×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

மாணிக்கவாசகர் மண்ணில் மோசடி சர்ச்

Friday, 08 August 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று புகழ் பெற்ற திருவாசகத்தைத்தந்த மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ளது. இந்துக்களால் மிகவும் கொண்டாடப்படும் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் உள்ள அவரது கோவிலுக்கு நேர் எதிரில், திருமறைநாதர் கோவிலுக்கு மிக அருகில் பெந்தகோஸ்தே சபையினரால் திடீரென்று ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளது.
 
thiruvathavuoor church thiruvathavuoor church1
 
அந்த சர்ச் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு உள்ளாட்சி அங்கீகாரம் இன்னும் கொடுக்கப்படவில்லை. சர்ச் கட்டுவதற்கும் எந்த அனுமதியையும் பெந்தகோஸ்தே சபையினர் பெறவில்லை. பஞ்சாயத்து தலைவரோ, மாவட்ட ஆட்சியரோ இந்த சர்ச் கட்டுவதற்கு எந்த அனுமதியும் தரவில்லை. இப்படி எல்லாவகையிலும் விதிமீறி அதிரடியாக “கிறிஸ்து எனக்கு ஜீவன்” என்ற பெயரில் இந்த சர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா சமீபத்தில் நடந்துள்ளது. 
 
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுரை மாவட்ட தலைவர் மற்றும் மாநில இணைத்தலைவரான திரு. சின்மயா சோமசுந்தரம்  கூறுகையில், இப்படி விதிகளை மீறி அதிரடியாக  சர்ச் கட்டியதோடு மட்டுமல்லாமல் ஒரு 10 குடும்பத்தினரை மதமாற்றம் செய்துள்ளார்கள். இதற்கு பின்னால் ஒரு மாபெரும் சதி இருக்கிறது என்று தான் கருத தோன்றுகிறது. ஏனென்றால், சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊரில் ஒரு கிறிஸ்தவர்கள் கூட இல்லாத நிலையில் இங்கு மாணிக்கவாசகர் கோவிலுக்கு நேரெதிரில் சர்ச் கட்டப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாணிக்கவாசகர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடைபெறும் சமயங்களில் அவர்கள் அல்லேலோயா அல்லேலோயா என்று கத்தி திருவாசகம் முற்றோதலுக்கு இடைஞ்சல் தருவர். அப்பொழுது தேவையற்ற மதப்பிரச்சினைகள் வரவாய்ப்பு உள்ளது. ஆதலால், சர்ச்சின் செயல்பாடுகளை நிறுத்தி விதிமீறல் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். விதிமீறிய இந்தக் கட்டிடத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் திருவாதவூரில் தேவையில்லாத மதப்புகைச்சல் உண்டாகும் என்று கூறி மதுரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் காவல்துறையினர் இதுவரை புகார் மனுவை ஏற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் கூட வழங்கவில்லை. காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவகாசம் கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆர்பாட்டத்தின் மூலம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்று கூறினார்.
 
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் ஒரு கிறிஸ்தவர்கள் கூட இல்லாத நிலையில் அதே வீதியில் சர்ச் கட்டுவதன் நோக்கம் என்ன? வெளியூர்களிலிருந்து கிறிஸ்தவர்களை கொண்டுவந்து ஞாயிறுதோறும் ஜபக்கூட்டங்களை நடத்தி இந்துக்களின் வழிபாட்டுக்கு இடையூறு செய்வது, இந்துக்களை மதமாற்றம் செய்வது இந்த நோக்கத்தை தவிர வேறு என்ன இருக்கமுடியும். ஒலிபெருக்கி ஹாரன் வைப்பது சுப்ரீம் கோர்ட் தடைசெய்துள்ள போதும் கூட கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதை கடைப்பிடிப்பதில்லை. பிறமதத்தவர் மனது புண்படும்படியாக பேசுவதோ, எழுதுவதோ சட்டத்தை மீறிய செயல் இருப்பினும் கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் இந்த தவறையே செய்து வருகின்றனர். வீடு கட்டவேண்டும் என்றால் கூட அரசின் அனுமதி பெறவேண்டும், இந்த சட்டத்தை கூட கிறிஸ்தவர்கள் மதிப்பதில்லை. இப்படி இந்த நாட்டின் அனைத்து சட்டங்களையும் நியாய தர்மங்களையும் எள்ளளவும் மதிக்காமல் ரவுடி போல் நடந்து கொண்டு இருக்கும் கிறிஸ்தவ முஸ்லீம்களை தட்டிக்கேட்காமல் இருக்கும் இந்த அரசின் செயல்பாடுகள் திருவாசகம் தந்த மகானின் மண்ணை இந்துக்களிடமிருந்து பறிக்கும் கிறிஸ்தவ சூழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து விட்டது.
 
இந்த திடீர் சர்சை அரசு உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். இந்த சதிச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Read 10658 times
Rate this item
(4 votes)
Last modified on Friday, 08 August 2014 19:00

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

2 comments

  • Comment Link Srikanth Friday, 22 August 2014 20:45 posted by Srikanth

    How to stop these things ?

  • Comment Link ராஜேஷ் ராவ் Saturday, 09 August 2014 02:41 posted by ராஜேஷ் ராவ்

    கிருஸ்துவ சர்ச்சுகள் வழிகாட்டலில் நடக்கும் இப்போதைய தமிழக அரசு இவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா ? என்பது சந்தேகமே. அதேவேளையில் அங்கிருக்கும் இந்துக்கள் ஒற்றுமையுடன் விடாமல் போரிட்டால் இதை தடுத்து நிறுத்த முடியும். அப்பகுதி இந்துக்கள் போராடுவார்கள் என்று நம்புவோம்.

Leave a comment