×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பிரிவினைவாதத்தை தூண்டும் வை.கோவின் தேர்தல் அறிக்கைக்கு வீரத்துறவி. இராமகோபாலன் அவர்கள் கண்டனம்

Tuesday, 25 March 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. இந்து முன்னணி தேர்தலில் நிற்காது என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், தேச நலனுக்கான கருத்துக்களை பரப்பவும், தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை எதிர்ப்பதையும் இந்து முன்னணி கடமையாக கொண்டுள்ளது.

 

பாராளுமன்றத் தேர்தலுக்கான மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் (மதிமுக)வின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இந்திய ஒன்றியம் என்பதற்கு பதில் இந்திய ஐக்கிய நாடுகள் என்று அழைக்க முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

இம்மாதிரியான கருத்துகள் பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எதிரானது என்று இந்து முன்னணி கருதுகிறது. இந்த தேசமானது ஓர் உடலைப்போன்றது, அதன் ஆன்மா தர்மம் என்று சுவாமி விவேகானந்தரும், மகரிஷி அரவிந்தரும் தெரிவித்துள்ளனர். இந்திய மாநிலங்கள் என்பது ஓர் உடலின் அங்கங்களைப் போன்றவை. எனவே, இந்த பாரத தேசத்திற்கு பெடரெல் என்ற வார்த்தை பொறுத்தமற்றது. இது வெறும் வார்த்தை மாற்றமல்ல, விஷமத்தனமானது. எனவே இந்து முன்னணி மதிமுகவின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, இதனை எதிர்க்கிறது.

 

 

 

Read 1690 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 19:29

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment