நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது தன்னூத்து எனும் கிராமம். பாரம்பரியமாக இந்து மக்கள் வாழ்ந்து வரும் ஊர். மக்கள் வழிபடும் கிராமத்து தெய்வங்களுடன் அமைதியான வாழ்க்கைப் பயணத்தில் சிக்கலாக வந்து சேர்ந்தது மின்னல் மாதா சர்ச் எனும் கிறிஸ்தவ தேவாலயம். வழக்கம் போல இதனால் ஊருக்குள் உரசல்களில் துவங்கி ஒண்ட வந்தவர்கள் ஊர்க்காரர்களை அடக்கவிழையும் வழமையான சோகம் நடந்தேறியது. வழமையாகவே காசு அதிகம் வரும் பக்கம் சாய்வதை வழக்கமாக்கிக் கொண்ட காவல்துறை இங்கே அதையும் விட ஒருபடி மேலே போய் கிறிஸ்தவ விசுவாசியான ஒரு ஆய்வாளர் மூலம் தேவாலயத்தின் சொல்லைச் செயல்படுத்துகிறது.
தன்னூத்து கிராமத்தில் தம் வீட்டுச் சுவர்களின் இந்து மக்கள் தாம் வணங்கும் தெய்வத்தின் சித்திரங்களைத் தீட்டிக் கொள்ள முடிவதில்லை. தேவாலயத்தில் கோபிக்கிறார்கள் என்று சில கைக்கூலிகள் முதலில் பிரச்சினை செய்வார்கள். பின்னாலேயே வரும் காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் (இவர் கிறிஸ்தவர்) அதிகார பலம் கொண்டு சித்திரங்களை அழிக்கச் சொல்லி மிரட்டுவார். எந்த நிலையிலும் கிறிஸ்தவ ஆதரவு நிலையில் நிற்கும் இந்த ஆய்வாளரால் ஊர் மக்கள் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்நிலையில் காவல்துறை ஆய்வாளார் விஜயகுமார் மீது தனிமனித நம்பிக்கைகளில் தலையிடுவதாகவும் மதவிவகாரங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் காவல்துறை உயரதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கையே இல்லை.
இந்நிலையில் மின்னல் மாதா சர்ச்சுக்கு தண்ணீர் விநியோகிக்கும் உரிமம் ஒரு கிறிஸ்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் பெரிய குடிநீர் வண்டியில் தண்ணீர் பிடித்துக் கொண்டுவந்து சர்ச்சில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் மோட்டர் மூலம் நிரப்புவார். சர்ச்சுக்கு மின்சாரம் மின்கம்பியில் இருந்து கொக்கி போட்டு இழுக்கப்பட்டு திருட்டு மின்சாரமாக வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தண்ணீர் வண்டி வந்ததும் அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களை அழைத்து மோட்டர் போடச் சொல்லி இருக்கிறார்கள். மின் கசிவு காரணமாக அங்கேயே இரு பையன்களும் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, உடல்களை அருகில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள். உடல்களில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த அடையாளாமும் தென்படவில்லை என்று ஊர்மக்கள் சொல்கின்றனர்.
கிராமத்தில் கார்த்திகை விளக்குத்தூண் அருகே கிறிஸ்தவ தேவாலயம் கட்டியுள்ளனர். இப்போது விளக்குத்தூணைப் பிடுங்கி எறிந்துவிட்டனர் தேவாலயத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வசிக்கும் கிறிஸ்தவர்களும். இதுகுறித்துப் புகார் கொடுக்க போன உள்ளூர் ஹிந்து மக்களை கேவலமாகப் பேசிய காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் இந்துப் பெண்களை ”பொட்டச்சிகளா” என அவதூறாகப் பேசி கால் முட்டிக்கு கீழே சுடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்துக்காரப் பயலுகளுக்கு பாஸ்போர்ட் கிடைக்காது எனவும் மிரட்டியுள்ளார்,
சுமார் 400 பேர் ஊர் பொதுமக்கள் கூடி சிறுவர்களின் இறப்புக்குக் காரணமான திருட்டு மின்சாரத்தைப் பயன்படுத்திய சர்ச் நிர்வாகத்தார் மீது நடவடிக்கை எடுக்கவும் கிராமத்து மக்கள் அரசியல் சாசனம் வரையறுத்துத் தந்துள்ள மதவழிபாட்டு உரிமையைப் பறிக்காது இருக்கவும் போராடினர். மேலும் கிராமத்து மக்கள் மீது இரட்டை மரணத்துக்குப் பிறகு ஆய்வாளர் விஜயகுமார் பதிவு செய்த பொய் வழக்குகளை திரும்பப் பெறவும் போராடினர். இறந்த 13 வயது சிறுவனின் தாயார் கதறி அழுதபடியே மகனை இழந்த சோகத்தோடு காவல்துறையின் கொடுமையும் சேர்ந்து கொள்ள ”இப்படிச் செய்கிறீர்களே... நியாயமா” என்று கேட்டுள்ளார். காவல்துறை மாவட்ட எஸ்.பி. அந்த அம்மையாரை ஓங்கி அறைந்துவிட்டார். பதட்டமடைந்த மக்களில் சிலர் கோபப்பட்டு காவல்துறை வண்டிகளைத் தாக்கினர். கண்ணாடிகள் உடைந்தன. ஆனால் காவல்துறையினர் வண்டிகளைத் தாக்கியதால்தான் பொதுமக்கள் மீது வழக்குபோடப்பட்டது என்று கூறினர். அந்த அம்மையாரை அடித்ததற்கு மன்னிப்பே கேட்கவில்லை எஸ்.பி.
இப்போது வெளியூர்க்காரர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது. உள்ளூர்க்காரர்கள் வெளியூர் செல்லக்கூடாது. வீட்டுச் சுவர்களில் இந்து தெய்வப்படங்கள் வரையக்கூடாது என்று தாலிபான் ராஜ்ஜியம் நடத்துகிறார் காவல் ஆய்வாளர் விஜயகுமார்.
மேற்கூறியவை தன்னூத்து ஊர்மக்களும் இந்து இயக்கத்தவர்களும் தொலைபேசியில் கூறிய தகவல்கள். இந்து இயக்கங்கள் சார்பில் உண்மை அறியும் குழு ஒன்று சம்பவம் நடந்த கிராமத்துக்குச் சென்று விசாரித்து உண்மையை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஊர்ப் பொதுமக்களும், ஊடகங்கள் இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்வதில் காட்டும் முனைப்பில் வெறுப்பில் இருக்கும் இந்து இயக்கத்தவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
- இராஜபாளையத்தில் இருந்து மீனாக்ஷி சுந்தரேஸ்வரன்.