×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

கோவா விடுதலை - போலி மதச்சார்ப்பின்மைக்கு செருப்படி இந்துக்களுக்கு வெற்றிக்கொடி

Thursday, 19 December 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

tumblr mak4f3Jevm1rghicto1 1280

கோவா பிரதேசம் பலகாலமாகக் கிறித்துவ அதிகாரத்துக்கு உட்பட்டும் போர்த்துகீசிய ஆதிக்கத்திலும் இருந்து வந்தது. கிறித்துவத்துக்கு எதிரான மக்களை அழித்து மதத்தை நிலை நாட்ட புனித ஃப்ரான்சிஸ் சேவியர் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க கோவாவில் 16ஆம் நூற்றாண்டில் நடந்த கடும் விசாரணை என்ற பெயரில் கிறித்துவத்தை மறுக்கும் மக்கள் கொடும் தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டு எஞ்சியோர் அஞ்சி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

ஆங்கிலேயர் ஆட்சி பாரதம் முழுதும் கொடிகட்டிப் பறந்த போதும் கிறித்துவ தேவாலயத்தின் அதிகாரத்தால் கோவா, டையூ டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய பகுதிகள் போர்த்துகீசிய ஆதிக்கத்தில் இருந்தன.

 

பாரதம் 1947ல் விடுதலை பெற்ற போதும் மேற்சொன்ன பகுதிகள் போர்த்துகீசிய காலனியாகவே இருந்தன. மக்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாயினர். நெல் விளையும் பூமி என்றபோதும் விளைச்சல் தேவைக்குக் குறைவாக இருந்தது. விளைந்ததை போர்த்துகீசிய அரசும் அதிகாரிகளும் பிடுங்கிக் கொண்டனர். ஒரு கிலோ அரிசி நாட்டின் பிற பகுதிகளில் 6 ரூபாய்க்கு விற்றபோது போர்த்துகீசிய ஆட்சிப்பகுதிகளில் 12ல் இருந்து 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 450 ஆண்டுகால போர்த்துகீசிய ஆதிக்கம் மக்களின் கலாசாரம் பொருளாதாரம் எல்லாவற்றையும் அழித்துவிட்டது. கொங்கணி மொழி இழிவானதாகக் கருதப்பட்டது. கொங்கணி பேசுவோருக்கு அரசு கடும் தொல்லைகள் கொடுத்தது. வீட்டிலும் வெளியிலும் போர்த்துகீசிய மொழி பேசுவோர் சற்றே தொல்லைகள் குறைவாக அனுபவித்தனர்.

 

இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வலிமைமிக்க ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போர் தொடுத்தது இங்குள்ள மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியது. கோவா விடுதலைப் போராட்டத்தில் காந்திஜியைவிட நேதாஜியும் சாவர்க்கருமே மக்கள் மனதில் விடுதலை வேட்கையைத் தூண்டுவதில் முன்னின்றனர் என்பது விடுதலைப் போராட்ட வீரர்களின் ஏகோபித்த கருத்து.

 P. P. Shirodkar (1986), '1946 to 1949 Madhil Pratyaksha Govyatil Ladhyacha Adhava', in Silver Jubilee Of Goa's Liberation 1961-86 (Souvenir) (1986), Goa: Goa Daman and Diu Freedom fighters Association

Cunha, T. B. (1961), Goa Freedom Struggle, Bombay: Dr. T. B. Cunha Memorial Committee, The New Age Printing Press.

Interview with Freedom Fighter Shri. Felix Cardozo. (October 1999)

Gaitonde, P. D. (1987), The Liberation Of Goa- A Participants' view of History, Delhi: Oxford University Press.

 

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர் எஸ் எஸ் இயக்கம் ஆஜாத் கோமந்தக் தளம், தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஒரு போராட்டக் குழுவை அமைத்து தாத்ரா நாகர் ஹவேலியை விடுவிக்க முடிவு செய்தது. ராஜா வகன்கர், நானா கஜ்ரேகர் ஆகிய ஸ்வயம்சேவகர்கள் தாத்ரா நாகர்ஹவேலி பகுதிகளில் சென்று நிலப்பரப்பு மற்றும் தாக்குதலுக்கான இடங்களைக் கண்டறிந்தனர். 1954 ஜூலை 21ஆம் நாள் ஒருங்கிணைந்த கோவா மக்கள் முன்னணி தாத்ரா காவல் நிலையத்தைக் கைப்பற்றி தாத்ரா சுதந்திர நகரம் என்று அறிவித்தது, ஜூலை 28ஆம் நாள் நரோலி, பிபாரியா, சில்வாஸா ஆகிய இடங்களை ஆர் எஸ் எஸ் - ஆஜாத் கோமந்தக் தள கூட்டுப்படை கைப்பற்றியது.

 

இவர்களிடம் தப்பியோடிய போர்த்துகீசிய படைகள் நாகர் ஹவேலி நோக்கி நகர்கையில் கண்ட்வெல் பகுதியில் தாக்கப்பட்டு இந்திய எல்லைக் காவல் படையிடம் சரணடைய வைக்கப்பட்டது. 1954 அகஸ்டு 11ஆம் நாள் அப்பாசாகேப் கர்மால்கர் என்பவர் தலைமையில் தாத்ரா நாகர் ஹவேலி சுதந்திர அரசின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். இது கோவாவின் பிற பகுதிகளில் விடுதலை வேட்கையை ஊட்டி வளர்த்தது.

http://rssbangla.com/index.php/history/liberation-of-dadra-nagar-haveli-and-goa

 

ஆர் எஸ் எஸ் இயக்கம் கோவாவை இராணுவ நடவடிக்கை மூலம் பாரதத்துடன் இணைக்க கோரிக்கை வைத்தது. ஆனால் பிரதமர் நேரு மறுத்துவிட்டார். ஆர் எஸ் எஸ் பிராந்திய தலைவர் ஜகன்நாத ராவ் ஜோஷி தலைமையில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோவாவின் போர்த்துகீசிய போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அமைதிப் போராட்டம் பல்வேறு அடக்குமுறைகள் மூலம் நசுக்கப்பட்டது.

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவாவுக்கு வந்து சேர்ந்த சத்தியாகிரகப் போராளிகள் கோவாவில் நுழையத் தடை ஏற்பட்டது. இதைச் செய்தவர் ஆசிய ஜோதி, அமைதிப்புறா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். 1954 ஆகஸ்டு 13 அன்று இந்திய செய்தித்தாள் ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய நேரு இந்தியர்களைத் தாம் 7 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் கோவாக்காரர்கள் அல்லாத பிறர் கோவாவில் சத்தியாகிரகத்திலோ அல்லது பிற போராட்டங்களிலோ கலந்து கொள்ளக்கூடாது என்று தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் சொன்னார் நேரு. இதனால் இந்திய எல்லை கடந்து கோவா செல்ல முடியாமல் பல சத்தியாகிரப் போராளிகள் தவித்தனர்.

Gaitonde, P. D. (1987), The Liberation Of Goa- A Participants' view of History, Delhi: Oxford University Press.

 

வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவகர்கள் சிலர் தாங்கள் கோவாக்காரர்கள் என்று சொல்லி உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 1955 ஆகஸ்டு 15ஆம் நாள் போர்த்துகீசிய போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி 30க்கும் மேற்பட்ட அஹிம்சைப் போராளிகளைக் கொன்றது. ஆகஸ்டு 15, 1955ல் கோவாவை விடுவித்து பாரதத்துடன் இணைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டம் போர்த்துகீசிய அரசை எதிர்த்து மட்டுமன்றி இந்திய அரசையும் எதிர்த்து நடந்தது. இதற்கு முக்கியக் காரணம் பம்பாய் மாகாண முதல்வர் மொரார்ஜி தேசாய். இவர் கோவா மக்கள் விடுதலை பெறும் அளவுக்குப் பெரிய தியாகங்கள் செய்துவிடவில்லை என்று சொன்னார்.

 

மேலும் அஹிம்சை முறையில் போராடாமல் காவல் நிலையங்களைக் கைப்பற்றியதும் இவரது கோபத்தைக் கிளறிவிட்டிருந்தது. 1955 ஆகஸ்டு 12ஆம் நாள் பிரதமர் நேரு இந்திய மக்கள் யாரும் சர்வதேச எல்லையைத் தாண்டி கோவா போகக்கூடாது என்று உத்தரவிட்டார். எல்லைக் காவல் பலப்படுத்தப்பட்டது.

 

1955 ஆகஸ்டு 15 சத்தியாகிரகத்தில் கோவா அரசு போராட்டத்துக்கு வந்த 1300 பேரை விட்டுவிட்டு தலைவர்கள் என்று குழுக்களை அழைத்து வந்தவர்களை மட்டும் கைது செய்தது. சிறை நிரப்பும் போராட்டத்தை போர்த்துகீசிய அரசு முறியடித்தது. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

Interview with Freedom Fighter Shri. Narayan Palekar.(October 1997)

 

இதனிடையே கோவா விடுதலைப் போராட்டத்துக்கு ஹிந்து மதச்சாயம் பூசும் வேலையைச் செய்த்து போர்த்துகீசிய அரசு, கவர்னர் ஜெனரல் சலாசார் கோவாவின் ஹிந்துக்களும் கிறித்துவர்களும் ஒரு நாணயத்தின் இருபக்கம் போன்று ஒருவரை ஒருவர் பாராமல் வாழ்பவர்கள். அவர்கள் சேர்ந்து வாழ்வது என்பது இயலாத செயல் என்றார். ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபா உள்ளிட்ட சில ஹிந்து அமைப்புகள் கலவரத்தைத் தூண்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

கம்யூனிஸ்டுகள் இது நிலப்பிரபுக்களுக்கும் கட்டிட காண்டிராக்டர்களுக்கும் எதிரான ஒடுக்கப்பட்ட தொழிலாளிகளின் போராட்டம் என்று வர்க்க வர்ணம் பூச முயன்றனர். ஆனால் முதலாளிகளும் தொழிலாளிகளும் ஒன்றாக நின்று விடுதலைப் போரில் பங்கு பெற்றனர். பம்பாய் முதல்வர் மொரார்ஜி தேசாய் கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் சென்ற போராட்டங்களை ஆதரிக்க மறுத்தார். அவர்கள் கோவாவில் கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்த முயல்வதாகவும் சிவப்புக் கொடி கோவாவில் பறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

 

images1

ஆனால் ஆர் எஸ் எஸ், கோவா மக்கள் இயக்கம் இணைந்த கூட்டமைப்புக்கு சில நிபந்தனைகளின் பேரில் ஆதரவு தந்தார். வன்முறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்ற போதும் கம்யூனிஸ்டுகளை விட ஆர் எஸ் எஸ்காரர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்று அவர் சொன்னார்.
Desai, Morarji.(1974), The Story Of My Life, (vol.II) Madras: The Macmillan Company Of India Limited.

 

இறுதியாக 18-19 டிசம்பர் 1961ல் கோவா விடுதலை பெற்ற போது ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பல அமைப்பினர் செய்த தியாகம் அம்மாநில மக்களால் நினைவு கூறப்பட்டது.

 

goa flag

இந்நிலையில் கோவா மாநில முந்தைய காங்கிரசு அரசு போர்த்துகீசிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கோவா கலந்து கொள்ளும் என்று அறிவித்தது. இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்தியக் கொடி ஏந்தி கோவா மாநில அணி கலந்து கொள்ளும் என்றும் கோவா-இந்தியா என்ற பெயரில் அந்த அணி விளையாடும் என்றும் அறிவித்தது. ஆனால் விரைவில் ஆட்சியை இழந்தது காங்கிரசு. பின் வந்த பாஜக முதல்வர் மனோஹர் பரிக்கர், தம் அரசு முந்தைய அரசின் முடிவை மாற்ற இயலாத போதும் கோவா அணி இந்திய அணி என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் என்றும் அறிவித்தார்.
http://www.dnaindia.com/sport/report-portuguese-games-goa-to-participate-under-indian-flag-name-1879740

 

அடிமைத்தளை போனாலும் அடிமை புத்தி போகவில்லை காங்கிரசுக்கு. தேசியவாத தலைவர்கள் பொறுப்புக்கு வந்தாலே இவை சரியாகும். 2014ல் இதற்கான வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆபிரகாமிய அடிமைத்தளையை அறுத்தெறிய வேண்டும்.

 

குறிப்பு: 

இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற போராளி திரு. சுப்பாராவ் அவர்கள் இன்றும் நம்முடன் இந்த போராட்டகால அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர உறுப்பினர் ஆவார். இவரை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். அந்த வாழும் மகானுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் இன்று கோவா பாரதத்துடன் இணைந்த நன்னாளில்  தனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

 

Read 1843 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 10 October 2014 18:08

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment