×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

பாரதத்தை வீழ்த்த இத்தாலி – உஸ்பேக்கிஸ்தான் கூட்டுச் சதி

Thursday, 10 April 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

எந்த நாட்டில் தேர்தல் வந்தாலும் அந்த நாட்டிலுள்ள சமூகக் கூட்டங்கள் அவர்களது பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்கோ அல்லது அமையவிருக்கும் அரசில் அவர்களது ஆதிக்கத்தை செலுத்துவதற்கோ அல்லது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவான அரசு அமைய முயற்சி மேற்கொள்வார்கள். இதுபோலவே பல வெளிநாட்டு சக்திகளும் அவர்களது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் அரசு பிற நாடுகளில் அமைய வேண்டும் என்பதற்காக சதி வேலைகளில் ஈடுபடுவார்கள்.

 

இன்று உலகரங்கில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. நம் நாட்டின் இயற்கை வளம் அளப்பிற்கரியது. ஆகவே, ஒரு வலுவான ஆட்சி அமைந்தால் உலகத்தரத்தில் முன்னேறிய நாடாக பாரத நாடு மாறிவிடும். உலக அரசியலையே பாரதத்தால் மாற்ற முடியும் என்ற உண்மையை அறிந்து அதை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்று ஒரு நம்பிக்கையூட்டும் தலைவராக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக திரு. நரேந்திரமோடி அவர்கள் இன்று அரசியல் களத்தை கலக்கிக்கொண்டிருக்கிறார். இதை அந்நிய சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியுமா? இதை முறியடிக்க உலகரங்கில் மோதிக் கொள்ளும் இரண்டு அந்நிய சக்திகள் இந்தியாவை தோற்கடிக்க கூட்டணி அமைத்துவிட்டது.

 

கம்யூனிஸ்ட்டுகளை கேரளாவில் தோற்கடிக்க 1950களில் கிறிஸ்துவ சர்ச் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச்செய்ய பணம் செலவிட்டது. இதை நேரு குடும்பத்தின் சரித்திரத்தை எழுதிய BBC செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த புத்தகத்தின் பெயர் Dynasaty. கேரளத்தில் இருக்கும் கிறிஸ்துவ சர்ச்சிற்கு யார் பணம் கொடுத்தார்கள்? அமெரிக்கா பணம் கொடுத்தது. எதற்கு? உலக அரசியலில் அதன் எதிரியான ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா சென்று விடக்கூடாதாம்! ஒரு அந்நிய நாட்டிற்கு உதவ நம் நாட்டிலே ஒரு கூட்டம் அந்த கூட்டத்தின் அடிப்படை என்ன? அவர்கள் பின்பற்றும் மதம். அப்படியென்றால், மதமாற்றம் தேசியத்தையே மாற்றுகிறதல்லவா?

 

இதுபோலவே, பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்க சரியான கட்சி ஆம் ஆத்மி பார்ட்டி என்று டில்லி முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்தனர். இந்த ஆம் ஆத்மி கட்சிக்கு பாகிஸ்தானிலிருந்து தேர்தல் நிதி இணையதளம் மூலம் வசூலிக்கப்பட்டதை ஆறு மாதங்கள் முன்பு நாம் பார்த்தோம். இந்த அமைப்பின் தலைவர் கேஜ்ரிவால் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதியிடம் ஆதரவு கேட்டதையும் மற்றொரு தலைவர் பிரசாந்த்பூஷண் காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வது தப்பில்லை என்று குரல் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். இங்கும் ஒரு மதக்குழு ஒரு அந்நிய நாட்டின் கைப்பாவையாக செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

 

நம் நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஒரு செயலிழந்த ஊழல் மத்திய அரசுக்கு மாற்றாக தேசியத்தை முன்னிறுத்தி வலுவான தலைவராக திரு. நரேந்திர மோடி அவர்கள் வளர்ந்து வருவதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எடுக்கும் முயற்சியெல்லாம் மோடிக்கு சாதகமாக போகவே, உலகரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் அந்நிய சக்திகள் கைகோர்த்துக்கொண்டு மோடியை அழிக்க அவர்களது மதக்குழுக்கள் வாயிலாக களமிறிங்கியுள்ளனர்.

 

3.4.2014- ம் தேதியன்று இந்திய தேசிய காங்கிரஸின் இத்தாலிய தலைவர் சோனியா காந்தி டில்லி ஜீம்மா மசூதியின் உஸ்பேக்கிஸ்தானிய இமாம் புகாரியை சந்தித்து மோடியின் வளர்ச்சி எங்கள் சமுதாயத்திற்கும் உங்கள் சமுதாயத்திற்கும் நல்லதல்ல என்றும், நமது பொது எதிரி நரேந்திர மோடி என்பதாலும் நாம் இருவரும் கூட்டுச்சேர்ந்து மோடியை வீழ்த்த கூட்டணி அமைக்கலாம் என்று விண்ணப்பித்தார். குஜராத் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மதவேறுபாடின்றி அனைத்து சமயத்தினரும் வளர்ச்சியடைந்துவருகின்றனர். இதனால் கிறிஸ்துவ முஸ்லீம்கள் கூட தேசியத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனர். எனவே, மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதை தவிர்க்க மதவாத பிரம்மாஸ்திரம் மட்டுமே உதவும் என்பதால் இந்த இத்தாலிய – உஸ்பேக்கிஸ்தானிய கூட்டணியை உருவாக்கும் கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டது.

 

இரண்டாம் உலகப்போரில் பாசிஸ படையில் அங்கம் வகித்த குடும்பத்தில் பிறந்தவர் சோனியாகாந்தி. இவர் பல இத்தாலிய தரகர்களை வைத்து ஊழல்களிலும், துரோகச்செயல்களிலும் ஈடுபட்டார். தனது கணவன் ராஜீவ்காந்தி பிரதமர் பதவிக்கு அருகாமையில் செல்லும் வரை இந்தியக் குடியுரிமைகூட பெறாமல் சுமார் 15ஆண்டுகள் இத்தாலிய பிரஜையாகவே அவர் பாரத பிரதமர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

 

டில்லி இமாம் குடும்பம் முகலாய மன்னர் ஷாஜகானால் உஸ்பேக்கிஸ்தான் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். மதத்தின் தலைமைக்கு கூட இந்தியன் லாயக்கற்றவன் என்ற அழுத்தமான நம்பிக்கை காரணமாக முகமதின் வலித்தோன்றலான ஒரு உஸ்பேக்கிய குடும்பத்தின் கீழ் இந்திய இஸ்லாமியர்கள் கொண்டுவரப்பட்டனர். அந்நிய ஆதிக்கவெறி பிடித்தவர்கள் மண்ணின் மகத்துவத்தையா மக்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். கிறிஸ்தவம் எப்படி ஐரோப்பிய ஆதிக்கவாதத்தை திணித்ததோ அப்படித்தான் இஸ்லாமும் செய்துள்ளது. இஸ்லாமிய மத பீடமான உஸ்பேக்கிஸ்தானின் சமர்கண்ட் வாசி டில்லி இமாம். போப்பின் இத்தாலிய பிரஜை காங்கிரஸ் தலைவி ஆஹா என்ன பொருத்தம்.!

 

இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பின் ஆட்சியிலிருக்கும் இத்தாலிய காங்கிரஸின் சார்பு ஊடகமான கோப்ரா போஸ்ட் 1992ல் இந்து அமைப்பினர் திட்டமிட்டு சதி செய்து இராமர் கோவிலை ஆக்கிரமித்து கட்டிய மசூதியை இடித்தனர் என்று வீடியோ பேட்டி அடங்கிய ஆவணப் படத்தை 4.4.2014 அன்று வெளியிட்டனர். அதே காலகட்டத்தில் கிறிஸ்துவ நாடான இங்கிலாந்திலிருந்து வெளிவரும் Economist என்ற பத்திரிக்கை ராகுல் காந்திக்கு நிர்வாகத்திறன் இல்லாவிட்டாலும் இன்றைய சூழ்நிலையில் அவரே சிறந்த பிரதமராக இருக்கமுடியும் காரணம் நரேந்திர மோடி பிரிவினையை ஏற்படுத்திவிடுவார் என்ற செய்தியை வெளியிட்டது.

 

இந்தச் செய்தித் தொகுப்புகள் வெளிவந்தவுடன் உஸ்பேக்கிஸ்தான் தலைவர் புகாரி 4.4.2014 தேதி வெள்ளிக் கிழமை மதிய தொழுகையின்போது காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவிக்கிறார். இந்த அறிக்கையில் காங்கிரஸை கடுமையாகச் சாடிவிட்டு மதவாத மோடியை தோற்கடிப்பதற்காக இந்த காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார். இந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மதங்கள் ஆட்டு மந்தைகளாக மத அடிப்படைவாத தலைவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதோடு நின்றுவிடாமல் உலகாயத கிறிஸ்தவம், மற்றும் உலகாயத இஸ்லாம் என்பதின் அங்கமாக இருக்கின்றனவே தவிர பாரதத்தின் அங்கமாக செயல்படுவதில்லை. நாட்டின் வளர்ச்சியை விட மதவாதம்தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றால் தேசப்பற்றை விட இவர்களது அந்நிய மதப்பற்று வலுவாக உள்ளது என்பது தெளிவாகிறது. இது, தேசப்பற்றுள்ளவர்களுக்கு ஒரு சவால்.

 

இத்தாலிய உஸ்பேக்கிஸ்தான் கூட்டணி வெல்லவேண்டுமா? சுதந்திர பாரதம் வெல்ல வேண்டுமா?

Read 1354 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 09:43

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment