×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வீட்டில் குண்டு எறிந்து தாக்குதல் - காஷ்மீராக மாறும் காரைக்குடி

Thursday, 16 July 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
 தமிழ்நாடு மிக வேகமாகத் தாலிபான் நாடாக மாறிவருகிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், சென்ற திங்கள் கிழமை 13ம் தேதி இரவு 10.30 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அவர்களின் காரைக்குடி வீட்டில் இரு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஹெச். ராஜா அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள நான்காவது தாக்குதல். இந்தத் தொடர் தாக்குதலில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையும், அரசும் நம்புகின்றன.  
 
திராவிட அரசுகளின் பொறுப்பற்ற ஆட்சியினாலும், திராவிடக் கட்சிகள் பின்பற்றும் வாக்கு வங்கி அரசியலாலும், முஸ்லிம் அடிப்படைவாத, தீவிரவாத அமைப்புகள் பெருகத் தொடங்கி இன்று தமிழகம் முழுவதும் 25 அமைப்புகள் தங்களுடைய அராஜகத்தையும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து தமிழ்நாட்டை தாலிபான் நாடாக ஆக்கி வருகின்றன.
 
இந்தச் சூழ்நிலையில், இன்றைய அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றுக் கொண்ட 2011ம் ஆண்டிலிருந்து, பாஜ கட்சித் தலைவர்களும் ஹிந்து இயக்கத் தலைவர்களும் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். வேலூரில் பாஜக தலைவர் அரவிந்த் ரெட்டி மற்றும் ஹிந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன், பரமக்குடியில் பாஜக பிரமுகர் முருகன், சேலத்தில் பாஜக தலைவர் ஆடிட்டர் ரமேஷ், சென்னையில் ஹிந்து முன்னணி சென்னை மாவட்ட செயலர் சுரேஷ் குமார், உள்ளிட்ட ஐந்து பேர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
 
அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல இடங்களில் ஹிந்துக்கள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். இந்தத் தாலிபானிய ஆக்கத்தின் தொடர்ச்சி தான் சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் ஆம்புரில் முஸ்லிம்கள் காவல்துறைக்கும் ஹிந்து சமூகத்துக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறை. 
 
தன்னுடைய வீட்டின் மீது நடந்த தாக்குதலின் பின்னணியில், தமிழகத்தின் அமைதிக்கும் தமிழக மக்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்து வரக்கூடிய சூழ்நிலை நிலவுவதைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா அவர்கள் விடுத்துள்ள அறைகூவலின் காணொளியை இங்கே காணலாம். 
 

- ஆசிரியர் குழு, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்.

 

 

 

Read 1461 times
Rate this item
(4 votes)

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment