×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
கிறிஸ்துவ சூழ்ச்சிகள்

கிறிஸ்துவ சூழ்ச்சிகள்

வடக்கு பகவதிபுரம் தந்த பாடம்

 

கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், இரண்டு ஹிந்து கோவில்களுக்கு அருகில், வேண்டுமென்றே ஒரு சர்ச்சை கட்ட நினைத்து, அதுவும் சட்டத்திற்கு விரோதமாக, அதை சாதித்தும் காட்டிய ஒரு கும்பலை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. அதை சாதித்துக் காட்டியுள்ளனர் வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்.

 

வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்கள் 25 ஆண்டுகள் தொடர்ந்து போராடி, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்படும் ஒரு இடத்தில், அன்னிய சக்திகள் எவ்வளவு அரசியல் பலமும் பணபலமும் கொண்டிருந்தாலும், தோற்றுத்தான் போகும் என்று செயலில் காட்டிவிட்டனர்.

 

மதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு

ஒரு நாட்டுக்கு அந்த நாட்டைச் சாராத ஒருவர் போகவேண்டுமென்றால் நுழைவாணை எனப்படும் விசா தேவை. இந்தியாவுக்கு வெளிநாட்டார் யார் வருவதாக இருந்தாலும் மைய அரசின் வெளியுறவுத்துறை அனுமதி தரவேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி விசா வழங்குவதில் ஓசையின்றி மாற்றங்கள் செய்துள்ளது. இந்த மாற்றம் பொதுவில் எல்லோருக்கும் கிடையாது. கிறிஸ்தவ மத போதகர்களுக்கு மட்டும்

நுழைவாணையில் சமயப்பரப்பாளர்கள் வந்து செல்லத் தனிவகை இருக்கிறது, மிஷநரி விசா என்று பெயர். சமயப் பரப்பாளர்களுக்கு இதுபோல சிறப்பு அனுமதிகள் அளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவ மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக இந்தச் செயல் அமைகிறது. இந்திய அரசோ அல்லது தற்போது பதவியில் இருப்பவர்களோ கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வமான அல்லது இசைவான சமயமாக ஓசையின்றி அறிவித்திருக்கிறார்கள்.

கிறிஸ்தவ சமயப்பரப்பாளர் நுழைவாணை என்பது பாரதத்தின் பன்முக கலாச்சார வாழ்வுக்கு விடப்பட்ட சவாலாக இருக்கும். தம் மதமே சிறப்பு மற்றன எல்லாம் சீரழிவு என்று விஷமப்பிரச்சாரம் செய்யும் இவர்களால் அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் சீர்கேடே அதிகமாகும்.

மக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் - காசியில் மதமாற்றம்!

இத்தாலி சோனியா இந்தியாவின் சர்வாதிகாரி ஆகிய பிறகு இந்தியாவின் பாரத அடையாளங்கள் அத்தனையையும் அழிக்கும் வேலை மிக வேகமாக நடந்து வருகிறது. அதற்கான மூல ஆயுதம் மதமாற்றம். இம்மதமாற்றம் மூலமாக இந்திய மக்களின் அடிப்படை நம்பிக்கைகளை சிதைப்பது மற்றும் அவர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிப்பது, அவர்களை அப்படியே மதம் மாற்றி இத்தாலிய  அடிமைகளாக மாற்றிவிடுதலில் முடிகிறது இந்த மதப்படையெடுப்பு. ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களிலெல்லாம் திட்டமிட்டு  மதம் மாற்றுவதை மிஷனரிகள் ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக திருவண்ணாமலையில் வேகமாக நடந்து வரும் மதமாற்றம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல இந்தியாவின் பல பகுதிகளில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

புனிதப் புரட்டு

முதல் இந்தியர் புனிதர் ஆகிறார் !
மண்ணின் மைந்தர் புனிதராகிறார் !
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்!

தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி” என்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன.