×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

'டார்கெட்'டை சமாளிக்கும் சூட்சமம்!

தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள 'டார்கெட்'டை சமாளிக்கும் சூட்சமம்! 'டார்கெட்'டை சமாளிக்கும் சூட்சமத்தை கூறும், 'கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்'டின் இயக்குனர், ஆர்.எஸ்.வீரவல்லி எழுதியுள்ள இந்தக் கட்டுரையை சமுதாய பணியில் ஈடுபட்டுள்ள இந்து செயல் வீரர்கள் அவசியம் படித்து செயல்படுத்த வேண்டியது என்று வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார். 

 

இன்றைய கார்ப்பரேட் உலகில், சி.இ.ஓ., முதல், சாதாரண ஊழியர்கள் வரை, அனைவரும் நடுங்கும் வார்த்தை, 'டார்கெட்' எனும் இலக்கு. இந்த டார்கெட்டை, வீணையிலிருந்து எழும் இசை போல கருதுங்கள்.

 

வீணையில் உள்ள கம்பிகள் தளர்வாக இருந்தாலும், மிக இறுக்கமாக இருந்தாலும், அது, சத்தத்தை மட்டுமே எழுப்பும். சரியான அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே, நல்ல இசையைத் தரும்.

 

அதை போல, டார்கெட்டும் சரியான நிர்வாக அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே, அடைய முடிகிற ஒரு விஷயமாக மாறும்.

 

உயர்மட்டத்தில் உள்ளவர்கள், திட்டமிடுதல் என்ற அளவிலும், நடுநிலையில் உள்ளவர்களுக்கு நிர்வகித்தல் என்ற அளவிலும், கடைசி மட்டத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை என்ற அளவிலும், டார்கெட்டை செயல்படுத்த வேண்டியிருக்கிறது.

 

ஒரு நிறுவனம், தன் டார்கெட்டை நிறைவேற்றும் போது, பயமுறுத்தியே காரியத்தை சாதிக்கக் கூடாது.

 

முடிந்தவரை, ஊழியர்களை தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்த வேண்டும்.

 

நிறுவனத்தின் ஊழியர், டார்கெட்டை சரியாக புரிந்து கொண்டாரா என்பதை, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒருவர் சரியாக தன்னுடைய டார்கெட்டை புரிந்து கொள்ளவில்லை என்றால், அதை அவரால் நிறைவேற்ற முடியாது.

 

இரண்டாவதாக, டார்கெட்டை நிறைவேற்றுகிற அளவுக்கு ஒருவருக்கு திறமை இல்லாமல் இருக்கலாம்.

 

அவருக்கு, உடனடியாக திறமையைக் கற்றுத் தர முடியாது.

 

இந்த சமயத்தில், அதிக திறமை வாய்ந்த ஒருவரை, அவருக்கு துணையாக அனுப்புவது அவசியம்.

 

மூன்றாவது, ஒருவருக்கு நம்பிக்கை இல்லை எனில், அவரால் நிச்சயமாக டார்கெட்டை அடைய முடியாது. எனவே, அவருக்கு நம்பிக்கை ஏற்படுகிற விஷயங்களை சொல்லலாம்.

 

நான்காவது, எந்த ஒரு விஷயத்தையும் தனியாக செய்வதைவிட, குழுவாக செய்யும் போது பயம் விலகி, உற்சாகம் பிறக்கும். எனவே, ஊர் கூடி தேர் இழுக்கிற விஷயம் தான், இந்த டார்கெட்.

 

ஐந்தாவது, ஒருமுறை டார்கெட்டை நிர்ணயம் செய்து விட்டு, அதை விட்டுவிடக் கூடாது.

 

குறித்த கால அளவில், அதை மதிப்பீடு செய்தபடி, இருக்க வேண்டும். இல்லாவிட்டால், டார்கெட்டை அடையவே முடியாது.

 

நன்றி: தினமலர்.

Source:  http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Read 1776 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 19:31

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment