×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தேவசகாயம் பிள்ளை புனிதரா? புரட்டா? - போப்பே பதில் சொல்!

Tuesday, 14 January 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

இன்று ஒரு மோசடி திருவிழா கத்தோலிக்க சர்ச்சால் கொண்டாடப்படுகிறது. இல்லாத ஒரு நீலகண்டப்பிள்ளையை உருவாக்கி அந்த கற்பனை பாத்திரத்தை தழுவி ஒர் கதை எழுதி அந்த கதையிலே இந்து மதத்தையும் இந்து மன்னர்களையும் இந்து மக்களையும் கொச்சைப்படுத்தி ஒரு விஷமத்தனத்துடன் மதமாற்றம் செய்யும் புனிதர் புனைவுக்கு சில கேள்விகள் போப்பே பதில் சொல்!

ஜூன் 28 , 2012 ல் தேவசகாயம் பிள்ளையை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி” என்று ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் போப் பெனடிக்ட் அறிவித்தார். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை நாளில் தேவசகாயம் பிள்ளைக்கு விழா எடுக்க கத்தோலிக்க சர்ச் முடிவு செய்துள்ளது. தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ மதத்திற்காக பல சித்திரவதைகளை அனுபவித்ததாகவும், அவர் கிறிஸ்தவராக மதம் மாறியதால்தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் ஒரு வரலாற்று சம்பவம் கிறிஸ்தவ கத்தோலிக்க சபையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாறு நம்பகமானதா?

 

பிறப்பும் பொய்! இறப்பும் பொய்! - எது உண்மை?

தேவசகாயம் பிள்ளை வலங்கை செட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் கூட்டத்தினரே அவரை கொன்றனர்


- – -பௌலினோஸ் பாதிரியார்

தேவசகாயம் பிள்ளை நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மன்னர் மார்த்தாண்டவர்மா அவரை கொன்றார்


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி:  அவர் உண்மையில் எந்த சமுதாயத்தில் பிறந்தார்? அவரை  உண்மையில் யார் கொன்றார்கள்?

 

பெயர் மோசடி 

மதம் மாறுவதற்கு முன் தேவசகாயம் பிள்ளையின் பெயர் நீலகண்டப் பிள்ளை.

இவர் நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

18ஆம் நூற்றாண்டில் நாயர் சமுதாயத்தினர் நீலகண்டன் என்று பெயர் சூட்டுவதில்லை.

 


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

 கேள்வி:  இவரது உண்மையான பெயர் என்ன?

 

நட்டாலம் நாடகம் 

இரணியலை அடுத்த மேக்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பார்கவி அம்மாளை நீலகண்டப் பிள்ளை மணந்தார்.

 


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

திருமணத்திற்குப் பின், பெண் வீட்டிற்குச் செல்லும் மருமக்கத்தாயத்தை பின்பற்றும் நாயர் சமுதாயத்தை சேர்ந்த நீலகண்டன் எப்படி நட்டாலத்தில் இருந்திருப்பார்? மேக்கோட்டிற்கல்லவா சென்றிருக்க வேண்டும்?


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி: உண்மையில் அவர் எங்கு வாழ்ந்தார்?

 

களரிக் கல்வியா கட்டற்ற கற்பனையா?

தேவசகாயம் பிள்ளைக்கு வர்ம சாத்திரமும், களரியும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கற்றுக்கொடுத்தனர். 


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

வர்மக் கலையும், களரியும் தென் இந்தியக் கலை என்பது உலகறிந்த உண்மை. அவற்றை 18 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கர்கள் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு  கற்றிருந்தார்களா?


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி: உண்மையில் அவர் களரி கற்றாரா?

 

மதமாற்றத் தடைச்சட்ட ஒப்பாரி

தேவசகாயம் பிள்ளை காலத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் திருவிதாங்கூரில் நடப்பில் இருந்தது.


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

மதம் மாற்றத்திற்குப் பின் தேவசகாயம் பிள்ளை தன்னை  கிறிஸ்தவப் படைப்பிறிவில்  சேர்த்துக்கொள்ள அரசரிடம் வேண்டினார்.


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி:  

  • மதமாற்றத் தடைச் சட்டம் நடப்பிலிருக்கும் நாட்டில் மதம் மாறியவர் தன்னை எப்படி மன்னரிடமே கிறிஸ்தவப்படையில் சேர விண்ணப்பிக்க முடியும்?
  • கிறிஸ்தவ படைப்பிரிவே வைத்திருக்கும் ஒரு அரசர் எப்படி மதமாற்றத் தடைச்சட்டத்தை நடப்பில் வைத்திருந்தார்?
  • சரி, ஒரு வேளை கிறிஸ்தவ படைபிரிவு என்பது திருவிதாங்கூர் அரசரிடம் பணியாற்றிய ஐரோப்பிய படைபிரிவு என ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டால், அதில் தன்னை சேர்க்க மதம்மாறியவர்
  • கோரினார் என்றால் அது எதை காட்டுகிறது? மதம் மாறினால் தேசத்தையே ஒருவன் மாற்றிக் கொள்வான் என்பதை அல்லவா காட்டுகிறது? இது உண்மையில் தேசதுரோகம் அல்லவா

 

ஆயுதப் படையா? அலுவலகப் பணியா?- எது உண்மை?

தேவசகாயம் பிள்ளை அரசாங்க கருவூலத்தில் பணியாற்றினார் 

 


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

மதம் மாறிய தேவசகாயம், கிறிஸ்தவப் படைப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார்

 


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி: அவர் உண்மையில் எங்கு பணியாற்றினார்? ஆயுதப் படைப் பிரிவிலா? அலுவலகப் பிரிவிலா? இரண்டும் வெவ்வேறு துறைகளல்லவா? ஒரு வேளை ஆயுதப் படைபிரிவின் அலுவலகப் பணிப்பிரிவில் என்று அடுத்த கட்ட பதிலை சொல்வார்களோ?

 

 ஆயுதப்படையில் எட்டாம் படை

தேவசகாயம் பிள்ளை சகவீரர்களை மதம் மாற்றி, ஏசுவின் கீழ், சொர்க்க ராஜ்ஜியத்திற்காக போரிடும்  வீரர்களாக மாற்றினார்.


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

தேவசகாயம் பிள்ளை ராஜ துரோக குற்றத்திற்காகக் கொல்லப்பட்டார்.

 


- – -கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி:  அவர் இதன் உண்மையான பொருள் என்ன? 17 ஆம் நூற்றாண்டில் ‘தேவனின் சாம்ராஜ்ஜியம்’ என்பது கத்தோலிக்க ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆட்சியை குறிக்கும் சொல். கோட்டார் மறைமாவட்ட இணையதளம் சொல்வதையும், தேவசகாயம் பிள்ளை குறித்த மிகப் பழமையான ஆதார நூலான பௌலினோஸ் பாதிரியார் சொல்வதையும் இணைத்து பார்க்கும் போது, இவர் மதம் மாறியதை விட ஐரோப்பிய கத்தோலிக்க காலனிய சக்திகளுக்காக ஒற்றன் வேலை தேசதுரோக வேலை செய்தார் என்பது உறுதிப்படுகிறதோ?

 

துப்பாக்கி சொல்லும் துப்பு

தேவசகாயம் பிள்ளை 1752 ல் திருவிதாங்கூர் படை வீரர்களால் துப்பாக்கியால் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்டார்


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

1820 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் மொத்தம் 31 துப்பாக்கிகள் இருந்தன, அவைகளும் தளபதிகளின் கட்டுப்பாட்டிலே இருந்தன.


- – Survey of Travancore

கேள்வி:   

  • 1820 லேயே 31 துப்பாக்கிகள் என்றால் 1752 இல் எத்தனை துப்பாக்கிகள் இருந்திருக்க முடியும்?
  • துப்பாக்கியே இல்லாத திருவிதாங்கூர் வீரர்கள் எப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க முடியும்?

 

ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் பிள்ளை மன்னரால் தூக்கிலிடப்பட்டார்

 

- லெப்டினண்ட் வார்ட் மற்றும் கானர்

 

கேள்வி:  எது உண்மை? தூக்கா? துப்பாக்கியா?

 

 

போப் கிளமண்ட் XIV பொய் சொல்லுவாரா?

திருவிதாங்கூர் மன்னர்கள் கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தினர். தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதால் அவர் கொல்லப்பட்டார்.

 


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்தி வரும் பரிவுக்கு நன்றி. 

 


- – -– ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதம்

கேள்வி:  தேவசகாயம் பிள்ளை கொன்றதாக சொல்லப்படும் காலகட்டத்தில் வாழ்ந்த போப் கிளமண்ட் XIV தமது கத்தோலிக்கர்களை நல்லபடியாக நடத்துவதற்கு திருவிதாங்கூர் அரசருக்கு நன்றி தெரிவித்திருப்பதை மறந்து, இன்றைய நம் ஊர் கத்தோலிக்கர்களில் சிலர் தங்கள் சொந்த மதவெறிக்காகவும் ஆதாயங்களுக்காகவும் சங்கைக்குரிய பாப்பரசரையே பொய்யர் என சுட்டிக்காட்டும் கொடுமையை எதிர்க்க வேண்டியவர்கள் யார்?

 

யார் இந்த டிலனாய்?

நீலகண்டப் பிள்ளை மதம் மாற வடக்கன்குளம் பாதிரியார் புட்டாரிக்கு டிலனாய்  கடிதம் கொடுத்து அனுப்பினார்

 


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

 கேள்வி:  வாழ்ந்த போப் கிளமண்ட் பிராடஸ்டண்ட் டச்சு தேசத்தைச் சேர்ந்தவரான டிலனாய், கத்தோலிக்க கிறிஸ்தவராக தேவசகாயம் பிள்ளை மதம் மாற கடிதம் கொடுப்பாரா? இந்தக் கால கட்டத்தில்தானே, கொச்சி, கண்ணனூர், தூத்துக்குடி கத்தோலிக்க சர்சுகள் பிராடஸ்டண்டுகளால் இடிக்கப்பட்டன? இப்படி பாதுகாப்பு இல்லாத இடத்துக்கா டிலனாய் தேவசகாயம் பிள்ளையை அனுப்புவார்?

 

 தவணைச் சாவு

ஜனவரி 13 ல் கொல்லப்பட்டார்.



–- கேரள கிறிஸ்தவ வரலாறு

ஜனவரி 14 ல் கொல்லப்பட்டார்.


- கோட்டார் மறைமாவட்ட இணையதளம்ம்

ஜனவரி 14 அல்லது 15ல் கொல்லப்பட்டார்.

 

– CBCI இணையதளம்

கேள்வி:  

ஏன் இந்த தேதி குழப்படிகள்?
13லிருந்து 14லுக்கு மாறியது.... 15 சேர்த்துக் கொள்ளப்பட்டது... ஏன்? பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவமயமாக்கத்தானே?

 

பாவம் ஒரு இடம்! பழி ஒரு இடம்!
திருவிதாங்கூரில் கிறிஸ்தவ குற்றவாளிகளுக்கு டச்சு கிழக்கிந்திய கம்பனிதான் தண்டனை வழங்க வேண்டும். -– 1743 மாவேலிக்கரை ஒப்பந்தம்

 

இந்த ஒப்பந்தத்தின்படி தேவவசகாயம் பிள்ளையை கொன்றவர்கள் கிறிஸ்தவர்கள். மன்னர் கொன்றார் என்றால் தேவசகாயம் பிள்ளை இந்துவாக இருந்திருக்க வேண்டும். இதில் எது உண்மை? தேவசகாயம் பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவரா? அல்லது செத்த பின் கிறிஸ்தவராக அறிவிக்கப்பட்ட அப்பாவி இந்துவா?

 

ஏன் இந்த மோசடி? ஏன் இந்த வெறுப்பு

தெற்கு கேரளம், தமிழ்நாடு, வட இலங்கை பகுதிகளில் சர்ச்சுக்கும், சமுதாயத்துக்கும் பலனளிக்கும் வகையில் செயல்படுத்த ஒரு படை வீரர் தேவைப்படுகிறார்.


–கோட்டார் மறைமாவட்ட இணையதளம்

கேள்வி: யார் படையின்  வீரர்? யாரை எதிர்த்துப் போரிட்டார்? யாரை எதிர்த்து போரிட தூண்டுகிறார்? அதுவும் நம் பகுதிகளில்!

 


புனிதர்” பட்டம்: புனிதமா போலியா?

 

வாடிகனால் புனிதர் பட்டம் பெற்றவர்கள் சுமர் பத்தாயிரம்! தகுந்த ஆதாரமில்லை என்று ’புனித விலக்கு’ அளிக்கப்பட்ட பட்டதாரிகள் இரண்டாயிரம்! ஏன் விலக்கப்பட்டார்கள்? -அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இல்லையாம்! ஒரு சில நிகழ்வுகள் கட்டுக்கதைகளாம்! இந்தப் புனிதக் கதைகள் பல நாடுகளை கிறிஸ்தவமயமாக்கி விட்டது. காரியம் ஆன பிறகு இவை கட்டுக்கதைகள் என ஒப்புக்கொள்ளப்பட்டன. தேவசகாயம் பிள்ளையை புனிதராக்கி, இந்துக்களை மதம் மாற்றி விட்டு பிறகு புனித விலக்கு தேவசகாயம் பிள்ளைக்கு அளிக்க ஏற்பாடோ?பன்னாட்டு நிறுவனங்கள் அழகு சாதன விற்பனையை இந்தியாவில் அதிகரிக்க இந்திய பெண்களை அழகிகளாக தேர்ந்தெடுத்தது போல இந்தப் புனிதர் பட்டமும் ஒரு வியாபாரத் தந்திரமா?

 

 

மதமாற்ற வியாபாரத்துக்காக புனிதர் பட்டத்தை கேவலப்படுத்தலாமா?

 

 

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)

 

- வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்

 

 

 

 

 

Read 1160 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 17:29

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment