×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஒடுக்கும் அரசு, தமிழக எல்லைக்குள் கவனம் செலுத்துமா?

Tuesday, 04 October 2016 17:26 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

இன்று(4.10.2016) காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியிலிருந்து, திருவொற்றியூருக்கு வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்றார் ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் நகரச் செயலாளர் திரு.நரஹரி. அலுவலத்திற்குச் செல்லும் நரஹரியை 4 இஸ்லாமிய பயங்கரவாதிகள் 2 பைக்கில் பின் தொடர்ந்தனர். சுமார் 9 கிலோமீட்டர் தூரம் கடந்தவுடன் ஆள் நடமாட்டம் குறைந்த தண்டையார்பேட்டை எண்ணூர் எக்ஸ்பிரஸ் ஹைவேயிலுள்ள திருச்சினாங்குப்பம் பகுதிக்கு வந்தவுடன், நரஹரியின் இருசக்கர வாகனத்தை இடைமறித்து நரஹரி மீது சரமாரியாக இரும்புக் கம்பி கொண்டும் கத்தியாலும் தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதல் நரஹரியின் காலின் மீது குறிவைக்கப்பட்டது. தலை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை ஹெல்மெட் தடுத்தது. அடுத்தடுத்து வந்த தாக்குதல்களைக் கை கொண்டு தடுத்ததால் நரஹரியின் இடது கை உடைந்தது.

narahari1

 

narahari2

 

complaint copy narahari1 resized

தாக்குதலை சமாளிக்க முடியாத நரஹரி ரோட்டை கடந்து, ’துலுக்கன் அடிக்கிறான் காப்பாத்துங்கள்’ என்று கதறி ஓடியதைப் பார்த்த பொதுமக்கள், நரஹரிக்கு உதவ ஓடிவருவதைக் கண்டவுடன், இஸ்லாமிய பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். நரஹரியைக் காப்பாற்றிய பொதுமக்கள், போலீஸார் வருவதற்கு முன் அவரை அமரவைத்து, தண்ணீர் கொடுத்து, மருத்துவமனைக்கு வண்டியில் ஏற்றிவிட்டபின்னரே கலைந்து சென்றனர். இந்தத் துயரத்திலும் கூட, இஸ்லாமிய பயங்கரவாதியால் தாக்கப்படுகிறேன் என்ற குரல் கேட்டதும், அச்சப்படாமல், பொதுமக்கள் காப்பாற்ற ஓடி வந்தது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

திருவல்லிக்கேணி பகுதியில், இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தொடர் தாக்குதல் நடத்திவருகிறார்கள். 23 நவம்பர் 2014 ஆம் தேதியன்று 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை மானபங்கம் செய்தனர் முஸ்லீம்கள், அதைத் தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் மகன் முஸ்லீம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டான். இந்தச் சம்பவத்திற்கு முஸ்லீம்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குரல் கொடுத்த இந்துக்களைக் கைது செய்தது காவல்துறை. இந்த நிகழ்வைத் தட்டிக் கேட்ட ராஜ்குமார் என்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கப் பொறுப்பாளரை, நரஹரியைத் தாக்கியதைப் போலவே 26 நவம்பர் 2014 ஆம் தேதியன்று தாக்கினர் முஸ்லீம் பயங்கரவாதிகள். தாக்குதல்களை நடத்திவரும் முஸ்லீம்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், இந்துக்களுக்காக குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு துணைபோகிறது காவல்துறை
.
தமிழகத்தில் நடந்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி, படமாக வெளியிட்டதுடன் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அனுப்பியது இந்து முன்னணி.

http://hindukural.com

இந்த ஆவணப்படம் 300 ஜிகாதி சம்பவங்களை ஆதாரத்துடன் வெளியிட்டவுடன், அதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைவருக்கு கோரிக்கை மனுவும் அளித்திருந்தது. இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆவணப்படத்தில் வாக்குமூலம் கொடுத்த சில இந்துக்கள் மீது வழக்குத் தொடர்ந்தது காவல்துறை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த சோலை என்பவரை முஸ்லீம்கள் அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் மீது கலவரத்தைத் தூண்டுதல், அமைதியை சீர்குலைத்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற வழக்குகளைத் தொடுப்பதும், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் மீது அபாண்டமாக, நில மோசடி, கந்துவட்டி, கள்ளக்காதல் என்று தாக்குதலுக்கான காரணங்களைக்கூறியும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது தமிழக காவல்துறை. தமிழகத்தின் டி.ஜி.பி பதவியிலிருக்கும் போது இந்த துரோகச் செயலை திறம்படச் செய்தவர் திரு.இராமானுஜம். இப்போது இவரே தமிழக முதல்வரின் ஆலோசகராக உள்ளார். இது போன்ற அதிகாரிகளைக் கொண்ட காவல்துறையிடம் நியாயமான நடவடிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

 

செப்டம்பர் மாதம் 10 தேதிக்குப் பின் தமிழகத்தில் நடந்த பயங்கரவாதச் சம்பவங்களின் பட்டியல்

10.09.2016- வேலூர் இந்து முன்னணித் தலைவர் திரு.மகேஷ் அவர்கள்வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

10.09.2016- வேலூர் இந்து முன்னணிப் பொருப்பாளர் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

11.09.2016- திருப்பூர் இந்து முன்னணிப் பொருப்பாளர் திரு.சரவணன் அவர்கள் பனியன் கம்பெனியின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, 10 லட்சம் பொருள் சேதம்

14.09.2016- தன்யா என்ற இளம் பெண் ஷகீர் என்ற முஸ்லீம் வாலிபனை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் சரமாரியாக ஷக்கீரால் குத்திக் கொல்லப் பட்டாள். ஒரு லவ் ஜிகாத் கொலை

19.09.2016- ஓசூரில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்துப் பரிஷத்தின் பொருப்பாளர் சூரி படுகொலை

19.09.2016- திண்டுக்கல்லில், இந்து முன்னணி நகரச் செயலாளர் திரு. சங்கர் கணேஷ் மீது கொலை வெறித் தாக்குதல்.

22.09.2016- கோவையில் இந்து முன்னணி மாநகரச் செய்தித் தொடர்பாளர் திரு.சசிகுமார் அவர்கள் படுகொலை

25.09.2016- திண்டுக்கல்லில், பா.ஜ.க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.போஸ் அவர்களின் கார் அவர் வீட்டின் முன் எரிக்கப்பட்டது.

25.09.2016- திண்டுக்கல் பா.ஜ.க தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

 

இந்தத் தொடர் நிகழ்வுகளும், தமிழக காவல்துறையின் செயல்பாடும், தமிழகம் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதக் களமாக மாறி வருவதையே காட்டுகிறது. நாட்டின் பாதுகாப்பை முன் நிறுத்தி வெற்றி பெற்ற மத்திய அரசு, இந்த பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் மாநில அரசை இப்படியே விட்டுவைத்தால், மோடி அரசு இந்த நாட்டிற்கு துரோகம் செய்வதுபோல் ஆகிவிடாதா?. எல்லை கடந்து பயங்கரவாதத்தை முறியடித்த மத்திய அரசு எல்லைக்குள் செயல்படும் பயங்கரவாதிகளையும், அதற்குத் துணைபோகும் துரோகிகள் மீதும் அரசின் மீதும் நடவடிக்கை எடுக்குமா?

Read 2574 times
Rate this item
(3 votes)
Last modified on Tuesday, 04 October 2016 17:37

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment