×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

திரு சூரிஜி - வாழ்வும் பணியும்

RSS இயக்கத்தின் மிக மூத்த தலைவர் சூரிஜி என்று அழைக்கப்படும் சூர்யநாராயணராவ்ஜி (93) 18.11.2016 இரவு 11.30 மணி அளவில் பெங்களூருவில் சிவலோக பிராப்தி அடைந்தார். 

கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்.வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர்.  தென் பாரத அமைப்பாளர், அகில பாரத அமைப்பாளர், ஆக பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணிகளுக்காக உலகின் பல நாடுகளுக்கு சென்று வந்தவர். தனக்கு என வாழாமல்,திருமணம் செய்து கொள்ளாமல், 70 ஆண்டுகளாக சமுதாய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தமிழகத்தில் பல தேசியத் தலைவர்கள் உருவாக காரணமாக இருந்தவர். கொச்சை தமிழில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர். மிக சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பல மொழிகளில் பேச, எழுத தெரிந்தவர்.

RSS இயக்கத்தின் மிக மூத்த தலைவர் சூரிஜி என்று அழைக்கப்படும் சூர்யநாராயணராவ்ஜி (93) 18.11.2016 இரவு 11.30 மணி அளவில் பெங்களூருவில் சிவலோக பிராப்தி அடைந்தார். கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்.வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர்.  தென் பாரத அமைப்பாளர், அகில பாரத அமைப்பாளர், ஆக பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணிகளுக்காக உலகின் பல நாடுகளுக்கு சென்று வந்தவர். தனக்கு என வாழாமல்,திருமணம் செய்து கொள்ளாமல், 70 ஆண்டுகளாக சமுதாய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தமிழகத்தில் பல தேசியத் தலைவர்கள் உருவாக காரணமாக இருந்தவர். கொச்சை தமிழில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர். மிக சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பல மொழிகளில் பேச, எழுத தெரிந்தவர்.

ஆகஸ்ட் 1924 ல் பங்களூருவில் கிருஷ்ணப்பா, சுந்தரம்மா தம்பதிகளின் முதல் மகனாகப் பிறந்தார். 1942ல் பள்ளி மாணவராக இருக்கும்போதே ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்தார். 1946ல் BSC Mathematics பட்டப்படிப்பை முடித்த பின்னர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முழு நேர அமைப்பாளராக ஆனார். அன்றில் இருந்து இன்று வரை கடந்த 70 ஆண்டுகளாக முழுநேர சமுதாயப் பணி ஆற்றி வந்துள்ளார். கர்னாடக மாநிலத்தில் இருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பில் முழு நேரப் பணியாளராக முதன் முதலாக வந்த 3 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்தான் சூரிஜியின் சகோதரர் நரஹரிஜி மரணம் அடைந்தார். அவர் கர்நாடகாவில் MLC ஆக இருந்தவர். கர்நாடகத்தில் இந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டவர் திரு நரஹரி. சூரிஜியின் தங்கை ருக்மணி அவர்கள் ஆர் எஸ் எஸ் இன் பெண்கள் பிரிவான ராஷ்ட்ர சேவிகா சமிதியில் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வந்தவர். சூரிஜியின் தம்பிகள் அனந்து, கோபிநாத் மற்றும் சிவ் ஆகியோரும் இந்து சமுதாயப் பணிகளில் ஈடுபட்டவர்கள். அவரது தம்பிகள் அனைவரும் ஏற்கனவே இறந்து விட்டனர். சூரிஜியின் குடும்பத்தில் உள்ள அனைவருமே இந்து சமுதாயப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்கள்.

சூரிஜியின் மாமா மைசூரு சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். மைசூரு அரண்மனைக்கு செல்பவர்கள் இன்றும் அவரது மாமாவின் புகைப் படத்தை அங்கு காணலாம். பெரும் பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த சூரிஜி அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சமுதாய பணிக்காக தன்னை முழு நேர ஊழியராக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

1946ல் இருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பின் முழுநேரப் பணியாளராகக் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் பணியாற்றினார். 1962ல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இந்துத் துறவியர் மாநாட்டை ஏற்று நடத்தும் பொறுப்பை, திரு சூரிஜியிடம் ஒப்படைத்தார் அன்றைய ஆர் எஸ் எஸ் தலைவர் திரு குருஜி கோல்வல்கர். தீண்டாமை கடை பிடிப்பது பெரும் பாவம் என்றும் அதனை இந்து சமுதாயத்தில் இருந்து அடியோடு அகற்றும் தீர்மானத்தை இந்திய நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த எல்லா இந்து மதத் துறவியரும் ஏக மனதாக நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு அது. இந்த மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியவர் திரு சூரிஜி.

1972 முதல் 1984 வரை தமிழக மாநில அமைப்பாளராகப் பணியாற்றினார். திராவிட இயக்கங்களின் கோட்டையான தமிழகம், தேசியம் முளைக்காத கல் பாறை என்று கூறப்பட்ட கால கட்டத்தில் தமிழகத்தில் இந்து இயக்கங்களை வளர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழகத்தில் களம் இறங்கி அந்த கல்லை உடைத்து தேசியம் துளிர் விடச் செய்தவர். திராவிட மாயையில் சிக்கி இருந்த தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் சங்கத்தினை கொண்டு சேர்த்து , சங்கத்தினை வலிமையாக்கியவர். சூரிஜி1984க்குப் பிறகு தென்பாரத ஒருங்கிணைப்பாளர் பணி புரிந்தார்.

இந்திய நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் நடத்தி வந்த சேவைப் பணிகளின் அகில பாரத ஒருங்கிணைப்பாளராகப் பல ஆண்டு காலம் அவர் பணியாற்றி வந்தார். சங்கம் இன்று நடத்தும் பல்வேறு சேவை பணிகளுக்கு வித்திட்டவர் சூரிஜி. ஆர் எஸ் எஸ் இன் சேவைப் பணிகளுக்கு ஒரு புதிய பரிமாணம் தந்தவர். அமெரிக்கா, டிரினிடாட், கனடா, இங்கிலாந்து, ஜர்மனி, ஹாலந்து, நார்வே, கென்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து அந் நாடுகளில் வாழ்ந்த இந்துக்களை ஒருங்கிணக்கும் பணி செய்தவர். 2012 வரை ஆர் எஸ் எஸ் இன் அகில பாரத மைய செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.

சங்கத்தின் பரிவார் அமைப்புகளான சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், NMO தேசிய மருத்துவர் சங்கம், ஆரோக்கிய பாரதி, சம்ஸ்க்ருத பாரதி போன்ற இயக்கங்களை வழி நடத்தி தமிழகத்தில் வளரச் செய்தவர்

”சக ஊழியர்களிடம் பரிவு அவர்களின் திறன் வளர்ப்பு தனிப்பட்ட கவனம் கொண்ட திரு சூரிஜி, எனது வாழ்க்கை வழிகாட்டி” ஆக இருந்தவர் என்று பிரபல பொருளாதார நிபுணர் திரு எஸ் குருமூர்த்தி ஒரு புத்தகத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். திரு எஸ் குருமூர்த்தி, மேகாலயா கவர்னர் ஸ்ரீ சண்முகநாதன், பா ஜ க மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ இல கணேசன் போன்ற பல தேசியத் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் திரு சூரிஜி அவர்கள்.

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தனது டிவிட்டர் வலைப் பக்கத்தில் திரு சூரிய நாராயண ராவ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாரதத் தாயின் பாத மலரிலே நன் மலராகிய திரு சூரிஜி அவர்களது வாழ்வும், பணியும் இந்து இயக்கத் தொண்டர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி.

 

Read 1115 times
Rate this item
(1 Vote)

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.