×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் - 2

Tuesday, 05 April 2016 14:10 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
போலீஸ்காரர்களின் மண்டைகள் உடைகின்றன; பெண் போலீஸார் மானபங்கப்படுத்தப் படுகிறார்கள்; உண்மையில் போலீஸார் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறார்கள்! வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 27 ஜூன் 2015 அன்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் அதனுடன் இணையும் உள்ளூர் சாலைகளிலும், திட்டமிட்ட வன்முறை நடத்தப்பட்டபோது இந்தக் காட்சிகள் அரங்கேறின. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாகிக் காயங்கள் அடைந்தனர்; அதே அளவுக்குப் பொதுமக்களும், குறிப்பாக பேருந்துப் பயணிகளும், கடுமையாகக் காயப்பட்டனர். பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்து நாசமானது.
 
 
 
 
 
 
Jihad in TN 2a
 
 
 
ஷமீல் அகமது என்பவர் போலீஸார் காவலில் இருக்கும்போது இறந்துவிட்டார். அதற்கு எதிர்ச்செயலாக இந்த வன்முறை கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பவித்ரா என்கிற இல்லத்தரசியை (பழனி என்பவரின் மனைவி) காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றியதற்காகக் கைது செய்யப்பட்டவர் ஷமீல் அகமது.
 
 
 
 
 
 
Jihad in TN 2b
 
 
 
மிழகத்தில் பெருகி வளர்ந்து வரும் ஜிகாத்
 
 
கல் வீச்சு, தாக்குதல், தீ வைப்பு, அழித்தல் ஆகியவற்றினால் அந்த வன்முறை மிகவும் பயங்கரமாக இருந்தது. இதற்கு முன்னால் சில சமயங்களில் ஜிகாதிகள் கும்பலாக வன்முறையில் இறங்கியுள்ளதை இந்த மாநிலம் கண்டிருந்தாலும், ஆம்பூரில் அதன் பரிமாணம் இதற்கு முன்பு கண்டிராத வகையில் பயங்கரமான அளவில் இருந்தது. இந்த வகையிலான “கும்பல்-ஜிகாத்” இதுதான் முதல் தடவை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் நடக்கும் வன்முறைக்குச் சமமாக இருந்துள்ளது. போலீஸார், அவர்களின் வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீது வயதுக்கு வராத சிறுவர்கள் கல்வீச்சு நடத்தினர். இளைஞர்கள் வன்முறையிலும் தீ வைப்பிலும் ஈடுபட்டனர்.
 
 
 
 
 
 
Jihad in TN 2c
 
 
 
ஷமீல் அகமது ஜூன் 26, 2015-ல் சென்னையில் இறந்து போனார். அடுத்த நாள் 27-ம் தேதி அவருடைய சமுதாயத்தினர் ஆம்பூரில் மாலை 7 மணிக்கெல்லாம் தங்களுடைய வியாபாரத்தை நிறுத்திவிட்டுக் கடைகளையும் அலுவலங்களையும் மூடிவிட்டு தேசிய நெடுஞ்சாலையிலும் இணைப்புச் சாலைகளிலும் கூடினர். அப்பாவி ஹிந்துக்களின் கடைகளும் வீடுகளும் தாக்கப்பட்டன. அவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டபோது, அந்தக் கும்பல் “எங்கள் பகுதியில் போலீஸுக்கு என்ன வேலை?” என்று கேட்டபடியே வன்முறையில் இறங்கியுள்ளது. போலீஸாரின் மீதான தாக்குதல் அதிகமானபோது, பல போலிஸார் தங்களுடைய சீருடையை அவிழ்த்துவிட்டு ஓடித் தப்பித்துள்ளனர். கும்பலில் சிக்கிக்கொண்ட போலீஸாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. பெண் போலீஸாரும் காயமடைந்தனர். சிலர் மானபங்கப் படுத்தப்பட்டனர். பல போலீஸார் ஆம்பூர் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்திலிருந்து பின்னர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரும், தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள போலீஸாரைப் பார்த்தார். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் அவருடைய இயக்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறியாமல், நிராதரவான வெகுளிப் பெண் போலீஸார், அவரிடமே தங்களுக்கு ஏற்பட்ட பயங்கரத்தைச் சொல்லிப் புகார் செய்தனர். ”நாங்கள் பெண்கள் என்று கூடப் பார்க்காமல் தீவிரவாதிகள் எங்களைத் தாக்கினர்” என்று அவர்கள் ஜவாஹிருல்லாவிடம் சொல்வதை, இந்து முன்னணியின் ஆவணப்படம் காட்டுகிறது.
 
“கலவரப் பகுதிகளில் எங்களைப் பணிபுரிய அனுப்பாதீர்கள்; நாங்கள் தாக்கப்படுவோம்; எங்களை மானபங்கப் படுத்துவார்கள். உயரதிகாரிகள் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொள்வார்கள்.” என்று காவல்துறைத் தலைவருக்கும், முதல் அமைச்சருக்கும் பெண் போலீஸார் மனு கொடுக்கும் அளவுக்கு மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு சீரழிந்துள்ளது.
 
 
“அரசியல்வாதிகளும், மனித உரிமை போராளிகளும் ஆம்பூர் பயங்கரவாத வன்முறையை ஏன் கண்டிக்கவில்லை? பிரச்சனைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத அப்பாவி இந்துக்கள் தாக்கப்பட்டதற்கும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து அவர்கள் பட்ட துனபத்திற்கும் என்ன பதில்?” போன்ற ஏற்புடைய பொருத்தமான கேள்விகளை இந்த ஆவணப்படம் கேட்கிறது. 
 
 
 
 
 
Jihad in TN 2d
 
 
 
 
 
அடிப்படைவாத கும்பலின் கோரிக்கையை ஏற்று ஏழு போலீஸார் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்; ஆனால் ஆண்-பெண் போலீஸாரைத் தாக்கியவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. வன்முறையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களும் சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டனர்.   
 
 
இந்த மாதிரியான கும்பல்-ஜிகாத் அவ்வப்போது அரங்கேற்றப்படுவது மாநிலத்தில் வழக்கமாகி வருகிறது. ஆம்பூர் வன்முறையின் பின்னனியில், ராமநாதபுரம், தஞ்சாவூர், சென்னை ஆகிய நகரங்களில் இஷ்டமாகவும் சுலபமாகவும் அரங்கேற்றப்பட்ட கும்பல்-ஜிகாத் நிகழ்வுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்து முன்னணியின் ஆவணப்படம்.
 
 
 
ராமநாதபுரம்
 
 
 
 
 
Jihad in TN 2e
 
 
 
 
 
 
அக்டோபர் 14, 2014 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணத்தில், செய்யது முகமது என்கிற விசாரணைக் கைதி, காளிதாஸ் என்கிற சார்பு ஆய்வாளரைக் கத்தியால் குத்தினார். தன்னைத் தற்காத்துக்கொள்ள காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில், செய்யது முகமது மரணமடைந்தார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நெடுஞ்சாலையில் கூடிய ஒரு பெரும் கும்பல் பொதுப் போக்குவரத்து வாகனங்களைத் தாக்கியது. பேருந்துகளில் பயணம் செய்த இந்துக்களை மட்டும் அந்தக் கும்பல் தாக்கியதாக சம்பவத்தைக் கண்ட, பாதிக்கப்பட்ட நபர்கள் சொல்வதை ஆவணப்படம் காண்பிக்கிறது. ”போலீஸுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்ற போர்வையில் தாக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு என்ன பதில்?” என்று கேட்கிறது இந்து முன்னணியின் ஆவணப்படம்.  
இருப்பினும், முஸ்லிம் அமைப்புகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த அ.இ..அ.தி.மு.க அரசு, ரவுடி செய்யது முகம்மது குடும்பத்திற்கு ரூபாய் 5 லக்ஷம் இழப்பீடு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கும் பதிவு செய்தது.
ஆனால், ஜிகாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ள பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு எந்தவிதமான இழப்பீடும் கொடுக்காமல், அந்தக் கொலைகளுக்கு ரியல் எஸ்டேட் நிலத் தகராறு, பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை, தவறான பெண் உறவுகள் என்றெல்லாம் காரணங்களைக் கற்பித்ததையும் இந்து முன்னணியின் ஆவணப்படம் சுட்டிக் காட்டுகிறது.  
 
 
தஞ்சாவூர்
 
 
 
 
 
 
Jihad in TN 2f
 
 
 
 
 
சென்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஏப்ரல் 14, 2014 அன்று, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான ஒரு பகுதியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற போது, அடிப்படைவாத கும்பல் ஒன்று அந்தப் பகுதிக்குள் அவரைச் செல்லவிடாமல் தடுத்தனர். குடிமக்களிடம் வாக்குகள் சேகரிப்பது ஒரு வேட்பாளர் என்கிற முறையில் தன்னுடைய ஜனநாயக உரிமை என்று அவர் சொன்னபோது, அவரையும் அவருடன் சென்றவர்களையும் தாக்கியது அந்தக் கும்பல்.அந்தப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று அவரிடம் சொல்லிய போலீஸார், அந்தப் பகுதியை ஒரு வாகனத்தில் கடந்து சென்று அதற்கு அப்பால் உள்ள இந்துக்களிடம் வாக்கு சேகரிக்குமாறு அவருக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளனர். 
 
அங்கே நடந்த வன்முறைத் தாக்குதலையும் போலீஸாரின் இயலாமையையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்து முன்னணியின் ஆவணப்படம். முருகானந்தம் அவர்களும் அந்தச் சமயத்தில் தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
 
 
சென்னை
 
 
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட “இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்” (Innocence of Muslims) என்கிற திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இருப்பினும் அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் யூ டியூப் (You Tube) போன்ற இணையதளங்களில் காண்பிக்கப்படுவதை எதிர்த்தும், அதை நிறுத்தக் கோரியும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.  2012-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழக முஸ்லிம் அமைப்புகள், சென்னை அண்ணா சாலையிலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும், பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களைத் திரளச் செய்து போராட்டத்தில் இறங்கினர். 
 
 
 
 
 
Jihad in TN 2g
 
 
 
 
 
 
அமெரிக்க தூதரகம் அருகே வன்முறைக் கட்டவிழ்க்கப்பட்டது. அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது; வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; போலீஸாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அண்ணா சாலையில் தொழுகை நடத்தப்பட்டது. வன்முறைப் போராட்டத்தினால் அந்த நான்கு நாட்களும் போக்குவரத்து பல மணிநேரங்களுக்குப் பாதிக்கப்பட்டது. இந்த வன்முறைப் போராட்டத்திலும் இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
 
 
தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெயினுலாபுதீன், யூ டியூப் நிறுவனம் அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளைத் தடை செய்யவில்லையென்றால் தங்கள் அமைப்பு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததை ஆவணப்படம் தெளிவாகக் காட்டுகிறது. ஜெயினுலாபுதீன், “…..யூ டியூபிலிருந்து நீக்கப்படவில்லை என்று சொன்னால் அது இருக்கின்ற காலம் வரைக்கும் தினசரி இந்த நாடும் உலகமும் பற்றி எரியும். இந்தப் படத்தை எடுத்தவர்களும், அதற்குச் சாதகமாக இருந்தவர்களும் எங்கே காணப்படுவார்களோ அங்கே எங்கள் மக்கள் உண்ர்ச்சி வசப்பட்டு தாங்களே சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடிய நிலைமை நிச்சயமாக உருவாகும்…” என்று பகிரங்கமாக மிரட்டுகிறார். 
 
 
 
 
 
 
Jihad in TN 2j
 
 
 
 
 
இந்தியாவில் முதன் முறையாக அமெரிக்க தூதரகம் நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்தது. இப்பேர்பட்ட ஒரு பெருமையைத் தமிழகத்துக்குத் தேடித்தந்த அ.தி.மு.க அரசு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையரைப் பலிகடாவாக்கி அவரைப் பணியிட மாற்றம் செய்தது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதமடைந்த பொதுச்சொத்துக்களுக்கும் இழப்பீடாக எதுவும் செய்யப்படவில்லை.
 
 
அதே போல ஜனவரி 2013-ல் கமலஹாஸன் தயாரித்த விஸ்வரூபம் திரைப்படமும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கோபத்திற்கு ஆளானது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் இயக்கத்தை விமர்சனம் செய்யும் விதத்தில் அந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தாலும், அதை வெளியிடக் கூடாது என்கிற கோரிக்கையுடன் 26 இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சாலைகளில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களைத் தாஜா செய்து திருப்திப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய அ.தி.மு.க அரசு விஸ்வரூபம் திரைப்படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்தது. இந்தப் பிரச்சனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேகப் பத்திரிகையாளர் சந்திப்பில், மாநிலத்தில் உள்ள 524 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க அரசால் முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த முதல் அமைச்சர், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் கமல ஹாஸனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட அரசு உதவும் என்றும் கூறினார்.  
 
 
 
 
 
Jihad in TN 2h
 
 
 
 
 
 
இருப்பினும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) நடத்திவரும் அரசு மதுபானக்கடைகளை மூடுவோம் என்று சில சமூகநல அமைப்புகள் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் இறங்கியபோது, அரசு மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு (தமிழகத்தில் கிட்டத்தட்ட 6000 மதுபானக் கடைகள் உள்ளன) போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது. அதைச் சுட்டிக்காட்டி, “ஆயிரக்கணக்கான மதுபானக் கடைகளுக்குப் போலிஸ் பாதுகாப்பு கொடுத்த தமிழக அரசால் 524 திரை அரங்குகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?” என்று இந்த ஆவணப்படம் நியாயமான கேள்வியை எழுப்புகிறது.
 
 
 
 
 
Jihad in TN 2i
 
 
 
 
 
 
 
பத்திரிகையாளர்களுடன் நடந்த அரை மணிநேரச் சந்திப்பில், “தமிழ் நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏழரை லக்ஷம் உறுப்பினர்களுடன் இந்தியா முழுவதும் செல்வாக்கு உடைய அமைப்பு” என்று அந்த அமைப்பைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. அவருடைய அந்தச் சிறப்புக் குறிப்பை, சில திரையரங்குகள் மீது கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசி, வரவேற்றனர் முஸ்லிம் அடிப்படைவாதிகள். திரைப்படத்தின் சுவரொட்டிகளும், விளம்பரப் பதாகைகளும் அழிக்கப்பட்டன. திரைப்படத் தொழிலை நடத்த விடமாட்டோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆயினும், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 
 
 
வாக்குமூலம்
 
 
தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன், ரோஜா, மும்பை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கிய பிரபல இயக்குனர் மணிரத்னம் வீட்டில் தங்கள் அமைப்பு குண்டுகள் வீசியதைச் சொல்லி கமல ஹாஸனை மிரடியதாகக் கூறி வாக்குமூலம் அளித்திருப்பது, இந்து முன்னணி வெளியிட்ட இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
 
 
பேச்சு வார்த்தையின் போது தாங்கள் எப்படி கமல ஹாஸனை மிரட்டினோம் என்பதை விரிவாக விளக்கிச் சொல்லும் ஜெய்னுலாபுதீன், “எங்க பேச்சு வார்த்தையின் போது... அங்க பார்க்கணும்... ஆளு (கமல ஹாஸன்) அப்படியே ஆடிப்போயி, வெலவெலத்துப் போயிட்டான்…. அந்த மாதிரி தைரியமெல்லாம் கிடையாது. பயந்துட்டாங்க. மணிரத்னம் கதை தான் உனக்கு ஏற்படும்கற அளவுக்கு நம்ம மக்கள் கமலஹாசனிடம் பேசுகிறார்கள். இதை (விஸ்வரூபம் திரைப்படத்தை) மட்டும் வெளியிட்டிருந்தே..... என்று சொல்லி,  முன்ன  மணிரத்னம் வீட்டுல குண்டு போட்டாங்க.. ஆனா வெடிக்கல. அது தான் உனக்கும் ஏற்படும்... அந்த அளவிற்கெல்லாம் சொன்ன உடனே ஆள் ஆடிப்போய் உட்கார்ந்துட்டான். தயாரிச்சு வைத்திருந்தாலும் வெளியிட மாட்டாங்க. திரையுலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் பயந்து போய் நடுங்கிக்கிட்டுதான் இருக்காங்க” என்று தெளிவாக வாக்குமூலம் கொடுக்கிறார்.
 
 
அவர் மேலும், “ஒரு 15, 20 வருஷத்துக்காவது, இந்த மருந்து வேலை செய்யும்” என்று பெருமையுடன் கொக்கரிக்கிறார். இந்த வாக்குமூலத்தைத் தெளிவாகக் காண்பிக்கிறது இந்து முன்னணியின் ஆவணப்படம். 
 
 
 
அரசு எதற்காகக் காத்திருக்கிறது?
 
 
 
இந்து முன்னணியின் ஆவணப்படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. தான் செய்த ஒரு பயங்கரவாதச் செயலைச் சொல்லி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது அந்த ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் காவல்துறை அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை; அரசும் அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறைக்கு உத்தரவிடவில்லை. இவர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள்? ஏன் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்? 
 
ஆனல், ஜிகாதிகள் தங்களுடைய பயங்கரவாதச் செய்லகளைத் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த மாநிலத்தில் நிலவும் வருத்தமிகு சூழ்நிலை. 
 
 
 
(தொடரும்)
 
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் ஆவணப்படத்தின் கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும். 
 
 
0.00 நிமிடத்திலிருந்து 9.30 நிமிடம் வரை மேற்குறிப்பிட்ட காட்சிகளைக் காணலாம். 
                 
Read 1835 times
Rate this item
(2 votes)
Last modified on Tuesday, 05 April 2016 14:51

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment