×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பிஷப் கால்டுவெல் - தமிழை கருவறுக்க வந்த கோடாரிக்காம்பு

Monday, 26 May 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

 robertcaledwell

 

கி.பி.1814ல் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியான அயர்லாந்து தீவில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவேல். இவர் சார்ந்திருந்த சமயம் கிறித்துவ புரட்டஸ்டன்ட் சமயத்தின் பிரபிட்டீரியன் (Presbyterian) பிரிவு. புராட்டஸ்டன்ட் கிறித்துவ பிரிவில் பெரும்பான்மையாக விளங்குவது மார்ட்டின் லூதர் அவர்களால் தொடங்கப்பட்ட எவாஞ்சலிகல் சர்ச் (Evangelical Church). இப்பிரிவு ஜெர்மனிய நாட்டிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பிரபலமாக விளங்கியது. ஆனால் கால்டுவெல் சார்ந்திருந்த புராட்டஸ்டன்ட் பிரிவு சற்று வேறுபட்டது.

 

பதினாறாம் நூற்றாண்டில் உலகிற்கு தீமையை கொண்டு வந்த ஒரு நிகழ்ச்சி அயர்லாந்தில் நடந்தது. கெரார்ட் சாவின் என்பவருக்கும், ஜெனி (Jeanee Lefronic) என்ற பெண்மணிக்கும் ஒரு குமாரன் பிறந்தார். அவர் பெயர் ஜான் சாவின் (John Chauvin). தன்னுடைய பெயரை பின்பு ஜான் கால்வின் (John Calvin) என மாற்றி கொண்டார். பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி உலகில் நடந்த சமய கொடுமைகளுக்கெல்லாம் இவரே காரணம் எனலாம். கத்தோலிக்க சமயத்தை இரண்டாகப் பிரித்த பெருமை இவருக்கும் உண்டு. திவ்விய நற்கருணை பெறுதல், சொர்க்கலோக தத்துவம், ஞானஸ்தானம் பெறுதல் ஆகியவற்றில் கால்வினுக்கு தீவிர நம்பிக்கை இருந்தது. எனினும் கிறித்துவ மக்கள் என்ன உணவுகளை உண்ண வேண்டும், எவ்வாறான உடை அணிய வேண்டும் என்பதையெல்லாம் இவர் நிர்ணயம் செய்ய முயற்சித்தார். மக்களிடையே இவருக்கு சிறந்த மதகுரு என்ற செல்வாக்கு இருந்தது. இவருடைய தீவிரவாத கிறித்துவ கொள்கையை ஏற்காதவர்கள் தீயிலிட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்படுவதற்கு முன் அத்தகையோர் சாத்தானின் பிள்ளைகள், பிசாசுவின் சேனையர்கள், நரகத்திலிருந்து தப்பி வந்த பிள்ளைகள் என பல்வேறாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பாஸ்டர்கள் (மதகுருக்கள்) தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்றும், கடவுளின் ஏஜெண்டுகள் எனவும் அறிவித்து கொண்டனர். பைபிளில் காணப்படும் வசனங்களுக்கு பாஸ்டர் கூறும் விளக்கங்களை தவிர வேறு வகையில் அதனை புரிந்து கொண்டாலும், பேசினாலும் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறான புராட்டஸ்டன்ட் கிறித்துவ மதவாத கொள்கை அயர்லாந்தில் தலைவிரித்தாடியது. அத்துடன் அயர்லாந்தில் பிறந்த புரட்டஸ்டன்ட் கிறித்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்ற கொள்கையும் வழக்கத்திலிருந்தது. இத்தகைய தீவிரவாத புராட்டஸ்டன்ட் பிரிவில் வடக்கு அயர்லாந்தில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். இவருடைய பெயர் பிற்காலத்தில் பிஷப் கால்டுவெல் என பிரபலமாகியது.

 

அயர்லாந்தில் மக்கள் புராதன காலத்திலிருந்து ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்து வந்தனர். அம்மக்கள் செல்டிக் (Celtic) எனும் இனத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழி காலிக் (Gualic). இங்கிலாந்து மக்கள் Anglo-Saxon இனத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழி ஆங்கிலம். ஆங்கிலம் கி.பி.1500 வரை ஓர் தனி மொழியாக தோற்றம் அளிக்கவில்லை. Anglo-Saxon இனத்தவர் 1000 வருடங்களுக்கு முன் அயர்லாந்தின் வடபகுதியில் குடியேறி பூர்வீக செல்டிக் மக்களை தெற்கு நோக்கி அடித்து விரட்டினர். செல்டிக் இனத்தவர் கத்தோலிக்க சமயத்தையும், வந்தேறிகளான ஆங்கிலோ - சாக்சன் கூட்டத்தினர் புரட்டஸ்டன்ட் சமயத்தையும் பின்பற்றினர். செல்ட்டிக் மக்கள் தங்களை சிந்து சமவெளி பகுதியிலிருந்து 3000 வருடத்திற்கு முன்பு குடியேறிய இந்துக்கள் (ஆரியர்கள்) என கருதினர். அவர்கள் பேசிய காலிக் மொழி சமஸ்கிருதத்தின் சகோதரி மொழி என அவர்களால் கருதப்பட்டது. இவற்றை அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் உலிக் ஜோசப் பொர்கி (1829 - 1887) (Ulick Joseph Bourke ) தனது கீழ்கண்ட ஆய்வு காரணிகள் மூலம் நிரூபித்துள்ளார்.

  • காலிக் - சமஸ்கிருத ஒப்பிலக்கணம்,
  • பண்பாடு, பழக்கவழக்க ஒற்றுமை,
  • கலை, ஆடல் பாடல்கள்,
  • அறிவியலில் நாட்டம்,
  • மத சம்பிரதாயம், வாழ்க்கை தத்துவங்கள்.

 

ஆரியர்களே ஐரோப்பியர்களுக்கு நிலத்தை உழவு செய்யவும், கப்பல் கட்டுவதற்கும், வீடு கட்டவும், துணி நெய்வதற்கும், அவற்றிற்கு வர்ணம் தோய்க்கவும் கற்றுக்கொடுத்தனர் எனவும் அவரால் கூறப்பட்டது. (பார்க்கவும் இரண்டாவது வால்யும், 20வது அத்தியாயம், The Aryan Origin of the Gualic Race and Language; Longmans Green & Co, London (1876).) இதே கருத்து அன்னாரின் “Pre - Christian Ireland” (1887) எனும் மற்றொறு புத்தகத்திலும், W.K.Sulluvian எழுதியுள்ள ”On the Manners and Customs of the Ancient Irish (A collection of lectures made by Eugene-o-Curry-1794-1862)” என்பதிலும் மற்றும் இதர ஆசிரியர்களின் எண்ணற்ற நூல்களிலும் மிகவும் ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

 

ஆரியர்களுடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்பு இருந்தமைக்காக அயர்லாந்து மக்களும், மொழியும், 15ம் நூற்றாண்டு முதற்கொண்டே பெரும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்/உட்படுத்தப்பட்டது. இவ்வாறான இனபேதம் கற்பிப்பதிலும், மொழி ஒப்பிலக்கணம் கொண்டு மொழி தோற்றத்தை நிறுவுதலிலும் சிறந்த பரிட்சயம் உள்ளவராக இங்கு வருவதற்கு முன்பே கால்டுவெல் விளங்கினார்.

 

அயர்லாந்து மக்களிடையே பிரிவினை இருந்தது இல்லை. தீவிர புரொட்டஸ்டன்ட் சமயத்தினர் தீவின் வடபகுதியில் குடியேறி தங்கள் மதத்தினை (கால்வின் பிரிவு) இங்கு பரப்ப ஆரம்பிக்கவும் நிலைமை தலைகீழாக மாறியது. கத்தோலிக்கர்களே பெரும்பான்மையானவர்கள். எனினும் அவர்களை புரொட்டஸ்டன்ட் ஆட்சியாளர்களும், புரொட்டஸ்டன்ட் மக்களும் கிண்டலும் கேலியும் செய்தனர். கத்தோலிக்கர்களை சாத்தானின் பிள்ளைகள் என அழைத்தனர். கத்தோலிக்கர்களுக்கு நிலஉரிமை கிடையாது. நிலம் வாங்குவது தடை செய்யப்பட்டது. தேர்தலிலும் ஓட்டளிக்க முடியாது. ராணுவத்திலோ, நீதி நிர்வாகத்திலோ அவர்களுக்கு வேலை கிடையாது எனவும் சட்டம் அமலில் இருந்தது. நிலங்கள் யாவும் புரொட்டஸ்டன்ட் சமயப்பிரிவினருக்கே ஒதுக்கப்பட்டன. கத்தோலிக்கர்கள் குத்தகைதாரராகவும், அடிமைகளாகவும் வேலை செய்தனர். அவர்கள் தீண்டதகாதவர்களாக நடத்தப்பட்டு நகரங்களிலிருந்து 5 மைல் தொலைவிற்கு வெளியேதான் வசிக்க வேண்டும் எனவும் சட்டம் இயற்றப்பட்டிருந்தது.

 

அயர்லாந்து தீவு முழுமையிலும் உருளைகிழங்கு பயிரிடப்பட்டது. அனைத்து மக்களும் உருளைகிழங்கையே மூன்று நேர உணவாக உட்கொண்டனர். இத்தீவில் இருந்த காடுகள் அனைத்தையும் புரொட்டஸ்டன்ட்டுகள் அழித்து, மரங்களை வீடுகட்டும் பொருட்டு லண்டன் கொண்டு சென்றனர். காடுகள் அழிந்ததால் குளிர்காலத்தில் மரங்களின் மேல் வழக்கமாக படியும் புகைபோன்ற பனிப்படலம் (வெம்பா) நிலத்தில் பயிர்செய்யப்பட்ட உருளை பயிர்கள் மீது படிந்தது. இவ்விதமாக குளிரும், ஈரப்பதமும் அதிகமானதால் உருளைக்கிழங்கு பயிரை பூஞ்சணை நோய்கள் (fungal diseases) தாக்கி அழித்தது. இதன் விளைவாக அயர்லாந்து முழுமையிலும் 1840ம் ஆண்டிலும், 1847 - 1851ம் ஆண்டுகளிலும் விளைச்சல் இன்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆனால் இப்பஞ்சத்திற்கு காரணம் கத்தோலிக்க சமயமும் அதன் உருவ வழிபாட்டு முறைகளுமே என்று புரொட்டஸ்டன்டுகளால் குற்றம் சாட்டப்பட்டது. மக்கள் உணவு உண்ண உருளைகிழங்கு இன்மையால் கிடைத்த சிறிதளவு கிழங்குகளை கஞ்சியாக்கி குடித்தனர். மக்கள் எலும்பும் தோலுமாக ஆனார்கள். காலரா, டைபாய்டு, வயிற்றோட்டம் ஆகிய நோய்கள் மக்களை பீடித்தது. மக்களின் உடம்பெல்லாம் பேன் புழுத்து வடிந்தது. தோல் நோய்களும் மிகுந்து இருந்தன. குழந்தைகள் உணவின்றி அலறின. அவைகளின் கை, கால்கள் தொங்கின. எலும்பு உருகி குழந்தைகள் மெலிந்து செத்தன. இறந்த குழந்தைகளை அடக்கம் செய்ய பெட்டிகளும் இல்லை, ஆட்களும் இல்லை. சிறிது பள்ளம் தோண்டி பூமிக்கு சில அங்குல ஆழத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டன. நாய்கள், புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடலை கவ்விக்கொண்டு ஊர் முழுவதும் ஓடின. இவ்விதமான பஞ்சம், பசி, பட்டினி, நோய், அரசு அடக்குமுறை காரணமாக 20 ஆண்டுகளுக்குள் அயர்லாந்து மக்கள் தொகை மூன்றில் ஒன்றாக குறைந்தது. பஞ்சத்தை விசாரணை செய்ய 11 ஆணையங்களும் (கமிஷன்களும்), 61 குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால் போதிய பலன் யாதும் கிடைக்கவில்லை.

 

இத்தகைய நிலையிலிருந்த அயர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்கவும், கிறிஸ்தவத்தை பரப்பவும் வந்தவர் ராபர்ட் கால்டுவெல். பஞ்சத்தில் அடிபட்ட இவருக்கு இந்தியாவில் மூன்று நேர அரிசி உணவும், பனை பொருட்களாகிய நுங்கு, பதநீர், கருப்புக்கட்டி ஆகியன வேண்டியளவு கிடைத்தது. இந்திய கிறிஸ்தவ அரசால், பண வசதியும், வாய்ப்பும் இவருக்கு பெருமளவு வழங்கப்பட்டது. எனவே பொதுவாக நாம் எண்ணுவது போல் இவர் கிறிஸ்தவ மதத்தை மட்டும் பரப்ப இந்தியா வரவில்லை. பஞ்சம், பசியிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவ குழுவில் சேர்ந்து மாத சம்பளத்திற்கும் பின்னர் பென்சனுக்கும் விருப்பப்பட்டே இவர் இந்தியா வந்தார். இவரை போன்றே 15ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கு அந்நிய பாதிரியார்கள் வருகை பெருமளவில் இருந்தது. இவர்களது நோக்கம் இந்தியாவில் தன்னலமற்ற சேவை செய்வதற்காக அல்ல. மாறாக பஞ்சம் பிழைக்க வந்தவர்களே அதிகம் எனலாம். பாதிரியார்கள் வருகையின் இதர நோக்கங்கள் வருமாறு:

  • மாதா மாதம் கிறிஸ்தவ சபையிலிருந்து சம்பளம் பெற வேண்டும்.
  • வருடா வருடம் கோடையில் இங்கிலாந்து சென்றுவர சம்பளத்துடன் விடுமுறை வேண்டும்.
  • இந்தியாவில் நல்ல உணவு உட்கொண்டு, ஓய்வு நேரத்தில் தெய்வீக திருக்குமரனின் பரிசுத்த வேதாகமத்தை பரப்ப வேண்டும்.
  • வயது முதிர்ந்த பின் ஓய்வு ஊதியம் வேண்டும். (தனது அந்திம காலத்தில் கூடுதலாக ஓய்வு ஊதியம் கேட்டு கால்டுவெல் பாதிரியார் போராடியது இங்கு நினைவு கூறப்படுகிறது. பார்க்கவும் (பக்கம் 273, Robert Caldvell – A scholar missionary by – Vincent Kumaradoss, மற்றும் search www.google.co.in with the key word Ireland in Nineteenth century.)

 

கால்டுவெல் அயர்லாந்தில் கழித்த இளம் வயதில் அங்கு நிலவிய இனம் மற்றும் மொழிப்பிரச்சினையையும், சற்று பார்க்கலாம். அந்நாட்டில் பெரும்பான்மையாக விளங்கிய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பேசிய காலிக் (Gaulic) மொழி, ஆங்கிலத்தைவிட எழுத்திலும், பேச்சிலும், தொனியிலும், சிறப்பானது. ஆதியில் கர்த்தா; மனிதனை சொர்க்கலோகமாகிய ஏடன் தோட்டத்தில் படைத்தபோது முதல் குடிமக்களாகிய ஆதாமும் ஏவாளும் பேசியது சமஸ்கிருதம் சார்ந்த காலிக்மொழி என்பது அயர்லாந்து மக்களின் நம்பிக்கை. கத்தோலிக்க மக்களின் இம்மொழி அழிக்கப்பட்டாலே கத்தோலிக்கர்களின் மூடநம்பிக்கை நீங்கி அயர்லாந்து சுத்தப்படும், மேன்மைப்படும், பஞ்சமும் தீரும் என புரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் நம்பினர். எனவே காலிக் மொழி பேசுவதை அயர்லாந்தில் தடை செய்தனார். அம்மொழி பற்றி பல்வேறு இகழ்ச்சி வரலாறுகள் பிரபலப்படுத்தப்பட்டன. ஆங்கில கல்வி கட்டாயமாக்கப்பட்டது. ஐநூறு ஆண்டிற்கு முன்பு 80 சதவீத மக்களால் பேசப்பட்ட காலிக் மொழி இன்று மூன்று சதவீத மக்களால் மட்டுமே பேசப்படுவது என்பது, புரொட்டஸ்டன்ட் சமயத்தாரின் மொழி வெறியை வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது. ஆங்கிலம் புகுத்தப்பட்டாலே காலிக் மொழி பேசும் கத்தோலிக்கர், புரொட்டஸ்டன்ட் சமயத்திற்கு மதம் மாறக்கூடும் என்றும் ஆங்கில ஆட்சியாளர்கள் நம்பினர். கி.பி.1618லிருந்து முப்பது வருடகாலமாக ஐரோப்பாவில் நடைபெற்ற முப்பதாண்டு போரில் கத்தோலிக்க - புரொட்டஸ்டன்ட் சமய பிரிவுகளுக்கிடையே பெரும் கொலைவெறி தாண்டவமாடியதை எல்லோரும் அறிந்திருக்கக்கூடும். எனவே புரட்டஸ்டன்ட் ஆட்சியாளார்களாகிய ஆங்கிலேயர்; அந்நாட்டிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை, தங்களை போன்ற வெள்ளையர்கள் என்றும் பார்க்காமல் பல அடக்குமுறைகளை அவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். இதன்பொருட்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பல சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டன. இவற்றில் மிக கொடியது Test Act 1673 என்பது. இச்சட்டத்தின்படி கத்தோலிக்கர்கள் பிரிட்டிஷ் அரசு பணியில் சேர வேண்டுமெனின், ஏதாவது புரொட்டஸ்டன்ட் கோவிலுக்குச் சென்று, புரொட்டஸ்டன்டாக மதம் மாறி தெய்வீக நற்கருணையும், ஞானஸ்தானமும் பெற்று அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சான்றிதழின் பெயர் Test certificate எனப்படுவது. (பார்க்கவும் En.wikipedia - Test Act of 1673)

 

இத்தகைய சமய, சமுதாய, பொருளாதார, மொழி பிரச்சினை தன் நாட்டில் உச்சகட்டத்திலிருந்த காலத்தில், அயர்லாந்து தீவிலிருந்து இந்தியாவுக்கு சமய பணியாற்ற என்ற போர்வையில் காலனியாதிக்கத்திற்கு வலுசேர்க்க வந்து சேர்ந்தவர் ராபர்ட் கால்டுவேல். இவ்வாறாக பிறவியிலே கசப்பு நிறைந்த சமூக பின்னணி உள்ளவர் கால்டுவெல் என்பதும், அவரின் ஆன்மீக குரு ஜான் கால்வின் எனும் கொடூர திருமறையாளர் என்பதும் ஈண்டு மீண்டும் குறிப்பிடப்படுகின்றது.

 

எனவே, சமய மற்றும் மொழி கொடுமையிலிருந்து விடுபட தங்கள் நாட்டை இங்கிலாந்து நாட்டு பிடியிலிருந்து வேறுபடுத்தி தனிநாடு அமைக்க கத்தோலிக்கர்கள் தற்காலம் வரை (இருபதாம் நூற்றாண்டுவரை) துப்பாக்கி ஏந்தி போராடினர். எனவே தனிநாடு கோரிக்கை எத்தகைய தத்துவங்களிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் பிறக்கின்றது என்பது கால்டுவேல் அவர்களுக்கு நன்கு பரிட்சயம் ஆனதே. அதனை இந்தியாவிலும் செயல்படுத்திட சரியான வியூகத்தை வகுத்திட அவர் விரும்பினார்.

 

இப்படியாக பிரிவினைவாதத்தில் தேர்ச்சி பெற்ற கால்டுவெல் பாரதத்திற்குள் எப்படி பிரிவினைவாதத்தை கொண்டு வந்தார்? - அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

Read 13056 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 17:25

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment