தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் அல் உம்மா இயக்கம் ஒரு முஸ்லிம் அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஏப்ரல் 17ம் தேதி பெங்களூரு பா ஜ க அலுவலகத்துக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டு இருப்பதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையோடு பெங்களூரு போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் ’சிறுபான்மையினர் அறக்கட்டளை’ யிலிருந்து 1.5 லடசம் ரூபாய் வரை குண்டு வெடிப்புக்காக இந்த அமைப்பு செலவழித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
1998ல் கோவைக்கு வரவிருந்த பாஜக தலைவர் அத்வானி அவர்களை குறிவைத்து நிகழ்ந்த தொடர் குண்டு வழக்கில் அல் உம்மாவினர் குற்றம் சாற்றப்பட்டனர். இந்த வழக்கை எதிர்கொள்ளவே 2010ல் அறக்கட்டளை என்ற போர்வையில் இந்த அமைப்பு துவக்கப்பட்டது.
பாஜக அலுவலக குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் 14 பேரில் சிலரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அல் உம்மா அமைப்பின் தடைக்குப் பின், தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்களுக்கு மையமாக இந்த அறக்கட்டளை உருவாகியுள்ளதாக பெங்களூரு போலீஸ் தரப்பு கூறியிருக்கிறது.
“தடை செய்யப்பட்ட பிறகு, அவர்கள்(குற்றவாளிகள்) அல் உம்மா அமைப்போடு உள்ள தொடர்பை வெளிப்படையாக காட்டிக் கொள்வதை தவிர்த்து வந்தனர் என்றாலும் மறைமுகமாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டே வந்துள்ளனர். இப்போது இந்த குற்றவாளிகள் CTM(சாரிடபிள் ட்ரஸ்ட் ஃபார் மைனாரிட்டிஸ்) என்ற அமைப்போடு இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்” என்று அந்த குற்றப்பத்திரிக்கை சொல்கிறது.
அத்வானி வருவதற்கு முன் நடந்த கோவை குண்டு வெடிப்பு 58 பேரை பலி வாங்கியது. போலீஸ் ஆவணங்களின்படி, அல் உம்மா நிறுவனர் எஸ் ஏ பாஷா அமைப்பின் பணத்தை தனது (கோவை குண்டு வெடிப்பு) வழக்குக்களுக்கே பயன்படுத்தியதாகவும், டஜன் கணக்கில் கைதாகியிருந்த மற்றவர்களைப் பற்றி கவலைப்படாததாலும் இந்த அறக்கட்டளை அல் உம்மாவிலிருந்து பிரிந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிமி(SIMI)யின் எச்சங்களாக செயல்படும் பல தீவிரவாத இயக்கங்கள் மற்றும் அரசியல் களத்தில் தீவிரமாக இருக்கும் பாபுலர் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா(Popular Friends of India) மற்றும் அதன் தமிழ்நாட்டுக் கூட்டாளிகளுக்கு நிதியுதவி அளிப்பதில் இந்த சிறுபான்மையினர் அறக்கட்டளை முக்கிய பங்கு வகித்து வந்துள்ளதை குற்றவாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீஸ் ஆவணம் தெரிவிக்கிறது.
அல் உம்மா இயக்கத்தவனான 38 வயது கிச்சன் புகாரி என்பவனே வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பணத்தை கையாளும் மையப்புள்ளி என போலீஸ் சொல்கிறது. கோவை குண்டு வெடிப்பில் குற்றசாட்டப்பட்டிருந்தபோதும் சில ஆண்டுகளுக்கு முன்னால் விடுவிக்கப்பட்டான். ஆனால் பாஜக அலுவலக குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு இந்த புகாரிக்கே உண்டு என்று பெங்களூரு போலீஸ் குறிப்பிட்டுள்ளது.
புகாரி, தமிழ்நாட்டு அறக்கட்டளையின் பணத்திலிருந்து 50,000 ரூபாயை எடுத்து பாஜக அலுவலக குண்டு வெடிப்புக்கு ஏற்பாடு செய்ய பன்னா இஸ்மாயில் என்ற மற்றொரு முக்கிய குற்றவாளியிடம் தந்துள்ளான் என்று குற்றப்பத்திரிக்கையில் போலீஸ் தரப்பு சொல்லியுள்ளது.
வேறொரு சந்தர்ப்பத்தில் இப்போது கைதாகி உள்ள 24 வயது சுல்ஃபிகார் அலி என்பவனிடம் 1 லட்சம் ரூபாயை தந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அல் உம்மா எச்சங்களாக இயங்குபவர்களில் குண்டு தயாரிப்பில் கைதேர்ந்த போலீஸ் பக்ருதீன் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பணம் தரப்பட்டுள்ளது.
புகாரி கைதான பிறகும், “வளைகுடா நாடுகளிலிருந்து இந்த அறக்கட்டளை தொடர்ந்து பணம் பெற்று வருகிறது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பெருந்தொகை வந்துள்ளது”. என்று போலீஸ் தரப்பு செய்திகளிலிருந்து தெரியவருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்த தலைமறைவாகவே உள்ள 45 வயது அபு பக்கர் சித்திக் என்பவன் இந்த அறக்கட்டளையின் மற்றொரு முக்கிய இயக்குனன். தமிழ்நாடு போலீஸ் டைரக்டர் ஜெனரல் இவனை தேடப்படும் நபராக ஜூலை 24 அன்று அறிவித்தார். இரட்டைப் பட்டதாரியான சித்திக் பிரிந்த பழைய அல் உம்மாவினரை இணைத்து புது இயக்கத்தை ஆரம்பிக்க உதவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
நெல்லூர் என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இஸ்மாயில், பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோருக்கு அத்வானி வருகையை ஒட்டிய குண்டு வெடிப்பு முயற்சி(2011), வேலூர், சேலம் ஆகிய இடங்களில் நடந்த இந்து இயக்கத் தலைவர்கள் படுகொலையில் உள்ள தொடர்பை குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
அல் உம்மாவை சேர்ந்த இமாம் அலி கூட்டாளிகளான, இந்த முவரும்தான் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளதாக பெங்களூரு போலீஸ் குறிப்பிட்டுள்ளது.