எங்கள் பகுதியில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். என் அண்ணன் தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலை 5 மணி அளவில் பெந்தகோஸ்தே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த இருவர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொரு நோயாளியாகப் பார்த்து நோயாளிகளின் நலம் குறித்து விசாரித்து, நலம் பெறப் பிரார்த்திக்கவும் செய்தனர். சில நோயாளிகளும் அவர்களுடன் இருந்தோரும் இதனால் அதிருப்தி அடைந்தனர். நான் நர்ஸிடம் இது குறித்துச் சொன்னபோது அவர் வரவேற்பு அலுவலகத்தில் பாதுகாவலரிடம் புகார் அளிக்கச் சொன்னார். அலுவலகத்தில் புகார் அளித்த போது அவர்கள் பாதுகாவலர்களிடம் மருத்துவமனைக்கோ நோயாளிகளுக்கோ சம்பந்தமில்லாதவர்களை முன் அனுமதியின்றி எப்படி இதை அனுமதிக்கலாம் என்று கண்டித்தனர். பாதுகாவலர்கள் இது பலமுறை நடந்துள்ளது என்றும் இவர்கள் பார்வையாளர் நேரத்தில் இப்படி எல்லா நோயாளிகளையும் சென்று பார்த்து பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் சொன்னார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்க பலரும் வந்து போவதால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். பின்னர் பாதுகாவலர்கள் சென்று பெந்தகோஸ்தே அமைப்பினரை மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொன்னார்கள். அவர்களும் உடனடியாக வெளியேறினர்.
அப்பல்லோ ஆஸ்பத்திரி - கிறிஸ்துவ மதமாற்றம்
Published in
கிறிஸ்துவ சூழ்ச்சிகள்