×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம் தலையெடுக்கும் இஸ்லாம பயங்கரவாதம்!

Saturday, 28 December 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

நேற்று நமது இணையதளத்தில் தமிழகஅரசு சின்னம் மற்றும் நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரத்தை தகர்க்கப்போவதாக பயங்கரவாதிகள் இந்து முன்ணனி தலைமை அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பியதை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை பார்த்துவிட்டு, ராஜபாளையத்திலிருந்து பொன். ஓட்டக்காரத்தேவன் என்பவர் எங்களுக்கு இமெயில் மூலம் தனது அதிர்ச்சியையும், இதை ஒரு சாதரண மிரட்டலாக மட்டும் எண்ணி இதை விட்டுவிடமுடியாத அளவிற்கு ராஜபாளையத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதோ அவர் நமக்கு அனுப்பியுள்ள இமெயிலை இங்கே பதிவிடுகிறோம்.

 

நேற்று வந்த அதிர்ச்சியூட்டும் செய்தி திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைத் தகர்த்து ஹிந்து இயக்கத் தலைவர்கள் குறிப்பாக ஹிந்து முன்னணி தலைவர்களை புனித ஜிஹாத்தில் அல்லாவுக்கே காவு கொடுக்க இருப்பதாக இந்து முன்னணி அலுவலகத்துக்கு வந்த கடிதம். வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இணைய தளத்தில் படித்து அதிர்ந்தேன். படங்களைப் பார்த்ததில் சில தகவல்கள் யோசிக்க வைத்தன. இராஜபாளையம் தபால் நிலையத்தின் முத்திரையுடன் வந்த இந்தக் கடிதம் சிவகாசியில் இருந்து எழுதப்பட்டிருப்பதாக அனுப்புநர் முகவரி சொல்கிறது. இது வெற்று மிரட்டல் என்று புறந்தள்ள வெகுநேரம் ஆகாது எனினும் சில விஷயங்கள் இதை ஒரு தீவிரவாத அச்சுறுத்தலாகவே எடுத்துக்கொள்ளச் செய்கின்றன.

 

சமீபகாலமாக இராஜபாளையம் பகுதியில் இஸ்லாமியர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல இடங்களில் வீடுகள் மனைகள் என்று வாங்குகிறார்கள். பல முஸ்லிம்கள் உள்ளூரில் கறிக்கடை, வயரிங் வேலை, பிளம்பிங், பூட்டு ரிப்பேர் என்று செய்துகொண்டிருந்தவர்கள் திடீரென்று பணப்புழக்கத்தில் மிதக்கிறார்கள். மச்சான் துபாயில இருக்கான், மாமன் சவூதில இருக்கான் போன்ற பதில்கள் வருகின்றன. கோவில்களுக்கு அருகே வீடுகள் விற்பனைக்கு வந்தால் 50% வரை அதிகம் கொடுத்து வாங்கிக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். துபாய்க்காசு என்று பரவலாகப் பேசிவிட்டுப் போய்விடுகிறோம். வருமானம் வந்த வழி குறித்து யாருக்கும் ஆராயத் தோன்றவில்லை. லவ்ஜிஹாத் மூலமாகவும் ஆங்காங்கே ஹிந்துப் பெண்களைக் கவர்ந்து குடும்பத்தைக் குலைக்கும் வேலை துவங்கியிருக்கிறது. இதுவரை ஹிந்துக் கோவில்களுக்கு வந்து போய்க்கொண்டிருந்த முஸ்லிம் ஆண்கள், பண்டிகைகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சற்றே தூரம் காக்கிறார்கள். எல்லாம் சாமிதானே என்று கும்பிட்டவர்கள் இப்போது வணங்கவில்லையே என்று கேட்டாலும் சிறு சிரிப்புடன் நகர்ந்துவிடுகிறார்கள். இவர்கள் மெஜாரிட்டியாக உள்ள பல ஊர்களில் (எ.கா. பாடல் பெற்ற சிவத்தலம் இளையாங்குடி) ரம்ஜான் மாதத்தில் தவித்த வாய்க்கு யாருக்கும் தண்ணீர் தரமாட்டார்கள். கடைகளும் இருக்காது.

 

இவர்களின் இந்த விலகல் கவலை தருவது. இதனாலும் இந்த மிரட்டலை வெற்று என்று ஒதுக்கிவிட முடியாது. மேலும் அல் காயிதா என்ற ஜிஹாதி கொற்றக்குடை அமைப்பின் செயல்முறையே எதிரியை திசைதிருப்பிவிட்டுப் பார்க்காத திசையில் அடிப்பது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு முன் ஆஃப்கனிஸ்தானத்தில் அனைவரின் கவனமும் இருக்க வேண்டுமென்று செப்டம்பர் 9ஆம் நாள் ஆஃப்கனிஸ்தானின் முன்னணிப் போர்ப்படைத் தலைவர் அஹமத் ஷா மசூதைப் பத்திரிகையாளர்களைப் போலச் சென்று கொன்றவர்கள். எல்லோர் கவனமும் அஃப்கனில் அடுத்து என்ன நடக்கும் என்று இருக்க அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களை இடித்துத் தள்ளினர்.

 

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் செயல்படும் ஜிஹாதி குழுக்களுக்கு சித்தாந்த அடிப்படையும் சிந்தனை முறைகளையும் கற்றுத் தந்தது அல்-காயிதாவின் கைத்தடி இயக்கங்களே. அவை தனிக் குழுக்களாகச் செயல்பட்டாலும் செயல்முறைகள், தந்திரங்கள் அல்-காயிதாவினுடையவை. குறிக்கோள் உலக இஸ்லாமிய மயமாக்கம். அதனை நோக்கிய பயணத்தில் தடையாக இருப்பவற்றை அகற்றவேண்டும் அல்லது அழிக்கவேண்டும் என்பதே ஜிஹாதிக்காரர்களான இவர்களது வழிமுறை.

 

தமிழகத்தில் முன்பு நடந்த ஜிஹாதி தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் வாய்க்கால் வரப்புத் தகராறு, பெண் விவகாரம், பணப்பரிமாற்றத் தகராறு என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லித் தன் மதிப்பைக் கெடுத்துக் கொண்ட தமிழக காவல்துறை, இந்த விஷயத்திலாவது விரைந்து செயல்பட்டு இது மிரட்டலா திசை திருப்பலா என்பதைக் கண்டறிந்து, மிரட்டலாக இருந்தால் திருவில்லிப்புத்தூர் கோவிலையும் இராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற ஹிந்துத் தலைவர்களையும் காக்கவேண்டும். திசைதிருப்பல் என்பது போன்ற சிறு சந்தேகம் வந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டும். இவர்கள் தமிழகத்தில் பல இஸ்லாமிய போராட்டங்களுக்கு மசூதிகளில் ஆட்களை அடைத்து வைத்து குறித்த நேரத்தில் வெளியே வந்து சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பார்கள். இது சமீபத்திய பதிவு செய்யப்பட்ட நிகழ்வு. ஆகவே, இராஜபாளையம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் மசூதிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

இதிலும் கோட்டை விட்டால் தமிழக காவல்துறை மட்டுமல்ல தமிழக அரசும் கடமை தவறியதோடு மட்டுமல்லாது மக்கள் நம்பிக்கையையும் இழக்கும்.

- பொன்.ஓட்டக்காரத்தேவன்.

Read 1339 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 10 October 2014 18:24

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment