×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

தேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் நாகபுரியில் விஜயதசமி (30.9.2017) அன்று ஆற்றிய பேருரை

மங்களகரமான விஜயதசமித் திருநாளைக் கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த ஆண்டு பத்மபூஷண் குஷக் பகுலா ரிம்போச் அவர்களின் பிறந்த நூற்றாண்டு. இதுவே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டும் சகோதரி நிவேதிதையின் 150வது பிறந்த ஆண்டும்கூட..

யாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு!

திரு வேதா ஸ்ரீதரன் அவர்கள் தனது நண்பர் மூலமாக திரு. அ. கிருஷ்ணமாசார்யர் அவர்களுக்கு எழுதிய மறுப்பு கடிதம்..

ஜல்லிக்கட்டுப் போராட்டம் - ஏமாறும் தமிழர்கள், குளிர்காயும் தீய சக்திகள்

தமிழ்ப் பண்பாடு காக்க தமிழ்ச் சொந்தம் அனைத்தும் வீதிக்கு வந்தது ! தமிழையும் பண்பாட்டையும் பேணி காக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள் வரவேற்பார்கள் ! ஆதரிப்பார்கள் !

ஜல்லிக்கட்டு - தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ்ச் சொந்தங்கள் வீதிக்கு வந்து போராடுவது, பாரதியின் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று காட்டுகிறது.

”ஒளி படைத்தகண்ணினாய்வா! வா! வா!
உறுதி கொண்டநெஞ்சினாய் வா! வா! வா!

நள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா ?

புத்தாண்டு சிறப்பு வழிபாடு ! சிறப்பு பூஜை ! சிறப்பு அபிஷேகம் ! இன்னும் சிறப்பு ஹோமங்கள் வேறு !

இந்த சிறப்புக்களுக்கெல்லாம் சிறப்பான விளம்பரத்தட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்று படுவிமர்சையான விளம்பரங்கள் தமிழகம் முழுவதும் செய்யப்படுகிறது.

இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் கதவுகள் திறக்கப்படுகிறது. இந்த நள்ளிரவு நாடகம் நியாயமா ? இதற்கு சமய ஆகமங்கள் சம்மதிக்கின்றனவா? ஆகம விதிகளைத் தளர்த்தும் அளவிற்கு இந்த நிகழ்வில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா?

கங்கையைக் கொன்றான்! ஜோர்டானை வென்றான்! ஜம் ஜம்மில் நீர் கோவைப் பாடினான்!

யார் இவர் ? தெரிகிறதா?
இவர் ஓட்டுக்காக வீசிய அடுக்கு மொழியை பாருங்கள்!
//கங்கை கொண்டான்! கடாரம் வென்றான்! கலிங்கத்துப் போர் பரணி பாடினான்!//
யார் என்று இப்போது நினைவுக்கு வந்திருக்குமே!.
இந்த வசன கர்த்தாவின் சமீபத்திய பேட்டி இது.

கழகத்துக் காலை புகின்

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின் (குறள் 937)

கழகத்தில் ஒருவன் காலடி எடுத்து வைத்தால் அவனின் அனைத்து வகை செல்வங்களும், நற்குணங்களும் கெடும் என்கிறது குறள். இந்தக் குறளில் கழகம் என்பதற்கு சூதாடும் இடம் என்று பொருள். இந்தப் பொருள், திராவிட இயக்கக் கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு

“தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இராம கோபாலன் உள்துறை அம்மைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்தது நல்லது” என்று கூறிய ஸ்வாமி, “35% ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்த முடியுமென்றால், 80% ஹிந்துக்கள் ஒற்றுமை கொண்டால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எண்ணிப்பாருங்கள்” என்று கூறிய டாக்டர் ஸ்வாமி, ”இந்திய நாட்டில் அமைதி நிலவுவதற்கு ஹிந்து பெரும்பான்மையினரின் ஒற்றுமை வேண்டும்” என்றார். 
 

தேவை மகளிர் தினம் அல்ல; மகளிர் திறன்!

வேத காலம் தொட்டு நம் பாரத நாட்டில் பெண்களின் நிலை மிகவும் மேலோங்கியே இருந்துள்ளது. பெண்கள் நன்கு படித்தவர்களாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் இருந்துள்ளனர். ஆண்களுக்குச் சமமாகவே இருந்துள்ளனர். நம் நாட்டில் ஆண்களும், பெண்களும் சமம் என்பதையும் விட ஒருவருக்கொருவர் நிகரானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதே உண்மை. பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் உடற்கூறுகளின் திறன் மற்றும் தங்களின் இயல்பான வலிமை ஆகியவற்றை நன்றாக புரிந்து வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் இந்தச் சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பை முறையாக அளித்து இந்த மனித குலம் தழைக்கச் செயல்பட்டனர். அதுவே ஹிந்து தர்மமாகவும் இருந்தது. 

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்

1993 ஆர்.எஸ்.எஸ்.அலுவலகக் குண்டு வெடிப்பு, 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு, பெரிய அளவில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழ்த்தப்படாவிட்டாலும், வேறு பல விதங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருமளவில் வேரூன்றி பயங்கரவாதம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாத ஆவணங்களுடன் இந்து முன்னணி ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது.