×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழகத்தில் தொடரும் ஜிகாத்

Thursday, 29 September 2016 16:03 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 138 ஹிந்துத் தலைவரகள், இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
 
 
 
Jihadi victims 1
 
 
 
 
இந்தக் காலகட்டத்தில், திராவிடக் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்றன. அவர்கள் ஆட்சியினால் என்ன பயன்? தமிழகத்தில் அரசுகள் இருக்கின்றனவா? ஆட்சிகள் நடைபெறுகின்றனவா? சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுகிறதா? காவல்துறை தன் பணியை ஒழுங்காகச் செய்கின்றதா? போன்ற கேள்விகள் எழுகின்றன. விடைகள் தான் காணமுடியவில்லை!
 
 
தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களைப் பெரும்பான்மையான சமூகமாகக் கருதுவதே இல்லையா? ஹிந்துப் பெரும்பான்மை சமூகத்தின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் பாடுபட்டு வரும் இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தாங்களும் ஹிந்துப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்கிற எண்ணமே இல்லையா? அவர்களுக்கு அவ்வாறு ஹிந்து உணர்வே இல்லாமல் போனது ஏன்? 
 
 
சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்குக் கூடவா ஹிந்து உணர்வு இல்லை? ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்றுத்தானே தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்? அந்த நன்றி விசுவாசம் கூடவா இல்லை? ஹிந்து அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பத்திரிகைத்துறையில் ஹிந்துக்களே இல்லையா? நீதித்துறையில் ஹிந்துக்களே இல்லையா? ஹிந்து வழக்கறிஞர்கள் என்ன செய்கிறார்கள்? பத்திரிகைத்துறையிலும், நீதித்துறையிலும், சட்டத்துறையிலும் உள்ளவர்கள் ஏன் கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் இருக்கின்றனர்? ஹிந்து ஆன்மீக இயக்கங்களும், மடாதிபதிகளும், குருமார்களும், ஆதீனங்களும் ஏன் வாய்மூடி மௌனம் சாதிக்கின்றனர்? 
 
 
இப்படி எழுச்சியின்றி, ஒற்றுமையின்றி இருந்ததனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன தெரியுமா? கொலைகளும் தாக்குதல்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.  
கடந்த செப்டம்பர் மாதம் வேலூர், ஓசூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை முதலான நகரங்களில் ஹிந்து இயக்கத்து இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுகள் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடந்துள்ளன. தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தலைவர் சூரி ஓசூரிலும், கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் கோவையிலும் திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். திண்டுக்கல் இந்து முன்னணி பொறுப்பாளர் பலத்த காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவங்களைப் பற்றி மேலும் பார்ப்போம். 
 
 
கோவையில் நடந்த கொலை
 
 
 
Jihad in TN 1
 
 
கடந்த 22-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் (36), தன்னுடைய பணிகளை முடித்துக்கொண்டு, கோவை காந்திபுரத்திலிருந்து துடியலூர் அருகேயுள்ள  சுப்பிரமணியபாளையத்தில் தன்னுடைய வீட்டை நெருங்கும் சமயத்தில், அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, அறிவாள்களால் பல இடங்களில் வெட்டிச் சாய்க்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதிகள் என்று இந்து முன்னணியினர் உறுதியாக நம்புகிறார்கள். வெட்டிச் சாய்க்கப்பட்ட சசிக்குமார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார்.
 
 
 
Jihad in TN 2
 
 
 
கோவை நகரத்தில் இந்து முன்னணி செல்வாக்கு மிக்க இயக்கமானதால், சசிக்குமார் கொலை செய்யப்பட்ட செய்தி விரைவாகப் பரவியது. அடுத்த நாள் காலையிலேயே இந்து முன்னணித் தொண்டர்கள் மருத்துவ மனையின் முன்பு கூடத்தொடங்கினர். கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் முழு கடையடைப்புக்கு இந்து முன்னணி அறிவித்திருந்தது. மதியம் பிரேதப் பரிசோதனை முடிந்து சசிக்குமாரின் உடல் அவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்ட பிறகு, இந்து முன்னணியினர் அமைதியான முறையில் இறுதி ஊர்வலம் நடத்தினர். ஏராளமான பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில்
கலந்துகொண்டனர்.
 
 
 
Jihad in TN 3
 
 
ஊர்வலம் அமைதியாக நடந்துகொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் பகுதியிலிருந்து கற்கள் வீசப்பட்டதாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே குனியமுத்தூர், மதுக்கரை போன்ற பகுதிகளிலிருந்து இந்து முன்னணியினர் வந்த வாகனங்கள் கோட்டைமேடு ஆத்துப்பாலம் போன்ற பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி கிடைத்ததும் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி தொண்டர்கள், காவல்துறை முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி ஆங்காங்கே வன்முறையில் இறங்கினர். இதனால் கடைகளும் வாகனங்களும் பாதிக்கப்பட்டன. திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் போராட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 150க்கும் மேலான இந்து முன்னணி தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக 6 சிறப்புக் காவல் படைகள் உருவாக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
 
 
 
Jihad in TN 4
 
 
செய்தித் தொடர்பாளராக இருந்த காரணத்தால் சசிக்குமார் ஊடகங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புகளைப் பெயர் சொல்லிக் கண்டித்தும் தன்னுடைய கருத்துக்களை முகநூல் பக்கங்களில் பதிவு செய்துவந்தார். பசு வதைக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவிலும் ஈடுபாட்டுடன் பங்கு கொண்டிருந்தார். இதனால் அவருக்குப் பல மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தன. தனக்கு வந்த மிரட்டல்கள் பற்றிக் காவல்துறையிடம் புகார்களும் அளித்திருந்தார் சசிக்குமார். அப்புகார்களின் பேரில் பாதுகாப்பை அதிகரித்திருக்க வேண்டிய காவல்துறை, துரதிர்ஷ்டவசமாகக் கடந்த ஒரு வருடமாகக் கொடுக்கப்பட்டிருந்த போலிஸ் பாதுகாப்பை (PSO-Personal Security Officer) இரு வாரங்களுக்கு முன்பு தான் விலக்கிக்கொண்டது. போலிசாரின் அலட்சியமே அவருடைய உயிருக்கு உலை வைத்துவிட்டது. 
 
 
இந்து-முஸ்லிம் போராட்டங்களுக்கு எற்கனவே பெயர் பெற்றிருக்கும் கோவை நகரம் சசிக்குமாரின் கொலை, அதைத் தொடர்ந்த வன்முறை ஆகியவற்றுக்குப் பிறகு மிகவும் பதட்டமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது. ஏற்கனவே எதிர்பார்ப்புடன் செயல்படாமல் தவறு செய்த காவல்துறை மீண்டும் தங்கள் செயல்பாட்டில் தவறாமல் இருக்க கண்காணிப்பையும் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளனர். இந்தத் தருணத்தில் 1997-ல் நடந்த காவலர் செல்வராஜின் கொலையையும் அதனைத் தொடர்ந்த வன்முறையையும், 1998-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளையும் நினைத்துப்பார்ப்பதன் மூலம், அப்போதிலிருந்தே கோவை மாநகரம் நீறு பூத்த நெருப்பு போல் இருந்துள்ளதையும், வாய்ப்பு ஏற்படும்போது அது பெரு நெருப்பாக எரியக்கூடும் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.  
 
 
பின்னணி
 
 
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் பயங்கரவாதம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைப் பற்றிய சிறு கண்ணோட்டம் கொள்வது, நமக்கு மேலும் நல்ல புரிதலைக் கொடுக்கும். சிமி (SIMI – Students Islamic Movement of India) அமைப்பு நாடு முழுவதும தடை செய்யப்பட்டபோது, அவ்வியக்கத்தின் தமிழகக் கிளை “அல் உம்மா” மற்றும் “ஜிகாத் கமிட்டி” ஆகிய பெயர்களில் அவதாரம் எடுத்தது. அல் உம்மா அமைப்பு 1993-ல் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுகள் வெடிக்கச்செய்து 11 நபர்களைக் கொன்றதன் மூலம் தன்னுடைய முதல் பயங்கரவாதச் செயலை நிகழ்த்திக்காட்டியது.  
 
 
 
Jihad in TN 5
 
        
பழனிபாபா என்கிற பயங்கரவாதியின் தலைமையில் இயங்கிய ஜிகாத் கமிட்டி ஆங்காங்கே மதக்கலவரங்களை நிகழ்த்தி, அவற்றின் முடிவில் கொலைவெறித் தாக்குதல்களும் நடத்தி வந்தது. பிறகு பழி தீர்க்கும் படலத்தில் பழனிபாபா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பு சிதறுண்டு போனது.  பிறகு 1995-ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பழனிபாபாவுடன் உடனிருந்தவரும், சிமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருமான ஹைதர் அலி என்பவரால் த.மு.மு.க தோற்றுவிக்கப்பட்டபோது, முன்னாள் எம்.எல்.ஏ, ஜவஹிருல்லாவும் தொடக்க உறுப்பினராக உடனிருந்தார். 
 
 
1998-ல் நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அல் உம்மா தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகு, அவ்வியக்கம் “மனித நீதிப் பாசறை” என்கிற பெயரில் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு வலம் வந்தது. இவ்விதம், சிமி, அல் உம்மா அமைப்புகள் மீதான தடையோ அல்லது ஜிகாத் கமிட்டி அமைப்பு சிதறுண்டதோ, தமிழகத்தில் பயங்கரவாதத்தின் வளர்ச்சியைக் குறைக்கவில்லை. தொடர்ந்து வளர்ந்துதான் வருகிறது. உண்மையில், இஸ்லாமிய அடிப்படைவாதம் எஸ்.டி.பி.ஐ (SDPI - Social and Democratic Party of India), பி.எஃப்.ஐ (PFI - Popular Front of India), தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (TNTJ - Tamil Nadu Towheed Jamath), போன்ற வெவ்வேறு பெயர்களில், திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்டுக் கட்சிகள் மற்றும் தமிழ் பிரிவினைவாதக் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் மேலும் வளர்ந்து வருகிறது. 
 
 
 
 
Jihad in TN 5a
 
 
 
இதனிடையே 2009-ஆம் ஆண்டு ஜுலை மாதம் த.மு.மு.க தன்னுடைய அரசியல் முகமாக “மனிதநேய மக்கள் கட்சி” என்கிற அமைப்பைத் தொடங்கியது. த.மு.மு.க தலைவர்கள் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல்களில் பங்குபெறத் தொடங்கினார்கள். திராவிடக் கட்சிகள் முஸ்லிம் வாக்குவங்கியை மனதில் கொண்டு இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆதரவு தருவதால்,  முன்னாள் தீவிரவாதிகளெல்லாம் இந்நாள் அரசியல் தலைவர்களாக வலம் வந்து ஜனநாயகம் பற்றியும் மதச்சார்பின்மைப் பற்றியும் உரையாற்றத் தொடங்கினார்கள். 
 
 
 
 
 Jihad in TN 5b
 
 
 
தமிழகம் அமைதியாக உள்ளதும் என்றும், 1993 சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பு மற்றும் 1998 கோவைத் தொடர் குண்டு வெடிப்பு ஆகியவைத் தவிர வேறு பயங்கரவாதச் செயல்கள் நடக்கவில்லை என்றும் பொதுவில் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறத் தொடங்கிவிட்டன. 1984-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொடங்கி தமிழகம் பயங்கரவாதத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டு, இதுவரை 138 பேர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஊனமுற்றுள்ளனர். 
 
 
1996 முதல் 2001 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் பயங்கரவாதம் வளர்ச்சி அடைந்தது பகிரங்கமாகவே தெரிந்தது. அவ்வாட்சியைத் தொடர்ந்து 2001 முதல் 2006 வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டாலும், மறைமுகமான நடவடிக்கைகளினால் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது. இதை உறுதி செய்யும் விதமாக 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி (2006 மே மாதம் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது) கோவையில் நடத்தியது போலவே ஒரு குண்டு வெடிப்பை நடத்த முயற்சி செய்ததாக மனித நீதிப் பாசறை அமைப்பைச்சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் அந்த ஐந்து பேரும் 2008-ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 9-ம் தேதி, பொய்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகச் சொல்லி விடுவிக்கப்பட்டார்கள்.
 
 
 
Jihad in TN 6
 
 
இது மட்டுமில்லாமல், இவர்களின் விடுதலைக்கு முன்பாக, 2006 மே மாதம், தி.மு.க ஆட்சிக்கு வந்த கையோடு, அல் உம்மா தீவிரவாதிகள் 6 பேர் பாளையம்கோட்டைச் சிறையிலிருந்து திடீரென்று விடுதலை செய்யப்பட்டார்கள்.
 
 
விநாயகர் சதுர்த்தி விழாக்களில் தடங்கல்களையும், இடையூறுகளையும் செய்வதை வாடிக்கையாகவே கொண்டிருந்தது த.மு.மு.க மிக மோசமன நிகழ்வாக, 2007-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் கலவரம் உண்டாக்கியதில், நூற்றுக்கணக்கான இந்துக்கள் பொய்க்குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது மாநில காவல்துறை மனித உரிமை மீறல்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
 
தி.மு.க அரசு இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுதலை செய்ததைப் பற்றிய செய்திக்குறிப்பில், “இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மீது தி.மு.க அரசு கொண்டுள்ள பகிரங்கமான பரிதாபத்தின் விளைவான இந்த விடுதலை நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தன்னுடைய ஆகஸ்டு 8, 2006 வெளியீட்டில் குறிப்பிட்டது. 
 
 
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பல்வேறு சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள் தாலிபான் மயம் ஆக்கப்பட்டன. அதனுடன் கூடவே பெண்கள் ஒடுக்கப்படுவதும் நடந்தது. திருநெல்வேலியில் உள்ளூர் பீடி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெண்ணும், டீ கடை நடத்திக்கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணும் மத ஒழுக்கம் என்கிற பெயரால் கொலை செய்யப்பட்டனர். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தன்னுடைய மார்ச்சு 26, 2006 நாளிதழில், “நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சிறையிடப்பட்டதால் சற்றே பலவீனம் அடைந்த அல் உம்மா இயக்கம், தி.மு.க அரசின் மென்மைப் போக்கினால் மீண்டும் பலம் பெற்று தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிக்க சட்டங்களை முஸ்லீம் சமுதாயத்தினர் மீது திணிக்கத் தொடங்கியுள்ளது” என்று செய்தி வெளியிட்டது. தமிழகம் தாலிபான் மயமாக்கப் படுவதற்கு அத்தாட்சியாக இச்செய்தி இருந்தது. தற்போது தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பு வஹாபிய இஸ்லாமை தமிழகத்தில் பிரச்சாரம் செய்து பரப்பி வருகின்றது.
 
 
இதற்கு முன்பாக 17 ஃபிப்ரவரி 2007 இதழில், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், KFD (Karnataka For Dignity), MNP (Manitha Neethi Pasarai), NDF (National Democratic Front from Kerala) ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்து செயல்படுவதற்காக PFI (Popular Front of India) இயக்கத்தை ஃபிப்ரவரி 16 அன்று தொடங்கியதாகச் செய்தி வெளியிட்டது. “தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அடித்தளத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளை பலப்படுத்தவும், அதைத் தொடர்ந்து “இந்தியாவிற்கு சக்தியூட்டு” (Empower India) என்கிற மாநாட்டைப் பெங்களூருவில் நடத்தவும், நோக்கம் கொண்டு அந்த இயக்கம் செயல்படும். மேலும், அவ்வியக்கம் தன்னுடைய திட்டங்களாக ஜனநாயகம், சமூக நீதி போன்ற கொள்கைகளை முன்வைத்தாலும், உண்மையில் தீவிரவாதக் கொள்கைகளை பரப்பும் விதமாகத் தான் செயல்படும் என்று தமிழகக் காவல்துறை கருதுகின்றது” என்றும், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் கருத்து தெரிவித்து செய்தி வெளியிட்டது.
 
 
 
 
 
Jihad in TN 7
 
 
 
 
ஆகவே, மேற்கண்ட பின்னணியில் தான் தமிழகத்தில் தற்போதுள்ள பயங்கரவாத சூழலைக் காணவேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற 7 பயங்கரவாத நிகழ்வுகளை (வேலூர்-2, திருப்பூர்-1, ஓசூர்-1, திண்டுக்கல்-1, கோவை-2) சுட்டிக்காட்டிய இந்து முன்னணியினர், “பா.ஜ.க தலைமையிலான அரசு மத்தியில் அமைந்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஒரு தளர்வு ஏற்பட்டிருந்தது. ஆனால், இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழாக்கள் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டதையும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீதான மதிப்பும் செல்வாக்கும் தமிழகத்தில் வளர்வதையும் கண்டு பொறுக்க முடியாமல், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மீண்டும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன” என்று கூறுகின்றனர். 
 
 
தற்போதைய சூழ்நிலையை அறிந்துகொள்ள விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு நடந்துள்ள நிகழ்வுகளைப் பார்ப்பது நமக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும். 
 
 
வேலூர்
 
 
கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி விடியற்காலை 3 மணியளவில் வேலூர் கோட்டம் இந்து முன்னணி தலைவர் மகேஷ், சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் தன் வீட்டின் வெளியே வெடிக்கும் சப்தம் கேட்டு கண்விழித்தார். 2013-ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு மகேஷுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது. மகேஷின் பாதுகாப்பாளர் (PSO) வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்கின் மேலும் பெட்ரோல் கொட்டியிருந்தது. போலிசார் விரைந்து வந்து சோதனை செய்தபோது, வீட்டு வாசலில் ஒரு பெட்ரோல் குண்டும், வீட்டின் கூரையின் மேல் மூன்று பெட்ரோல் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. வாசலில் உள்ள குண்டு வெடித்து தீ ஏற்படும்போது, கூரையின் மேல் உள்ள குண்டுகளும் பற்றிக்கொள்ளும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு நடந்திருந்தால் வீட்டிற்குப் பலத்த சேதங்களும் மரணங்களும் நிகழ்ந்திருக்கலாம். குண்டு வைத்தவர்கள், அந்தப் பகுதியில் போலிசார் ரோந்து வருவதைப் பார்த்துவிட்டுத் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. மூத்த காவல்துறை அதிகாரிகள் மகேஷ் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
 
 
 
 
 
Jihad in TN 8
 
 
 
 
மகேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட அதே சமயத்தில், சாய்நாதபுரம் என்கிற மற்றொரு பகுதியில் உள்ள இந்து முன்னணி இணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களின் போக்குவரத்து நிறுவனத்தின் அலுவலகத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த பேருந்தின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. பேருந்து பற்றியெரிந்து கொண்டிருந்தபோது, சத்தம் கேட்டு வந்த நிறுவனத்தின் ஊழியர்களும் அக்கம்பக்கத்தவர்களும் நெருப்பை அணைத்தனர். இரண்டு சம்பவங்களையும் விசாரித்து வரும் போலிசார் இன்னும் எந்தவிதமான முன்னேற்றமும் காணவில்லை. 
 
 
தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ள மாவட்டங்களில் வேலூரும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. இங்கே தான் பா.ஜ.க மருத்துவ அணியின் மாநிலத் தலைவர் டாக்டர் அர்விந்த் ரெட்டி அக்டோபர் 2012-ல் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜூலை 2013-ல் இந்து முன்னணித் தலைவர் வெள்ளையப்பனும் படுகொலை செய்யப்பட்டார். பிறகு தமிழகக் காவல்துறைக்குப் பெருத்த அவமானம் ஏற்படுத்திய ஆம்பூர் கலவரம் ஜூலை 2015-ல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஜிகாதிகள் காவல்துறையினரை ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்நிகழ்வு தமிழகக் காவல்துறை சரித்திரத்தில் ஒரு அழியாக் கரையாக இடம்பெற்றுள்ளது.  
 
 
 
 
Jihad in TN 9
 
 
 
இந்து முன்னணி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் வேலூரில் நடந்துள்ள பல ஜிகாத் நிகழ்வுகளை சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
திருப்பூர்
 
 
அதற்கு அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 11-ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட இந்து முன்னணியின் பொருளாளர் ஷண்முகம் சொந்தமாக வைத்திருக்கும் உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக, நடுநிசி 12.30 மணியளவில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் உடனடியாகத் தப்பிச் சென்றுவிட்டனர். தையல் இயந்திரங்களும், மற்ற இயந்திரங்களுமாக சுமார் 15 லக்ஷம் ரூபாய் மதிப்புள்ளவை தீயில் சேதமடைந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள குப்புச்சிபாளையம் என்ற இடத்தில் அந்த நிறுவனம் அமைந்துள்ளதால், பல்லடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
 
 
 
Jihad in TN 10
 
 
 
திருப்பூர் கோவைக்கு அருகில் இருப்பதால், அங்கும் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்துள்ளது. துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தயாரிப்பில் உலகளவில் சிறந்து விளங்குவதால், தன்னகத்தே கொண்டுள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூலம் லக்ஷக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ள நகரமாகத் திருப்பூர் விளங்குகிறது. அசாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பலர் இங்கே வேலை தேடி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். அவர்களில் சிலர், பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் ஆகிய நாடுகளில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் மறைமுகப் படைகளாக (Sleeper Cells) இயங்கிவரலாம் என்கிற சந்தேகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் உள்ளூர் இளைஞர்களைத் தீவிரவாதத்தில் பங்கேற்குமாறு ஊக்குவித்து வருவதாகவும், ISIS போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்பிடிக்கும் வேலையும் நடப்பதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் சந்தேகப்படுகின்றன. 
 
 
இதை நிரூபிக்கும் விதமாக, கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதியன்று, திருப்பூரிலிருந்து தன் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்குச் சென்றபோது, முகம்மது மொஷிருத்தீன் என்கிற முசா (25) புர்த்வான் ரயில் நிலையத்தில் கைது  செய்யப்பட்டான். அவனிடமிருந்து சில ஆயுதங்களும், 6 செல்ஃபோன் சிம் (ஸிம்) அட்டைகளும், இரண்டு போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. கடந்த ஆறு ஆண்டுகளாகத் திருப்பூரில் ஒரு மளிகைக் கடை நடத்திக்கொண்டு, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான் முசா. விலை உயர்ந்த செல் ஃபொன்களை வைத்திருந்து, ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்குத் தொடர்பு கொண்டு, ISIS அமைப்பின் இந்திய நடவடிக்கைகள் தலைவனான ஸஃபி ஆர்மர் என்பவனுடன் அடிக்கடிப் பேசி வந்திருக்கிறான் முசா. பங்களா தேஷ் நாட்டில் உள்ள “ஜமாத் உல் முஜாஹிதீன்” (JuMB – Jamath-ul-Mujahideen Bangladesh) என்கிற பயங்கரவாத அமைப்பின் மறைமுகப் படையாக செயல்பட்டு வந்துள்ளான் முசா. பங்களா தேஷின் தலைநகர் தாகாவில் உள்ள ஹோலி ஆர்டிஸன் பேக்கரியில் கடந்த ஜூலை 1-ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மேற்குவங்க மாநிலத்திலும் தாக்குதல் நிகழலாம் என்கிற எதிர்பார்ப்பில், மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தங்களுடைய கண்காணிப்பை அதிகப்படுத்தியதன் விளைவாக முசா சிக்கினான்.   
 
 
அடுத்த நாள், 6-ஆம் தேதி, உளவுத்துறை அதிகாரிகள் திருப்பூரில் உள்ள முசாவின் வீட்டைச் சோதனையிட்டனர். அவனுடைய மனைவி ஷஹிலா, இரண்டு பெண்குழந்தைகள், அவனுடைய மூத்த சகோதரர் அசதுல்லா ஆகியோரை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். ஒவ்வொரு முறை தன் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்குப் போய்விட்டு வரும்போதும் முசா பத்திருபது ஆட்களை அழைத்து வந்து திருப்பூரில் வேலைக்குச் சேர்த்து விடுகிறான். இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் திருப்பூரில் உள்ளதாகத் தெரிகிறது. அவர்களைப் பற்றிய தகவல்களையும் உளவுத்துறை போலிசார் சேகரித்து வருகின்றனர்.
 
 
கோவை
 
 
கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி, தன்யா என்கிற இந்துப்பெண் லவ் ஜிகாத்துக்குப் பலியானாள். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தன்யாவின் குடும்பம், கோயமுத்தூர் மாவட்டதில் அன்னூர் என்னுமிடத்தில் வசித்து வருகின்றது. தன்யா கடந்த இரண்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பெற்றோர்களால் திருமணம் பேசப்பட்டு நிச்சயதார்த்தமும் நடந்திருந்தது. இந்நிலையில், தன்யாவைக் காதலித்து, அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த ஷகீர் என்கிற முஸ்லிம் இளைஞன், அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்பதால், அவளுடைய பெற்றோர்கள் வெளியே சென்றிருக்கும் சமயத்தில், வீட்டிற்குள் புகுந்து அவளைச் சரமாரியாக வெட்டிப்போட்டுவிட்டு, பின்பக்கமாகத் தப்பியோடிவிட்டான். எந்தத் தவறும் செய்யாத அப்பாவிப் பெண் தன்யா ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார். 
 
 
 
 
Jihad in TN 11
 
 
 
இந்துப் பெண்களைக் காதல்வலையில் வீழ்த்தி அவர்களை மதம் மாற்றுவதும், திருமணம் செய்துகொள்ள மறுத்தாலோ அல்லது மதம் மாற மறுத்தாலோ அவர்களைக் கொலை செய்வதுமான லவ் ஜிகாத், தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் நடந்து வருவதை ஆவணத்துடன் காட்டுகிறது இந்து முன்னணியின் ஆவணப்படம். ஆகவே தன்யாவும் அத்தகைய பெண்களில் ஒருத்தியாக ஆகிவிட்டாள்.
 
 
ஓசூர்
 
 
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக இருந்தவர் சூரி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி ஓசூர் நேரு நகரில் இருக்கும் தன்னுடைய அலுவலகம் முன்பாக, மாலை 7 மணியளவில், மூன்று மர்ம நபர்களால் கடுமையாக வெட்டப்பட்டு இறந்துபோனார். தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தில் சேர்ந்ததிலிருந்து தீவிரமாகச் சமுதாயப் பணிகள் செய்தும், விநாயகர் சதுர்த்தி விழாவை ஓசூரில் பிரம்மாண்டமாக நடத்தியும், வேகமாக முன்னேறி வந்தவர் சூரி. 
 
 
 
 
Jihad in TN 12
 
 
 
இவர் மேல் அதிருப்தியில் இருக்கும் தொழில் எதிரிகளின் பகைமையைப் பயன்படுத்தி, ஜிகாதிகள் சதி செய்து இவரைக் கொன்றிருக்கலாறும் என்று அவ்வமைப்பினர் கருதுகின்றனர். ஓசூர் போலிசார் விசாரணை செய்துவந்த நிலையில், 22-ஆம் தேதி, கஜேந்திரன் (29), ஷாஜித் பாஷா (25) மற்றும் பாபு (26) ஆகியோர் போச்சம்பள்ளியில் உள்ள துணை நிலை நடுவர்நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை தங்கள் வசம் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்று ஓசூர் போலிசார் கூறியுள்ளனர்.
 
 
திண்டுக்கல்
 
 
Jihad in TN 13
 
 
ஓசூரில் சூரி படுகொலை செய்யப்பட்ட அதே தினத்தில், இரவு 10 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் இந்து முன்னணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வந்த சங்கர் கணேஷ் என்கிற இளைஞர் மீது, நான்கு ஜிகாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். சங்கரின் தலை, முகம், தோள், கை என்று அவருடைய இடது பக்கம் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனடியாக திண்டுக்கல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஆரம்பச் சிகிச்சை பெற்ற சங்கர், பின்னர் மேற்கொண்டு சிறப்புச் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதுரை மீனாக்ஷி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் காலை அவருக்கு அவசர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ள சங்கர் தற்போது மதுரை மருத்துவ மனையிலேயே தொடர் சிகிச்சையில் உள்ளார்.
 
 
 
 
Jihad in TN 14
 
 
 
 
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் சங்கரைப் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் சங்கரின் நிலை பற்றி விசாரித்துவிட்டு, தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை தருமாறு கூறிச் சென்றார்.  
 
 
 
 
Jihad in TN 15
 
 
 
அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த அன்றே மதுரைப் பூக்கடைப் பகுதியில் யாசின், மாலிக், ஜெயகுமார் என்கிற பாசித் மற்றும் சுரேஷ் ஆகிய நால்வரையும் போலிசார் கைது செய்தனர். அந்த நான்கு பேரும் சங்கரை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்கிற எண்ணத்துடன் திண்டுக்கல்லிலிருந்து மதுரை வரைப் பின்தொடர்ந்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
 
இந்து முன்னணியின் ஆவணப்படத்தில் திண்டுக்கல் மாவட்டம் எந்த அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றித் தெளிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்கள். இந்து இளைஞர்கள் மதம் மாற்றப்படுவதையும் அது தெரிவிக்கின்றது. அதை நீருபிக்கும் விதமாக சங்கரைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் மதம் மாறிய இந்துக்களாக இருக்கின்றனர். 
 
 
மத்திய மாநில அரசுகளுக்குப் பொறுப்புண்டு. 
 
 
இந்து முன்னணி தயாரித்து வெளியிட்ட “தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லமிய பயங்கரவாதம்” என்கிற ஆவணப்படம் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் நடந்து வரும் ஜிகாதி தீவிரவாத நிகழ்வுகளை விவரமாக ஆவணங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்படம் இவ்வருடம் கடந்த ஃபிப்ரவரி மாதம் சென்னையிலும், ஏப்ரல் மாதம் தில்லியிலும், பா.ஜ.க மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி அவர்களாலும் இந்து முன்னணி நிறுவனர் தலைவர் திரு.ராமகோபாலன் அவர்களாலும் வெளியிடப்பட்டது.
 
 
 
 
Jihad in TN 16
 
 
 
 
 
வெளியீட்டைத் தொடர்ந்து, ராமகோபாலன் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களையும், உள்துறை இணை அமைச்சர் திரு.கிரன் ரிஜிஜு அவர்களையும் சந்தித்து, ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் நடந்துவரும் இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகளைத் தேசியப் புலனாய்வு நிறுவனம் (NIA) விசாரணை நடத்த வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்து, மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.  
 
 
 
Jihad in TN 17
 
 
 
 
முதல் அமைச்சரைப் பொறுத்தவரை, அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் உள்ளது என்று மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், நடந்துகொண்டிருப்பது என்னவோ அதற்கு நேர்மாறாகத்தான் இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக கொலைகள், கொலைவெறித் தாக்குதல்கள், வன்முறைகள் என்று இஸ்லாமிய அமைப்புகள் நடத்திவரும் நிகழ்வுகள் அனைத்தும் அதை நிரூபிக்கின்றன. ஜிகாதி படுகொலைகள் மீதான மாநிலக் காவல்துறையின் விசாரணைகள் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவடையவில்லை. இதற்கு 2006-ல் தென்காசியில் நடந்த பாண்டியன் சகோதரர்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, பத்து ஆண்டுகள் கடந்தபின்னும், இன்னும் நீதிமன்ற விசாரணைக்குக் கூட வராமல் இருப்பதே மறுக்க முடியாத சான்றாக உள்ளது.
 
 
மாநிலக் காவல்துறை மறுப்பிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அல்லது அவ்வாறு இருக்கச் சொல்லி சக்தி வாய்ந்த இடங்களிலிருந்து உத்தரவுகள் வந்திருக்கலாம். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் ஐந்தாண்டுகளில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியின் தலைவர்கள் ஐந்து பேரும், ஒரு அப்பாவி இந்துவும் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்தப் படுகொலைக்கான காரணங்களாக தனிப்பட்ட பகை, நிலத்தகராறு, ரியல் எஸ்டேட் பிரச்சனைகள், பணம் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றை முன்வைத்தது தமிழகக் காவல்துறை. ஏன், சில கொலைகளுக்குக் கள்ளத்தொடர்பு என்பதைக் கூட ஒரு காரணமாகச் சொல்லக்கூடிய அளவுக்குச் சென்றது காவல்துறை.
 
 
நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ மற்றும் நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ ஆகிய திரைப்படங்களை வெளியிட விடாமல் 24 இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டபோது. அந்த இரண்டு நடிகர்களுக்காகவும், தானே முன்நின்று அரசைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்தார் முதல்வர்.
 
 
 
 
Jihad in TN 18
 
 
 
 
விஸ்வரூபம் படப் பிரச்சனையில் தானே ஊடகங்களுக்கு அரைமணிநேரம் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். “இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்” என்கிற ஆங்கிலப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டப் பிறகும், அப்படத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கி சென்னை அண்ணா சாலையிலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் தொடர்ந்து நான்கு நாட்கள் வன்முறையில் ஈடுபட்டன. அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தின. அப்போது சென்னை மாநகரக் கமிஷனரைப் பலிகடாவாக்கி அவரைத் துறைமாற்றம் செய்தார் முதல்வர். 
 
 
 
 
Jihad in TN 19
 
 
 
 
இவ்வாறெல்லாம் நடவடிக்கைகளில் இறங்கிய முதல்வர், இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட விஷயத்திலும், இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட விஷயத்திலும் மௌனமாகவே இருந்து வருகிறார். 
 
 
இந்து அமைப்புகளின் தொடர் போராட்டங்களால், வேறு வழியில்லாமல் மாநில அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர், அப்போது நீலகிரி மாவட்டம் கொடநாடு பங்களாவில் தங்கி பணிபுரிந்து வந்த முதல்வரைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பிற்கு பிறகு காவல்துறைத்தலைவர் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையிலும், இந்து அமைப்புகளின் தலைவர்களின் கொலைக்குக் காரணமாக ஏற்கனவே சொன்ன காரணங்களையே திரும்பவும் சொல்லியிருந்தார். முதல்வரும் தன்னுடைய மௌனத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்.    
 
 
    
பின்னர் வேலூர் பாஜக தலைவர் டாக்டர் அர்விந்த் ரெட்டி கொலைவழக்கில், சம்பந்தமே இல்லாத சில குண்டர்களைக் காட்டி அவர்கள் தான் கொலைகாரர்கள் என்று பொய்யாக நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை மூட முயற்சி செய்யும் அளவுக்குத் தாழ்ந்தது காவல்துறை. சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பயங்கரவாதச் செயல் புரியும் திட்டத்துடன் வந்திருந்த போலிஸ் ஃபக்ருதீன் என்கிற பயங்கரவாதியையும், ஆந்திர மாநில எல்லையில் புத்தூர் என்னுமிடத்தில் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய இரு பயங்கரவாதிகளையும் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அவர்களைப் பிடித்த பிறகு, காவல்துறை இத்தனை நாட்களாகக் கூறிவந்த காரணங்கள் பொய்யானவை என்கிற உண்மை வெளிப்பட்டது. இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்களைத் தாங்களே கொன்றதாக அம்மூவரும் வாக்குமூலம் அளித்தனர்.
 
 
 
 
Jihadists of TN 2
 
 
 
அதையும் விடக் கேவலமான நிலை தமிழகக் காவல்துறைக்குக் காத்திருந்தது. 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம், வேலூர் போலிசின் காவலில், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் குற்றவாளி இறந்தபோது, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆம்பூர் காவல்நிலையத்தைச் சூழ்ந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆம்பூர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பயங்கர வன்முறையில் இறங்கினர். பொதுச் சொத்துக்களுக்குக் கடுமையான நாசங்களை விளைவித்தனர். திட்டமிட்ட வன்முறையில் இறங்கினர். வன்முறையை அடக்க வந்த போலிசாரைத் துரத்தித் துரத்தி அடித்தனர். பெண் போலீசாரும் கடுமையான தாக்குதல்களுக்கும் மானபங்கத்துக்கும் ஆளாயினர். பெண் போலிஸ் உட்பட 40 போலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
 
 
 
Jihad in TN 20
 
 
 
 
நாசமான சொத்துக்களின் மதிப்பு 10 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் 118 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டாலும், இரண்டே வாரங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நஷ்ட ஈடு பெறுவதற்கு அரசு முயற்சி செய்யவில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகும் முதல்வர் மௌனம் சாதித்தார்.  
 
 
எதுவாயினும், ஆம்பூர் வன்முறை நிகழ்வானது, தமிழகக் காவல்துறையின் வரலாற்றில், அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக, அவர்களின் கௌரவத்திற்கு மாறா இழுக்காக நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது. 
 
 
சரி, பொது வெளியில் தான் இவ்வாறு காவல்துறைக்கு அவமானம் ஏற்பட்டதென்றால், சிறைச்சாலைக்குள்ளும் பெருத்த அவமானம் ஏற்பட்டது. தமிழகத்தில் பல இந்து அமைப்புத் தலைவர்களைக் கொலை செய்த பன்னா இஸ்மாயில், போலிஸ் ஃபக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு, திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் அம்பத்தூர்  சுரேஷ் குமாரைக் கொலை செய்த வழக்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம்அன்சாரி, முன்னா என்ற  முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் புழல் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். 
 
 
மேற்கூறப்பட்ட பயங்கரவாதிகள் சிறையில் பலவிதமான அராஜகங்களை அரங்கேற்றி வந்தனர். செல் ஃபோன்களைத் தருவித்துப் பயன்படுத்துவது, போதை மருந்துகளை வருவித்துப் பயன்படுத்துவது, உள்ளிருந்தபடியே சதித்திட்டம் தீட்டி வெளியே பயங்கரவாதச் செயல்களை சாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவறையெல்லாம் அடக்குவதற்கு இயலாமலோ, இவர்களுக்குப் பயந்தோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, சில சிறைக்காவலர்கள் உதவி வந்துளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜெயிலர் இளவரசன் இவர்களிடமிருந்து செல் ஃபோன்களைப் பறிமுதல் செய்தார். போதை மருந்துகளையும் கைப்பற்றினார். செப்டம்பர் 25-ஆம் தேதியன்று அவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் சேர்ந்து அவரைக் கடுமையாகத் தாக்கினர். அவருக்கு உதவச் சென்ற முத்துமணி, செல்வின் தேவராஜன் மற்றும் ரவி மோகன் ஆகிய காவலர்களையும் கடுமையாகத் தாக்கினர். படுகாயம் அடைந்த அந்நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றனர். 
 
 
 
 
 
Jihad in TN 21
 
 
 
 
இதனிடையே துணை ஜெயிலர் குமார், சிறைகாப்பாளர் மாரி ஆகிய இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டனர் பயங்கரவாதிகள். பிறகு உயரதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் இருவரையும் மீட்டனர். அதன் பின்னர் பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். புழல் சிறை சம்பவமும் தமிழகக் காவல்துறையின் வரலாற்றில் அழியாத கரையாக அமைந்துவிட்டது.      
 
 
ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறைக்கு முழுச் சுதந்திரம் கொடுக்காதவரை, பயங்கரவாதத்திடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதையும், பயங்கரவாதத்தை வேறோடு அழிப்பதையும், பயங்கரவாதிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதையும் நிறைவேற்ற முடியாது. 
 
 
பலவீனமான காவல்துறையும், அலட்சியமான அரசும் இருக்கின்ற காரணத்தால், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் எழுச்சி பெற்று நிற்க வேண்டிய கடமை பொது மக்களுக்கும் இருக்கிறது.         
 
 
பின் குறிப்பு: - திண்டுக்கல்லில் பாஜக செயற்குழு உறுப்பினர் போஸ் அவர்களின் கார் அவருடைய வீட்டிற்கு முன்பாகவே செப்டம்பர் 25 அன்று விடியற்காலை தீ வைத்துக்கொளுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. முதல்வர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தைச் சாதமாகக் கொண்டு பயங்கரவாதிகள் மேலும் பயங்கரவாத நிகழ்வுகளை அரங்கேற்றக் கூடும் என்கிற எண்ணத்தை இந்து அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.  
Read 1971 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 29 September 2016 18:14

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment