×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தாய்லாந்து ஹிந்துக் கோவில் தாக்குதல் - ஜிஹாதிகளின் அடங்காத ரத்த தாகம்.

Saturday, 22 August 2015 17:58 Written by  தமிழ்நேசன் font size decrease font size decrease font size increase font size increase font size

கடந்த திங்கட்கிழமை (17-08-2015) அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரம்மதேவன் கோவிலில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. உள்ளூர் நேரப்படி மாலை 6:55 மணிக்கு வெடித்த குண்டில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 125 பேர் காயமடைந்திருப்பதாகவும் தாய்லாந்து காவல்துறையின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 Bangkok bombing VOA

இந்தக் கோவில் பொதுவான எரவான் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. 1956ல் தாய்லாந்து அரசு எரவான் என்ற பெயரில் ஒரு நட்சத்திர விடுதியைக் கட்டியது. அதற்கான வானம் தோண்டும் பணிக்கு நேர்ந்த தடைகள், விபத்துகள், பணியாட்களின் அகால மரணங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் அரசு தர்மச் சான்றோரைக் கலந்தாலோசித்தது. இந்த இடம் முற்காலத்தில் குற்றவாளிகளைக் கட்டிவைத்துப் பொதுவில் தண்டிக்கும் இடமாக இருந்ததால் தீய சக்தி அலைகள் அதிகமிருப்பதாகக் கருதிய தர்மச் சான்றோர் இங்கே தீய சக்திகளைத் தடுக்கும் விதமாக தெய்வ சக்தியை நிறுவச் சொன்னார்கள்.

Thai 4 Buddies

அதன்படி பிரம்மதேவன் ஆலயம் அமைக்கப்பட்டது. ஆலயம் அமைத்து வழிபாடு தொடங்கிய பின்னர் விடுதி கட்டும் பணி தொய்வின்றி நடந்து முடிந்தது. 1987ல் இந்த விடுதியை இடித்துவிட்டு அமெரிக்காவின் கிராண்ட் ஹயாத் குழுமத்துடன் இணைந்து கிராண்ட் ஹயாத் எரவான் என்ற நட்சத்திர விடுதி கட்டப்பட்டது.

இந்தப் பகுதியில் மேலும் லக்ஷ்மி தேவி, மும்மூர்த்திகள், விநாயகர், இந்திரன், கருட வாகன நாராயணர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த பிரம்மதேவன் கோவில் தாய் மொழியில் தாவ் மஹா ஃப்ரோம் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மஹா பிரம்மன் கோவில் என்று மொழிபெயர்க்கலாம். அந்தத் தெய்வம் ஃப்ரா ஃப்ரோம் என்று அழைக்கப்படுகிறது. தாய் மொழியில் ஃப்ரா ஃப்ரோம் என்றால் பரப் பிரம்மம் என்று பொருள்படும்.

இந்தப் பகுதி ராட்சப்ரசோங் என்றும் அழைக்கப்படுவது. ராஜபாட்டை என்று பொருள்படும் என்கிறார்கள். இப்பகுதி அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் (குறிப்பாக தற்போதைய இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்), பொதுக்கூட்டங்களுக்கும் பெயர் போனது. இப்பகுதியில் ஏற்கனவே பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு எதிராகப் போராடுபவர்களைக் குற்றம்சாட்டிவிட்டுத் தீவிர விசாரணை என்பதில்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் இதுவரை நிகழ்ந்தவை மிகச் சிறிய அளவிலான தாக்குதல்கள் என்றும் அவற்றில் சேதம் மிகக் குறைவு என்றும் ஒரு சொத்தை வாதம் வைக்கப்படுகிறது. இம்முறை நடந்த தாக்குதல் 3 கிலோ TNT வெடி மருந்தை இரும்புக் குழாய்களில் வைத்துச் செய்த பைப் வெடிகுண்டுகளால் நடத்தப்பட்டது என்கிறது போலீஸ்.

BN JY358 0821TH M 20150821011803

இம்முறை தாய்லாந்து ஹிந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்கள், சீனர்கள் உள்ளிட்ட பலரும் வரப்பிரசாதி என்று நம்பி வழிபடும் பிரம்மதேவன் ஆலயத்தில் குண்டு வெடித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆலயத்தின் பிரம்மதேவன் விக்கிரகம் சேதமானதும் மிக விரைந்து செயல்பட்டு விக்கிரகத்தைச் சரிசெய்து பூசனைகள் நடத்தி மூன்றாம் நாள் கோவிலை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிட்டார்கள். CCTVல் பதிவான காட்சிகளில் இருந்து குண்டு வைத்தவனின் படம் எடுக்கப்பட்டு அது உடனடியாக வெளியிடப்பட்டது. டுக் டுக் என்றழைக்கப்படும் அந்நாட்டின் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் அவனை அடையாளம் கண்டு சொன்னார். அவன் தன் ஆட்டோவில் கோவில் வரை பயணித்ததையும், வழியில் புரியாத மொழியில் யாரிடமோ செல்பேசியில் பேசிவந்ததையும் சொல்லியிருக்கிறார். தாய்லாந்தில் நுழையும் வெளிநாட்டவர் பட்டியல் ஒப்பு நோக்கப்பட்டு குண்டு வைத்தவன் பெயர் முகமது முசலின் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவன் துருக்கியில் இருந்து வந்திருப்பதால் அந்நாட்டுக்காரன் என்று ஒரு கருத்தும், சீனத்து உய்குர் தீவிரவாதிகளின் பிரதிநிதி என்று மற்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது. மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.

150819103336 bombing suspect sketch medium plus 169

உய்குர் தீவிரவாதிகள் 100 பேர் சமீபத்தில் சீனாவில் சிறையில் இருந்து தப்பி தாய்லாந்து வழியாக துருக்கி சென்று அங்கிருந்து சிரியாவுக்குச் சென்று ISIS அமைப்பில் இணையத் திட்டமிட்டுச் சென்றனர். தாய்லாந்து பாங்காக் விமானநிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட இவர்களை சீனாவிடம் ஒப்படைக்க தாய்லாந்து அரசு முடிவு செய்தது. ஆனால் அவர்கள் தங்களைத் துருக்கி அரசிடம் ஒப்படைக்கக் கோரினர். சீனப் பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு பயணிப்பவர்களைச் சீனத்திடம் மட்டுமே ஒப்படைக்க முடியும் என்று சொல்லி சீனத்திடம் ஒப்படைத்துவிட்டது தாய்லாந்து அரசு. இதற்குப் பழிவாங்கவே உய்குர் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் இதைச் செய்திருக்கக்கூடும் என்று சீனச் செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தாய்லாந்து போலீஸ் இந்த விவகாரத்தில் விழிபிதுங்கி நிற்பதாகவே சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். உளவுத் தகவல்கள் என்று ஏதும் அரசிடம் இல்லை. பௌத்தர்கள் இது போன்ற கொடூர வன்முறைகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் முஸ்லிம் பகுதிகளில் போலீஸ் நுழைந்து உளவறிவது பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள் அம்மக்கள். இதில் கவலைக்குரிய விஷயம் தாய்லாந்தின் தென்பகுதியில் இருக்கும் மலேசிய முஸ்லிம் பிரிவினைவாதிகள் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் விசாரிக்காமலேயே அறிவித்ததுதான். அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள். ஆனால் பாங்காக் வரை வந்து குண்டு வைக்க மாட்டார்கள் என்று சொல்கிறார் பெயர் வெளியிட விரும்பாத தாய்லாந்து போலீஸ் அதிகாரி.

ஆனால் டாக்டர் ஜாக்கரி அபூசா என்கிற பாதுகாப்புத்துறை ஆலோசகரின் கருத்து வேறு விதத்தில் உள்ளது. உள்ளூர் போராட்டக் குழுவினர் தவிர அவர் கைகாட்டுவது மலாய் தீவிரவாதிகள், ஹிஸ்புல்லா, ஜமாஹ் இஸ்லாமியா, ஐஎஸ்ஐஎஸ் ஆகிய அமைப்புகள். இவை அனைத்துமே வெளிநாட்டு ஆதரவுடன் அல்லது வெளிநாட்டார் உதவியுடன் செயல்படுபவை.

இதில் ஹிஸ்புல்லாவுக்கு தாய்லாந்து ஆயுதங்கள் செய்து தரும் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது என்பது ரகசியமல்ல. 2012ல் இத்தகைய ஒரு குண்டு தயாரிக்கும் இடத்தில் குண்டுகள் வெடித்துப் பெரும் நாசத்தை விளைவித்தது. ஆனாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமா அல்லது வேறு ஏதேனும் காரணமா தெரியவில்லை. 1991லேயே பாங்காக்கில் இஸ்ரேலிய தூதரகத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க முயன்றனர் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள். ஆனால் ஹிஸ்புல்லா ஈரானின் கைப்பாவை என்பதால் அவர்கள் ஹிந்துக் கோவிலைத் தாக்க வாய்ப்பில்லை என்கிறார் இவர். ஈரானுக்கு ஏதாவது ஒரு திசைதிருப்பல் தேவைப்படும் காலகட்டத்தில் மட்டுமே ஹிஸ்புல்லா அரபு-இஸ்ரேல் பகுதிகளுக்கு வெளியே வன்முறையில் இறங்கியிருக்கிறது என்கிறார் இவர். இன்றைய நிலையில் அமெரிக்காவுடனான ஈரானின் அணு ஒப்பந்தம் அமெரிக்கப் பாரளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாமல் போக அனைத்து வழிகளிலும் இஸ்ரேல் முயல்கிறது. அதனால் ஈரான் ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கத் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் ஒரு கவனத் திசை திருப்பலாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரிக்கவேண்டும்.

அடுத்தது ஜமாஹ் இஸ்லாமியா அமைப்பு. இது 2003ல் பாங்காக்கில் குண்டு வைத்து அது வெடிக்காது போக, இதன் உறுப்பினர்கள், தலைவர்கள் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டனர். இவர்கள் ஒடுக்கப்பட்டு தற்போது ஆள் பலமோ ஆயுத பலமோ இல்லாதிருக்கிறார்கள் என்கிறார் அபூசா. ஆனால் தற்போதைய எல்லை தாண்டிய இஸ்லாமிய பயங்கரவாதக் கூட்டுறவில் செயலிழந்தவர்கள் என்று எந்த அமைப்பையும் விட்டுவிடுவது பேராபத்தாகவே முடியும்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தென்கிழக்காசியாவில் காலூன்றி வருகிறது. தாய்லாந்தில் பல இஸ்லாமிய ஜமாத்துகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு விசுவாசத்துடன் இருப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் இருக்கின்றன. ஆகவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை இதில் புறந்தள்ள முடியாது. சீனாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடச் செல்லும் உய்குர் தீவிரவாதிகளைப் பிடித்து சீனத்திடம் ஒப்படைத்தது வேறு அந்த அமைப்புக்கு ஒரு பழிவாங்கும் காரணத்தைக் கொடுத்திருக்கிறது. ஆகவே இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விவகாரம் அல்ல. தீவிரமாக இறங்கி இவர்களை ஒடுக்கிச் சீர்படுத்த வேண்டிய நிலை.

தாய்லாந்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டவே ஆட்சியைப் பிடித்துள்ளதாக அறிவித்த இராணுவம் இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்றும் ஹிந்துக்களையும் ஹிந்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பாரத அரசாங்கம் இதற்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை நல்கவேண்டும் எனவும் அனைத்து ஹிந்துக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் திரட்டு: இணையம், உலகச் செய்தி நிறுவனங்கள், 

படங்கள்: கூகிள் படங்கள், விக்கிமீடியா.

Read 1149 times
Rate this item
(2 votes)
Last modified on Wednesday, 26 August 2015 18:18

Leave a comment