×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

Wednesday, 27 November 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

 

swamigal

 

நாத்திகவாதம், மதமாற்றம், பிரிவினைவாதம், போலி மதச் சார்பின்மை போன்ற எண்ணற்ற சக்திகள் நமது இந்து தர்மத்தை நிலை குலைய பல விதமான முயற்சிகளை செய்கின்றன. இந்த நாசகார சக்திகள் அந்நிய உதவியும், ஊக்கமும் பெற்று பட்டி தொட்டிதோறும் இந்து விரோத செயல்களை செய்து வருகின்றன. இவற்றிற்கு சாவு மணி அடிக்க தமிழகத்தில் ஒரு ஆன்மீக புரட்சியை அமைதியான முறையில் நடத்தி வருபவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள்.

 

சுவாமிகளை உள்நோக்கத்தோடு கொலை குற்றவாளியாக குற்றம் சாட்டி கைது செய்து, பாரம்பரிய மடமான காஞ்சி மடத்தை அபகரிக்க தமிழக அரசு சதி திட்டம் தீட்டியது. அத்துடன் நின்று விடாமல் அவர் மீது பல அவதூறு குற்றசாட்டுளையும் சுமத்தி நாசகார சக்திகளுக்கு தமிழக அரசே துணை போனது.

 

”தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” - என்ற பாரதியின் சொல்லுக்கு ஏற்ப இன்று (27-11-2013) பாண்டிச்சேரியில், சங்கரராமனின் கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் வணக்கத்திற்குரிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி.

 

வணக்கத்திற்குரிய சங்கராச்சாரியார்கள் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்ட போது அந்த மகான்களை இழித்தும், பழித்தும் பேசியவர்கள் இப்பொழுது மன்னிப்பு கேட்க தயாரா?

 

பார் போற்றும் இந்து தர்மம் உலகெங்கும் ஓங்க செய்ய நாம் அனைவரும் உறுதிபூண்டு பணி செய்ய வேண்டும் . அதற்கு நம்மை வழிகாட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும், ஸ்ரீ. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் இறைவன் நீண்ட ஆயுளும், ஆற்றலும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறோம்!

Read 8545 times
Rate this item
(2 votes)
Last modified on Friday, 10 October 2014 18:15

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment