாகச் செயல்பட்டார். (ஆனால் அவர் டபுள் ஏஜெண்ட் என்று கண்டறிந்து அவரை இஸ்ரேல் சமீபத்தில் தீர்த்துக்கட்டியது.) அவர் 1973 மே மாதம் 15ஆம் நாள் எகிப்து தாக்குதல் நடத்தும் என்று தகவல் கொடுத்தார்.
ஆனால் அந்தத் தாக்குதல் நடக்கவில்லை. எல்லையில் எகிப்து குவித்த படைகள் இராணுவப் பயிற்சிக்காக என்று பயிற்சி முடித்துத் திரும்பிச் சென்றன. இதே போல அடிக்கடி பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன. இவற்றின் நோக்கம் உண்மையில் இராணுவத்தை இறக்கிவிட்டுத் தாக்குதலுக்கு முன்னேறினால் இஸ்ரேல் பயிற்சி என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும் என்பதே.
ஆனால் இஸ்ரேலின் தென்பகுதி இராணுவத் தளபதி ஆரியல் ஷரோன் எகிப்தியர்களை நம்பமறுத்தார். தன் படைகளைத் தயாராகவே வைத்திருந்தார். இதனாலும் எகிப்தின் தாக்குதல் தள்ளிப்போனது. ஒவ்வொரு முறையும் தாக்கப் போகிறோம் என்று அறிவிப்பார்கள். ஆனால் தாக்கமாட்டார்கள். 1973 செப்டம்பர் மாதம் எகிப்து தன் மீது தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் முழுமையாக எதிர்பார்த்தது. ஆனால் எப்போது என்பது தெரியவில்லை.
எகிப்து வழக்கம் போல இராணுவ வண்டிகளில் டயர் பஞ்சர், ப்ரேக் பிடிக்கவில்லை, பீரங்கி சுடவில்லை என்று பாடிக் கொண்டிருந்தது. இஸ்ரேல் இதை நம்பவும் முடியாமல் எச்சரிக்கையையும் கைவிடாமல் இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் முழு இராணுவத் தாக்குதல் சாத்தியமில்லை. அப்படியே தாக்கினாலும் சமாளிக்கலாம் என்று இருந்தார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர்.
1973 செப்டம்பர் 25 அன்று ஜோர்டான் மன்னர் ஹுசைன் ரகசியமாக டெல் அவிவ் வந்தார். இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயரிடம் சிரியா கோலன் மலைப்பகுதிகளில் தாக்குதல் நடந்த்திவிருப்பதாகச் சொன்னார். “அப்படியானால் எகிப்து என்ன செய்யும்” என்று கேட்டார் கோல்டா மேயர். “அவர்கள் சிரியாவுடன் ஒத்துழைப்பார்கள்” என்றார் ஹுசைன். இஸ்ரேலிய உளவுத்துறை புதிதாக எதையும் இந்த மன்னர் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டுப் போனது.
1973 அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் இராணுவ உளவுத்துறையின் ஒரு அதிகாரி இந்தப் பயிற்சிகள் ஒரு செயற்கைக் காட்சிப் பிழை. எகிப்து முழு இராணுவத் தாக்குதல் முஸ்தீபுக்கு ஒரு மறைப்பாகப் பயிற்சியைப் பயன்படுத்துகிறது என்று அறிக்கை தந்தார். உயரதிகாரிகள் கத்துக்குட்டி பயந்துவிட்டது என்று சொல்லி அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் போட்டனர்.
1973 அக்டோபர் 4-5 தேதிகளில் எகிப்து, சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த சோவியத் தூதரக அதிகாரிகள் வெளியேறினர். இது இஸ்ரேல் இராணுவத் தலைவரை யோசிக்க வைத்தது. ஆனாலும் அவர் அலட்சியம் காட்டினார். ஒரு வாரம் முன்பு தனக்குக் கிடைத்த எகிப்தியத் தாக்குதல் குறித்த தகவலை உளவுக் குழுவிடமும் பிரதமரிடமும் பகிர்ந்து கொள்ளாது விட்டார்.
1973 அக்டோபர் 5 ஆம் நாள் லண்டன் சென்று அஷ்ரஃப் மார்வானைச் சந்தித்தார். அப்போதும் மார்வான் மறுநாள் தாக்குதல் நடக்கும் என்றும் அது சூரியன் மறைந்த பின் நடக்கும் என்றும் தனக்குச் சொல்லித் தரப்பட்டதையே சொன்னார். மறுநாள் யாம் கிப்பர் தினம். இஸ்ரேலின் இராணுவத்தில் மிகக் குறைந்த அளவிலான படைகளைத் தவிர பிறர் விடுமுறையில் சென்றிருந்தனர். அப்போது தாக்குதல் நடத்தினால் படைதிரட்டவே இஸ்ரேலுக்கு 2 நாட்கள் ஆகும். அதற்குள் கதை முடிந்துவிடும் என்பது எகிப்தின் கணக்கு.
அமெரிக்கா தன் பங்குக்கு இஸ்ரேல் முதலில் தாக்கினால் குண்டூசி கூடத் தரமாட்டோம் என்று கூறியது. ஆனால் கிடைத்த ஒரு நாளில் விரைவாகத் தயாரானது இஸ்ரேல். விடுமுறை என்பதால் சாலைகளில் நெரிசல் இல்லை, இராணுவ வண்டிகள் ஆட்களையும் தளவாடங்களையும் விரைந்து கொண்டு போய்ச் சேர்த்தன. ஓரளவுக்குத் தயாராக இருந்தது இஸ்ரேல். ஆனால் சூரியன் மறைந்த பிறகு தாக்குதல் என்று சொன்ன எகிப்து மதியம் 2 மணிக்குப் படைகளைக் களமிறக்கியது.
இப்படியாக இதோ அதோ என்று சொல்லி எதிரியை ஏமாற்றி எதிர்பாராத போது நடத்தியதே சென்ற நூற்றாண்டின் முதல் பத்ரு தாக்குதல்.
https://en.wikipedia.org/wiki/Yom_Kippur_War
http://sankarmanicka.blogspot.in/2006/09/blog-post_30.html
http://dondu.blogspot.in/2006/04/1_29.html
சென்ற நூற்றாண்டின் கடைசி பத்ரு தாக்குதல் கார்கிலில் நடந்தது. அது எப்படி என்றும் பார்ப்போம்.
இது மிகவும் நீண்ட திட்டமிடலுடன் கூடிய தாக்குதல் இதே போன்ற தாக்குதல் திட்டங்களை பாகிஸ்தான் இராணுவம் 1980களில் ஜியாவுல் ஹக், 1990களில் பேநசீர் புட்டோ ஆகிய தலைவர்களிடம் அளித்தது. ஆனால் இராணுவத்தைச் சேர்ந்தவரான ஜியா திட்டத்தைக் குறைகூறி முடக்கினார். முழு வீச்சிலான போர் என்றால் சமாளிக்க முடியாது என்று பேநசீர் நிராகரித்தார். ஆக இத்திட்டங்களைக் கைவிட்டது பாகிஸ்தானின் அரசியல் தலைமை.
ஆனால் 1971 பங்களாதேஷ் போரில் கைதியாக நம்மிடம் சிக்கிய முஷரஃப் இராணுவத் தலைவரானதும் அரசியல் தலைமையைக் கலந்து கொள்ளாமல் சில அடிப்படைத் தயாரிப்புகளைச் செய்தார். தமக்கு ஆமாம் போடும் இரு அதிகாரிகளைக் கொண்டு சிறு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கைகளால் தூக்கிச் செல்லத்தக்க ஆயுதங்களையும் குளிர் காலத்தில் இந்திய இராணுவம் விட்டுச் சென்ற பங்கர்களில் பதுக்கச் செய்தார். அந்த இடங்களில் இந்திய இராணுவம் ரோந்து செல்வதோடு சரி. கடுங்குளிர் (-30வரை) என்பதால் அங்கே குளிர் காலங்களில் எந்நேரமும் காவல் காப்பதில்லை.
இந்த இடங்களில் ஆயுதங்களைப் பதுக்கிவிட்டு, ஆஃப்கனிஸ்தான், வசீரிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முஜாகிதீன் தீவிரவாதிகளை அழைத்துவந்து கஷ்மீரைத் தாக்கிப் பிடிக்கும் திட்டம் என்று சொல்லி அவர்களை மலைமீது அனுப்பினர். அவர்களுக்குத் துணையாக இராணுவத்தின் Special Services Group எனும் சிறப்புப் படையின் ஒரு பிரிவை அனுப்பினர். Northern Light Infantry எனப்படும் துணை இராணுவப் படையையும் அனுப்பினர்.
இவர்கள் முஷ்கோ பள்ளத்தாக்கு, மார்போ லா பகுதி, பாடாலிக் பகுதி உள்ளிட்ட இடங்களில் பரவினர். இதனால் சியாச்சின் பகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு போவது தடைப்படும். இந்திய இராணுவம் இந்தப் பகுதிகளை மீட்பதற்குப் படாத பாடுபடும் என்று கணக்கிட்டார் முஷரஃப்.
இறுதியாக போர் தொடங்குவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன் பிரதமர் நவாஸ் ஷரீஃபிடம் விவரம் சொல்லியிருக்கிறார்கள். அவர் அடிக்கடி மறுப்பது போலல்லாது “ஜெனரல் சாகிப்.... பிஸ்மில்லா கரே!” என்று சொல்லியிருக்கிறார் என்று கார்கில் ஆக்கிரமிப்பில் போரிட்ட பாகிஸ்தான் விமானி கைசர் துஃபைல் கூறியிருக்கிறார்.
ஆனால் இவ்வளவுக்கு நடுவிலும் இந்தியாவுடன் சமாதான சகவாழ்வு, அமைதிக்கான விழைவு என்று பீலா விட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். வாஜ்பாயியுடன் பேச்சுவார்த்தை, பேருந்துப் பயணம் என்று நவாஸ் ஷரீஃப் இராணுவம் செய்வது எதுவுமே தெரியாதது போலவே இருந்தார். சரணடைந்து பின்வாங்கிய பிறகு வானுக்கும் பூமிக்கும் குதித்த பாகிஸ்தானிய பத்திரிகைகளும் ஆக்கிரமிப்புக்கு முன் இராணுவத்துக்கு துணைபோய் மௌனம் காத்தன.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மத்தியில் போர் குறித்த பேச்சுக்கள் இருந்தன என்றும் இந்திய உளவுத் துறை இதை எப்படி கவனிக்காமல் விட்டது என்று தான் இன்னமும் ஆச்சரியப்படுவதாகவும் கூறியிருக்கிறார் துஃபைல்.
ஆக்கிரமிப்பைத் தொடங்கும் முன் கார்கில் அல்லாத பல கஷ்மீர் பகுதிகளில் சிறு சிறு முஜாகிதீன் தாக்குதல்கள் நடத்தி இராணுவத்தின் கவனத்தை திசை திருப்பினர். அவ்வப்போது ரோந்து வரும் இந்திய இராணுவத்தின் கண்களில் படாமல் மறைந்தே பல நாட்கள் இருந்திருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள்.
பாகிஸ்தானில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த நமது உளவு அமைப்பு ஐ.கே.குஜ்ரால் என்ற அமைதி விரும்பியால் தகர்த்தெறியப்பட்டது. குஜ்ரால் காலத்தில் பாகிஸ்தானுடன் நலம் நாடும் செயல்பாடு என்ற பெயரில் அங்கே உளவுத்துறைக்கு இருந்த ஆட்கள், சொத்துக்கள், மறைமுக ஏஜண்டுகள் உள்ளிட்ட விவரங்கள் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டன. பதிலுக்குப் பாகிஸ்தான் நமக்காகப் பணியாற்றியவர்களைக் கொன்று குவித்தது.
பின்னர் வாஜ்பாயி காலத்தில் உளவுக்கட்டமைப்பை அடிப்படையில் இருந்து தொடங்கிக் கட்டமைக்க வேண்டியிருந்தது. இதுவும் பாகிஸ்தான் இராணுவத்தின் துணிவுக்கு ஒரு காரணம்.
http://archive.indianexpress.com/news/pak-commander-blows-the-lid-on-islamabads-kargil-plot/475330/0
https://en.wikipedia.org/wiki/Kargil_War
இப்படி இரு பத்ரு தாக்குதல்கள் நடத்தப்பட்ட வரலாறு இருக்க இப்போது மீண்டும் பத்ரு போர் என்று கூவியிருக்கிறார்கள் சில ஜிஹாதிகள். அதற்கு ஜூலை 28 என்று நாள் வேறு குறித்திருக்கிறார்கள். அதற்கு இளைஞர்கள் மட்டும் அதுவும் மரணத்தை நேசிப்பவர்கள் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். யாருடைய மரணத்தை நேசிப்பவர்கள் என்று தெரியவில்லை.
ஜூலை 28 அன்று தான் ஏதாவது செய்வார்களா அல்லது அதற்கு முன்பே செய்வார்களா..... அல்லது இப்படித் தாக்குதல் தாக்குதல் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றி புலி வருகிறது கதையாக இவர்கள் சொல்லை யாரும் சட்டை செய்யாத நிலையை ஏற்படுத்திய பின் அசந்த நேரத்தில் அடிப்பார்களா என்றும் தெரியவில்லை.
தமிழக காவலதுறையின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் செயல்கள் சில சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுவிட்டன. துணிவு கொண்ட அதிகாரிகள் சிலர் மீது வழக்குகள் பாய்ந்து தீவிரவாதிகளுக்கு உரமிடப்பட்டுள்ளது. காவலர்கள் தக்க வழிகாட்டுதலோ துணையோ இன்றி அநாதைகள் போல ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகக் காவல்துறை, குறிப்பாக உளவுத்துறை, விழித்துக் கொள்ளவேண்டும். அது இயலாத நிலையில் மத்திய அரசு தேச நலன் கருதி தமிழக காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து தேசவிரோதிகளை ஒடுக்கவேண்டும்.