திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் பிரசித்திப்பெற்ற செளந்திரராஜப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி இந்த திருக்கோவிலைச் சுற்றி பகவதி அம்மன் கோவில், உள்ளூர்முத்தாலம்மன் கோவில் மற்றும் பல கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களைச் சுற்றி இந்துக்கள் மட்டுமே வசிக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் வீடு கட்ட மாடவீதிகளுக்கு வெளியில் ஒரு கிறிஸ்தவர் இடம் வாங்கி இருந்தார். அந்த இடத்தை பால்வாடியாக அவர் மாற்றினார். ஏமாற்றும் தொழிலையே மதஅடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் இந்த பால்வாடியை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் சர்ச்சாக மாற்றினர். இவர்களது இந்த நடவடிக்கையை 7 ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணி கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தியது. இந்த போராட்டங்களுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
இன்று (02.03.2014) மாலை இந்துக்கள் மட்டுமே வசிக்கும் தாடிக்கொம்பு மாடவீதிகள் வழியாக கிறிஸ்துவ சப்பரத்தை கொண்டு செல்ல கிறிஸ்துவர்கள் முடிவெடுத்தனர். இதற்கு அனுமதியளிக்க கூடாது என்று உள்ளூர் இந்துக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்று மூன்று இந்துக்களை சுமார் 50 கிறிஸ்துவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு எங்களை நீங்கள் தடுத்தால் உங்கள் அனைவரையும் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இந்த செய்தி அறிந்த உள்ளூர் இந்துக்கள் கிறிஸ்துவ ஊர்வலத்தை ஊருக்குள் வர விடக்கூடாது என்று ஊர்க் கூடி தீர்மானித்தனர். நிலைமை விபரீதமாகி விடுமோ என்ற அச்சத்தில் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்த காவல்துறையினரும், தாசில்தாரும் இரு தரப்பினரையும் இன்று காலை அழைத்தனர்.இந்த கூட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் தரப்பினர்கள் யாரும் போகவில்லை. தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு கிறிஸ்துவ உதவி ஆய்வாளரும் (SI) அந்த பகுதி தாசில்தாரும் பாதுகாப்புடன் கிறிஸ்துவர்கள் ஊர்வலம் நடத்த உறுதுணையாக இருப்போம். அதனால் விலகிக் கொள்ளுங்கள் என்று இந்துக்களை மிரட்டியதாக உள்ளூர்காரர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்று மாலை (02.03.2014) தாடிக்கொம்பு அகரம் பகுதியில் உள்ள இந்துக்கள் ஊர் எல்லையில் பெண்கள் குழந்தைகளுடன் ஊர்வலத்தை விட மாட்டோம் என்று சொல்லி அமைதியான முறையில் சாலையில் உட்கார்ந்து கொண்டனர். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து ஊர் எல்லையில் தடுப்புக்களை போட்டு ஊர்வலம் உள்ளே வராது என்று சொல்லி இந்துக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இப்படி காவல்துறையினர் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் போதே கிறிஸ்தவர்கள் ஊர் எல்லையில் சப்பரத்தை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்தி மாடவீதிகள் வழியாக சென்றே தீருவோம் என்று வெறித்தனமாக சாலையில் கூடியுள்ளனர். தடுப்புக்கு ஒருபுறம் இந்துக்கள் மறுபுறம் சட்ட விரோதமாக கூடியிருக்கும் கிறிஸ்தவர்கள். நடுவிலே பதட்டத்துடன் போலீஸ்காரர்கள் என்று போர்க்களம் போல் இப்போது தாடிக்கொம்பு காட்சியளிக்கிறது. தாடிக்கொம்பில் நடக்கும் கிறிஸ்தவ ஊர்வலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் உழவன்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் கலவரம் செய்வதற்கென்றே வாகனங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கலவரக்காரர்களை கைது செய்து இந்து கோவில்கள் இருக்கும், இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகளில் ஊர்வலத்தை தடுக்க விரைந்து செயல்படாமல் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தளவு கலவரம் செய்யும் நோக்கத்துடன் கிறிஸ்தவர்கள் கூடுகிறார்கள் என்றால் ஏதோ ஒரு பெரிய பின்ணனி இவர்களை ஆதரிக்கிறது என்பது தெளிவாகிறது. விரைந்து காவல்துறை நியாயமாக நடவடிக்கை எடுக்குமா அல்லது சட்டத்தை மதிக்கும் இந்துக்களுக்கு துரோகம் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சினந்தெழுந்த இந்துக்களின் சீற்றமிகு பேட்டி: