×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பாரதமும் பாரதீயரும் நம் குழந்தைகளும்

Saturday, 11 April 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

இந்தியாவின் மகள் என்று ஒரு குறும்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலேயர் ஒருவர் இயக்கி வெளியிட்ட குறும்படம் அது. இந்தியர்கள் அனைவரும் காமாந்தகாரர்கள் என்பது போலச் சித்தரிக்கப்பட்டு தில்லியில் நடைபெற்ற நிர்பயா பாலியல் கொடூரத்தை நிகழ்த்தியவனின் பேட்டி அந்தப் படத்தின் மூலமாக வெளியிடப்பட்டது. அந்தப் பெண் கொடூரத்துக்கு உடன்பட்டிருந்தால் கொன்றிருக்க மாட்டோம் என்று அவன் கூறிய கருத்து ஒட்டு மொத்த இந்திய ஆண்களின் கருத்தாக அந்த ஆங்கிலேயப் பெண்ணால் வைக்கப்பட்டது. இதற்கு உடனடியாக ஆதரவு தெரிவித்து நம்மூர் தேங்காய் மக்கள் (உள்ளே வெள்ளை வெளியே பழுப்பு நிறத்தினர்) நம் பண்பாட்டையும் பண்டைய வாழ்வியல் வழிமுறைகளையும் தூற்றினர்.

udwin mukesh

எப்பொருள் யார் சொன்னாலும் அதில் மெய்ப்பொருள் தேடும் முன்னோர் வகுத்த முறைப்படி சில விவரங்களை உற்று நோக்குவோம்.

ஒரு சிறு முன் குறிப்பு: இந்தக் குறும்படம் விளம்பர/வியாபார நோக்கில் வெளியிடப்பட அனுமதியில்லை. பல ஒப்பந்த மீறல்கள், விதி மீறல்கள் இதிலே இருக்கின்றன. முழுதும் நம் நாட்டு மக்களின் அகவெழுச்சியை அடக்கிவைக்கும் நோக்கிலேயே இந்த விதிமீறல்கள் செய்யப்பட்டு படம் தொலைக்காட்சிகளில் வியாபார நோக்குடன் வெளியிடப்பட்டதாகவே நானும் கருதுகிறேன். நிற்க.

நன்றும் தீதும் கலந்ததே மனித மனம். நன்மையை ஓங்கச் செய்து தீமையை மங்கச் செய்வது கல்வி. மெக்காலே திட்டத்தினால் இது நடப்பதில்லை என்பது நாடறிந்த ரகசியம். அதற்காகத் தான் சமய வகுப்புகள், நீதி போதனை என்றெல்லாம் நம் பெரியவர்கள் மெனக்கெடுகிறார்கள். இந்நிலையில் மேற்கத்திய அடிவருடி ஒருவருடன் நடைபெற்ற ஒரு விவாதம் குறித்த சிறு குறிப்பையும் வைக்கிறேன். இவர்கள் நம்மை மட்டம் தட்டுவதற்கு புளுகவும் துணிவார்கள் என்பது புரியும்.

இரண்டாண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு அருகே தன் மகளிடம் முறைதவற முற்பட்ட சில குடிகாரப் பொறுக்கிகளைக் கண்டித்த தகப்பன் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் ஊடகங்களாலும் பல அரசியல் கட்சிகளாலும் கண்டு கொள்ளப்படவில்லை.

ஆனால் அது குறித்து வேறு தளத்தில் ஒரு விவாதம் வந்தது. செக்யூலர் அறிவுசீவி ஒருவர் மனுஸ்மிருதியே இதற்குக் காரணம் என்றார். எப்படி என்றபோது மனுவைக் காட்டி அடக்கப்பட்டவர்கள் இப்போது அத்துமீறுகிறார்கள், ஆகவே இது இப்படித்தான் இருக்கும் என்றார். மனுஸ்மிருதியில் சில சாதியினர் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று எழுதியிருக்கிறது என்றார்.

மனுஸ்மிருதியின் பிரதி ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு அவரிடம் ”மனுஸ்மிருதியில் எந்த அத்தியாயத்தில் அப்படி எழுதப்பட்டுள்ளது சொல்லுங்கள்” என்றேன். ”ஊருக்கே தெரிந்த விவரத்துக்கு ஆதாரம் ஏன் கேட்கிறீர்கள்” என்றார். ”தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். மொத்தப் புத்தகத்தையும் புரட்டாமல் குறிப்பிட்ட அத்தியாயத்தைப் பார்த்து அதை நானும் உறுதிப்படுத்திக் கொள்வேனே” என்றேன். மனுஸ்மிருதியில் 23ஆவது அத்தியாயத்தில் உள்ளது என்றார்.

manusmriti

மனுஸ்மிருதியில் 23ஆவது அத்தியாயம் வேலைக்காரியுடன் காதல் லீலை புரிந்தவாறே காரல் மார்க்ஸ் எழுதியதா அல்லது விலைமாதர் வீடுகளில் பொறுக்கியபடி ஈவேரா எழுதியதா என்று கேட்டேன். மனிதர் காரல் மார்க்ஸே கதிர் அரிவாளே.... பெரியாரே பகுத்தறிவே என்று கூச்சலிட்டார். பிறகு சொன்னேன் ”மனுஸ்மிருதியில் இருப்பது 12 அத்தியாயங்கள் மட்டுமே”. அதன் பிறகு அந்த அறிவுசீவி விட்டலாச்சாரியா படங்களில் வரும் பூதம் போல கணத்தில் காணாமல் போய்விட்டார்.

நம்முடைய பலவீனம் நமது நெறிநூலகளை நாம் கற்கவில்லை என்பதே. நம் நெறி நூல்களில் உள்ளவற்றைத் திரித்துக் கூறி நம்மை இவர்கள் கேவலமாகப் பேசுகிற போது பதிலளிப்பது இதனால் கடினமாகிறது. தமிழோ சமஸ்கிருதமோ அறியாத காரணத்தால் நம் பண்டைய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கிறோம். இவை கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பீட்டை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டு கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கமுள்ள மொழிபெயர்ப்புகளாகவே அமைகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகளையே கம்யூனிச, திராவிட, செக்யூலரிச அடிப்படைவாதிகள் படித்துவிட்டு முன்வைக்கிறார்கள். இதெல்லாம் அந்தக் காலத்தில் காலத்துக்கேற்ற மாதிரி எழுதப்பட்டது. இப்போது அப்படி இல்லையே என்று நாம் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம். காரணம் நமக்கும் அடிப்படை குறித்த அறிவும் தெளிவும் இல்லை.

இந்த பிபிசி குறும்பட விவகாரத்திலும் இதே விதமாகத் தான் பேச்சு நிகழ்கிறது. இந்தச் சமுதாயம் அழுகிய மனநிலை கொண்டது. உண்மைகளை மறுத்தும் மறைத்தும் வாழ்கிறது என்று பாரதத்தைக் குறித்து அந்த ஆங்கிலேயப் பெண்மணி கூறியுள்ளார். உடனே நம்முடைய ஊடகங்களில் நடுநிலையாளர்கள் இதைக் கண்டு சுய கழிவிரக்கம் பொங்கி வழிய அதைத் துடைக்கக்கூடச் செய்யாமல் சமூக சீர்திருத்தம் குறித்துப் பேசுகிறார்கள்.

அதற்கு முன் சில கேள்விகள்/கருத்துக்களை நாம் முன்வைப்போம்:

1. நம் நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் அதை நாம் பார்த்துக் கொள்வோம். ஆங்கிலேயர் தேவையில்லை.
2. பிரச்சினைகளை மறுத்தும் மறைத்தும் வாழும் அழுகிய சமுதாயம் என்று நம்மைச் சொல்லும் இவரது சமுதாயம் எத்தகையது என்று நாம் பேசுவதில்லை.
3. சமுதாயத்தைப் பற்றிப் பேசவில்லை எனினும் அவரது பிபிசி நிறுவனம் குறித்துப் பேசலாமே?
4. சிறுவர்களிடம் தகாத பாலுறவு கொண்ட பாதிரிகளை மன்னியுங்கள் என்ற கத்தோலிக்க மதத்தலைவரின் கருத்து குறித்தும் விவாதிக்கலாம்.
5. அமெரிக்கா/ ஐரோப்பாவில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குக் குழந்தைகளைத் தனியாக அனுப்ப பெற்றோர் மறுப்பது ஏன் என்பது குறித்தும் விவாதிக்கலாம்.

மேற்கூறிய கருத்துக்கள் கேள்விகளுக்காக நம்மை மதவெறியன் என்று முத்திரை குத்துவார்கள். ஊரறிந்த ஹிந்துத்வர்களுக்கு இந்த முத்திரை சுமையல்ல.

பிபிசி நிறுவனத்தில் ஜிம்மி சேவில் என்பவர் மீது குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அதீதம் செய்ததாகக் குற்றச்சாடு எழுந்தது. பிபிசி நிறுவனம் இதை விசாரிக்கக்கூட மறுத்துவிட்டது. ஜிம்மி சாகும் வரை குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை பிபிசி நிறுவனம் தடுத்தே வந்தது. சமீபத்தில் அவர் ஒரு மருத்துவமனைக்கான நிதி திரட்டும் நிகழ்வுகளில் 63 பேரிடம் பாலியல் வன் தொந்தரவு செய்திருப்பதாகவும் அது தொடர்பான புகார் உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதுப் பெண்மணி ஒருவர் தான் ஜிம்மி சேவில்லின் மகளாக இருக்கலாமோ என்று ஐயப்படுவதாகக் கூறியுள்ளார்.

Jimmy Savile

அவரது குடும்பம் குழந்தைகளிடம் எப்படி இது குறித்துப் பேசிப் புரியவைப்பார்? இது எவ்வளவு பெரிய கொடுமை?

http://www.bbc.com/news/uk-31637320
http://www.theweek.co.uk/62887/jeremy-clarkson-top-gear-should-hire-alan-partridge
http://www.dailymail.co.uk/news/article-2963787/Woman-fears-Jimmy-Savile-s-secret-daughter-mother-abused-paedophile-star.html

இதெல்லாம் குறித்து இங்கிலாந்தின் மகள்கள் என்று பிபிசி ஒரு படம் எடுக்கலாமே? இதுவெல்லாம் நிஜமாகவே இங்கிலாந்தின் மகள்கள் குறித்த பிரச்சினைதான். இங்கிலாந்தின் ஆண்கள் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு குற்றத்தை மறைப்பவர்கள் என்று இந்த விவகாரத்தில் பிபிசி ஏன் பொதுப்படுத்தவில்லை?

சாரா சேம்பியன் எனும் பிரிட்டிஷ் எம்பி கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் இதுவரை பிரிட்டனில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அரசு அத்தகைய குழந்தைகளின் நலனைப் பேண அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். மிரர் பத்திரிகை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி இது குறித்து பிரிட்டனின் குழந்தைகள் என்று இன்றுவரை படம் எடுக்கவில்லை. இந்தக் குற்றவாளிகள் குழுக்களாகச் செயல்படுகிறார்கள்.

british muslim forum on c 007

அவர்கள் அனைவரும் இசுலாமியர்கள் என்கிறது செய்தி. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நிறவெறியர்கள் என்று மனித உரிமையாளர்களால் முத்திரை குத்தப்பட வாய்ப்புண்டு என்பதால் பிரிட்டிஷ் காவல்துறை குற்றத்தை வேடிக்கை பார்க்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

http://www.frontpagemag.com/2015/robert-spencer/britain-surrenders/

இந்தியாவில் 5% பாலியல் பலாத்கார வழக்குகளே பதிவாகின்றன என்ற குற்றச்சாட்டும் பிரித்தானிய நிலையின் பிரதிபலிப்பாகவே இந்தியா இருக்கும் என்ற ஆங்கிலேய நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆங்கிலேய அரசின் விசாரணை ஆணையம் 2007ல் அளித்த அறிக்கையின்படி பிரிட்டனில் 95% வரை பாலியல் குற்றங்கள் குறித்து மக்கள் புகார் அளிப்பதில்லை. (Crown Prosecution Service Inspectorate, January 2007). பிரித்தானியக் காலனியாக சமீபகாலம்வரை இருந்த தென் ஆப்பிரிக்காவில் பாலியல் பலாத்காரம் என்பது சர்வசாதாரணம் என்கிறது அந்நாட்டு அரசின் அறிக்கை. பலாத்காரம் குறித்த செய்திகள் கூட வெளிவராத அளவுக்கு இக்குற்றம் அங்கே மக்களுக்குப்
பழகிப் போய்விட்டது. ஐநா புள்ளிவிவரத்தின்படி உலகம் முழுவதிலும் 32% பாலியல் குற்றங்கள் மட்டுமே புகார் செய்யப்படுகின்றன.

உளவுத்துறை தன்னைச் சந்தேகப்பட்டு விவரம் சேகரித்ததில் மனமுடைந்த முகமது எம்வாசி (ஜிஹாதி ஜான்) என்ற ஒருவன் ஜிஹாதியாகி சிரியாவுக்குச் சென்று பிணைக் கைதிகளைக் கழுத்தறுத்துக் கொல்லத் துணிந்துவிட்டான் என்று காவல்துறையைக் குறைகூறும் அவலமும் அதற்கு இந்தப் பெண்மணி போன்ற முற்போக்காளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் பிரிட்டனில் நடந்தேறிவரும் சமீபத்திய நிகழ்வுகள். இது போன்ற நிலையை நம் நாட்டிலும் பகிரங்கமாக ஏற்படுத்தி வைக்க முற்படும் முற்போக்கு முட்டாள்தனமே இத்தகைய செயல்பாடுகள்.

bbc

நம் ஊடகங்களில் பலரும் மேற்கத்திய அடிவருடி மனோபாவத்துடன் செயல்படுபவர்கள். வேறு சிலர் குற்றம் சாட்டப்பட்டால் குற்றமிருக்கிறதோ இல்லையோ மன்னிப்புக் கேள், என்ன குறைந்து விடும் என்று காந்தியம் பேசுபவர்கள்.

உண்மைக் குற்றவாளிகள் வேடமணிந்து வலம் வருகிற போது சுட்டிக்காட்டினால், அடுத்தவனை ஒரு விரல் காட்டிச் சுட்டுகிற போது மற்ற விரல்கள் உன்னைச் சுட்டுகிறது என்று விண்ணாளம் பேசி வீணாகப் பொழுதைக் கழிப்பவர்கள்.

இவர்களுக்கு இவர்களே சூட்டிக் கொண்ட பொதுவான பெயர் நல்லவர்கள். சிறுமை கண்டு பொங்குவாய் என்று பாரதி சொன்னதைச் சிலாகிப்பார்கள். ஆனால் எங்கு பொங்கவேண்டும் எங்கு மங்கவேண்டும் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பிறகு பாரதியைப் போல ஜமீந்தாரின் சிறுமையைக் கண்டும் பொங்கி பிழைப்பைக் கெடுத்துக் கொள்ள இவர்கள் என்ன புன்னகை மன்னர்களா?

bharathiyar

நம் நாட்டில் பெண்களின் மீது கொடுமை நடக்கிறது என்று கூவுவதற்கு முன் நம் பாரம்பரியம் குறித்த அடிப்படைத் தெளிவு சிறிதேனும் தேவை. மேற்கத்தியர்கள் பச்சை மாமிசம் உண்டு திரிந்து கொண்டிருந்த காலத்தில் அரசனோடு சேர்த்து அரசிக்கும் மணிமுடி கொடுத்தவர்கள் நம் முன்னோர். இராமாயண காலத்தில் கைகேயி மிகச் சிறந்த போர்க்காலத் தேரோட்டியாக இருந்தவள். மஹாபாரத காலத்தில் சிகண்டி என்ற மூன்றாம் பாலினத்தவரை தங்கள் முக்கியத் தளகர்த்தர்களில் ஒருவராகக் கொண்டது பாஞ்சால நாடு. மலையத்துவஜ பாண்டியன் மகள் படை நடத்திச் சென்று பல நாடுகளைப் பிடித்த வரலாறு நமது. ராஜராஜ சோழனுக்கு முக்கிய ஆலோசகராகச் செயல்பட்டது அவனது தமக்கை குந்தவைப் பிராட்டியார். ராஜேந்திர சோழனுக்கு முக்கிய ஆலோசகர் பரவையார் என்ற அவனது அனுக்கி.

சமீபத்திய வரலாற்றை நோக்கினால் பெண்களைப் பிரதமர் முதல்வர் என்று உயர்த்தி வைத்தவர்கள் நாம். பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று ஐரோப்பிய சமுதாயத்தின் ஒரு பகுதி இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் பெருமைதான். ஆனால் இன்றைய நிலையில் நம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி? இதில் ஆண் பெண் பேதமில்லை. ஆண் குழந்தகளிடமும் அத்துமீறும் ஒரு கலாசாரம் தற்போது சில பிரிவினரிடையே பரவி வருகிறது. ஆகவே நாம் எச்சரிக்கை கொள்வது அவசியம்.

பாலியல் குற்றவாளிகள் முதலில் குறிவைப்பது ஆதரவற்றவர்களை. பின்புலம் இல்லாதவர்கள், ஆள்பலம் அற்றவர்கள், போன்றோரே குற்றவாளிகளின் குறி. குறிப்பாக பாலியல் குற்றவாளிகள் நடுத்தர வர்க்கத்தில் அணுக்குடும்பத்தில் (Nuclear family) இருக்கும் குழந்தைகளைக் குறிவைக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் சொந்த ஊர்களை விட்டு வந்து மாமாங்கங்கள் ஆகியிருக்கும். இருக்கும் ஊரிலும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருக்கக்கூடியவர்கள்.

இத்தகையோருக்கு அரசுதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது நீதி. ஆனால் இன்றைய நிலையில் அரசு எந்திரம் அப்படி இல்லை. ஆகவே இத்தகையோர் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் காவல்துறையில் புகார் செய்வதில்லை..

கிராமங்களில் இத்தகைய பிரச்சினைகள் பெருமளவில் இல்லை. இருந்தாலும் ஊர்ப் பஞ்சாயத்துக்களில் பேசி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு அதிகம். கிராமப் புறங்களில் உறவுகள், நட்பு என்ற சுற்றம் சூழ்ந்த வாழ்க்கை முறை இன்னும் அற்றுப் போகாதிருப்பதால் பல குற்றங்கள் நிகழும் முன்னே தடுக்கப்பட்டுவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

நகரங்களில் அடுத்த வீட்டில் வசிப்பவர்களின் பெயர் கூடத் தெரியாத வாழ்வு முறையில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கின்ற நிலை உள்ளது. இது தனிமனித சுதந்திரம் என்ற போர்வையில் ஊக்குவிக்கப்படுகிறது.

குடும்பங்கள் சீர்குலைவதில் ஒரு உலகளாவிய வணிகச் சதி உண்டு என்று பல சமூக ஆர்வலர்கள் பல தளங்களில் பேசக் கேட்டிருக்கிறோம். சதிக் கோட்பாடுகள் இருக்கட்டும், குடும்பங்கள் குறைவதிலும் குலைவதிலும் குற்றவாளிகளுக்கே ஆதாயம் அதிகம் இருக்கிறது.

jt family

கூட்டுக் குடும்பமாக இல்லாவிட்டாலும் அக்கம்பக்கத்தில் வசிப்போர் குறித்த விவரங்கள், அவசரகாலத் தொடர்புகள், பிரச்சினைகளின் போது உதவக்கூடிய அமைப்புகள் குறித்த தெளிவு நமக்கு மிக அவசியம். ஹிந்துக்கள் குறிப்பாக அருகில் வசிக்கும் உண்மையான அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த உதவும் மனப்பான்மையுடைய மக்கள் போன்றோரது தொடர்பில் இருப்பதும், குழந்தைகளுக்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும், அணுகப்படும் முறைகள் அவற்றை எதிர்கொள்ளும் விதங்கள் குறித்தும் புரியவைப்பதும் அவசியம்.

நான் நடுத் தெருவில் நிர்வாணமாக ஆடுவேன், ஆனால் யாரும் என் அனுமதியின்றி அதை யாரும் பார்க்கவும் கூடாது என்பது போன்ற கோட்பாடுகள் பெண்ணிய மேடைகளில் பேசவும், முற்போக்குக் கட்டுரைகள் எழுதவும் மட்டுமே ஏற்றவை. இத்தகையோரின் பிடியில் குழந்தைகள் சிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது நம் கடமை.

nuke family

நம் குழந்தைகளைத் தவறாது அருகிலே நடைபெறும் சமய வகுப்புகளுக்கு அனுப்புவதும், அவர்களோடு நாளில் சிறுது நேரமாவது செலவிடுவதும் குழந்தைகளை நன்னெறிப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கும். சமுதாயம் சீராக இது வழி. ஆனால் இது நடைமுறைக்கு வர சில காலம் பிடிக்கும். அதுவரை ஹிந்துக்களாகிய நாமும் நமது குழந்தைகளும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.

வந்தே மாதரம்.

படங்கள் உதவி google img

Read 1843 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 26 June 2015 07:11

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment