×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

திருவள்ளுவர் பிறந்த நாள் விழா

Friday, 16 May 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

 

 

thiruvalluvar thinam3 small

 

 

உலகப்பொது மறையாம் உன்னதத் திருக்குறளை உலகுக்குத் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவதரித்த திருநாள் வைகாசி அனுட நாளே என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அறிஞர்களும் 1932ல் கூடி முடிவு செய்தனர். இதற்காக இந்த அறிஞர்களை ஒருங்கிணைத்து திருவள்ளுவரின் புகழையும் குறள்நெறியையும் உலகம் முழுவதும் பரப்பச் செய்ய 1932ல் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட் கழகம் என்ற அமைப்பு சில ஆண்டுகளாகச் சற்றே செயல்பாடு குறைந்து இருந்தது. அந்த அமைப்புக்கு இன்று (16.5.2014) வைகாசி அனுட நாளில் புத்துயிர் ஊட்டப்பட்டது.

thiruvalluvar thinam1 small

 

 

சென்னை திருமயிலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் ஆலயத்தில் காலை 09:00 அளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. இரா. முத்துகுமார சுவாமி அவர்கள் தலைமை தாங்கினார்.

thiruvalluvar thinam2 small

 

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை பக்தியுடன் பாடினர்.

 

 

thiruvalluvar thinam5 small

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி அனுட தினத்தை திருவள்ளுவர் அவதார தினமாகக் கொண்டாட திரண்டிருந்த அனைவரும் உறுதி ஏற்றனர். பிரசாதமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

thiruvalluvar thinam6 small

அதன் பிறகு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய உறுப்பினர்கள் இராயப்பேட்டை நெடுஞ்சாலை சமஸ்கிருத கல்லூரி அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையை சுத்தம் செய்து நீராட்டி மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

Read 1721 times
Rate this item
(2 votes)
Last modified on Thursday, 09 October 2014 19:12

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment